வியாழன், ஜூன் 05, 2014

ஹேய்! சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பக்கோணம் - முப்பெரும் டூர்

போன வெள்ளிக்கிழமை(31.05.2014) அப்பாக்கு அறுபது வயது முடியுறதால திருக்கடையூருக்கு போய் வரலாம்ன்னு ஒரு எண்ணம். ஆனா, யாகம் அது, இதுன்னு பெருசாலாம் செய்யக்கூடாதுன்னு கண்டிஷன். கோவிலுக்குப் போறோம். ஒரு அர்ச்சனை, ரெண்டு மாலையோடு முடிச்சுக்கனும்ன்னு சொல்லிட்டார். அதுல என் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் வருத்தம். அவருக்கு சொந்தம், பந்தங்களைலாம் கூட்டி செய்யனும்ன்னு எண்ணம். ஆனா, அப்பா மறுத்துட்டார். 

கூடவே சின்ன பொண்ணு இனியா பத்தாவது வகுப்புல பாஸ் பண்ணிட்டதால கூடுதல் சந்தோஷம். அறுபத்தி ஒண்ணாம் வயதுக்காக கோவிலுக்கு போன மாதிரியும் இருக்கனும், பேத்தி பாஸ் செஞ்சதுக்கு ட்ரீட் தந்த மாதிரியும், கூடவெ கோடை விடுமுறைக்கு டூர் போன மாதிரியும் ஆச்சுன்னு, முப்பெரும் டூராய்!! முடிவெடுத்து காரெடுத்துக்கிட்டு கிளம்பிட்டோம். 

கட்டுச்சோறு மூட்டை இல்லாம டூரா!? அப்படி போனா தமிழனாய் பொறந்ததுக்கே வெட்கமாச்சே! மறுநாள் காலைல சாப்பிட இட்லியும், தக்காளி சட்னி, வேர்கடலை சட்னி செஞ்சு எடுத்துக்கிட்டேன். அம்மா புளியோதரை செஞ்சுக்கிட்டாங்க. பசங்க நொறுக்க முறுக்கு, ரவா லட்டு, வேர்கடலை பர்பிலாம் செஞ்சு பேக் பண்ணி வச்சாச்சு. வியாழக்கிழமை நைட் வண்டி கிளம்பியாச்சு!
வெள்ளிக்கிழமை அதிகாலை சிதம்பரம் போய் சேர்ந்தோம். குளிச்சு, முடிச்சு ஆவேசமாய் நடனமிடும் நடராஜரையும், நான் ஆடி முடிச்சுட்டேன் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்னு சொல்லிட்டு ஆனந்த சயன கோலத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் பெருமாளையும் சேவித்தோம். ஹரியும், சிவனும் ஒண்ணுன்னு சொல்ற மாதிரி ஒரே கோவிலில் அதுவும் ஒரே விமானத்தின் கீழ் இருவரது கோவில்களும் இருப்பது ஆச்சர்யமே! 

ஹப்பா!  இம்மனிதர்கள் கோவில் விமானத்தை மட்டும்தான் பொன்னால் செய்திருக்காங்க. நான் நினைச்சா கோவில் முழுக்கவே பொன்னாய் ஜொலிக்க வைக்க முடியும்ன்னு தன்  பொன்னிற கதிர்களால்  கோவிலை இளஞ்சூரியன் தழுவும் காட்சி.


சூரிய வெளிச்சம் புகும் முன் சிதம்பரம் கோவில் மண்டபம். எத்தனை தூண்கள் இருக்கும்!?  அத்தனையும் ஒரே மாதிரி!!

திருஞானசம்பந்தருக்கு உமாதேவியால் ஞானம் கொடுத்த இடம். என் பொண்ணுக்கும் கொஞ்சம் அறிவை  கொடு தாயின்னு என்னை கூட்டி போயிருப்பாரோ என் அப்பா!?

அங்கிருந்து நேராய் வைத்தீஸ்வரன் கோவில் போனோம். அங்க  கொண்டுப் போன கட்டுச்சோறு மூட்டையை காலிப் பண்ணிட்டு திருக்கடையூர் நோக்கி பயணம்.

 அப்பா, அம்மாக்கு வேட்டி, சட்டை, புடவை மட்டும் பரிசளித்தோம் நாங்க.

 ஹே! நான் என் அப்பா, அம்மா கல்யாணத்தை பார்த்துட்டேன். இந்த வயசுலயும் அம்மாக்கு வெட்கம், அப்பாக்கு புன்சிரிப்பு. என் கண்ணே பட்டுடும் போல இருக்குப்பா!

கல்யாண கோலத்தில் அப்பா, அம்மாவோடு நாங்க. 

வாரிசுகளுக்கு பதில் மரியாதை செய்யனும்ஞ்குறது ஐதீகமாம்.  அங்கிருந்து கேது தளமான கீழ் பெரும்பள்ளம் கோவிலுக்கு போனோம்.

 திருமணஞ்சேரி கோவிலுக்கும் போய் வந்தோம். இப்ப யாருக்கு கல்யாணம் ஆகனும்ன்னு இந்தக் கோவிலுக்கு கூட்டி வந்தீங்கன்னு தூயா கேட்க, அமைஞ்சதுதான் சரியில்ல. இனி நல்ல பொண்ணா அமையனும்ன்னு நம்ம அப்பா வேண்டிக்கலாம்டின்னு அப்பு குடும்பத்துக்குள் குண்டு தூக்கி போட ஏக கலாட்டா அங்கே.

அங்கிருந்து நேராய் கும்பக்கோணம் மகா மக குளத்துல கால் நனைச்சு, ஒப்பிலியப்பனையும், ராகு தளமான திருநாகேஸ்வரத்தையும் தரிசித்துவிட்டு, சிவனை வழிப்பட்டு அங்கிருந்து நேராய் சுவாமி மலை போய் இரவு தங்கி காலையில் தரிசனம் பார்த்தோம். புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கும் போய் வந்தோம். அங்கிருந்து தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், வடலூர் பார்த்துட்டு இறைவனின் அருளால் நலமுடம் வீடு வந்து சேர்ந்தோம். நாள், கிழமைலாம் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருப்பதற்குதானே! 

(நாங்க இருவரும் தூண்களாய் நின்று உங்களைத் தாங்குவோம்ன்னு சொல்லாம சொல்றாங்களோ தூண்களுக்கிடையில் நின்று. )

என் அப்பாவும், அம்மாவும் நோய் நொடி இல்லாம ஆரோக்கியத்தோடு நல்ல படியாய் வாழ்ந்து அவங்க வழிகாட்டுதலோடும், அரவணைபோடும் எங்களை வழிநடத்த வேண்டுமென்றும், அவங்க பிள்ளைகளாகிய நாங்களும் இதேப்போல் என்றும் மாறாத பாசத்தோடு இருக்கனும்ன்னு இறைவனிடம் வேண்டிக்கோங்க. ப்ளீஸ்!

ஆவணி மாதம் என் மாமனாருக்கு எண்பதாம் வயது பூர்த்தியாகுது. அதுக்காக மீண்டும் திருக்கடையூர் போக வேண்டி வரும். அப்ப இதேப்போல ஒரு பதிவு வரும்.

32 கருத்துகள்:

 1. ராஜி,

  அப்பா அம்மாவுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்து(க்)கள். எங்களுக்கு ரெண்டு வருசம் ஆச்சு 'கல்யாணம்' ஆகி!! அதனால் வாழ்த்த வயதும் இருக்கு:-)))))

  படங்களுக்கு நன்றி. கங்கைகொண்ட சோழபுரம் பார்க்கலை இன்னும்:(


  மகளுக்கு இனிய ஆசிகள். நல்லா படிச்சு எங்களுக்கு(ம்) மகிழ்ச்சி கொடுக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா, அம்மா, மகளிடம் தங்கள் வாழ்த்தை சேர்ப்பிச்சுடுறேன்ம்மா!

   நீக்கு
 2. Ungalathu petrorum, neengalum, ungalathu kudumbamum needooli noi nodi illamal vaala en praathanaikal... pathivu super !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 3. மகிழ்ச்சி. உங்கள் பெற்றோருக்கு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்த்தை அப்பா, அம்மாக்கிட்ட சேர்ப்பிச்சுடுறேனுங்க.

   நீக்கு
 4. அருமையான பகிர்வு வாழ்த்தும் வயதினை நான் அடையவில்லை ஆதலால் தங்களின் அன்புப் பெற்றோரின் வாழ்த்தினைப் பெற்று மகிழ்கின்றேன் இறைவன் எப்போதும் தங்களின் பெற்றோரை வாழ்த்திக்கொண்டே இருக்கட்டும் ராஜிம்மா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூத்த மகளுக்கு வாழ்த்து இல்லாமலா!? கண்டிப்பாய் அவங்க ஆசிகள் உங்களுக்குண்டு.

   நீக்கு
 5. தங்கள் தந்தையார் என்னிலும் 11 நாள் இளையவர். நலமுடன் இருவரும் வாழ இறையருள் கிட்டட்டும்.
  இப்படி எல்லாம் கொண்டாடுவீர்களா? ஈழத்தில் பெரிதாக இந்த நடைமுறையில்லை. என் அறுபதை மிக எளிதாகக் கொண்டாடினார்கள்.
  2004ல் வந்து சிதம்பரம், சீர்காழி; கும்பகோணம், பெரிய கோவில் சென்றோம்.
  படங்கள் அழகு பெரிய கோவில், தங்கமாக ஜொலிக்கிறது.
  பதில் மரியாதையில் பிள்ளைகள் கொள்ளை அழகு!
  நல்லாயிருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க கொண்டாடியது மிக மிக எளிது. இதுக்காக அழைப்பிதழ் அச்சடித்து, மண்டபம் எடுத்து, ஊரைக்கூட்டின்னு அமர்க்களப்படுத்துறவங்க நிறையப் பேர் உண்டு.

   நீக்கு
 6. உங்களுடன் பயணித்து மகிழ்ந்தது போன்ற அனுபவத்தைப் பெற வைக்கிறது உங்கள் எழுத்து நடை.

  //ஆடி முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்னு அனந்த சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள்//

  //நான் நினைச்சா கோயில் முழுக்கவே பொன்னாய் ஜொலிக்க வைக்க முடியும் என்று தன் பொன்னிறக் கதிர்களால் கோவிலை இளஞ்சூரியன் தழுவும் காட்சி//

  //நாங்களிருவரும் தூண்களாய் நின்று உங்களைத் தாங்குவோம் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ தூண்களுக்கிடையில் நின்று//

  ....மேற்கண்டவை நெஞ்சைத் தொடும் வரிகள்.

  புகைப்படங்களும் மனதைக் கவர்கின்றன.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை ஈன்று போற்றி வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கும் உங்களின் அன்புச் செல்வங்களுக்கும் என் வாழ்த்துகள்.

   நீக்கு
  2. வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் நன்றி ஐயா!

   நீக்கு

 7. நல்ல குடும்பம் பல்கலைகழகம் என்று கூறுவது போல உங்கள் குடும்பமும் இருப்பதை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் சகோ

  அம்மா இன்னும் இளமையாகவே இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது தனிப்பட்ட வாழ்த்தை சொல்லிவிடுங்கள்

  மிக ஹேண்ட்சம்மாக இருக்கும் உங்கள் வீட்டுக்காரர் படத்தை போடாதீங்க அப்புறம் யாரவது அவரை களவாடி செல்லப் போகிறார்கள்

  குழந்தைகள் மிக அழகு அதோடு அவர்கள் மிகவும் நன்றாக வளர்ந்துவிட்டார்கள்...சிறகுகள் முளைத்து பறக்க ஆர்ம்பிக்க போகிறார்கள் கூடிய சிக்கிரம்....

