Friday, August 30, 2013

ஆப்பூர் ஒளஷதகிரி நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் - புண்ணியம் தேடி ஒரு பயணம்


ஆப்பூர் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் போற வழில திருகச்சூரை தாண்டி ஒரு சின்ன கிராமத்து மலை மேல இருக்கும் கோவில். தூரத்துல இருந்து பார்க்கும்போதே ஈர்த்துச்சு. வண்டியை அங்கிட்டு திருப்புடா பசுபதின்னு நாட்டாமை விஜயக்குமார் போல சவுண்ட் விட்டதும் வண்டி நேரா அந்த மலையடிவாரத்துல போய் நின்னுச்சு. இதுக்கு மேல வண்டி போகாதுங்கன்னு டிரைவர் பவ்யமா சொன்னதும், 4 சக்கர வண்டியை விட்டிறங்கி மலையை நோக்கி நடராஜா சர்வீஸ்ல போனேன்.

இந்த மலை முழுக்க மூலிகைகள் நிறைந்து இருக்குறதால இதுக்கு ஔஷதகிரி மலைன்னு பேரு வந்துச்சாம். அப்படி ஏன் பாரு வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.


மலையடிவாரத்தை வணங்கி மலை ஏற தொடங்கலாம்.  கைல பாட்டில் ல தண்ணி, கூல் டிரிங்க்ஸ், நீர் மோருன்னு யார் யாருக்கு என்னென்ன பிடிக்குமோ அதை எடுத்துக்கோங்க. ஐநூறு படிகட்டு இருக்கு. கண்டிப்பா தாகமெடுக்கும், இதுவே, வெயில் காலம்ன்னா படிக்கட்டுல அணல் பறக்கும். இப்போ பரவாயில்ல. அதனால தைரியமா என்கூட வாங்க பேசிக்கிட்டே படி ஏறி மலைக்கோவிலுக்கு போகலாம்.


உங்ககிட்ட இருக்குற சாப்பாட்டு அயிட்டம், செல்போன், பர்ஸ், கேமராலாம் எடுத்து பத்திரமா பைக்குள்ள வச்சு பையை கெட்டியா பிடிச்சுக்கோங்க. ஏன்னா, வழி முழுக்க நம்ம முன்னோர்கள் நிறைய பேருங்க இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து இதெல்லாம் பாதுக்காக்குறதே பெரிய வேலை. கொஞ்சம் அசந்தாலும் கையிலிருக்கும் பைகளை பிடுங்கிகிட்டு ஓடிடும். முடிஞ்சா உங்ககிட்ட இருக்குற சாப்பாட்டு பொருள்ல கொஞ்சம் அதுங்களுக்கும் போடுங்க. நாம கொடுக்குறதுதான் அதுங்களுக்கு சாப்பாடாம். கைஅல் ஒரு குச்சி இல்ல ஒரு கொம்பை வச்சுக்கிட்டா குரங்கையும் விரட்டலாம், படி ஏறும்போது ஊணி நடக்கவும் உதவும்.


அப்பாடா! ஒரு வழியா உச்சிக்கு வந்தாச்சு.  இப்போ படிக்கட்டு மறைஞ்சு கல்லால் ஆன நடைப்பாதை வருது பாருங்க! இதுல ஒரு விசேசம் என்னன்னா!!?? இதை தாண்டி குரங்குகள் வர்றதில்லையா, அதோ ஒரு சின்ன மண்டபம் தெரியுதுங்களா?! அதை தாண்டி போனா இறைவனோட சன்னதி வரும். 


ஹலோ! யாருப்பா அது கடைசில வர்றது?! 500 படிகளையும் ஒரே மூச்சா ஏறுவது கஷ்டம். அதனால, கொஞ்சம் படி ஏறினது அங்கங்க உக்காந்து சுத்தி இருக்கும் அழகை பார்த்தும் மூலிகை காத்தை சுவாச்சிக்கிட்டும் வாங்க. 


