Monday, June 16, 2014

ஆண் வர்க்கத்துக்கே “இவனுங்களால்” இழுக்கு - ஐஞ்சுவை அவியல்

ச்ச்ச்ச்சீ:
எங்க முன்னோர்களில் யாரோ செஞ்ச தவப்பலன் விளைவா நானும்,  என் மகள்களும் தவறான ஆண்களை இதுவரை சந்திக்க நேர்ந்ததில்ல. பத்திரிக்கைகளில் இந்த மாதிரி விசயங்களை படித்து மனம் நொந்துப் போவதோடு சரி. முதன்முறையா இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து கொந்தளிச்சு போயிட்டேன். ரெண்டு மூணு கசப்பான விசயங்களால் எங்களுக்கும் பக்கத்து வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்ல. என்னதான் வம்புக்கு இழுத்தாலும் நாங்க ஒதுங்கிப் போய்டுவோம். ரெண்டு நாளைக்கு முன் வாசலில் நின்னுட்டு தெரிஞ்சவங்க ஒருத்தரோடு பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ, பக்கத்து வீட்டுக்கு ஒரு ஆறு இல்ல ஏழு வயசில் ஒரு பாப்பா வந்துச்சு. அந்த வீட்டு ஆண்கிட்ட அங்கிள் குழு காசை ஆண்டிக்கிட்ட கொடுக்கச் சொல்லி அம்மா கொடுத்தனுப்பினாங்கன்னு சொல்லி காசை அவன்கிட்ட கொடுத்துச்சு.

அவனும் ஆண்டி இல்லம்மா. கொஞ்ச நேரம் இரு. வருவாங்கன்னு சொல்லி அந்தப் பொண்ணை பக்கத்துல வச்சுக்கிட்டு பாப்பாக்கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டே, விளையாடுற மாதிரி அது உடம்புல ஆங்காங்கு கை வச்சிக்கிட்டு இருந்தான். இத்தனைக்கும் அந்த நாயிக்கு வயசு 45க்கு மேல் இருக்கும். அதைப் பார்த்து என்னச் செய்யுறதுன்னு தெரியல. உள்ளப் போய் அப்பாக்கிட்ட நடக்கும் அநியாயத்தைச் சொன்னேன், நாம் இப்போ அவன்கிட்ட சண்டைக்குப் போனால் இதுப்போல ஒரு விசயமே நடக்கலைன்னு சாதிச்சுடுவான். அதனால, வீட்டுப் பின்பக்கமா போய் அந்தப் பாப்பாவோட அம்மாவைக் கூட்டி வா. விசயம் அத்துமீறி போச்சுன்னா அந்த குழந்தையை நான் காப்பாத்துறேன்னு சொன்னாங்க. வேக வேகமா அந்தம்மாவை கூப்பிட்டா அவங்க என்னை நம்பல. காழ்ப்புணர்ச்சில சொல்றதா சொன்னாங்க. அந்தக் குழந்தையோட பெரியம்மாவும், குழந்தையோட அப்பாவும் நான் வரேன்னு சொல்லி என்னோடு வந்தாங்க. பின் வாசல் வழியா வந்து மாடில ஏறி மறைஞ்சு நின்னு அவன் செய்கையைக் காட்டினேன்.

