Wednesday, October 03, 2012

கணற்பொறி வாழ்க்கை...,

                                                         
சலசலக்கும் சிற்றோடையின் ஓசை ..., 
மரங்களடர்ந்த சூழல்..,
சல சலக்கும் சிற்றோடையின் ஓசை ..., 
மரங்களடர்ந்த சூழல்.., 

பெயர் தெரியாப் பூக்களின் வாசம்.., 
காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம்...,
 இதமான தென்றல்...,
 நட்சத்திரங்கள் கண்சிமிட்ட..., 

பௌர்ணமி ஒளியில்..., 
கயிற்றுக் கட்டிலில்..., 
கதையளந்தபடி இரவு உணவு... 
விவசாயம் செய்துக்கொண்டு நீயும்... 

பானை முடைந்துக் கொண்டோ, 
பாய் பின்னிக்கொண்டோ..., 
உனக்குதவியாக நானும்...,
எனக்காதரவாய் நீயும்...,
 இருந்திருப்போம்..., 
மகிழ்ச்சியாகவே 
போய் இருக்கும் வாழ்க்கை..??!!! 
நரகத்து நகர வாழ்க்கையில்...,

கணிப்பொறியாளனாய்
நீ இருக்க.....,
கணற்பொறியை கக்கிக் கொண்டு 
நகர்கிறது வாழ்க்கை..., 

17 comments:

  1. //நரகத்து நகர வாழ்க்கையில்...,

    கணிப்பொறியாளனாய்
    நீ இருக்க.....,
    கணற்பொறியை கக்கிக் கொண்டு
    நகர்கிறது வாழ்க்கை..., // என்ன செய்வது? ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெற வேண்டியுள்ளது உலகில்! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?//
    என்னுடைய வலைப் பக்கத்தில் "காந்தி".முடிந்தால் இழந்ததை எல்லாம் திரும்பத்தா இறைவா! எனும் பதிவையும் படிக்க வேண்டுகிறேன்!
    http://www.esseshadri.blogspot.in/2012/06/blog-post.html
    நன்றி!

    ReplyDelete
  2. கணற்பொறியா கனற்பொறியா?

    ReplyDelete
  3. அழகான ரசிக்கும் வரிகள்... முடிவில் உண்மை வரிகள்... நன்றி சகோதரி...

    ReplyDelete
  4. உண்மை நகர வாழ்க்கை நரக வாழ்க்கைதான் .. ஆனால் இப்போது கிராம வாழ்க்கை கூட அப்படி மாறுகிறது

    ReplyDelete
  5. பொறி வெச்சோ பொரி கொடுத்தோ பொறியாளர்கள் பிடிச்சிடறாங்க அவர் எஞ்சினியரா? வஞ்சி நியரா?

    ReplyDelete
  6. அருமையான கருத்தை உள்ளடக்கிய கவிதை. கிராமங்கள் கூட இப்போது நவீன விஞ்ஞானத்தின் கரங்கள் நீள்வதால் அதன் இயல்பை இழந்து வருகின்றன என்கிற ஆதங்கமும் எனக்குள் உண்டு. அருமைம்மா.

    ReplyDelete
  7. உண்மையான வரிகள் அக்கா அடிப்படை வசதிகள் இல்லாத அந்த வாழ்வின் மீதான பற்றும் ஆசையும் நீளத்தான் செய்கிறது. இறுதி காலத்திலாவது கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை .

    ReplyDelete
  8. ////உனக்குதவியாக நானும்...,
    எனக்காதரவாய் நீயும்...,
    இருந்திருப்போம்...,
    மகிழ்ச்சியாகவே
    போய் இருக்கும் வாழ்க்கை..??!!!
    நரகத்து நகர வாழ்க்கையில்...,

    கணிப்பொறியாளனாய்
    நீ இருக்க.....,
    கணற்பொறியை கக்கிக் கொண்டு
    நகர்கிறது வாழ்க்கை..., ////

    அருமையான கவிதை அழகான வரிகள்

    ReplyDelete
  9. சப்புன்னு அடிச்சாப்ல உண்மையை உணர்த்தும் கவிதை....!

    ReplyDelete
  10. //கணிப்பொறியாளனாய்
    நீ இருக்க.....,
    கணற்பொறியை கக்கிக் கொண்டு
    நகர்கிறது வாழ்க்கை.//

    உண்மை வரிகள்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  11. உச்சந்தலையில் நங்குன்னு கொட்டுன மாதிரி இருக்கு

    ReplyDelete
  12. நகர வாழ்க்கையின் நரகத்தை சுட்டிய விதம் நன்று

    ReplyDelete
  13. நல்லாருக்கு சகோ!

    ReplyDelete
  14. அருமையான கிராமிய நினைவுதனை ஏக்கத்துடன் பார்க்கும் கவிதை.

    ReplyDelete
  15. நல்லா இருக்கு

    ReplyDelete