பௌர்ணமி இரவுகளில் சித்தர்கள் இங்கே வந்து வழிபடுவதாக கோவில் குருக்கள் சொன்னார்.  இங்கிருக்கும் பெருமாள் நாம கேட்கும் வரம் கொடுக்கும் சக்தி படைத்தவராம். அதனால, அவரை எல்லோரும் நல்லா சேவிச்சுக்கோங்க.  இதோ இங்க இருக்குற மண்டப தோரண வாயிலில் பெருமாள் கல்யாண கோலத்திலும்,  இடம் வலம் முறையே அனுமனும் கருடாழ்வாரும் இருக்காங்க. அவங்களையும் கும்பிட்டுக்கோங்க. 


நாடி ஜோதிடத்தில் கூட இந்த கோவிலில் பரிகாரம் செய்ய சொல்லுறதா கேள்வி. 
ஸ்ரீ நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்” ஆலயத்தின் முகப்பிற்கு வந்துட்டோம்.  பெருமாளை கும்பிடுறதுக்கு முன்ன, ஸ்தல வரலாற்றை சொல்லுறேன். பயபக்தியா கேளுங்க.  ராம ராவண யுத்தத்தின் போது ராவணனின் மகன் இந்திரஜித்தின் பிரமாஸ்த்திரத்தால தாக்க பட்டு ராமனும்,  அவரது  சேனையும்,  இலக்குவனும் மயக்கமாகி விழுந்துட்டாங்களாம். அந்த அஸ்த்ரத்தில தப்பிய ஒரு சிலரில் ஆஞ்சனேயரும் ஒருத்தர்.  அவர் ஜாம்பவானின் அட்வைஸ்படி இலங்கையிலிருந்து கடலை தாண்டி,  இமயமலையின் அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளின் இடையில் இருக்குற மூலிகை மலையில் இருந்து 

1. மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்கும் ”மிருத சஞ்சீவினி” ,

2. உடல் காயத்தை ஆற்றும் ”விசல்யகரணி”

3. காயத்தால் உண்டான வடுவை போக்கும் ”சாவர்ணய கரணி

4. அறுபட்ட உடலை ஒட்டவைக்கும் ”சந்தான கரணி”  ன்ற நாலு  மூலிகைகளை தேடிக் கண்டுபிடிச்சு கொண்டு வர்றதுக்குள்ள டைமும் வேஸ்டாகும் அதுக்குள்ள பல வீரர்கள் உயிர் போகும்ன்னு நினைச்ச அனுமன் தன்னோட வாலால அந்த மலையையே அப்படியே பேர்த்து எடுத்துக்கிட்டு இலங்கைக்கு பறந்து போனாராம்.  
அப்படி இலங்கை போகும் போது,  வழியில கை வலி காரணமா மூலிகை மலையை ஒரு கையிலிருந்து, மறுகைக்கு மாத்தும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சின்ன துண்டுதான் இங்கு மூலிகை மலையாகவும்,  அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூரில் விழுந்துதாம்.அதுதான் திருகச்சூர் மருதீஸ்வரர் கோவில்ன்னு சொல்லப்படுது .இது ஆப்பூரில் இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கு.  .இதுபோல கன்னியாக்குமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியிலும் அனுமன் கொண்டு சென்ற மலையில் இருந்து விழுந்த ஒரு துண்டு ”மருந்து வாழ் மலை”ன்னு சொல்லப்படுது.  

கோவிலின் முன் சிறிய வடிவில் கருடாழ்வார் பெருமாளை கும்பிட்டப்படி இருக்கார் பார்த்துக்கோங்க. அப்புறம் சரியா பார்க்கலைன்னு சொல்லப்படாது.   பெருமாளை பார்க்க நம்ம திருவேங்கடவனின் மினியேச்சர் மாதிரி இருக்கார் பாருங்க. பெருமாள், தன் வொயிஃப் கூட லக்ஷ்மி சொரூபமா இருக்குறதால இங்க தாயாருக்கு தனி சன்னதி இல்ல.  தாயாரும், பெருமாளும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதால எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை.  அதனாலதான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் ”ன்னு பேரு வந்துச்சாம்.