அதைப் பார்த்து விக்கித்து போய் நின்னுட்டாங்க, உடனே அந்த குழந்தையோட அப்பா ஓடிப் போய், அந்தாளை ரெண்டு சாத்து சாத்தி குழந்தையை கூட்டிக்கிட்டு போய்ட்டாங்க. வெளில சொன்னா மானம் போகும்ன்னு அதனால எங்கயும் சொல்லாதீங்கன்னு என்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்க. இப்படி பயப்படுறாதாலத்தான் மனித உருவில் இருக்கும் மிருகங்கள் தன் கோரப் பற்களால் குத்தி குதறுதுங்க.  கடவுள் அருளால் அந்தக் கொடுமை எங்க கண்ணுக்கு பட்டுச்சு. இல்லாட்டி அந்தக் குழந்தையின் கதி!!?? ஆனாலும், அவனை ஒண்ணும் பண்ண முடியாமப் போனது கொஞ்சம் வருத்தம்தான்.உணர வேண்டியது:வாங்கிக் கட்டிக்கொண்டது:
எத்தனை தரம் சொல்லித் தந்தாலும் அப்பு வெளிலப் போய் விளையாடிட்டு வந்தால் கைகால் கழுவனும்ன்றதுல அவ்வளவா அக்கறை இல்லாமதான் இருக்கான். ஒரு நாள் மதிய நேரம் சாப்பிட்டுட்டு தூங்கிட்டிருந்த என் பக்கத்துல, வெளிலப் போய் விளையாடிட்டு வந்த அப்பு  படுத்தான். தூங்கி எழுந்துப் பார்க்கும்போது பெட்லாம் மண்ணு. டேய் அப்பு! பெட் முழுக்க மண் எப்படிடா வந்துச்சு. பாரு என் தலைலாம் கூட மண்ணுன்னு சொன்னேன்.

வெளில விளையாடி வந்ததைச் சொன்னா எங்க அடிவிழுமோன்னு ஒரு செகண்ட் யோசனைச் செஞ்ச அப்பு, உடனே, உன் தலைலாம் மண்ணா இருக்குன்னா உன் தலைல இருந்துதான் வெளில வந்து பெட் முழுக்க சிந்தி இருக்கும்மான்னு சொன்னான்.  அவன் சொன்னதைப் புரிஞ்சுக்க சில நிமிடங்கள் ஆச்சு. அப்புறம் என்ன!? அவன் எஸ்கேப்பிட்டான். நாந்தான் எல்லாத்தையும் க்ளீன் பண்ண வேண்டியதாப் போச்சு!
முகநூலில்  படித்ததில் பிடித்தது:
எத்தனை கைகளால்
ஆசையாய்
அணைத்துக் கொள்கிறது
அந்த மரம்..
அடியில் படுக்கப் போனால் !

யோசிங்க:
குமார் என்பவர் முத்து என்பவர் நடக்க தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து நடக்க தொடங்கினார். இருவரும் ஒரே திசையில் நடக்கின்றனர். குமார் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நடக்கிறார். முத்து மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நடக்கிறார். எனில் இருவரும் எத்தனையாவது கி.மீ தூரத்தில் சந்திப்பார்கள்?

51 comments:

 1. சிறுமிகளுக்கு காம மிருகங்களால் இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குட் டச் பேட் டச் என்கிற விஷயத்தை நிச்சயம் சிறுமிகளுக்கு எடுத்துரைத்திடத்தான் வேண்டும். ஏதோ.... தன்னால் இயன்ற ஒரு மெழுகுவர்த்தியை என் தங்கை ஏற்றி வைத்ததில் மனம் நிறைய சந்தோஷம். இதைப் படிச்சு மனம் கனத்து வந்த என்னை அப்பு தன் சாதுர்யத்ததால் சிரிக்க வைத்து விட்டான். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. என் பாடு உங்களுக்கு கொண்டாட்டமாண்ணா!?

   Delete
 2. //குமார் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நடக்கிறார். முத்து மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நடக்கிறார்.//

  12 கி.மீ?

  ReplyDelete
  Replies
  1. என்னைக் கேட்டால்!! பாதில் சொல்லுங்க சார்.

   Delete
 3. எனக்கென்ன ன்னு போகாம நீங்க செஞ்ச காரியம் சூப்பர் அக்கா..!

  ReplyDelete
  Replies
  1. நம்ம வீட்டுலயும் ரெண்டு பெண்பிள்ளைகள் இருக்காங்களே ஆவி!!

   Delete
 4. இந்த மாதிரி ஆட்களை செருப்பால அடிக்கணும் ராஸ்கல்ஸ்.....

  ReplyDelete
  Replies
  1. செருப்படி மட்டும் போதாது ஸ்பை. பார்க்கும், கேட்கும், பேசும் சக்தியை எடுத்துட்டு காமுகன்னு நெத்தில பச்சை குத்தி விட்டுடனும். கதறியே செத்தால்தான் இதுப்போல ஆட்கள் திருந்துவாங்க.

