Thursday, October 11, 2012

சின்ன பொண்ணு.., பெரிய பொண்ணு..,

                                         
இன்னிக்கு என்ன போஸ்ட் தேத்தலாம்ன்னு யோசிச்சுக்கிட்டே ஃபேஸ்புக்குல சுத்தும்போது இன்னிக்கு ”சர்வதேச பெண்குழந்தைகள் தினம்”ன்னு ஒருத்தர் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அவருக்கு நன்றி சொல்லிட்டு என் பொண்ணுங்க அடிக்குற லூட்டியை போட்டு ஒரு பதிவையும் தேத்திப்புட்டாச்சு..,

பெரியவ எப்பவும் ஒரே மாதிரி பேலன்ஸ்டா இருப்பா. அழுகை,அடம், சிரிப்பு, கோவம்ன்னு எந்த உணர்ச்சிக்கும் அதிகம் ஆட்படாம, ஆழ்கடல்   அமைதி போல தெளிவா இருப்பா. அதனால,  அதிகமா சேட்டை செய்யுறது இல்ல. 

ஆனா, சின்ன பொண்ணு புதுசா பொறந்த கன்னுக்குட்டி போல... ரொம்ப துள்ளும்.., சேட்டை..., சட்டுன்னு கோவம், அழுகை, குறும்புன்னு வீட்டை ரெண்டாக்குவா....

                                              


ஒரு வெள்ளிக்கிழமை ஸ்கூல்ல இருந்து வந்த சின்னது..., எனக்கு “டூ டேஸ்,  ஹாலிடேஸ்” ம்மான்னு சொல்லிட்டு “பால கணேஷ்”  கார்ட்டூன் டிவிடி எடுத்து போட்டு பார்க்க ஆரம்பிச்சுட்டா..., மணி ஆறாச்சும்மா.., தூயாக்கா ஹோம் வொர்க் பண்றா. நீ ஹோம் வொர்க் பண்ணலையாம்மா?ன்னு கேட்டேன்.

டூ டேஸ் ஹாலிடேதானே நான் நாளைக்கு பண்றேனேன்னு சொன்னா.., வேணாம்மா எந்த வேலையும் ஒத்தி போட கூடாது. இன்னிக்கே முடிச்சுட்டா நாளைக்குலாம் ஹாயா இருக்கலாம்.., திடீர்ன்னு எதாவது தடங்கல் வந்து நீ ஹோம் வொர்க் முடிக்கலைன்னா மிஸ்கிட்ட நீதான் திட்டு வாங்குவேன்னு சொல்லியும் கேட்காம  டிவி பார்க்க ஆரம்பிச்சா.

டிவில பார்வதி தேவி குளிக்க போகும்போது, தன் மகன் கணேஷை கூப்பிட்டு காவல் காக்க சொல்வதும்.., அவர் அப்படியே காவல் காப்பது போலவும் சீன் போய்க்கிட்டு இருந்துச்சு..., அப்போ தூயா, ஏய் இனியா! அங்க பாரு எவ்வளவு பெரிய காட் பிள்ளையார்! அவரே அவங்கம்மா பேச்சை கேட்குறாரு. நீ மட்டும் ஏன் அம்மா பேச்சை கேட்க மாட்டேங்குறேன்னு கேட்டா.

அம்மா பேச்சை கேட்டா..., நம்ம தலை துண்டாகிடும்டி அதனால இனி நாம அம்மா பேச்சை கேட்ககூடாதுடின்னு சொன்னா. என்னடி உளர்றே?ன்னு தூயா கேட்டதுக்கு...,  இங்க டிவில பாரு அம்மா குளிக்குறாங்க. யாரும் உள்ள  வராம பார்த்துக்கோன்னு பிள்ளையார்கிட்ட சொல்லிட்டு போறாங்க. அப்பா சிவன் உள்ள போக பார்க்குறார். உள்ள விடக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லியிருக்க்காங்கன்னு சொல்லி தடுக்குற புள்ளையோட கழுத்தை அப்பா வெட்டுறார். சோ, இனிமே அம்மா பேச்சை நாம கேட்டா.. இதான் நடக்கும்டின்னு சொன்னதை கேட்டு ங்ஙேன்னு முழிச்சா தூயா..                                       

  ஒரு நாள் ரெண்டுத்துக்கும் சண்டை. சின்னது சூப்பரா படம் வரையும்., ஆனா, தூயாக்கு படம் வரைய வராது.  ஒரு நாள் படம் வரைஞ்சு தூயாக்கிட்ட  கையில் புல்லாங்குழலோடு மயில் மீதிருக்கும் கடவுள் படம் காட்டியிருக்கா. படம் அழகா இருக்கு. ஆனா, யார் இந்த கடவுள்ன்னு புரியாம கேட்க. முருகன்னு சின்னது சொல்லியிருக்கு. 

