வியாழன், அக்டோபர் 31, 2013

தலை தீபாவளி

வந்தது தடாலடி தீபாவளி!!
புது தம்பதியினருக்கு இது தலை தீபாவளி...,
மாப்பிள்ளை முறுக்கில் மணமகனும்...,
தேவதையின் வரவாய் புது பெண்ணும்...,
தாய் வீட்டு அழைப்பிற்கேற்ப,
தாய் வீடு செல்லும் வைபவம்...,

சிறகில்லா சிட்டாய் பறக்கிறாள்...,
தன் தாய் வீட்டிற்கு செல்ல!!
தாயின் அன்பும்...,  தந்தையின் பாசமும்...,
கிடைத்தது மணமாகும் முன்பு!!

இப்போதும் கிடைக்கிறது...,  ஆனால்,
பெற்றோரை பிரிந்து வேறு மாநிலத்தில்
வாழுகிறாள்!!  வாடுகிறாள்..., அவர்களின் பிரிவில்.
ஆனால், இன்றோ தீபாவளி கொண்டாட்டம்!!
அந்த, சந்தோஷத்தில் துயரை மறக்கிறாள்??!!
மாப்பிளையும் ,  புது பொண்ணும்...,
அவள் வீட்டை அடைந்தார்கள்.
இல்லை..., இல்லை..., சொர்க்க
வாசலையே அடைந்தார்கள்.

பெற்றோரும், அவள் தங்கையும்,
அவர்களை வரவேற்க அங்கு
ஆனந்த கொண்டாட்டம் ஆரவாரமாய்..,
ஆனந்த கண்ணீரில் நடக்கிறது!!
இனிப்பு பலகாரம் கொடுத்து...,
இன்பத்தை குடுத்தாள் தாய்!!
தங்க மோதிரத்தை பரிசளித்து
மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
கவனித்தார் பெண்ணின் தந்தை!!

மாப்பிளையும் ஆச்சிரியத்தில் மிதக்க??!!
அந்த மோதிரத்தை புது பெண்ணின்
அழகிய மெல்லிய விரலில்
மாப்பிளை மெல்ல மாட்டினார்.

பெண்ணின் பெற்றோர்
புரிந்து கொண்டனர் தன் மகளின்
வாழ்க்கை சந்தோஷமாய் போகிறது என்று??!!

அவளும், அவரின் காதலில்
உருகினாள் அழகாய் அன்று!!
பெண்ணின் தங்கையோ அவர்கள்
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க
கை கடிகாரத்தை பரிசளித்தாள்!!
அவர்களுக்கு இன்னும் ஆச்சிரியம்!!
அதை, இருவரின் கையில் மாட்டிவிட்டாள் அவள்.

இருவரும், எழுந்து  கடவுளிடம்
நன்றி சொன்னார்கள் இந்த நாளிற்கு!!
பின், பெண்ணின் பெற்றோரிடம்
இருவரும் சென்று பணிந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அவளின், பெற்றோரும் அவர்களுக்கு
புது ஆடை பரிசளித்தார்கள் தம்பதியினருக்கு...,
தலை தீபாவளி என்பதால் கொஞ்சம்
கவனிப்பு தூக்கலாக இருந்தது
அன்றைய நாளின் தொடக்கம்...,
 காலை உணவுக்கு தயாரானார்கள்
தாயின் கை பதத்தில் சாப்பிட்டு கொல்லை நாளானது!!!
அவளின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகபோகுது...,
மல்லிகை பூ இட்டிலியும்,  கார சட்டினியும்...,
கமகமக்கும் ஆட்டுக்கறி கூட்டும் பரிமாறப்பட்டது...,
தித்திப்பான மஞ்சள் நிற கேசரியுடன்.

காலை உணவு உண்டு கொஞ்சம்
அரட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
பின், பெண்ணோ தாயிடம் நலம் விசாரிக்க...,
தாயும் தடபுடலாய் மதிய உணவை தயார்
செய்துகொண்டே உரையாடினாள்  அவளிடம்.

இவள், உதவ வர தாய் தடுத்தாள்...,
போய் கணவரை கவனி என்று கூறி...,
தந்தையோ வாழை இலை வாங்க சென்றார்.
அரட்டை அடித்ததில் நேரம் சென்றது...,
”பட பட பட்டாசு” வைத்து நேரத்தை கழித்தார்கள்!!
பட்டாசு லக்ஷ்மி வெடி வெடித்து குருவி வெடிகள் போட்டு
மகிழ்ந்தனர் அனைவரும் ஆனந்தமாய்!!

