Wednesday, January 30, 2013

சின்ன வயசுல நான் இப்படித்தான் இருந்தேனாக்கும்!! ..,

                       

சின்ன பிள்ளையா இருக்கும்போது அழகா இருப்பேன். ப்ளீஸ் பேச்சு பேச்சாதான் இருக்கனும். ஏன், கல்லுலாம் தேடுறீங்க?! சரி சுமாரா இருந்தாலும் அறிவா இருப்பேன்..., ப்ளீஸ், இதையாவது ஒத்துக்கோங்களேன்!!! எப்ப பாரு எதாவது யோசனை பண்ண்கிக்கிட்டே இருப்பேனாம். வருங்காலத்துல பிளாக் எழுதுவேன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. அதான் அப்பத்திலிருந்து பதிவை தேத்த யோசனை பண்ணிக்கிட்டு இருந்திருகேன்.

அப்படி என்னதான் என் மண்டைக்குள்ள பல்ப் எறிஞ்சுச்சுன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாம்??! அதுக்குதான் இந்த பதிவு...,

1. பென்சில் சீவி வரும் தூளை “சாதம் வடிச்ச கஞ்சி”ல ஊற வெச்சா அழி ரப்பர் வரும்ன்னு நினைச்சுப்பேன்!!??

”2.  சூட்டு கொட்டையை” சூடு பறக்க தேய்ச்சு, பக்கத்துல உக்காந்து இருக்குற புள்ளைங்க தொடையில வெச்சு ரசிச்சு சிரிப்பேன்!!

3. வேப்பங்கொட்டை ஓட்டினை  ரெண்டா உடைச்சு கை விரல் முட்டில வெச்சு ஓங்கி அடிச்சு ரத்தம் வர வெச்சு வீரம் காட்டுவேன்!!??

4. சினிமா தியேட்டர்ல வெட்டி வீசியெரிஞ்ச ஃபிலிமை காசு குடுத்து வாங்கி வந்து, பியூஸ் போன பல்புல தண்ணி நிரப்பி வெளிச்சம் பாய்ச்சி தாத்தாவுக்கு தெரியாம அவர் வேட்டியை கொண்டு வந்து திரையாக்கி படம் காட்டி அலட்டிக்குவேனாக்கும்!!??

5. வாத்தியார் அடிக்குறதுக்காக தினம் ஒரு புது குச்சி உடைச்சு வர்ற பக்கத்து கிளாஸ் பையனுக்கு வாந்தி, பேதி வரனும்ன்னு எல்லையம்மனுக்கு காசு வெட்டி போட்டிருக்கேன்!!??

6. சைக்கிள் கடையில் கிடைக்குற வாஷர்களை கொண்டு போய் பாணியர் காலத்து “ஓட்டை காலணா”ன்னு சீன் போட்டிருக்கேன்!!??

7. ஆத்துல மிதக்குற தலை பிரட்டையை  “மீனு”ன்னு நம்பி வீட்டு கிணத்துல கொண்டு வந்து நிரப்பி கிணத்தை நாசம் பண்ணி செம மாத்து வாங்கியிருக்கேன்!!??

8. நுங்கு சாப்பிட்டு மிச்சம் இருக்குற பனங்கா ஓட்டுல வண்டி செஞ்சு அமெரிக்கா, ஜப்பான்லாம் விசா இல்லாம போய் வந்திருக்கேன்!!??

9. கொட்டான்குச்சியில் நிரப்பி சுட்ட மணல் இட்டிலியும்,  கருவேல இலையில் அரைத்து வைத்த சட்டினியும் பசி போக்கியது அப்போது!!??

10.கண்ணாடி போட்டிருக்குறவங்கலாம் அறிவாளிங்கன்னு நம்பி..., வீட்டுல தலை வலிக்குதுன்னு பொய் சொல்லி கண்ணாடி போட்டுக்கிடு தடுக்கி விழுந்திருக்கேன்!!??

