டாக்டர் சர்! என் பையனுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது..., நானும் எவ்வளாவோ ஹெல்த் டிரிங்க்ஸ், கூரை, பழம், காய்கறிகள்ன்னு குடுக்குறேன்..., அவனையும், எங்க வீட்டையும் சுத்தமா பார்த்துக்குறேன். இருந்தாலும்.., அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது..., கொஞ்சம் என்னன்னு பாருங்க சார்...,
நான் உங்க ஃபேமிலி டாக்டர்.., உங்க குடும்பத்தை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனால சில யோசனைகள் சொல்லவா?
ம் ம் ம் சொலுங்க டாக்டர். அதுக்குதானே குழந்தை கூட்டி வந்திருக்கோம்.
ஸ்கூல் விட்டு ஈவினிங் வந்து உங்க பையன் என்ன பண்றான் சுஜி மேடம்?
டியூஷன் போவான்..,
அப்புறம்?
வீட்டுக்கு வந்து ஹோம் வொர்க் செய்வான்.., டிவி பார்ப்பான்.., டிவி போரடிச்சா கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடுவான்.., கடைசியா சாப்பிட்டு தூங்குவான்.
வெளிய தெருவுக்கு போய் பசங்களோடு விளையாடுறதுலாம்?!
ம்ஹூம் கீழ விழுந்துடுவான்னும்.., கெட்ட வார்த்தைலாம் கத்துக்கிட்டு வந்துடுவான்னும் விடுறதில்லை சார்.., அப்படியே பசங்களோடு விளையாடினாலும்.., செஸ், கேரம்தான்...,
இங்கதாம்மா நீங்க தப்பு பண்றீங்க...,காலை எழுந்ததும் படிப்பு.. பின்பு கனிவு தரும் நல்ல பாட்டு.., மாலை முழுதும் விளயாட்டு என வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பான்னு பார்தியார் சொல்லிட்டு போயிருக்கார். இப்போ இருக்குற காலகட்டத்துல மாலை முழுதும் விளையாடலைன்னாலும்! ஒரு அரை மணி நேரமோ இல்ல ஒரு மணி நேரமோ விளையாட விடுங்க சுஜி..
விளையாடுறதால நல்லா பிளட் சர்க்குலேஷன் ஆகும்.., வேர்த்து கொட்டும்.., உடலும் இளைக்கும்.., நாலு பிள்ளைகளோடு சேர்றதால கஷ்ட நஷ்டம் தெரிய வரும்..., விட்டுக்குடுத்தல் போன்ற நல்ல பண்புகள்லாம் அவனை வந்து சேரும்மா...,
ஓ அப்பிடியா! ஆனா, என்ன விளையாட்டு விளையாட சொல்றீங்க? டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி கிளாஸ்ல சேர்த்து விடட்டுமா?!
விளையாட சொன்னேன் .., அதுக்காக காசை செலவழிக்க சொல்லல. பிள்ளைகளை கிளசுக்கு அனுப்பிட்டு கைல அடிப்பட்டுச்சோ?! கால்ல அடிப்பட்டுச்சோன்னு நீ இங்க பதறிக்கிட்டு உக்காந்திருக்கனும். இதெல்லாம் தேவையா?! காசே செலவழிக்காம பக்கத்து வீட்டுல இருக்குற பிள்ளைகளைச் சேர்த்துக்கிட்டு பெத்தவங்க மேற்பார்வைல விளையாடட்டுமேம்மா..,
என்ன விளையாட்டு சார்?!
பாதுகாப்பா விளையாட எவ்வளவோ தமிழர் விளையாட்டுகள் இருக்கும்மா.. உதாரணத்துக்கு பூப்பறிக்க வருகிறோம் அல்லது கூண்டுக்கிளின்னு ஒரு விளையாட்டு..,
ஆண்பிள்ளாகளோ இல்லைன்னா பெண் பிள்ளைகளோ இல்லைன்னா ரெண்டு பேருமே சேர்ந்து விளையாடுற விளையாட்டு. எத்தனை பேர் வேணும்னினாலும் சேர்ந்துக்கலாம் கணக்கில்லை.. உயரமான ரெண்டு பிள்ளைகள் எதிரெதிரே கைகளை நீட்டி கோர்த்துக்கிட்டு .., தலைக்கு மேலே பந்தல் போல தூக்கிக்கிட்டு நின்னுக்கிடுவாங்க.
மத்த பிள்ளைகள்லாம் அந்த கைகளுக்குள் நுழைஞ்சு வெளிய வரனும். அப்படி வரும்போது ...,

”ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்ததாம்..,
ரெண்டு குடம் தணி ஊத்தி
ரெண்டே பூ பூத்ததாம்ன்னு
பாடிக்கிட்டே வரனும். அப்பிடி வரும்போது பத்தாவதா வர்ற பிள்ளையை கோர்த்திருக்கிர கையினால பிடிச்சுக்குவாங்க..., அப்பிடி பிடிச்சுக்கிட்டவங்க கிட்ட இருந்து தப்பி வந்தா மீண்டும் சுத்தி வரலாம்.., இல்லாட்டி அவுட்ன்னு சொல்ல்லி வெளிய அனுப்பிடுவாங்க.
