Sunday, June 22, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

நான் படிக்கும் காலத்துலயே கேள்வித்தாளில் இருக்கும் கேள்விகளுக்கு யோசிச்சு விடையளிச்சதில்ல. காலம் போன இந்தக்  காலத்துல என்னை யோசிச்சு பதில் சொல்லச் சொல்லி இந்த மதுரை தமிழன் மிரட்டி இருக்காப்ல.  நல்ல பிள்ளையாய் அவர் கேள்விக்கு பதில் சொல்லிட்டு, இந்தியா வரும்போது என் கையால சமைச்சுப் போட்டு அவரை  நல்லா கவனிச்சுக்குறேன்!! 


1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

ஊரை வளைச்சு பந்தல் போட்டு, ஒரு பக்கம் அசைவம், மறுபக்கம் சைவ சாப்பாடு. சினிமா பிரபலங்கள் ஒரு பக்கம், வலையக சகோதரர்கள் ஒரு பக்கம், தொண்டர்கள் மறுபக்கம் வாழ்த்த வரிசையில் நிற்க...., வாழ்த்த வருபவர்கள் கொடுக்கும் பரிசுப் பொருட்களை  என்னிடமிருந்து வாங்கி அடுக்கி வைக்க அரசன், சீனு, பிரகாஷ், ஸ்பை, ஆவி, சதீஷ் உடனிருக்க, எல்லா ஏற்பாடும் சரியாய் இருக்காம்மான்னு என்னிடம் ஆலோசனை கேட்க வரும் கணேஷ் அண்ணாக்கிட்ட கிரேஸ், சசி, எழிலக்கா போன்ற பெண்பதிவர்களை பத்திரமா பார்த்துக்கோங்க. அப்புறம், மதுரை தமிழனை கிச்சனுக்குள்ளயும், பரிசுப் பொருட்கள் இருக்கும் அறைக்கும் போகாம பார்த்துக்கோங்கண்ணா”ன்னு சொல்லி என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் கொண்டாட ஆசை. 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
அம்மாவிடமிருந்து சுறுசுறுப்பு, அப்பாவிடமிருந்து திட்டமிடல், கணவரிடமிருந்து அமிர்தமே ஆனாலும் அளவாய் சாப்பிட, தூயாவிடமிருந்து எவ்வலவுதான் சாப்பிட்டாலும் எடையை சீராய் வைத்திருப்பது. இனியாவிடமிருந்து பாசம், அப்புக்கிட்ட இருந்து பொறுப்பு+ கலாய்ப்பு.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
இந்த கேள்வி எனக்கா!? நான் எப்போதுமே சிரிச்சுக்கிட்டேதான் இருப்பேன்(அதுக்காக, லூசுன்னு முடிவு செஞ்சுடாதீங்க. உலகத்துலயே மகிழ்ச்சியான ஆள் நாந்தான். அதனால் எப்பவுமே மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்குறேன்.

இந்த கேள்வி என்கணவருக்கானதுன்னா, திருமணத்தின் போது..., அதுக்கப்புறம் அவர் சிரிக்கும் வாய்ப்பை நான் அவருக்கு தரவே இல்ல. 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
பவர் கட் நேரம் முன்னாடியே தெரிஞ்சிருந்தால் அதுக்கேத்த மாதிரி என்னுடைய வேலைகளை திட்டமிட்டுக்குவேன். உதாரணத்திற்கு, மதியம் சமையலுக்கு வடை செய்யனும். ஆனா, காலைல கரண்ட் கட்ன்னு தெரிஞ்சா வடை மாவு அரைச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சுக்குவேன். செல்போன்ல சார்ஜ் போட்டுப்பேன். கூடவே இன்னொரு பேட்டரியும் சார்ஜ் ஃபுல் பண்ணி வச்சுப்பேன். அந்த நேரத்தில் இணையம் வர முடியாது. அப்போ, எம்ப்ராய்டரி, டெய்லரிங். வீட்டு வேலைகளை செஞ்சு வச்சுப்பேன். 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 
துணையோட உணர்வுகளை புரிஞ்சு, அதுக்கு மதிப்பு கொடுக்க கத்துக்கோங்கன்னு சொல்லித் தருவேன். அது பையனுக்கும், பெண்ணுக்கும் பொதுவான அறிவுரை. 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
இரு பாலினத்திவரின் மனதிலும் ஒருவருக்கொருவர் எந்த ஏற்ற தாழ்வுமில்லாம செய்வேன்.  அப்படி செய்தாலே எல்லா பிரச்சனையும் விலகிடும். 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
நல்லதை யார் சொன்னாலும் கேட்டுப்பேன். அப்பா, அம்மா முதற்கொண்டு பிள்ளைகள் வரை. 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
என்னை அவர்கள் புரிந்துக்கொண்டது அவ்வளாவுதான்னு மௌனமாய் இருந்துடுவேன். 