   Delete
 5. கடவுளே!!! நல்ல வேலை நீங்க பாத்து சுதாரிச்சதால குழந்தை இனிமேல் அவன் அருகே வராமல் பார்த்துக்கொள்வார்கள்..என்ன உலகத்தில் வாழறோமோ ....

  ReplyDelete
  Replies
  1. நாங்க கவனிக்கலைன்னா அந்த குழந்தையோட கதி!? நினைச்சாலே பதறுது கிரேஸ்.

   Delete
 6. முதல் ஒரு மணி நேரம் - முத்து 3 கி.மீ. குமார் 0 கிமீ.
  இரண்டாவது ஒரு மணி நேரம் - முத்து 6 கி.மீ. குமார் 4 கிமீ.
  மூன்றாவது ஒரு மணி நேரம் - முத்து 9 கி.மீ குமார் 8 கிமீ
  நான்காவது ஒரு மணி நேரம் - முத்து 12 கிமீ. குமார் 12 கி.மீ

  நான்கு மணி நேரம் கடந்ததும் பன்னிரெண்டாவது கிலோமீட்டரில் சந்திப்பார்கள்....

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் அண்ணனே சொல்லிட்டார் விடை சரின்னு.

   Delete

 7. நீங்க செஞ்ச காரியம் சூப்பர்...... மனம் கொதிக்குது அதைப்படிக்கும் போது . என மனைவி இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்று சொல்லும் போது இந்த மாதிரி நிகழ்வுகள்தான் மனத்தில் வந்து நின்று வேண்டாம் என்று சொல்ல வைக்கிறது

  ReplyDelete
  Replies
  1. பொத்தாம் பொதுவா எல்லா ஆண்களையும் அப்படி சொல்லிட முடியாது சகோ!. சிலர் மட்டும்தான் இப்படி.

   Delete
 8. மனுசனா அவன்... படுபாவி...

  சில சமயம் மட்டும் தானா...? - கர்வம்...

  நண்பர்கள் சொன்ன விடை சரி...

  ReplyDelete
  Replies
  1. கர்வத்தை எல்லா நேரமும் விட்டுடலாம். ஆனா, தேவைப்படும் இடத்தில் கர்வத்தை காட்டியே ஆகனும் அண்ணா!

   Delete
 9. பகிர்வுக்கு நன்றி..

  அந்த காம நாய் எங்கேயாவது அனுபவிப்பான்...

  ReplyDelete
  Replies
  1. அதான் என் வேண்டுதலும்.

   Delete
 10. Nall vishayam sir ana ippadi pattavangala edhavadhu pannanum

  ReplyDelete
  Replies
  1. பண்ணனும்தான். ஆனா, அந்தளவுக்கு போக எங்களுக்கு தைரியம் இல்லேன்றதுதான் உண்மை. அப்புறம் ஒரு விசயம் நான் சார் இல்ல மேடம்.

   Delete
 11. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் என் கையால் அவனுக்கு அறை விழுந்திருக்கும்.

  நீங்கள் ரொம்ம்மப நல்லவர் தோழி.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ம்ம்ப// இதுல எதாவது உள்குத்து இருக்கா அருணா!

   எங்களுக்கும், அவனுக்கும் ஏற்கனவே வாய்க்கா, வரப்பு தகராறு இருக்கு. நான் தட்டிக் கேட்கப் போயிருந்தா நாந்தான் இந்நேரம் களி தின்னுட்டு இருக்கனும். அதுமில்லாம, அந்த சிறுமியின் அம்மாவும், அவன் மனைவியும் அம்புட்டு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். என் சொல்லை நம்ப மாட்டாங்க.

   Delete
  2. //அவங்க என்னை நம்பல. காழ்ப்புணர்ச்சில சொல்றதா சொன்னாங்க//
   ன்னு சொன்னதுலேயே ஓரளவு புரிந்தது.

   Delete
 12. போலிஸில் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். விட்டிருக்கக் கூடாது. அவன் சிறைக்கு செல்லும் வரை, இன்னும் எத்தனை கொடுமைகள் செய்வானோ?

