Monday, October 22, 2012

யார் உண்மை பக்தன் ? - பாட்டி சொன்ன கதைகள்


                 
    ஒன் டே  ”யார் உண்மையான பக்தன்” ன்னு   டூ ஏஞ்சல்சஸ்க்கு  டவுட் வந்துடுச்சு. நேரா “காட்”கிட்ட போய். ஓ காட்! கோவிலுக்கு  வந்து உன்னை,  நிறைய பேர் கும்பிட்டு, தங்களுக்கு தேவயானதை செய்ய சொல்லி  வேண்டிக்குறாங்க. அதுல சில பீப்பிள்ஸ் ""இறைவா... நான் தினமும் உன்னை கும்பிடுறேன்'' என்னைவிட உன்னை யார் நம்புறங்கன்னுலாம் சொல்லி சாமி கும்பிடுறாங்க... சோ, ”உன்மேல உண்மையான பக்தி வெச்சிருக்குறது” யாரு?ன்னு சொல்லுங்கன்னு  நேரா  ”காட்”கிட்டயே போய்  தங்கள் டவுட்டை கேட்டாங்க்.அப்போ, காட், ""ஏஞ்சல்ஸ்!நீங்க ரெண்டு பேரும் ஊருக்குள்ள போய், அங்கிருக்குறவங்களை மீட் பண்ணி,  யார் என்னோட  உண்மையான பக்தன்?ன்னு என்கொயரி பண்ணிட்டு வாங்கன்னு சொன்னார்.

உடனே ”டூ ஏஞ்சல்ஸும்” பூமிக்கு வந்து, கோவிலுக்கு வர்றவங்களை  என்கொயரி பண்ண ஆரம்பிச்சாங்க.


ஒருத்தன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூணு வேளை ”காட்”ஐ பிரே பண்றேன் ,'' ன்னான்.அடுத்த ஆளு,  ""நான் ஃபிரைடே, சாட்டர் டே, டியூஸ் டே மட்டுமே   கோவிலுக்கு போவேன்”ன்னு சொன்னான்.இன்னொரு ஆளு கோவிலுக்கு வந்தான், அவனை, என்கொயர் பண்ணும்போது, "நான் வாரத்துல ஒரே  ஒரு நாள் கன்ஃபார்ம்டா கோவிலுக்கு வருவேன்,'' ன்னு சொன்னான்.


இன்னொரு ஆளு, ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்துல மட்டும்  கோவிலுக்கு வருவே,'' னான்.


இப்படி, வந்தவங்கல பல பேர் ,  ஏதோ ஒரு சமயத்தில் ”காட்”ஐ நினைப்பவராகவே இருக்க, "இதுல  யார் உண்மையான பக்தன்'? ன்னு கண்டு பிடிப்பது எப்படி?ன்னு டூ ஏஞ்சல்ஸுக்கும்  கன்ஃபியூஸ்ஆயிடுச்சு.


சரி, நாம “காட்”கிட்டயே போய் கேட்டுக்கலாம்ன்னு திரும்பும்போது...,  கோவில் வழியே அவசரமாக போக்கிட்டிருந்தான்.  அவனை,  நிறுத்தி, "ஹலோ! உனக்குக் கடவுள் பக்தி இருக்கா? நீ எப்போ ”காட்”ஐ பிரே பண்ணுவே?'' இப்போ கூட கோவில் பக்க்கமாத்தான் போறே. ஆனா, பிரே பண்ணாஆம போறியே?!ன்னு ஏஞ்சல்ஸுங்க கேட்டுச்சு.


அதுக்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே டைமில்லை... அவசரமா ஒருத்தருக்கு பிளட் தேவைப்படுது. அவர் பிளட் குரூப்பும், என் பிளட் குரூப்தான். அதான் அவருக்கு ஹெல்ப் பண்ண போய்கிட்டு இருக்கேன்.  இதுல சாமியை எங்கிருந்து கும்பிடுறது? நான் கிளம்புறேன். குட் பை...'' ன்னு ஆன்சர் பண்ணிட்டுபோய்ட்டான்.