இங்கே திருமணம் ஆக வேண்டி பிரார்த்தனை செய்தால் சீக்கிரத்துல கல்யாணம் நடக்குமாம். நம்ம ஆவி, சீனு, சிவாலாம் கும்பிட்டுக்கோங்கப்பா. அப்படி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வந்து பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி நேர்த்திகடனை நிறைவேற்றுவார்களாம்.

மண்டபங்களின் பக்கவாட்டு மேற்புறத்தில் பெருமாளின் தசாவதாரங்களை  சிற்பமா செதுக்கி வச்சிருக்காங்க. பார்த்துக்கோங்க. 
 
தசாவதாரத்துக்கு நேர் எதிரே அஷ்டலக்ஷ்மிகளின் நடுவே திருவேங்கடவன்  சிற்பமும் இருக்கு. அதையும் நல்லா பார்த்துக்கோங்க.



கோவிலுக்குள்ள நிறைய குரங்குகள் இருக்குறதால கையில் இருக்கும் பொருளலாம் பத்திரமா பார்த்துக்கோங்க. இல்லாட்டி அபேஸ் பண்ணிடும். 

பிரார்த்தனை செய்றவங்களோ இல்ல தூரத்துல இருந்து வர்றவங்க முன்கூட்டியே கோவில் குருக்கள் பாலாஜி பட்டரிடம் தெரியபடுத்திட்டு வந்தா பெருமாளை ஆற அமர தரிசிக்கலாம். ஏன்னா,   பூஜை முடித்து நடை அடைக்கும் நேரம் வந்ததும் அடைத்து விடுவார். அவ்வுளவு தூரம் படியேறி வந்தது வேஸ்டாகிட கூடாதுல்ல. அதனால, அவர் தொலைப்பேசி நம்பரை    குறிச்சுக்கோங்க. 9444142239 
பெருமாளோட தரிசனம் நல்லப்படியா முடிச்சாச்சு.  கருடாழ்வாரிடமும் னம்ம முன்னோர்கள்கிட்டயும் சொல்லிட்டு வாங்க. மலை இறங்கலாம்.


ஒளஷத மலையிலிருந்து இறங்கும் போது தூரத்தில் கிராமத்தின் அழகு கண்ணையும் கருத்தையும் கவருது. அந்த கிராமத்துல ஒரு பீடமும் அதில் சூலாயுதமும் இருக்குற அமைப்பு கண்ணுல பட்டுச்சு.  சரி, அடுத்த வாரம் பதிவு தேத்த ஹெல்பா இருக்கும்ன்னு என்ன? ஏது?ன்னு கூட வந்தவரை கேட்டேன்.

கிராமத்து சப்த கன்னியர் கோவில் அது. அனேகமாக ஒரு வம்சாவளியினரின் குலதெய்வ கோவிலா இருக்கும்ன்னு சொன்னார்.


சரி, கிளம்பலாமா?! கடந்த வாரங்களில் சென்னையை சுற்றி உள்ள கோவில்லாம் பார்த்தோம். சும்மா இங்கயே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி?! அடுத்த வாரம் த்த்த்தூரமா இருக்குற இராமாயண கதை சம்பந்தப்பட்ட ஒரு இடத்துக்கு போலாம். ரைட்டா?!

11 comments:

  1. . இதுக்கு மேல வண்டி போகாதுங்கன்னு டிரைவர் பவ்யமா சொன்னதும்,>> " சரி வண்டிய நிறுத்துடா பசுபதின்னு சொல்லியிருக்க வேண்டாமோ??

    ReplyDelete
    Replies
    1. கோவிலை பார்த்ததும் பக்தி பரவசத்துல மறந்துட்டேன்!!

      Delete
  2. சரி மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதி இங்க இருக்கு.. அவர் முழுசா எடுத்துட்டு போன மலை இப்போ இலங்கையிலேயே இருக்கா, இல்ல திரும்ப கொண்டுபோய் இமயமலையில வச்சுட்டாரா.. ? அத கேட்டீங்களா??