11. குரைக்குற நாய் கடிக்காதுன்னு நம்பி அதுங்கிட்ட வீரத்தை காட்டி கடிப்பட்டிருக்கேன்??!!

12.தீப்பெட்டியில் கயிறு கட்டி டெலிபோனா நினைச்சு, அண்டார்டிக்கா, ஆப்பிரிக்காக்குலாம் பேசினேன்??!!

13. தண்டவாளத்துல சில்லறை காசை வெச்சு அதன் மேல ரயில் ஏறி இறங்குனா, அந்த சில்லறை காசு காந்தமா மாறிடும்ன்னு நம்பி இருக்கேன்??!!

14. குலத்தெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு அம்மா சேர்த்து வெச்ச சாமி உண்டியல்ல இருந்து காசை சுட்டுக்கிட்டு (காசு சேர்ந்ததும் டபுள் மடங்கா போடுறதா சாமிக்கிட்ட சின்ன ஒப்பந்தம் போட்டுக்கிட்டுதான்) போயி கம்ர்கட் வாங்கி தின்னது!!??

15. லெட்டர்லாம் தபால்ல போடாம பாம்புக்கிட்டயும் லெட்டர் குடுத்தனுப்பலாம்ன்னு இராம. நாராயணன் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

24 comments:

 1. அதான் கண்ணாடி போட்டிருக்கிறீர்களா...? இருந்தாலும் இனிய நினைவுகள் சிலவற்றை, மனம் சிந்திக்க வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. ம் ம் ம் பொய் சொன்னதுக்கு சாமி தண்டனை குடுத்துட்ச்சு போல:-(

   Delete
 2. சேட்டைக்காரியாத்தான் இருந்திருக்கீங்க!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் பாவம்ல எங்கம்மா, அப்பா எல்ல?!

   Delete
 3. சின்ன வயசுல நான் இப்படித்தான் இருந்தேனாக்கும்!! ..,

  என்னமா இருந்திருக்கீங்க..!!வியக்கவைக்கிறீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. அம்புட்டு அறிவாளியா இருந்திருக்கேனா?!

   Delete
 4. //சூட்டு கொட்டையை” சூடு பறக்க தேய்ச்சு, பக்கத்துல உக்காந்து இருக்குற புள்ளைங்க தொடையில வெச்சு ரசிச்சு சிரிப்பேன்!!///

  சின்ன வயசில ராட்சசியா இருந்த்தீங்களா??

  /// வேப்பங்கொட்டை ஓட்டினை ரெண்டா உடைச்சு கை விரல் முட்டில வெச்சு ஓங்கி அடிச்சு ரத்தம் வர வெச்சு வீரம் காட்டுவேன்!!?///


  நானும் இப்படி சென்ஞ்சு இருக்கேன் ஆனா ஒரு வித்தியாசம் வீரத்துக்கு பதிலா சோகத்தை காண்பிப்பேன் முகத்துல


  ///சினிமா தியேட்டர்ல வெட்டி வீசியெரிஞ்ச ஃபிலிமை காசு குடுத்து வாங்கி வந்து, பியூஸ் போன பல்புல தண்ணி நிரப்பி வெளிச்சம் பாய்ச்சி தாத்தாவுக்கு தெரியாம அவர் வேட்டியை கொண்டு வந்து திரையாக்கி படம் காட்டி அலட்டிக்குவேனாக்கும்!!??////

  நீங்க படம் காட்டும் போது நான் இருந்து இருந்தா நான் எதிர்ப்பு தெரிவிச்சு படத்தை போட விடாமா தடுத்து இருப்பேன்


  //நுங்கு சாப்பிட்டு மிச்சம் இருக்குற பனங்கா ஓட்டுல வண்டி செஞ்சு அமெரிக்கா, ஜப்பான்லாம் விசா இல்லாம போய் வந்திருக்கேன்!!///

  நானும் இந்த வண்டி ஒட்டிருக்கேன்


  . //தண்டவாளத்துல சில்லறை காசை வெச்சு அதன் மேல ரயில் ஏறி இறங்குனா, அந்த சில்லறை காசு காந்தமா மாறிடும்ன்னு நம்பி இருக்கேன்??!!///

  நானும் இப்படி பண்ணி ரயில் போன பின் உடனே அதை எடுத்து கையை சுட்டுக் கொண்டிருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா நம்ம கேசும் ஒண்ணு இங்க இருக்கா?! வாங்க சகோ! வாங்க!

