Monday, October 01, 2012

மனைவியை மாத்த சூப்பர் சான்ஸ் ..., ஐஞ்சுவை அவியல்.

                                      
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ..

என்னங்க மமோய் பாட்டுலாம் பலமா இருக்கே. சும்மாதான் புள்ள இந்த பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு உனக்கு தெரியாதா?!

தெரியும். ஆனா, அந்த பாட்டு பத்தி சில விஷயங்கள் சொல்றேன்.

பார் மகளே பார்ன்ற படத்துல வர்ற பாட்டு இது. சிவாஜி, சௌகார் ஜானகி நடிச்சது. இந்த பாட்டை காலைலதான் டிவி பொட்டில பார்த்தேன் மாமா. அதுல, புதுசா பொறந்த தன் குழந்தைகளை தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடுற மாதிரி இந்த பாட்டு...,

அந்த பாட்டுல  சிவாஜி குட்டி பசங்க தூங்குற தொட்டிலுக்கு பக்கத்துல வரும்போது வெள்லை பீடி புடிச்சிக்கிட்டு வருவார் மாமா. பச்ச புள்ளைங்க இருக்குற வூட்டுல இப்ப இருக்குற அப்பாக்களே வெள்ளை பீடி பிடிக்குறதில்லை. அப்போ எப்படி?! இதை எப்படி சென்சார்ல விட்டாங்க மாமா.

விடு புள்ள, உன்னை போல யாரும் கேள்வி கேப்ப்பாங்கன்னு நினைச்சிருக்க மாட்டாங்க.

ம்க்கும் என்னை கிண்டல் பண்ணாம பொழுது போகாதே உங்களுக்கு..

 விருது நகர்ல ஒரு காமெடி புள்ள..,

என்னங்க மாமா?!

                                                     

                                                    
கலக்டர் ஆஃபீசு எதிர்க்க ஒரு பெட்ரொல் பங்க்ல சாயந்தரம் 7 மணிக்கு கரண்ட் கட். அப்போ ஒரே மாதிரி  ஹெல்மெட் போட்டுக்கிட்டு ரெண்டு பேர் தங்களோட வண்டிக்கு பெட்ரோல் போட வந்திருக்காங்க. பெட்ரோல் போட்டுக்கிட்டு ஒரு ஜோடி கிளம்பிடுச்சு. கொஞ்ச தூரம் போனதும் .., என்னங்க நாம தாதம்பட்டிக்கு போகனும்.., நீங்க சாத்தூர் பக்கம் போறிங்களேன்னு குரல் கேட்ட பின்னாடி திரும்பி பார்த்தா வேற ஒரு பொண்ணு உக்காந்திருக்குறதை பார்த்து அதிர்ச்சியாகி...,

என்ன? ஏதுன்னு விசாரிச்சு மீண்டும் பெட்ரோல் பங்குக்கே போய் அவங்கவங்க பொண்டாட்டிகளை கூட்டிக்கிட்டு போய் இருக்காங்க.

ஹா ஹா நீங்க பார்த்து நடந்துக்கோங்க மாமா.

ம்க்கும் எனக்குலாம் அந்த மாதிரி ஒரு சாய்ஸ் கிடைக்காது.

என்ன சொன்னீங்க? ஒண்ணுமில்லை தாயி! ரொம்ப பசிக்குது. போய் டிஃபன் கொண்டுவா.

இருங்க மாமா கடைக்கு போய் இட்லி மாவு பாகெட் வாங்கி வந்து தோசை ஊத்தி தரேன்.

நில்லு புள்ள! நீ மாவரைக்கலையா?

இல்ல மாமா! அதான் 20ரூபாய்க்கு 4 பேர் சாப்புடுற மாதிரி மாவு தர்றீங்களே அப்புறம் ஏன் மாமா வீடுல மாவரைக்கனும்...



 அது தப்பு புள்ள! நாம சாப்புடுற பொருளுக்குலாம் ஐஎஸ்ஐ  முத்திரை இருக்கு. நீ வாங்கி வர்ற மாவு பாக்கட்ல அது இருக்கா?!

இல்லியே மாமா..,

அது மட்டுமில்ல புள்ள. மாவு சீக்கிரம் புளிக்காம இருக்கவும், புளிச்ச வாசனை வராம இருக்கவும்  போரிங் பவுடரும், ஆரோட் மாவும் சேர்க்குறாங்க. அதுமட்டுமில்லாம மாவு பொங்கி வராம இருக்கவும் ஒரு வித கெமிக்கல் பவுடரையும் சேர்க்குறங்க.