எத்தனை பேரு விளையாட வந்தாங்களோ! அத்தனை பேரையும் பிடிச்சாதான் ஆட்டம் முடிஞ்சுதா கணக்கு.. ஆனா இந்த விளையாட்டு கடைசி வரை முடிச்சுட்டு போனதா, நான் விளையாடுன வரை எனக்கு நினைவில்லை.. குழந்தைகளுக்கு பசிக்கும், தூக்கம் வரும்.., அப்பா அம்மா கூப்பிடுவாங்க..., இல்லாட்டி கைக்குள்ள மாட்டிக்கிட்ட புள்ள திமிரி தப்பிச்சுக்கும். இப்படி இந்த விளையாட்டு தொடர்ந்துக்கிட்டே போகும்...,
இந்த விளயாட்டுனால ஏகப்பட்ட சந்தோஷமும்.., தோட்டத்து செடிகளுக்கு பூக்குறா நேரத்துல தண்ணி ஊத்தனும்ங்குற மெசேஜும் அழகா வருது பாருங்க சுஜ்ஜி.., விளையாட்டுல கூட ஒரு மெசேஜை சொல்லியிருக்குற நம்ம பெரியவங்களை என்னன்னு சொல்லி பாராட்டுறது?
ரொம்ப கரெக்ட்தான் சார். இனி என் பையனை விளையாட அனுப்புறேன்.
குட்.., இனி உன் பையனோட உடம்பு இளாஇக்கும்.., அடிக்கடி உடம்பு சரியில்லாம போறது இனி நடக்காது பாரேன்.
ரொம்ப நன்றி டாக்டர்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ReplyDeleteபூப்பறிக்க வருகிறோம் இதெல்லாம்
நாங்க கூட வெளையாடியிருக்கோம். நாமெல்லாம் ஒரே ஏஜ் குருப் போல :)
இப்படி சொல்லிட்டா நீங்களும், நானும் ஒண்ணாகிடுவோமாக்கும். என்னைவிட நீங்க சில வருசம் சீனியருங்கோ
Deleteஇப்பல்லாம் ஏது இந்த விளையாட்டுகள். வெளியில விளையாட விட்டா கிரிக்கெட் இல்லைன்னா பேட்மிண்டன் அதுவுமில்லைன்னா ஃபுட்பால் இவ்ளோதான் இந்தக்கால பசங்க விளையாடுறாங்க.
ReplyDeleteஅட ஆமாங்க! இந்த விளையாட்டு சூப்பரா இருக்குமே! ஆனா அதுல இவ்வளவு இருக்கா? அருமை! நன்றி!
ReplyDeleteமறக்க முடியாத விளையாட்டுக்கள்
ReplyDeleteஇப்பத்தய பசங்களுக்கு (இவரு எப்பத்தய் பயலாம்) இந்த விளையாட்டுக்கள் தெரியாம இருக்கிறது கவலைக்குறிய விடயம்தான்....
சில பௌர்ணமி இரவுகளில் மின்சாரம் இல்லாத அந்தப் பொழுதுகளில் கூட விளையாடியுள்ளோம்....
மறக்க முடியாத நினைவுகளவைகள்
எங்க பருவத்திலே இந்த விளையாட்டு இல்லைன்னு நினைக்கிறேன் அக்கா ..
ReplyDeleteஆனா கிராமத்துல இல்லாத ஆட்டமா ? அம்புட்டு அழிச்சாட்டியம் பண்ணியிருக்கேன் அக்கா..
நல்ல பதிவு ..
ஆமா இந்த மறந்துபோன விளையாட்டெல்லாம் இந்தககாலக்குழந்தைகளுக்கும் விளையாட வாய்ப்பு கொடுத்தால் நல்லதான் இருக்கும்
ReplyDeleteஎங்கள் ஊர்களிலும் நாங்கள் விளையாடி இருக்கோம் இப்படிஎத்தனை விடயங்கள் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டது
ReplyDeleteunmaithaan sonthame...
ReplyDeleteஅந்த நாள் ஞாபகம் வந்தது...
ReplyDeleteநன்றி...
tm7
ராஜி நேற்றுதான் என் பெண்ணிடன் இந்த விளையாட்டுகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். இன்று காலையில் பார்த்தால் உங்கள் பதிவு.
ReplyDeleteஎன்னுடைய அடுத்த பதிவில் இதைப் பற்றி கூற நினைத்தேன், இதையே லிங்காக கொடுத்து விடுகிறேன் விரைவில்... மிக்க நன்றி
ReplyDeleteகிட்டி புல், கோலி
ReplyDeleteஅட அது அந்தகாலம்
ஹை விளையாட்டை நினைவு படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பகிர்வு..
ReplyDeleteமறக்கமுடியுமா தமிழர் மரபுகளை..
பழந்தமிழர் விளையாட்டுக்கள் 36 ஐக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
http://www.gunathamizh.com/2009_06_07_archive.html
ReplyDeleteபழந்தமிழர் விளையாட்டுகள் 36
இந்த விளையாட்டு குறித்து தினசரி ஒன்றில் படித்தேன்! விளையாட்டுகள் குறித்து கவிதை ஒன்று எழுத எண்ணியுள்ளேன்! நன்றி!
ReplyDeleteசிறப்பான பகிர்வு. இந்த விளையாட்டெல்லாம் விளையாடணும்.. பசங்க வீட்டிலே அடைஞ்சுல்ல கிடக்காங்க!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.