Saturday, October 26, 2013

முடிவுக்கு வந்த போராட்டம் - கவிதை மாதிரி


எம்ப்ராய்டரியாய்...,, கல் வைத்ததாய்...,
டிசைனர் புடவையாய்...., பட்டாய்....,
சிறு கரையாய்.., உடல் முழுக்க ஜரிகையாய்...,
வைர ஊசி புட்டாவாய் ஜொலிப்பவளை,
 பார்த்தேன் ஏக்கமாய்!!

மயில் கழுத்து கலரில் ஜொலிக்கும்,
ராதா கிருஷ்ணனையா!?
குங்குமச் சிவப்பில் சிரிக்கும் பிள்ளையாரையா!?
இருவரில் யாரை சொந்தம் கொண்டாட!?

துள்ளும் மீனும், ஓடும் மானும்..,
கண்ணை கவர!! 
ஆடும் மயிலும்..., அசையும் மரமும்..,
கருத்தை கவர!!

மின்விசிறி காற்றோ!? பக்கத்திலிருப்பவளோ!?
அப்புடவையை தூக்க முயல!!
கடலுக்குள் முத்தாய் ஜொலித்த..,

மஞ்சளும், கருப்பும் கலந்தப் புடவையை
எனதாக்கிக் கொள்ள!!
4 மணி நேர தீபாவளி போராட்டம்,
 முடிவுக்கு வந்ததில்!!

என்னவரின் பர்சைப் போலவே,
அவர் மனசும் லேசானதோ!?

37 comments:

  1. அட ஒரு சேலை வாங்க எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்க எங்க ஊரு பொண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. அப்பத்தானே பக்கத்து வீட்டு பொண்ணை விட சூப்பர் புடவையை நாம எடுக்க முடியும்!!

      Delete
  2. முடிவில் வசதிக்கு ஏற்ப நல்ல குடும்பப் பெண்ணாய்
    ஓர் அழகிய சாதாரண புடவையைத் தேர்ந்தெடுத்து விட்டார்
    எனது சகோதரி அப்படித்தானே ?.......:)))))) வாழ்த்துக்கள் அழகிய
    இந்த மனம் போல வாழ்வும் இனித்திட வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. இந்த தீபாவளிக்கு சேலையே எடுக்கலை. கடைல பார்த்ததோடு சரி!

      Delete
  3. சேலை வாங்க கஷ்டப்படுறாங்க எங்க ஊரு பொண்ணுங்க மாபிள்ளையை எளிதாக நல்ல விலை கொடுத்து வாங்குறாங்க

    ReplyDelete
    Replies
    1. புருசனைதான் அப்பா, அம்மா, அண்ணன் தம்பிலாம் தப்பா செலக்ட் பண்ணி குடுத்துட்டாங்க. சேலைலயாவது உசாரா இருப்போம்ன்னுதான் இம்புட்டு கஷ்டம்.

      Delete
  4. பரவாயில்லையே 4 மணி நேரத்துலயே ஒரு முடிவுக்கு வந்துட்டிங்க... எங்க வீட்ல அவர் பொறுத்து பொறுத்து " அம்மா தாயே இப்போதைக்கு கடைய விட்டு வெளிய வாம்மா... ஞாயித்துக்கிழமை காலையில் கொண்டு வந்து விட்டுட்டு நான் வீட்டுக்கு கிளம்பிடறேன்... அன்னைக்கு பூரா இருந்து எல்லாம் முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணுங்க நான் வந்து பில் கொடுக்கிறேன்னு சொன்னார் ... எவ்வளவு பொறுமை பாருங்க... ஹா.. ஹா...!

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப பொறுமைதான். நான் அதிகப்பட்சம் அரை மணி நேரத்துல எடுத்துடுவேன். காரணம், என் சேலைகளை வீட்டுக்காரரையும், பசங்களையும் எடுக்க சொல்லிடுவேன். காசு கம்மியா இருக்கும். அதே நேரம் நல்லாவும் இருக்கும்.