ஐயோ!

நம்ம வீட்டுல அரைக்குற மாவு 4 மணிநேரம் கழிச்சு லேசா ஒரு மாதிரி புளிச்ச வாசனை வரும். அது வந்தால்தான் நல்ல மாவு. அது நல்ல பேக்டீரியாவோட வேலை. போரிங் பவுடர்ன்னா என்னன்னு தெரியுமா?!

ம்ஹூம் தெரியாது மாமா

கேரம் போர்டுல காயின்ஸ் ஈசியா நகரதுக்கு போடுற பவுடர்.

ஓ ஓ அப்பிடியா?!

அவசரப்படாத.  மாவு அரைக்குற கிரைண்டர் கமர்சியல் ரகமில்லை. வீட்டுல அரைக்குற சாதரண மிஷிந்தான் தொடர்ந்து 12 இல்ல 14மணிநேரம் ஓடினால் மெஷின் சூடாகி, மாவும் சூடாகும். ரொமம்ப நேரம் ஓடுறதால கல்லு தேஞ்சு மாவுல கலக்கும். அது நம்ம கிட்னில போய் உக்காந்து அடைச்சிக்கும்.

எல்லாத்துக்கும் மேலா, மாவு அரைக்குறவங்க சுத்தமான தண்ணிதான் சேர்க்குறாங்கன்னு என்ன நிச்சயம்? அவங்க கைவிரல் நகம்லாம் ஒழுங்கா வெட்டி சுத்தமாதான் இருப்பாங்கன்னு அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்..

 கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு உடம்பை கெடுத்துக்க கூடாது புள்ள.

ஆகட்டும்ங்க மாமா, இனி நானே வீட்டுல அரைச்சுக்குறேன். ஆமா, உங்களுக்கு இதெலாம் யாரு சொன்னது?

நம்ம மின்னல்  வரிகள் கணேஷ் அண்ணாதான்,. ராஜேஷ் குமார் நாவல்ல படிச்சதா என்கிட்ட சொன்னார்.

ம் ம் ம் இம்புட்டு அறிவா பேசுறீங்களே?! ஒரு கேள்வி கேட்கவா மாமா?!

ம் கேளு புள்ள.

                                                     

தெற்கே ஓடுற நாயோட வால் எந்த திசையை பாக்கும்?!


அது வந்து., இருங்க நம்ம ராஜி பிளாக் படிக்க வர்ற புத்திசாலிங்களுக்கு தெரியுதான்னு பார்க்கலாம்.

ம் ம் ம் ஓக்கே. நான் ஒரு ஜோக் சொல்லவா?

சொல்லுங்க மாமோய்..,

சன் டிவிங்களா? பெப்சி உமாவா பேசுறது?! எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க.

சாரிங்க சார். நான் சென்னைல இருக்கேன்.

ஹா ஹா சூப்பர் ஜோக் மாமா. போதும் மாமா. நான் போய் ரவை வாங்கி வந்து உங்களுக்கு உப்புமா கிண்டி தரேன்.

21 comments:

  1. nakai suvaiyum!

    nalla thakavalum!

    mikka nantri!

    ReplyDelete
  2. ஐஞ்சுவை அவியலிலும் இன்று நிறைய உபயோகமான தகவல் பகிர்ந்திருக்கீங்க. நன்றி ராஜி. இட்லி மாவு ஈஸியா கிடைக்குதேன்னு பல நோய்களை விலைக்கு வாங்கிடாம நல்லதொரு எச்சரிக்கை செய்திருக்கீங்க. அப்புறம் அந்த ஹெல்மெட் விஷயம் நகைச்சுவையோடு கவனமா இருக்கவும் எச்சரிக்கை தந்திருக்கு.

    நீரோடும் வைகையிலே பாட்டு பார்க்கும்போதெல்லாம் எனக்கும் இந்த சந்தேகம் வரும். பார்க்கும்போது நமக்கே பதைப்பா இருக்கும். ஏன் அப்ப இதைக் கண்டுக்கலைங்கிறது ஆச்சர்யம்தான். அந்தப் படம் பார் மகளே பார் என்று நினைக்கிறேன். எதுக்கும் சரிபார்த்திடுங்க.

    நாய்வால்? ம்ஹூம்... தெரியல.

