Tuesday, October 01, 2013

வடைகறி - கிச்சன் கார்னர்

இட்லிக்கு சட்னி, தோசைக்கு சாம்பார், பூரிக்கு உருளை கிழங்கு மசால், சப்பாத்திக்கு குருமா இப்படி ஜோடி போட்டு கலக்குனாலும் இந்த “வடைகறி” மட்டும் சீட்டாட்டத்துல ஜோக்கர் போல! எல்லாத்துக்கும் ஜோடி போட்டு ருசி கொடுக்கும். 

வடைகறிக்கான ரெசிபி இதோ!!

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளாகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
சோம்பு- கொஞ்சம்
பட்டை - 1
கிராம்பு -3
அன்னாசி பூ - 1
மிளகாய் தூள்- தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

கடலை பருப்பை 1 மணிநேரம் ஊற வச்சு , உப்பு, பச்சை மிளகாய் 3, இஞ்சி, பூண்டு போட்டு கரகரப்பா அரைச்சு இட்லி சட்டியில வச்சு வேக வச்சு எடுத்து மசிச்சு வச்சுக்கோங்க . சிலர் வடையா தட்டி எண்ணெயில போட்டும் செய்வாங்க. அதிக எண்ணெய் சேர்க்க வேணாமேன்னு நான் ஆவில(நான் சொல்றது நீராவி, கோவை ஆவி இல்ல, எகனை மொகனாயா கமெண்ட் போடக்கூடாதேன்னுதான் நானே சொல்லிட்டேன்) வேக வச்சுதான் செய்வேன். 

அரைச்ச மாவை இட்லி பானைல வச்சு வேக வச்சுக்கோங்க. அஞ்சு நிமிசம் வெந்தா போதும்.

வேக வச்ச இட்லிகளை உதிர்த்துவச்சுக்கோங்க.


வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிய விடுங்க.

அடுத்து பட்டை, லவங்கம், சோம்புலாம் போட்டு பொரிய விடுங்க..,

அடுத்து, பச்சை மிளகாயை கீறி எண்ணெயில போட்டு வதக்குங்க.

வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக்கோங்க. புதினா இருந்தா சேர்த்துக்கோங்க. இல்லாட்டி பரவாயில்ல(நம்மளை யாரு கேள்வி கேக்க போறது!?) 

அடுத்து பொடியா நறுக்கி வச்ச தக்காளி சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.


மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க..,

மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்க.


தேவையான அளவு உப்பும், தண்ணியும் சேர்த்து கொதிக்க விடுங்க.


நல்லா கொதிச்சு மிளகாய் தூள் வாசனை போனதும் உதிர்த்து வச்ச இட்லியை கொட்டி கொதிக்க விடுங்க.


கொஞ்சம் கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விட்டு, அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க.சூடான, சுவையான வடைகறி ரெடி.

அடுத்த வாரம் வேற ஒரு சிம்பிளான ரெசிபியோட பார்க்கலாம்!

19 comments:

 1. ப்ரசண்டேஷன் பிரமாதம்.
  தேங்காய் சேர்த்தால் சுவை கூடும் ராஜி.

  ReplyDelete
 2. என்னாது ? வடையில கறியா ? நான் இப்பதான் கேள்வியே படுறேன்....!

  ReplyDelete
  Replies
  1. "ஐஸாலக்கடி கிரி கிரி.. சைதாபேட்டை வடகறி" ன்னு கேள்விப்பட்டதில்லையா? சென்னையில ரொம்ப பேமஸ் அண்ணே !!

   Delete
  2. ஆஹா அதான் அந்த வடைகறி'யா ? சென்னை வந்தால் சாப்பிடனுமே...

   Delete
 3. //நான் சொல்றது நீராவி, கோவை ஆவி இல்ல,//

  வடைகறி வேக வைக்கும்போதும் இந்த ஆவித் தம்பிய நினைவில் வச்சதுக்கு நன்றி.. ஹிஹிஹி..

  ReplyDelete
 4. வடை கறி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை செய்ததும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. சுலபமாக தான் இருக்கு. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 5. சுலபமாக தான் இருக்கு. செய்து பார்க்கலாம்

  ReplyDelete
 6. லிஸ்டில் இன்னைக்கு ஒன்று சேர்த்தாச்சி ... எதற்கு என்று அப்புறமா சொல்றேன் அக்கா

  ReplyDelete
 7. கடைகளில் முதல்நாள் வடைகளைக் கொண்டு செய்வார்கள் என்றும் ருசி அருமையாக இருக்கும் என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் அசத்தலாய் புத்தம்புதிதாய் வடைகறி செய்யும் முறையைக் காட்டியமைக்கு நன்றி ராஜி.

  ReplyDelete
 8. முதல் முதலாக இந்த வடைகறியை ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டு, அட இவ்வளவு நாள் இதை சாப்பிடாம விட்டோமே என்று நிறைய பீல் செய்தேன்..... இன்று எனது மனைவியிடம் மாதம் ஒரு முறையேனும் செய்து கொடு என்று சாபிடுகிரேன் !! பதிவில் போட்டோ பார்த்து நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சு !

  ReplyDelete
 9. விவரமான படங்களுடன் சுவையான டிஷ்!

  ReplyDelete
 10. சுவை..... படங்களிலேயே தெரிகிறது. தில்லிக்கு ஒரு ப்ளேட் வடகறி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல் :)

  ReplyDelete
 11. ஒரே கல்லுல இரண்டு மாங்க...

  காலை டிபனும் ரெடி... ஒரு பதிவு ரெடி.... கலக்குங்க

  ReplyDelete
 12. பார்க்கவே நல்லா இருக்கே. நீங்க தான் சமைச்சிங்களா?

  ReplyDelete
 13. வேகவச்ச இட்லிகளை உதிர்த்து வச்சு அப்படியே பீன்ஸ். கொத்தவரங்காய் போல காய்கறி உசிலி பண்ணிக்கலாம்.

  ReplyDelete
 14. வடை இங்க இருக்குது....
  கறி எங்க?

  ReplyDelete
 15. வடைகறி அருமை ,

  ReplyDelete
 16. சென்னையில் இருக்கும் பொழுது இட்லி வடைகறி கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இது வரை சுவைத்ததில்லை. அது ஏதோ டீகாடையில் கிடைக்கும் வஸ்து என்பதால் முதல் நாள் மீதமான வடையில் செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். உங்கள் சமையல் குறிப்பில்தான் தெரிந்தது உண்மையான வடைகரியின் அருமை.

  மேடம் எங்கலுக்கு அப்படியே நாலு இட்லியும் வடைகரியும் பார்சல் அனுப்புங்களேன்.

  ReplyDelete