Wednesday, October 24, 2012

விஜய தசமி - அன்றும்..., இன்றும்.........,
                                                                                                                               
வணக்கம் சகோ’ஸ்

விஜய தசமி வாழ்த்துக்கள்...,

என்னடா! எல்லாரும் சரஸ்வதி  பூஜை அன்னிக்குதான் வாழ்த்து சொல்லுவாங்க. ஆனா, ராஜி விஜயதசமி அன்னிக்கு வாழ்த்து சொல்லுதேன்னு நினைக்காதீங்க.
சின்ன புள்ளைல பண்டிகைகாலம் வரும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னா, அப்பா, அம்மாக்கு ஹெல்ப் பண்ணலாம், பய பயபக்தியா சமி கும்பிடலம்ன்ற நினைப்பே தவிர, பள்ளிக்கூடத்துக்கு 1 நாள் லீவும், பலகாரம் கிடைக்குமேன்றவேற இல்லீங்கோ.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அந்த காலத்துல ஆயுத பூஜை பண்டிகையை எப்படி கொண்டாடினேன் தெரியுமா?! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம்....

ஒட்டடை அடிக்குறேன் பேர்வழின்னு ஏணி மேல ஏறிட்டு இறங்க பயந்துக்கிட்டு அப்பாவை கூப்பிட்டதும்....


தலைவாசக்கால், கதவுல்லாம் தொடச்சி பொட்டு வைக்குறேன்னு  பல்லியோட வாலை அறுத்ததும்.....,

பரண்மேல ஏறி சுத்தம் பண்ணும்போது, சாப்பிட முடியாம, வெளில எறிஞ்சா அம்மாக்கு தெரிஞ்சு போகும்ன்னு பரண்மேல தூக்கி போட்ட இட்லி அப்பா கைக்கு கிடைச்சு, அல்கொய்தா தீவிரவாதியைவிட மோசமா விசாரிக்கப்பட்டதும்....,

அம்மாக்கு ஹெல்ப்பா பெட்ஷீட், டிவிகவர்லாம் துவச்சு தரேன்னு சொல்லி கிழிச்சு வெச்சதும்.., அதுக்கு அம்மா செம மாத்து மாத்துனதும்...

ஒரே ஒரு ஸ்லேட்டுக்கு அடுப்புக் கரியும், கோவை இலையும் அரைக்க போறேன்னு சொல்லி,  டிரெஸ்ஸை கரியாக்கி வூட்டுக்கு போனா திட்டுவாங்களேன்னு பயந்து ஃப்ரெண்ட் வீட்டுல இருந்ததும்....,

வடகையே தராம பீரோவுக்குள் ஒண்டு குடித்தணம் பண்ணிய எலியை பிடிச்சு தூர கொண்டு போய் விட சொன்ன பாட்டி பேசை கேக்காம, கேப்டன் கஷ்மீர் தீவிரவதியை அழிச்ச மாதிரி தண்ணில முக்கி சாகடித்ததையும்.....,

8 மாசத்துக்கு முன்னாடி காணாம போன தாத்தாவோட மூக்குப்பொடி டப்பாவை ரேடியோக்கு பின்னால இருந்து எடுத்து குடுத்ததுக்கு இனாமா 25 பைசா வாங்கி தேன் மிட்டாயும், சர்க்கரை அப்பளமும் வாங்கி சாப்பிட்டதும்....,

புத்தகம், அப்பாவோட பேங்க் பாஸ் புக், சர்டிஃபிகேட், விவாசயத்துக்கு யூஸ் பண்ணுற அருவா, மண்வெட்டி, கடப்பாரை, கத்தி, உலக்கை,அம்மை, ஃபேன், ரேடியோ, அடுப்பு, லைட், சைக்கிள், ஸ்விட்ச் போர்டு, ன்னு யூஸ் பண்ற எல்லாத்துக்கும் பொட்டு வைக்குறிங்களே! அப்போ, செருப்பு, வெளக்குமாறுக்குலாம் ஏன் பொட்டு வச்சு சாமி கும்பிட்டாதான்னு அடம்பிடிச்சதும்...,

சாமி கும்பிட்டதும்..., அப்பா தன்னோட சைக்கிளை எப்படியும் நமக்கு ஓட்ட தருவார்ன்னு வெயிட் பண்ணும்போதுதான் ஊருக்கதைலாம் பேசிக்கிட்டு மெதுவா சாப்பிட்டு முடிக்கும்போது இந்த காலத்து கரண்ட் கட் போல கரக்ட் டைம்முக்கு ராகு காலமும், எமகண்டமும் வந்து நிக்கும்....,