    ReplyDelete
    Replies
    1. அம்மாக்கிட்ட கேட்டு திருத்திட்டேங்க. நன்றிங்க சகோ

      Delete
  3. மாமா நல்ல செய்தியெல்லாம் சொன்னாரு ஆமா பார் மகளே பார் பாட்டு கூட வருமே.

    ReplyDelete
  4. ம்ம்ம் ..அருமை சகோ

    ReplyDelete
  5. இட்லி மேட்டர் சூப்பர் ராஜி! ஐஞ்சுவையல் உணவாக இருந்தாலும் அறுசுவையின் விளைவு.

    ReplyDelete
  6. நெத்தி அடிச்சமாதிரி சொல்லி இருக்கீங்க ..
    இனி மாவு வாங்க கூடாது ....

    (எல்லா மாவு விற்பனையாளர்களும் ராஜி அக்காவை தேடுகிறார்களாம்)

    ReplyDelete
  7. அவியல் செம ருசி.

    நாய் வால்.. எப்படீங்க இப்டியெல்லாம் யோசிக்கிறீங்க :-))

    ReplyDelete
  8. பெட்ரோல் பங்..... என்ன நடக்குது??

    அவியல் செம டேஸ்ட்

    ReplyDelete
  9. நம்ம மின்னல்  வரிகள் கணேஷ் அண்ணாதான்,. ராஜேஷ் குமார் நாவல்ல படிச்சதா என்கிட்ட சொன்னார்.
    /// உங்களுக்கும் சொல்லிபுட்டாரா? அவியல் ரொம்ப நல்லா இருந்துச்சு!

    ReplyDelete
  10. நாயோட வால் எந்த திசையையும் பார்க்காது; ஏனென்றால் அதுக்கு கண் கிடையாது!

    இது எப்படி? என் பங்குக்கும் ஒரு ரம்பம்!

    ///தெற்கே ஓடுற நாயோட வால் எந்த திசையை பாக்கும்?!//

    ReplyDelete
  11. நான் இந்தப்பதிவைப் படிக்கும்போது,தலைப்பைப் பார்த்த தங்கமணி கோவிச்சுக்கிட்டு,ஊருக்குப் போயிட்டா!நீங்கதான் பொறுப்பு!ஹி,ஹி!

    ReplyDelete
  12. இந்த முறை ஐஞ்சுவை அவியலில் சில உண்மைகளை 'அவியல்' பண்ணி விட்டீர்கள் சகோதரி...

    ReplyDelete
  13. அருமை அவியல். கடைசி ஜோக் வெகு அருமை.

    ReplyDelete
  14. ///மனைவியை மாத்த சூப்பர் சான்ஸ் // மிக நல்ல ஐடியாவா இருக்கே அப்ப நான் இப்பவே இந்தியாவிற்கு குடும்பத்தோட வரேண். வரதுக்க்குமுன்னால ஒரு உதவி நயன் தாரா எந்த பெட்ரோல் பங்குல வந்து பெட்ரோல் போடுவாங்கன்னு விச்சாரிச்சு வையுங்க

    ReplyDelete
  15. ///நில்லு புள்ள! நீ மாவரைக்கலையா///

    வீட்டுகாரார் ஊரில் இல்லை மாமோவ்

    அல்லது

    கரண்டு இருந்தாதனே அரைக்குறது மாமோவ்

    ReplyDelete
  16. அடடா... இந்த மாதிரியெல்லாம் நமக்கு சான்சு கிடைக்கலையே....அப்படின்னு கவலைப்படாதீர்கள் ஆண்களே...

    ஹெல்மெட் போட்டதால அங்க அவர்கள் தப்பித்தார்கள். இல்லையென்றால் கொட்டு வாங்கியே ஓட்டை விழுந்திருக்கும்... மண்டையில்.

    ஜாலி பகிர்விற்கு நன்றி ராஜி அக்கா.

    ReplyDelete
  17. அந்த மோட்டர் பைக் பார்ட்டி மேட்டர் சூப்பர்....
    எனக்கு அப்பிடி ஒரு சான்ஸ் கிடைச்சா அப்படியே எஸ் ஆகியிருப்பேன்..
    ( முறைச்சிப் பார்க்காதீங்கோ..)

    அப்புறம் மாவரக்கிற மேட்டர்ல நல்ல விழிப்புணர்வு இருக்குது ஆனாலும் இப்போதெல்லாம் ரெடிமேட் மாவுதான் பாஸ்ட் மூவ் ஆகுது..

    மாமா காமடி சூப்பர்

    ReplyDelete