    ReplyDelete
    Replies
    1. இப்படி எடக்கு மடக்கா எதாவது கேள்வி கேட்பீங்கன்னு தெரிஞ்சுதான் அந்த தகவலையும் கேட்டுட்டு வந்திருக்கேன். இமயமலையிலிருந்து கொண்டு வந்த மலையை கொண்டு வந்த நோக்கம் நிறைவேறிய பின் மீண்டும் இமயமலையிலேயே அனுமன் கொண்டு போய் வச்சுட்டாராம்.

      Delete
  3. படங்கள் எல்லாம் சூப்பர்ங்க. 500 படி ஏறணுமான்னு மலைச்சு நிக்கலையா? அதுவும் அந்த கடைசி சில அடி தூரம்... ஒரே கல்லு, கல்லா... கடவுள சந்திக்க வரணும்னா இப்படியெல்லாம் சிரமப்பட்டுத்தான் வரணும்கறது ஐதீகம் போலருக்கு. அதனால்தான் ஏறக்குறைய எல்லா புனித ஸ்தலங்களுமே இப்படி மலைமேல அமைஞ்சிருக்கு போல.

    ReplyDelete
    Replies
    1. மலை மேல இருக்கும் மூலிகை காத்தை சுவாசிக்கவும், உடற்பயிற்சி நோக்கம்தான் காரணமா இருக்கும்ன்னு என்னோட கருத்து

      Delete
  4. " அஷ்டலக்ஷ்மிகளின் நடுவே திருவேங்கடவன் சிற்பமும் இருக்கு. அதையும் நல்லா பார்த்துக்கோங்க".
    எல்லாம் சரிதாங்க. ஏழு லக்ஷ்மிகள் தானே இருக்காங்க. அங்க அப்புறம் அஷ்ட லக்ஷ்மிகளையும் படம் எடுக்காம விட்டதுல அவங்க கோவி்ச்சுக்கப் போறாங்க. படங்கள் அழகாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. நம்ம சாமிதானே! அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க. ஆசைப்பட்டு கேட்டுட்டீங்க. வேற போட்டோ மாத்திடுறேன்!

      Delete

  5. மலையோட இயற்கை அழகை சூப்பரா க்ளிக்கியிருக்கிங்க.. சோளிங்கர் நரசிங்க பெருமாள் கோவில் போய் இருக்கிங்களா? இதே போல் இயற்கை அழகோட 1330 படி வழியெங்கிலும் ப்ரெண்ட்டுங்க நாம எடுத்துட்டு போறதை கேட்ச் பண்றதிலே இருப்பாங்க.. கூடவே ஒரு கோலும் எடுத்துட்டு போகனும். இப்படி மலை ஏறுவது பக்தியுடன் ஒரு உடற்பயிற்சியும் கூட.. கல்யாணத்துக்கு முன்னாடி அடிக்கடி ப்ரெண்ட்ஸோட ( தோழிங்க..) மலை ஏறுவதுண்டு. யார் நிக்காம எத்தனை படி ஏறுகிறோம்னு கட கடன்னு ஏறுவோம். இப்ப நேரம்தான் பிரச்சினையா இருக்கு! மலை உச்சியில் இயற்கையை ரசிப்பது அலாதியான விஷயம்தான். மெஷின் லைப்ல ஓடிகிட்டே நிறைய விஷயங்களை தொலைச்சிட்டிருக்கிறது ஒரு பக்கம் உறுத்தலாத்தான் இருக்கு..!

    ReplyDelete
    Replies
    1. சோளிங்கர்தானே நிறைய தரம் போய் இருக்கேன்பா. ஆனா, நான் அப்போ பதிவரில்லை. அதனால படம் எடுத்து வைக்கலை. இப்போதான் பதிவராயிட்டேனே! கண்டிபாய் அடுத்த முறை போகும்ப்போது படமெடுத்து பதிவு போட்டுடுறேன்

      Delete
  6. Our Experience with Aapoor.
    http://aatralaithedi.blogspot.in/2010/11/blog-post.html

    ReplyDelete