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
அது அவரின் துணையின் குணநலனைப் பொறுத்து மாறும். நல்லவங்களா இருந்தா ஆறுதல் சொல்வேன். கெட்டவங்களா இருந்தா விட்டது சனின்னு பொழப்ப பாருன்னு சொல்வேன். இது தோழன்  மற்றும் தோழிக்கும் பொருந்தும். 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இளையராஜா பாடல்களை கேட்பேன். முன்னலாம் மணிக்கணக்குல தூங்குவேன். இப்பலாம், எங்க தனியாய் இருக்கேன். பொழுதன்னிக்கும் உங்களோடுதானே குப்பைக் கொட்டுறேன்.

சகோதர பாசமில்லாம என்னை மதுரை தமிழன் மாட்டி விட்டுட்டாரு.  நானும் அப்படி நடந்துக்க வேணாமேன்னு நினைச்சேன். அப்படி இருப்பது வலையத்துக்கு துரோகம்ன்னு நிறையப்பேரு என்னை மிரட்டினாங்க. அதனால, 

37 comments:

 1. அருமை சகோதரியாரே
  எவ்வலைப் பாக்கம் சென்றாலும் ......

  ReplyDelete
  Replies
  1. இது மதுரை தமிழன் வேலை.

   Delete
 2. // மகிழ்ச்சியான ஆள் நாந்தான் // வாய்ப்பு இல்லாதது தான் அவரின் சிறப்பே...! வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 3. அருமையான பதில்களோடு, அசத்திவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியா!

   Delete
 4. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 5. //ஆனா, காலைல கரண்ட் கட்ன்னு தெரிஞ்சா வடை மாவு அரைச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சுக்குவேன். //

  வைச்சா என்ன வைக்கலைணா என்ன?? பிரிஜ் எப்படி வேலை செய்யும்??

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப அறிவாளிங்கப்பா ரெண்டு பேரும். கரண்ட் போகுறதுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே அரைச்சு ஃப்ரீசர் பாக்சுல வச்சுட்டா மாவு குறைஞ்சப் பட்சம் 8மணிநேரம் தாங்கும். வேணுமின்னா ட்ரைப் பண்ணி பாருங்க

   Delete
 6. //ஆனா, காலைல கரண்ட் கட்ன்னு தெரிஞ்சா வடை மாவு அரைச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சுக்குவேன். //

  வைச்சா என்ன வைக்கலைணா என்ன?? பிரிஜ் எப்படி வேலை செய்யும்??

  ReplyDelete
 7. அருமையான பதில்கள் அக்கா...
  அசத்திடீங்க... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 8. வித்தியாசமான பதில்கள்! நூறாவது பிறந்தநாள் பதில் உங்கள் ட்ரேட்மார்க்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

   Delete
 9. யோசிக்காமல் சொன்ன பதில்களே இப்படியென்றால் யோசிச்சு சொல்லியிருந்தால்?????. அனைத்தும் அருமை சகோ.