  ஏஞ்சல்ஸ் ”காட்”கிட்டயே  திரும்பி வந்து என்ன நடந்துடுச்சுன்னு சொல்லிச்சுங்க....

எல்லாத்தையும் கேட்ட”காட்” அமைதியா இருந்தார்.....,


""ஓ காட்... உண்மையான பக்தன் யார்?ன்னு  எங்களால கண்டுபிடிக்க முடியலை. நீங்களாவது  கண்டுபிடிச்சுட்டீங்களா?!?'' ன்னு கேட்டுச்ச்சு.


""கண்டு பிடிச்சுட்டேன்!'' ன்னு சின்ன புள்ளை போல குதூகலமா   சொன்னார் ”காட்”....,


""யார்?  டெய்லி மூணு வேளை கோவிலுக்கு வர்றவர்தானே?'' ன்னு கேட்டனஏஞ்சல்ஸ்....,


”காட்” ஸ்மைல் பண்ணியபடியே...,  ""நோ... நோ... லாஸ்ட்டா  என்னை நினைக்கக்கூட டைமில்லாம..,  இன்னொருத்தருக்கு ஹெல்ப் பண்ண  ஓடினானே... அவன் தான் என் ” உண்மைப் பக்தன்,'' ன்னு சொன்னார்.


உதவி தேவைப்படுறவங்களுக்கு நம்மாலான உதவியை செய்தா,  கோவிலுக்கு போய் கடவுளை கும்பிட்டதோட பலன் கிடைக்கும்ன்ற  உண்மை அந்த ”ஏஞ்சல்ஸ்க்கும் ”புரிந்தது .

16 comments:

 1. கான்வென்ட் குழந்தை ராஜி சொன்ன நீதிக் கதை வெரி வெரி குட். என் ஹார்ட்ல ப்ளேஸ் பிடிச்சிடுச்சு. ஹி... ஹி...

  ReplyDelete
 2. தேங்க்சுண்ணா

  ReplyDelete
 3. இதை உங்களுக்கு சொன்னது ராம்ஜியோ?

  ReplyDelete
 4. நல்லதொரு நீதீக்கதை! நன்றி!

  ReplyDelete
 5. கஷ்டத்தில் உதவுவனே கடவுள்.

  ReplyDelete
 6. கதையின் படி தினமும் செய்தால் சரி தான்...

  அருமையான கதை சகோதரி...

  நன்றி...
  tm4

  ReplyDelete
 7. ராஜி பாட்டி....... ஸாரி ராஜியோட பாட்டி சொன்ன கதை அருமை. சகோ ராஜி இனிமே நீங்க கோயிலுக்கு போக வேண்டாம் எங்களுக்கு உதவி செஞ்ச்சுகிட்டே இருங்க

  ReplyDelete
 8. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே! எனும் வரிகள் ஞாபகம் வந்தது! நன்றி!

  ReplyDelete
 9. நல்ல கருத்துள்ள பாட்டி கதை.
  ஆனா ரொம்ப வித்தியாசமா சொல்லியிருக்கிறீங்க..

  ReplyDelete
 10. கதையும் படமும் கொள்ளை அழகு. தொடருங்கள் சகோ.

  ReplyDelete
 11. பாட்டி அதிகமா ஆங்கிலம் பேசுவார்களோ....?

  கதை நன்று மேடம்.

  ReplyDelete
 12. The effort that u have taken to deliver the the story is too good!

  ReplyDelete
 13. நல்ல நீதிக்கதை.

  ReplyDelete
 14. உதவி தேவைப்படுறவங்களுக்கு நம்மாலான உதவியை செய்தா, கோவிலுக்கு போய் கடவுளை கும்பிட்டதோட பலன் கிடைக்கும்ன்ற உண்மை அருமையாக சொன்ன கதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete