Thursday, August 15, 2013

ராஜியின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்!!




எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை சொல்லிக்குறேன் சகோ’ஸ்,

பத்து வயதுல:
ஒரு வாரத்துக்கு முன்னயே ஸ்கூல் களை கட்ட ஆரம்பிசாலும், சுதந்திர தினத்தன்னிக்கு முதல் நாள் தான் கிளாஸ் ரூம்லாம் ஒட்டடை அடிச்சு பெருக்கி, கழுவி, பிளாக் போர்டுக்கு கோவை இலையும் கரியும்  சேர்த்து இடிச்சு பிழிஞ்ச சாறை தேய்ச்சு பளபளப்பாக்கி...,  சிவப்பு, வெள்ளை, பச்சை கலர் பேப்பர்களை சணல் கயிறில் பசை தடவி ஒட்டி காய வச்சு தோரணம் கட்டி முதல் நாள் வீட்டுக்கு போக மணி எட்டாகும். 

அப்படி போகும்போது..., 

ஏய் பிள்ளைகளா! நாளைக்கு வரும்போது துவைச்சு, நீட்டா இருக்குற யூனிஃபார்ம்லதான் வரனும். கொடி ஏத்த எல்லோரும் கண்டிப்பா வரனும். இல்லாட்டி 5ரூபா ஃபைன் கட்டனும் கூடவே ஒரு நாள் முழுக்க முட்டி போடனும்ன்னு சொல்லுவார்.

ஆனா, அவர் அப்படி செய்ய மாட்டார்ன்னு தெரிஞ்சும் கூட எல்லோரும் போவோம். அந்த ஊருல இருக்குற பெரிய ஆளுங்க யாரையாவது கூட்டி வந்து கொடியேத்த சொல்லுவாங்க. அவர் சுதந்திர போராட்ட தியாகின்னு நாங்கலாம் நினைச்சுக்கிட்டு இருப்போம். வளர்ந்தப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஹெட் மாஸ்டருக்கு கடன் கொடுக்குற பணக்காரர்ன்னு!!

பெட்டிக்குள்ள, காலன்டர்ல இருக்குற, காந்தி, நேரு, வ.ஊ.சி, பாரதியார் படத்தையெல்லாம் தேடி பிடிச்சு அழகா கட் பண்ணி ஸ்கூல்ல அங்கங்க ஒட்டுவோம். காலையிலேயே சீக்கிரம் வந்த டீச்சருங்களும் அக்காக்களும் கொடி பறக்குற கோலம் போட்டு பார்டர் கட்டுவாங்க. பிடி சார், கொடி கம்பத்துக்கு பக்கத்துல ஒரு மேஜை போட்டு வெள்ளை துணி விரிச்சு அதன் மேல  ஒரு தட்டுல ஆரஞ்ச் மிட்டாய், சந்தனம், பூ”லாம் போட்டு மேஜை மேல வைப்பார்.

நாங்கலாம் சார் சொல்லி தந்த எக்சசைஸ்லாம் செய்ய கைல, கலர் பேப்பர் ஒட்டுன எதாவது ஒண்ணை வெச்சுக்கிட்டு ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்போம்!!  கலை நிகழ்ச்சி நடக்க காந்தி, நேரு, பாரத மாதான்னு கலர் பேப்பர், ஜிகினா உபயத்துல பசங்க ஜொலிப்பாங்க!!


அப்புறம் எல்லாரும் வருவாங்க. கொடி கம்பத்துக்கு பக்கத்துல அந்த பெரிய மனுசருக்கு பக்கத்துல ஹெட்மாஸ்டரும், பிடி சாரும் நிப்பாங்க.  மறுபக்கம் ஒரு ஸ்டூடண்ட் நிப்பார். அவர் அழகா லெஃப்ட், ரைட் போட்டுக்கிட்டு போய் அந்த பெரிய மனிதரை கூடி வந்து கொடி கட்டி இருக்கும் கயிறை பிடிச்சு கொடுப்பார்.

அந்த கயிறை பிடிச்சு அப்படி இப்படி அசைச்சா கொடி பறக்கும். அதுக்குள்ள இருக்கும் பூ பறக்கும்.  ”தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர்”ன்னு பத்து நாளா மனப்பாடம் பண்ண பாட்டை பாடி கொடுத்த  ஆரஞ்ச் மிட்டாயை சாப்பிட்டு கொண்டாடினேன்!!



15 வயதுல: 
காலண்டர் வந்ததும் முதல் வேலையா என்னிக்குலாம் லீவ் வருதுன்னு பர்ப்போம். சுதந்திர தினம் சனி, ஞாயிறுல வந்தா செம கடுப்பா இருக்கும். வெள்ளி, திங்கள்ல வந்தா கூடுதல் சந்தோசம். ஏன்னா, 3 நாள் லீவ் கிடைக்கும்ன்னு.

இன்னிக்கும் ஸ்கூல் போகனுமா?!ன்னு சலிச்சுக்கிட்டே போய் கொடி ஏத்தி மிட்டாய் வாங்கிக்கிட்டு, பசங்களோடு அரட்டை அடிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து

யாராவது இது எத்தனையாவது சுதந்திரதினம்ன்னு கேட்டா கண்டிப்பா ஒண்ணு கூட்டி இல்லாடி ஒண்ணு குறைச்சுதான் சொல்லுவேன். அப்போல்லாம் டிவில சுதந்திர தினத்தன்னிக்கு ஜனாதிபதி டெல்லில கொடி ஏத்துறதை ”டிடி”ல வெச்ச கண்ணு வாங்காம பார்ப்போம். சிறப்பு பட்டி மன்றம் போடுவாங்க அதையும் பார்ப்போம்.

அன்னிக்குலாம் லீவ் நல்லா எஞ்சாய் பண்ணுவேன்!!


20 வயதுல: 
நாடு நமக்கு என்ன செஞ்சது?! ஏன் சுதந்திரம் கொண்டாடனும்?! எங்க பார்த்தாலும் குப்பை, சரியான கழிப்பிட வசதி இல்லை, சரியா வரி கட்டுறதில்லை. யாரும் வரிசை முறையை எங்கயும் கடைப்பிடிக்கறதில்லை, எங்க பார்த்தாலும் லஞ்சமும், அலட்சியமும் தலைவிரித்தாடுதுன்னு வீர வசனம் பேசிக்கிட்டே அதே தப்பை நாமும் செஞ்சுக்கிட்டே.., சட்டையில தலைக்கீழா கொடியை குத்தி நன்பர்கள் கூட, ரிலீசான  புது படத்தை பார்க்க போய்டுவேன்!!



25 வயசுல:
சேர்ந்தா மாதிரி 3 நாள் லீவ் வந்துட்டா ஹவுஸ்பாசை கூட்டிக்கிட்டு அம்மா வீடு இல்லாட்டி சின்னதா ஒரு டூர் அடிப்போம். அப்படி இல்லாட்டி ஹாயா டிவி முன்னாடி உக்காந்து சூர்யா, பரத், நமீதா, நஸ்ரியா பேட்டியும், ”வீட்டுக்கு அடங்காத பெண் யார்? வேலைக்கு போகும் பெண்ணா?! இல்லை வீட்டில் இருக்கும் பெண்ணா?!ன்னு பட்டி மன்றம் பார்த்துக்கிட்டு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையான அரைகுறை அழகிகள் நடிச்ச படத்தை பார்த்து கொண்டாடினேன்!!




30 வயசுல: 
வேலை வெட்டி இல்லாம அந்த காந்தியும், நேருவும் சுதந்திரத்தை வாங்கி கொடுத்துட்டு, அதுக்கு ஒரு நாள் லீவையும் கொடுத்து, ஒரு புரோகிராமை ஒழுங்க பார்க்க விடாம, உங்ககிட்ட என்னை அல்லாட வைக்குற  இந்த சுதந்திர தினத்தை கொண்டாடத்தான் வேணுமா?!ன்னு வூட்டுக்காரரை திட்டிக்கிட்டே கொண்டாடினேன்!!

இப்போ: 
சுதந்திர தினம் வருதே!! அதுக்கு பதிவு போடனுமே!! இதுங்களுக்குலாம் லீவாச்சே!! வீட்டுல இருந்துக்கிட்டு உயிரை எடுக்குமே! அதனால, இப்பவே ரெடி பண்ணி வச்சுடனும்ன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே படம்லாம் தேடி கண்டுப்பிடிச்சு அட்டாச் பண்ணி,  டைப் பண்ணி டிராஃப்ட்ல வச்சுட்டு...,

காலையில கண் விழிச்சு மூஞ்சி புக்குல, ட்விட்டர்ல  ஒரு ஸ்டேட்டசும், இங்க ஒரு பதிவும் போட்டு, நேரத்துக்கு சோறு பொங்கி டைனிங் டேபிள் மேல வச்சுட்டு, எத்தனை ஓட்டு , கமெண்ட் விழுந்துச்சு, இன்னிக்கு போஸ்ட் ஹிட்டாச்சா?!

இல்லியா?! இன்னிக்கு லீவாச்சே!! அதான் ஹிட்டாகலைன்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டு மத்த பிளாக்குக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு பதிவு தேத்தி...,

ஒரு வழியா இந்த சுதந்திர தினத்தையும்கொண்டாடிக்கிட்டு இருக்கேன்!!


27 comments:

  1. சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியும் உங்கள் வளர்ச்சியும் சமுகத்தின் வளர்ச்சியும் மாற்றங்களும் அருமையாக தொகுத்துளீர்கள் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நஸ்ரியா.பரத் ,சூர்யா ,நமீதாவெல்லாம் உங்க இருவத்தைந்து வயதில வந்தவங்களா?

    ReplyDelete
    Replies
    1. யூத்தா காட்டிக்க விட மாட்டீங்களே!?

      Delete
  3. நல்ல கொண்டாட்டம் தான்

    ReplyDelete
  4. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  6. அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !
    கலாட்டா பதிவு அருமை. மன்னிக்க ...
    பிழை திருத்துக பதிவின் தலைப்பை .....

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேனுங்க! குறையை சுட்டி காட்டியமைக்கு நன்றி!

      Delete
  7. 67 ஆண்டுகளாகியும் இந்தியா தனது பாதுகாப்பில் இருக்கும் ஓட்டையை இதுவரை அடைக்கவில்லை.

    தீவிரவாதிகள் இங்கு வந்து குண்டுகளை வைத்து செல்லும் சுற்றுலாத் தளமாகத்தான் உள்ளது.
    பாகிஸ்தான் படையினர் நமது வீரர்கள் தலையை கொய்து கால்பந்து விளையாடும் நிலையிலும்,
    சீனா அவ்வப்போது நமது நாட்டில் வந்து நமக்கு செலவு வைக்காமல்.
    சாலைகளை போடவும்,கட்டிடங்கள் கட்டி தங்கி செல்லும் வகையில்தான் பாதுகாப்பு உத்திரவாதம் உள்ளது.
    அதற்கு காரணம் நமது ராணுவம் அல்ல.
    காங்கிரசு ஆட்சியினர்தான் என்பதும் வெட்ககேடான உண்மையாகவும் உள்ளது.

    ReplyDelete
  8. கலக்கல் பதிவுதான் தோழி! ரொம்பவே ரசிச்சுப் படித்தேன்!

    உறவுகள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !

    த ம.5

    ReplyDelete

  9. சுதந்திர தின மலரும் நினைவுகள், இன்றைய நினைவுகள் அருமை.
    இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். உங்கள் மலரும் நினைவுகளில் மகிழ்ந்து குளிர்கிறது என் மனமும். சிறப்பான பகிர்வு.வாழ்த்துக்கள் ராஜி.

    ReplyDelete
  11. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சுதந்திர தினக கொண்டாட்டத்தை அழகா சொல்லிட்டீகன்
    //ஹவுஸ்பாசை கூட்டிக்கிட்டு அம்மா வீடு இல்லாட்டி சின்னதா ஒரு டூர் அடிப்போம். //
    ஹவுஸ் பாஸ் பதவிய ராஜினாமா பண்ணிட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. நான் எப்பவும் ஹவுஸ்பாஸ் பதவில இருந்ததில்லை. ஏனா, நம்மை மத்தவங்க கேள்வி கேட்டா பிடிக்காது. கேள்வி கேக்குற நிலைமைல தான் நாம இருக்கனும் :-)

      Delete
  12. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.. சிறிய வயதில் இருக்கும் நிறைய சந்தோசங்களை நாம் வயதாக வயதாக ரசிக்கத்தெரியாமல் இருந்துவிடுகிறோம் என்பதுதான் நிஜம். வூட்டுக்காரரைத் திட்டிக்கொண்டே கொண்டாடும் சுதந்திரதினம் ஹாஹா... சிரித்தே விட்டேன்.

    ReplyDelete
  14. ரசித்தேன். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. வணக்கம்!

    சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
    இதந்தரும் வாழ்வில் இனித்து!

    கவிஞர்கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  16. நினைவுகள் இனிமையாக இருந்தது....

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  17. இனிய வணக்கம் சகோதரி...
    பள்ளிக் காலங்களில் நடந்த
    சுதந்திர தின கொண்டாட்டம் இன்றும்
    மனதில் நிழலாடுகிறது...
    ==
    மிக அருமையாக ஒரு பதிவு கொடுத்திருக்கிறீர்கள்...
    அருமை,...

    ReplyDelete
  18. //....அதான் ஹிட்டாகலைன்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டு மத்த பிளாக்குக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு பதிவு தேத்தி...//

    மிக அழகாக பதிவிடுவோரின் மனநிலையையும் சிறு வயது நினைவுகளையும் அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி!!

      Delete
  19. மூவண்ண கலக்கல் பொட்டு, வளையல், சிரிஞ்சி என எல்லாவற்றையும் யோசித்து யோசித்து பதிவிட்டதற்கு சிறப்பு பாராட்டுக்கள்

    ReplyDelete
  20. வளர்ந்தப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஹெட் மாஸ்டருக்கு கடன் கொடுக்குற பணக்காரர்ன்னு!!//

    எல்லா ஊர்லயும் இதே கதிதான் போலருக்கு.

    சட்டையில தலைக்கீழா கொடியை குத்தி நன்பர்கள் கூட, ரிலீசான புது படத்தை பார்க்க போய்டுவேன்!!//

    பழி ஓரிடம் பாவம் ஓரிடம்! அக்கிரமம் பண்றவன விட்டுட்டு நாட்டுக்கொடிய அவமானப்படுத்தியிருக்கீங்க. பரவால்லை.. சின்ன வயசுதானே, மன்னிச்சிரலாம்:))

    காலையில கண் விழிச்சு மூஞ்சி புக்குல, ட்விட்டர்ல ஒரு ஸ்டேட்டசும், இங்க ஒரு பதிவும் போட்டு, நேரத்துக்கு சோறு பொங்கி டைனிங் டேபிள் மேல வச்சுட்டு, எத்தனை ஓட்டு , கமெண்ட் விழுந்துச்சு, இன்னிக்கு போஸ்ட் ஹிட்டாச்சா?!//

    அடேங்கப்பா இவ்வளவு வேலை இருக்கா... அத்தோட வீட்டு வேலை வேற.. ஹும்..

    ReplyDelete
  21. பொண்ணா பொறந்தாலே பொழுதன்னிக்கும் வேலை இருக்கும். பதிவர்னாலும் பல வேலை இருக்கு. இதுல நம்மளை பதிவு எழுத சொல்லி ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கே!! அவங்களை ஏமாத்த படாது இல்ல!! அதுக்குதான் நான் தியாகியாகிட்டேன்!!

    ReplyDelete
  22. உங்க பள்ளிக்கூடத்துக்கும் குடும்பத்துக்கும் அப்பால சுதந்திரமுன்னா என்னான்னு தெரியாத ஒரு கூட்டம் சுதந்திர மே இல்லாத கூட்டத்தைப் பற்றி ஒன்னுமே சொல்லலையே என்று வருத்தமாக இருக்கு!

    ReplyDelete
  23. 15 வயசுல டிடி பார்த்த நீங்க, 25 வயசுல நஸ்ரியா பேட்டி பார்கரிங்க... நடுவுல கொஞ்சம் வருஷத்தை காணோம், நாயன்மார்களே!

    ReplyDelete