  கடைசியாக ஒரு கேள்வி பதிவி எழுதுவது நீங்கள்தானா அல்லது ஆள் வைத்து எழுதுகிறீர்களா? இதை கேட்க காரணம் எழுத்து நடை மிக நன்றாக வந்திருப்பதோடு பதிவும் மிக ஜொலிக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பத்தினரை பாராட்டியதற்கு நன்றி சகோ!
   >>
   அம்மா இளமையாய் இருக்கும் ரகசியம் அப்பா அம்மா மேல் கொண்ட காதல்தான்.
   >>>
   என் வீட்டுக்காரர் ராமர். யார் களவாண்டினாலும் மனசு மாற மாட்டார். ஏன்னா, என்னோடு வாழ்ந்ததால ஈரேழு ஜென்மத்துக்கும் பெண்ணாசை வராது.
   >>
   பதிவு எழுது நானேதான். இதுக்கெல்லாமா ஆள் வைப்பாங்க. பதிவு ஜொலிக்க காரணம் என் புகைப்படம் போட்டதால்தான்:-)

   நீக்கு
 8. ம்ம்ம்... பெரிய ரவுண்டு தான் போயிருக்கீங்க... நான் சில வருஷங்களுக்கு முன்பு போனபோது கேது ஸ்தலத்தையும் சுவாமிமலையையும் நேரம் இல்லாததால் பார்க்க முடியலை...

  அம்மா அப்பாவுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்த்துக்களை அப்பா, அம்மாவிடம் சேர்ப்பித்தாச்சு. சுவாமி மலை பற்றி விரைவில் வரும் சகோ!

   நீக்கு
 9. தாய் தந்தைக்கு இனிய வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிண்ணா!

   நீக்கு
 10. அம்மா அப்பாவுக்கு என் வாழ்த்துகளையும் சேர்த்துடுங்க அக்கா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் சேர்ப்பிச்சுடுறேன் ஆவி!

   நீக்கு
 11. படங்களைப் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்ததாகச் சொல்லி விடுங்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் சொல்லிடுறேன் அருணா!

   நீக்கு
 12. நாங்களும் கலந்துகிட்ட மாதிரி feel ஆகுது.அக்கா அருமை.
  அப்புறம் ஹை நான் ராஜியக்கா குடும்பத்தை மீட் பண்ணிட்டேன். ரொம்ப சந்தோஷம். இந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் அக்கா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் விதித்தால் நேரிலேயே சந்திக்கலாம் தங்கச்சி!

   நீக்கு
 13. //திருஞானசம்பந்தருக்கு உமாதேவியால் ஞானம் கொடுத்த இடம்.//

  அது சீர்காழி என்றல்லாவா நினைத்திருந்தேன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீர்காழிதான் ஐயா. குறிப்பிடாததுக்கு மன்னிக்கவும்.

   நீக்கு
 14. சுவாரஸ்யமான நடையில் சென்றது பதிவு! உங்களின் பெற்றோர் எல்லா நலமும் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்! அவர்களுக்கு எனது வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வணக்கத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 15. முதலில் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் நீடுடி வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

  "//கட்டுச்சோறு மூட்டை இல்லாம டூரா!? அப்படி போனா தமிழனாய் பொறந்ததுக்கே வெட்கமாச்சே! //" - ஆனா இதை சாப்பிட்ட பிறகு உண்டாகும் திருப்தி வெளியில வேறு எங்க சாப்பிட்டாலும் கிடைக்காது.

  பதிலளிநீக்கு
 16. உங்கள் பெற்றோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  எல்லாம் வல்லவன் அவர்களுக்கு மேலும் பல சிறப்புகளை அளிக்க எனது பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 17. நல்லதொரு குடும்பம், அருமையான நினைவுகளை தாங்கி நிற்கும் பதிவு. அம்மா அப்பாவில் நல்லாசிகளை எங்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  பதிலளிநீக்கு