  நீங்க தான் திருமணத்துக்கு பிறகு, உங்களவரின் சிரிப்பையும் பறித்துக்கொண்டீர்களே, பாவம் எங்கள் சகோதரர்.

  ReplyDelete
  Replies
  1. அவர் அப்படி இருப்பதால்தான் நான் இப்படி மகிழ்ச்சியாய் இருக்கேன்

   Delete
 10. மதுரைதமிழன் தினம் தினம் படும் கஷ்டத்தை பார்த்து அவருக்கு ரெஸ்ட் கொடுப்பதற்காக கிச்சனுக்குள் அனுப்ப வேண்டாம் என்று சொன்ன உங்க மனிதாபிமானம் மிக பாராட்டுகுரியது சகோன்னா சகோதான்

  ReplyDelete
  Replies
  1. அப்படிலாம் இல்ல. கிச்சனுக்குள் விட்டா விருந்தாளிகளுக்கு கிடைக்காம மொத்தத்தையும் நீங்க சாப்பிட்டுடுவீங்கன்னுதான் உள்ள விடக்கூடாதுன்னு சொன்னேன்.

   Delete
 11. ///சகோதர பாசமில்லாம என்னை மதுரை தமிழன் மாட்டி விட்டுட்டாரு. ///

  உங்க மேல பாசம் எனக்கு அதிகம் அதனை உறுதிபடுத்தும் விதமாக இன்னொரு செட் கேள்விகள் ரெடியாகி கொண்டிருக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு செட்டா!? போப்பா! இது அழுகுணி ஆட்டம்.

   Delete
 12. என் கையால சமைச்சுப்போட்டு...?#
  உங்க சமையல் அவ்வளவு சிற(ரி)ப்போ?

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சிறப்பு வாய்ந்தது என் சமையல்! சில நேரம் உப்பு தூக்கலா இருக்கும், மறுநாள் காரமிருக்காது இப்படி எதாவது ஒரு குறை இருக்கும்.

   Delete
 13. ராஜி..அசத்திட்டீங்க..அருமையான பதில்கள்.
  உங்க பதில்ல என் பெயரும் இருக்கே..ஹைய் :)
  வாழ்த்துகள் ராஜி
  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. இனி நீங்கலாம் இல்லாம நானா!? அதுக்கு வாய்ப்பே இல்ல கிரேஸ்.

   Delete
  2. :) நன்றி ராஜி..உங்கள் நட்பு கிடைத்தது மகிழ்ச்சி.

   Delete
 14. ஆமாமா எங்களை பத்திரமா பாத்துக்கச் சொல்றீங்களே உங்களை விட வயோதிகம் எங்களை அதிகமா பாதிச்சிருச்சுனு சொல்றீங்களா...இது தானே வேண்டாங்கறது. ...:) மண நாள் வாழ்த்து அருமையானதும் தேவையானதும் கூட...

  ReplyDelete
  Replies
  1. வயோதிகத்துக்காக சொல்லல எழிலக்கா! நீங்க கோவை, நான் ஆரணி. நீங்க ஆரணிக்கு புதுசு. அதான் வழித்தெரியாம எங்கயும் தொலைஞ்சுப் போயிடக்கூடாதேன்னு சொன்னேன். கோவிக்காதீங்க எழிலக்கா!

   Delete
 15. பதில்கள் அனைத்துமே அசத்தல் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 16. எல்லா பதில்களும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!

   Delete
 17. முத்துக்கு முத்தாக
  பத்துக்குப்க பத்தாக
  கேள்வி - பதில்
  நன்றாக இருக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க சகோ!

   Delete
 18. எல்லா பதில்களும் அருமை
  //இந்தியா வரும்போது என் கையால சமைச்சுப் போட்டு அவரை நல்லா கவனிச்சுக்குறேன்!! //
  இப்படி எல்லாமா பழி வாங்க நினைக்கறது.

  ReplyDelete
 19. அசத்தலான பதில்கள்....

  நன்றி.

  ReplyDelete