      Delete
  5. பரவாயில்லையே ! நான்கு மணி நேரத்திலேயே உங்கள் போராட்டம் முடிவிற்கு வந்து விட்டதே! கொடுத்து வைத்தவர் தான் உங்கள் கணவர் ராஜி.

    ReplyDelete
    Replies
    1. நல்லா சத்தமா சொல்லுங்க என் வூட்டுக்காரர் காதுல விழட்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னொரு புடவை எடுத்து தரட்டும்.

      Delete
  6. நமக்கு நாளைக்குத் தான்....

    ReplyDelete
    Replies
    1. உங்க வூட்டம்மா சீக்கிரம் புடவையை செலக்ட் பண்ணனும்ன்னு வேண்டிக்குறேன் ஸ்பை!

      Delete
  7. காலமெல்லாம் காத்திருக்கும் போது... வெறும் நாலு மணி நேரம் சர்வ சாதாரணம் தானே சகோதரி...? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம் கரெக்ட்தான். காத்திருக்கட்டும்

      Delete
  8. சேலையை தேர்ந்து எடுப்பது ரொம்ப கஷ்டமான காரியம்தான்! அழகான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சேலை எடுத்தை விட, அதை கவிதையாக்குனதுதான் கஷ்டமே!

      Delete
  9. வணக்கம்
    கவிதையின் வரிகள் மனதை நெருடியது அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனசை நெருடும் அளவுக்கு இந்த கவிதைல என்ன இருக்கு ரூபன்?

      Delete
    2. ஆண்கள் கஷ்டப்படுவது இவருக்கு நெருடலாக இருந்திருக்க்கும் போல.....

      Delete
  10. சூப்பர்.... ரைட்டு நடக்கட்டும்...

    ReplyDelete
  11. தீவாளி ஜவுளி வாங்கியாச்சு போல! நடக்கட்டும்.

    ReplyDelete
  12. முடித்த விதம்
    கவிதையை உச்சத்தில் கொண்டு வைக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. சந்தோசமா கொண்டாடுங்க

    ReplyDelete
  14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  15. தீபாவளிக்கு புடவை எடுக்க
    கடைகளை ஒரு வழி ஆக்கிகிட்டு இருக்கீங்க போல..
    அழகுப் புடவையுடன் தீபாவளி சிறந்து
    மத்தாப்பூ போல பூத்திருக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. பர்சைப் போல் மனதும் லேசாகியது.
    அருமை

    ReplyDelete
  17. மாமா பாவம்....கவிதை அருமை அக்கா....

    ReplyDelete
  18. என்னவரின் பர்சைப் போலவே,
    அவர் மனசும் லேசானதோ!?

    அவர் மனசு லேசானதா என்ன :)

    ReplyDelete
  19. இன்றைய வலைசர அறிமுகத்தில் உங்களைக் கண்டேன்!
    இனிய வாழ்த்துக்கள்!

    பட்டுப் புடவைக்கும் பாங்காக ஒருபாட்டு..!
    அற்புதம்! ரசித்தேன்.. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  20. வீட்டுக்காரர் பர்ஸை கரைச்சிட்டேங்கறத நாசூக்கா சொல்றீங்க? வீட்டுக்கு வீட்டு வாசப்படிதான். தீபாவளியாச்சே!

    ReplyDelete
  21. அன்பு ராஜி. மனம் போல மாங்கல்யம்.
    நல்ல புடவையாக உடுத்திக் கொண்டு
    தீபாவளி நன்னாளைப் பிள்ளைகளுடனும் புருஷனுடனும் ஆனந்தமாய்க் கொண்டாடுங்கள்.

    பட்டுப் புடவையில் இல்லை சந்தோஷம் என்று அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  22. தீபாவளி புடவையுடன் வண்ணக்கவிதையும் அசத்துகிறது.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. நீங்க என்னவர் என்னவர் என்று சொல்வதில் ஒரு அழகு...ஆசை தெரிகிறது!

    plus vote 13.

    ReplyDelete