லூசு, முருகன் கையில வேல் இருக்கும்..., புல்லாங்குழல் இருக்காதுன்னு சொல்ல., தன் தவறை புரிஞ்சுக்க்கிட்டாலும் ஒப்புக்கொள்ள மனமில்லாம.., அதில்ல தூயா, தன் மாமா “கிருஷ்ணர்” போல புல்லாங்குழல் ஊத முருகனும் கத்துக்கிட்டாராம்ப்பான்னு சொல்லி தூயாவை நிலைகுலைய வச்சிருக்கா.

                              

சின்னதுக்கு 4 வயசாயும் மழலை மொழி மாறாம இருந்துச்சு. ”த”னாவை உச்சரிக்க வராது. ”த”னாக்கு பதில் “க”னா போட்டுதான் பேசுவா. ஒரு நாள் திடீர்ன்னு, அம்மா ஓடி வாயேன்.., “தம்பிமேல தாத்தா உக்காந்திருக்கு”ன்னு கத்துனா.

நான் என்னமோ ஏதோதுன்னு பதறி..., ஓடி போய் கட்டில்ல தூங்குற பையனை  பார்த்தேன். எல்லாமே சரியா இருக்கவே புரியாம சின்னதை கூப்பிட்டு என்னன்னு கோவமா கேட்க...,

அம்மா அங்க பாருன்னு ஜன்னலுக்கு வெளிய கரண்ட் கம்பியை காட்டுறா. அங்க கம்பி மேல காக்கா உக்காந்திருக்கு. அதை பார்த்துதான் ”கம்பி”தம்பியாவும்..., “காக்கா” தாத்தாவாகவும் மாறி இருக்குறது புரிஞ்சு கோவத்தையும் மீறி சிரிக்க வைத்தது. .


டிஸ்கி: எல்லாரும் ரெண்டாவதும் பெண்ணாய் பொறந்துடுச்சேன்னு வருத்தப்பட்ட போதும்..  ஒண்ணுக்கொண்ணு துணையாய் இருக்கட்டும்ன்னு எல்லருக்கும் நான் ஆறுதல் சொல்வேன். ஒரு நொடி கூட கவலை பட்டதில்லை. என் வாழ்வை மிகுந்த தேடுதலுடன் ரசிக்கவும் ,ருசிக்கவும் வைக்கும் என் இரு மகள்களுக்கும் இந்நாளில் நன்றியை சொல்லிக்குறேன்.

29 comments:

 1. இனியாவை பார்க்கும் ஆசை வருது (தூயாவை தான் எல்லாரும் விழாவில் பார்துட்ட்டாங்க. அடுத்த முறை இனியாவையும் அழைத்து வாங்க)

  ReplyDelete
  Replies
  1. ம் ம் இப்பவே சின்ன மேடம் எப்போ என்னை மோகன்குமார், மதுமதி அங்கிள், சசி ஆண்டியை பார்க்க கூட்டி போக போறேன்னு நச்சரிப்பு. அடுத்த சந்திபுல கூட்டி வரலைன்னா வீட்டுல பூகம்பமே வெடிக்கும்.

   Delete
  2. ஆண்டியா நான் உங்களுக்கு தங்கை என்றால் அவர்களுக்கு என்ன முறை ?

   Delete
 2. குறும்பு விளையாடுகிறது... பதிவில்... பொண்ணுங்களை விட அம்மாவின் எழுத்தில்...

  அக்கா கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. பொண்ணுங்க அடிக்குற லூட்டியை அப்படியே எழுதினேன். ரசித்தமைக்கு நன்றி சகோ

   Delete
 3. என் வாழ்வை மிகுந்த தேடுதலுடன் ரசிக்கவும் ,ருசிக்கவும் வைக்கும் என் இரு மகள்களுக்கும் இந்நாளில் நன்றியை சொல்லிக்குறேன்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி

   Delete
 4. ஒரு வெள்ளிக்கிழமை ஸ்கூல்ல இருந்து வந்த சின்னது..., எனக்கு “டூ டேஸ், ஹாலிடேஸ்” ம்மான்னு சொல்லிட்டு “பால கணேஷ்” கார்ட்டூன் டிவிடி எடுத்து போட்டு பார்க்க ஆரம்பிச்சுட்டா...,
  -என்னைக் கேக்காம என் டிவிடிய எடுத்து இனியா எப்படி பாக்கலாம்...? தலையில குட்டுதான். சின்ன வயசுல எனக்கும் ‘ச’வுக்கு பதில் ‘த’ போட்டுப் பேசற பழக்கம் இருந்திச்சு. ஸோ.. ஸேம்பிளட். மன்னிச்சுரலாம். ஹி... ஹி..