விருந்து தயார் ஆனது, நாக்கில் எச்சி ஊருது...,
வாசனை மூக்கை துளைக்கிறது நன்றாய்!!
மிளகு ஆட்டுக்கறி வறுவல்... ,ஆட்டுக்கறி கூட்டு...,
கோழி கூட்டு....,, மிளகு போட்ட முட்டை வறுவல்...,
சத்தான ஈரல் கூட்டு..., ஆட்டுக்கறி குழம்பு...,
கோழி சூப்பு தக்காளியும், எண்ணெயும் மிதக்க..,

ஆரோக்கியமான புதினா துவையல்...,
மொறு மொறு அப்பளம்..., கலர் கலர் வடகம்...,
செமிக்க ரசமும்...,,  தயிரும்.., உளுந்த வடையும்...,
அப்பறம் இனிப்பு பலகாரமும்...,
இப்படி நிரம்பி வலிய மனமும் வேட்டையாடியது...,
 இந்த  படையலை!!

கொஞ்சம் மனம் விட்டு அனைவரும் பேசி...,
அரட்டையடித்து..., குட்டி தூக்கம் போட்டு..,
மாலை காபி குடித்து கிளம்ப தயார் ஆனார்கள்.
இப்போது,கொஞ்சம் அந்த பெண்ணிற்கு??!!

கண்ணீர் வந்தது..., ஆனால், இந்த நாள்
அவளுக்கு சந்தோஷத்தின் மணமாய்!!
இருந்தாதால்..., அவள் கண்ணீரை கட்டுபடுத்தி..,
சந்தோஷமாய் கிளம்பினாள்...,
புகுந்த  வீட்டை நோக்கி...,
பிறந்த வீட்டில் விடை பெற்று!!

21 கருத்துகள்:

 1. எனக்கும் தலை தீபாவளி ஞாபகம் வந்தது ...ஆனால் அது தலையில்லா முண்டத் தீபாவளிதான் என படுகிறது ,இவ்வளவு அன்பாய் சமைத்துக் கொட்ட என் மாமியார் இல்லாமல் போய் விட்டாரே !
  த.ம 2

  பதிலளிநீக்கு
 2. நடந்த சம்பவமா...?

  இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. பழைய ஞாபகமோ?

  கவலைப்படாதீர்கள். வருங்கால மருமகனுக்குச் செய்து அசத்திவிடுங்கள். தோழி.

  பதிலளிநீக்கு
 4. அது என்ன ஆட்டுக்கறி கூட்டு?
  நான் கேள்விபட்டதில்லைப்பா.
  ஒரு முறை செய்து பதிவிடுங்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 5. தல தீபாவளி நினைவுகள் சிறப்பு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. மலரும் நினைவலைகளில்....

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 7. I think eaintha kavithai munadiya pathvu pani erukikanu ninaikeren. eathai paditha pothu tamil nadil Deepavali kondadiyathu ninavivuku varukerathu. oru vara munadiya palakaram sudum, padasu vedithum, puthu dress eaduthu amma,appa, akka,annan kuda sandai podu seithathu ninavuku varuthu. eapa eallam kanavu than.

  Wish U Happy DIWALI

  பதிலளிநீக்கு
 8. இல்லை இந்த என்வலியை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் பிழைப்பு நோக்கி தூரதேசங்களிலும்,வெளியூர்களிலுமாய் வாழப்பழகிக்கொண்ட நாம் இச்சம்பவத்த்தையும் எதிர்கொள்ள பழகித்தான் ஆக வேண்டும்.ஓடுகிற ஓட்டத்தில் கல்தடுக்குதல் சகஜம்தானே?

  பதிலளிநீக்கு
 9. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  தலதீபாவளியின் நினைவுகளை பகிர்ந்த விதம் அருமை வாழ்த்துக்கள்

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. உங்கள் தலைதீபாவளி அனுபவம் போல் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 12. இன்றுபோல் என்றென்றும் மனம் மகிழ்ந்திருக்க இனிய தீபாவளி
  நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
  அனைவருக்கும் .

  பதிலளிநீக்கு
 13. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 15. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 16. //மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
  கவனித்தார் பெண்ணின் தந்தை!!//
  மாமனார் மட்டுமல்ல,சாப்பாடில் மாமியாரும் விசேஷமாகக் கவனிப்பார்கள்தான்!
  இனிய தீபாவளி வாழ்த்துகள் ராஜி!

  பதிலளிநீக்கு
 17. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. தலை தீபாவளி கவிதை மிகவும் அருமை அக்கா..

  பதிலளிநீக்கு