   Delete
 5. சிறுவயதிலும் நல்ல கற்பனைத் திறன்
  உடையவராக இருந்திருக்கிறீர்கள்
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கற்பனைலாம் இல்லீங்கப்பா! நம்ம யோசிக்குற லெவலே அவ்வளவ்தான்

   Delete
 6. பியூஸ் போன பல்புல படம் காட்டறது, பனங்கா வண்டி ஓட்டறது, டெலிபோன் பேசறதுன்னு நிறைய விஷயங்கள் நானும் செஞ்சிருக்கேன். கண்ணாடி போட்டவ்ஙகல்லாம் அறிவாளின்னு நம்பினியாம்மா.... ஹா... ஹா... பின்னால என்னைச் சந்திச்சதும் உண்மை தெரிஞ்சிருக்கும்! ரயில் பாதையில காசைப் போட்ட அது காந்தமாயிடுமான்னு பாத்தா காசு வளைஞ்சதுதான் மிச்சம்! மொத்தத்துல நானும் கொஞ்ச நேரம் கவலைகள் மறந்த பிள்ளைப் பருவத்துக்குப் போய் வந்தேன் உன்னால. ரொம்ப நன்றிம்மா.

  ReplyDelete
  Replies
  1. அப்படிலாம் சொல்லாதீங்கண்ணா! நீங்க அறிவாளிதான். என்ன சரிதா கூட இருக்கும்போது மட்டும்தான் கொஞ்சம்-----

   Delete
 7. சில விஷயங்கள் என் பால்ய பருவத்தையும் நினைவு படுத்தியது.

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா?! எல்லாருக்கும் இப்படி ஒரு மலரும் நினைவுகள் இருக்கும் போல!?

   Delete
 8. சில நேரம், இளமை பருவம் நோக்கி பயணம் செய்தேன்...

  ReplyDelete
  Replies
  1. டிராவல் சார்ஜ் கொடுத்துடுங்க

   Delete
 9. இளமைக்கால நினைவுகள் அருமை ராஜி.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி சகோ

   Delete
 10. பல விசயங்கள் சிறிய வயதுக்கு என்னை அழைத்து சென்றன! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 11. //வாத்தியார் அடிக்குறதுக்காக தினம் ஒரு புது குச்சி உடைச்சு வர்ற பக்கத்து கிளாஸ் பையனுக்கு வாந்தி, பேதி வரனும்ன்னு எல்லையம்மனுக்கு காசு வெட்டி போட்டிருக்கேன்!!??//

  இது ரொம்பவே ஓவர்! :) இனிய நினைவுகள் ராஜி!..... பலருக்கு அவர்களது சிறுவயது நினைவுகளை மீட்டுத் தந்த பதிவு!

  ReplyDelete
  Replies
  1. சின்ன வயசுல நல்லது கெட்டதுலாம் தெரியாதேண்ணா! அடுத்தவங்களுக்கு தீங்கு இழைக்க கூடாதுன்னும் தெரியாதே. அதனால அப்படி செஞ்சுட்டேன்
   இனி செய்ய மாட்டேன்.

   Delete
 12. எப்படியோ உங்க புண்ணியத்தில நல்லா சிரிச்சேங்க நன்றி சர்வீஸ் சார்ஜ் கேட்டுடாதீங்கோ....

  ReplyDelete
 13. பியூஸ் போன பல்புல படம் காட்டறது எப்படின்னு விளக்கமா பதிவு போடவும்.

  நன்றி.

  ReplyDelete