  ReplyDelete
  Replies
  1. மாமா டிவிடியை பார்க்க மருமகள் ஏன் பெர்மிஷன் வாங்கனும்? இப்படி சொல்றதெல்லாம் ஒரு தாய் மாமனுக்கு அழகாண்ணா?!

   Delete
  2. நிஜந்தாம்மா... மருமகளுக்காக எதை வேணும்னாலும் கொடுபபேன், கொடுக்கலாம். இதெல்லாமே செல்லமா மிரட்டறதுதானே...

   Delete
 5. சின்ன ராஜிதான் சின்னதுன்னு ஒரே வார்த்தையில சொல்லியிருக்கலாம்..விநாயகன் கதை குழந்தைகளுக்கும் தெளிவா தெரிஞ்சிருக்கு..சுவையாக இருந்துச்சு..ஒரே கலாட்டாதான்னு சொல்லுங்க..இனியா ஒரு நாளைக்கு பாக்க வரேன்..

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான் சகோ. உருவத்திலயும், குறும்புலயும் என்னைபோலவேதான். அவளும் உங்களலாம் கேட்பா சகோ.

   Delete
 6. மருமகள்களின் அழகிய லூட்டிகள்
  சகோவின் வரிகளில் அழகாய் மிரள்கிறது

  ReplyDelete
 7. கம்பி”தம்பியாவும்..., “காக்கா” தாத்தாவாகவும் மாறி இருக்குறது புரிஞ்சு கோவத்தையும் மீறி சிரிக்க வைத்தது. .


  //சிரித்து மகிழ்ந்தோம்//பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப்பக்கத்தில்
  இதயத்தில் நீ மற்றும் விதிவிலக்கு எனும் தலைப்பில் கவிதைகள் பகிர்ந்துள்ளேன்! நன்றி!

  ReplyDelete
 8. ஆஹா ரசனையான பகிர்வு குழந்தைகளின் குறும்புத்தனங்களையும் ரசிக்கும் தாயுள்ளம்

  ReplyDelete
 9. மிகவும் ரசித்துப் படித்தேன்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. கலக்கல் பதிவு வாழ்த்துக்கள் செல்லங்களா .

  ReplyDelete
 11. செல்லங்களுக்கு வாழ்த்துகள்.
  படிக்கும்போதே அவர்களின் குறும்புகள் சிரிக்கவைக்கின்றன.

  ReplyDelete
 12. நான் கூட பாலகணேஷ் டிவிடி-ன்னதும் நம்ம கணேஷ் சொல்லாமக் கொள்ளாம சினிமாவுலே நடிச்சிட்டாரோன்னு குழம்பிப்போயிட்டேன்!
  அப்புறம், ரெண்டு பெண் குழந்தைகளா? இரட்டிப்பு மகிழ்ச்சி! கடவுளின் ஆசீர்வாதம்! :-)

  ReplyDelete
 13. ஆகா!சுவாரஸ்ய லூட்டி!

  ReplyDelete
 14. சின்ன மகளின் லூட்டியை மிக ரசித்தேன்...

  ReplyDelete
 15. தாய் எட்டடி பாய்ந்தா பிள்ளை 16 அடு பாயும் என்று பெரியவங்க சொன்னது உங்கள் வீட்டில் நிஜமாகியுள்ளது

  ReplyDelete
 16. ரசித்துப் படித்தேன்.

  ReplyDelete
 17. unmai sako!


  pillaikal-
  kannaana selvangal...

  ReplyDelete
 18. நல்ல அனுபவப் பகிர்வு

  ReplyDelete
 19. வாழ்வை மிகுந்த தேடுதலுடன் ரசிக்கவும் ,ருசிக்கவும் வைக்கும் இரு மகள்களுக்கும் வாழ்த்துகள் !!

  ReplyDelete
 20. இனியாவின் லூட்டி.... ரசித்தேன். குழந்தைகள் அதிலும் பெண் குழந்தைகளின் சின்னச் சின்ன லூட்டிகளை ரசிக்க முடியும்.... என் பெண் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்து ரசிப்பேன்....

  ReplyDelete