ஒரு வழியா. ராகு காலத்தையும், எம கண்டத்தையும்  பேக் பண்ணி அனுப்பின பின் அப்பா, சைக்கிளை எடுத்து எலுமிச்சை பழத்துமேல ஏத்தி அவர், ஒரு முறை ஓட்டி பார்த்து தருவார்..., அப்பதான் அம்மா ஒரு டப்பாவை கொண்டு வந்து ஸ்டெல்லா அத்தை வூட்டுக்கு கொண்டு போய் குடு, நசீமா பெரியம்மா வூட்டுக்கு குடுன்னு உயிரை வாங்குவாங்க.                                                      
வாழை மரம், மாவிலை, மாலை, கலர் பேப்பர், பலூன்  கட்டுன சைக்கிள்ல ஹேண்டில்பாரை தேடி...,  

ஒரு குரங்கே...,
குரங்கு பெடல்...,
அடித்து, சைக்கிள்
ஓட்டுச்சேன்னு., ன்னு சகோக்கள் கமெண்ட் போடனுமேன்னு குரங்கு பெடல் அடிச்சு சைக்கிள் ஓட்டுனதும்.....,

புதுசா ஸ்கூல் சேருர பிளைங்க தர்ற புளிப்பு மிட்டாய்க்காகவே  lலீவாயிருந்தாலும் ஸ்கூல் போன  சந்தோஷமிருக்கே..., அட! அட! அட!
சொர்க்கம்ங்க அது.
                                             
ஏதோ பேருக்கு லேசா ஒட்டடை அடிச்சு,  பொரி, கடலை வெச்சு சாமி கும்பிட்டு பொழுதன்னிக்கும் பிளாக்ல பதிவு போட்டு, டிவிட்டர், ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ், ஸ்கைப்ல சாட்ன்னு கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து பண்டிகை கொண்டாடுனதுல கிடைக்கலீஙக.


16 comments:

 1. ஃபேஸ் புக்னா சிஸ்டமை எடுத்து வாட்டர் வாஸ் பண்ணி பூஜை? கி கி

  ReplyDelete
 2. ஹா... ஹா....

  விழாக்கால வாழ்த்துக்கள் சகோதரி...

  நன்றி...
  tm2

  ReplyDelete
 3. உண்மைதான்! இருதினங்களுக்கு முன் தேன்மிட்டாய் மற்றும் கமர்கட் இக்காலத்தில் சுவை எப்படி இருக்கிறதென்று பார்க்க ஒன்று வாங்கினேன் கடைக்காரர் பழைய ஞாபகமா சார் என்றார்! மனம் கவர்ந்த பதிவுக்கு நன்றி! என்னுடைய வலைப்பக்கத்தில் புதிய இடுகைகள் உள்ளன. முடிந்தபோது வாருங்கள்!

  ReplyDelete
 4. சிறப்பான நினைவலைகள்....

  தேன் மிட்டாய் - கடித்தவுடன் வாயில் இறங்கும் ஒரு சுவை... சப்புக் கொட்ட வச்சுட்டீங்களே ராஜி!

  அப்ப எலியை தண்ணீரில் முக்கியாச்சு - நல்ல வேளை இப்ப மௌசை முக்கலையே!

  ReplyDelete
 5. நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்.முன்னல்லாம் டி.வி யாவது பாப்போம் இப்ப அதெல்லாம் விட்டுட்டு கம்ப்யுட்டருக்கு அடிமையாயிட்டமே.எல்லாம் கால மாற்றம்தான்.

  ReplyDelete
 6. விஜயதசமி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. மலரும் நினைவுகள் சுவாரசியம்

  ReplyDelete
 8. விஜய தசமி வாழ்த்துக்கள் ...-:)

  ReplyDelete
 9. இனிய நினைவலைகளில் விஜயதசமி.


  ReplyDelete
 10. Antha Naal Gnabagam Nenjile vanthathe...vanthathe.

  ReplyDelete
 11. கேப்டன் கஷ்மீர் தீவிரவதியை அழிச்ச மாதிரி தண்ணில முக்கி சாகடித்ததையும்.....,
  ///////////////////////////////

  அட கொலகார கும்பலோடயா சாவகாசம் வச்சிருக்கிறேன் அடியாத்தி இப்பவே எஸ் ஆகிட வேண்டியதுதான்.

  கெப்டண்ட ரிலேசனா இருப்பாய்ங்களோ....

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அருமையான நினைவலைகள்.
  இத்தனை ராஜிகள் உங்களுக்குள்ள இருக்காங்களா:)

  ReplyDelete
 14. அடடா புளிப்பு மிட்டாக்காக பள்ளிக்கூடம் போனவங்களா நீங்க சொல்லவேயில்ல.

  ReplyDelete
 15. சிறு வயது நினைவலைகள் அருமை. நானும் மாணவனாக உணர்ந்தேன் படிக்கும் நேரம்.

  ReplyDelete
 16. இந்த காலத்து கரண்ட் கட் போல கரக்ட் டைம்முக்கு ராகு காலமும், எமகண்டமும் வந்து நிக்கும்....,//

  டைமிங் & ரைமிங் காமெடி !

  ReplyDelete