  ReplyDelete
  Replies
  1. வெளில தெரிஞ்சா அசிங்கம்ன்னு சம்பந்தப்பட்டவங்க சொலும்போது நாம ஒண்ணும் பண்ண முடியாது சகோ

   Delete
  2. ஆமாங்க. எத்தனையோ இருக்க அதனையெல்லாம் ஒதுக்கி விட்டு இந்த சம்பத்தை மட்டுமே அடையாளமாக சொல்லி அவளை தினம் தினம் சித்திரவதை செய்யும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.கண்ணால் கண்ட தகப்பனும் பெரியம்மாவும் அவனை (ஏதாவது ஒரு வழியில்) நிச்சயமாக தண்டிப்பார்கள்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 13. இம்மாதிரிச் சம்பவங்களில் தனது வீட்டு கதவைச் சாத்திக்கொள்ளும் மடயர்களிடம் இருந்து நீங்ககள் இமயம் அளவு வேறுபட்டிருகிறீர்கள்.
  நற்பணி
  தொடரட்டும்.
  அந்தச் சனியனும் ஒருவேளை இதைப் படிக்கலாம் திருந்தலாம்.
  http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டுலையும் ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்க, எனக்கென்னன்னு நான் போய்ட்டா என் பிள்ளைகளுக்கு இப்படி நேரும்போது யார் உதவுவாங்க!?

   அந்த நாய் எப்பவும் திருந்தாதுங்க சகோ! அதுக்கு தாய், தங்கை, மகள்ன்ற உறவுலாம் தெரியாது. அதுக்கு தேவை பெண்.

   Delete
 14. பெண் குழந்தைகள் மட்டுமல்ல ..ஆண் குழந்தைகளும் இது போல பாதிக்கப்படுகின்றனர்.மிக விரைவில் சொந்த அனுபவம் ஒன்று பதிவாக வரும்.

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான் சகோ! பெண் பிள்ளைகளைப் போலவே ஆண்பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய காலகட்டமிது. உங்க பதிவை படிக்க ஆவலாய் இருக்கேன்.

   Delete
 15. சற்று வருத்தமான விஷயம் மற்றும் கண்டிக்கப்பட வேண்டிய செயல் .அதோடு உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தண்டிக்கப்பட வேண்டிய விசயமும் கூட..,

   Delete
 16. அவனுக்கு நிச்சயம் தண்டனை கொடுத்திருக்க வெண்டும் காரணம் இது ஒரு வியாதி மரந்தில்லாமல் தீராது சகோதரி

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  WWW.mathisutha.COM

  ReplyDelete
  Replies
  1. ஆனா மருந்துக் கொடுக்கும் அதிகாரம் நமக்கில்லையே சகோ!.

   Delete
 17. நல்லகாரியம் செய்தீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழி!

   Delete
 18. நான் இது வரைக்கும் பேப்பர்ல தான் படிச்சிருக்கேன். இப்ப இந்த பதிவை படிக்கும்போது, அட கடவுளே நமக்கு தெரிஞ்சவங்க கண் முன்னாடியே இந்த அநியாயம் நடக்குதான்னு மனசு கொதிச்சுப் போச்சு.

  வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு "good touch,bad touch"ன்னு சொல்லிக்கொடுக்கிற மாதிரி இந்தியாவிலும் சொல்லிக்கொடுக்கிறதா கேள்விப்பட்டேன். ஆனா, அது நிறைய பெற்றோர்களுக்கு தெரிய மாட்டேங்குது...

  எனக்கென்னன்னு நீங்க போகமா, விவேகமா செயல்பட்டு அந்த குழந்தையை காப்பாற்றியிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. இங்கயும் சொல்லித் தர்றாங்க சகோ! ஆனா, அதை வெளி ஆளுங்க கிட்டதான் யூஸ் பண்ணச் சொல்றாங்க. அம்மா, அப்பாவோட ஃப்ரெண்ட், சொந்தக்காரங்களுக்கு எதிர்க்கவும் பயன்படுத்தலாம்ன்னு சொல்லிப் பழக்குவதில்ல. அப்பறம். எனக்கென்னன்னு போய்ட முடியாது. அப்படி இருந்தா நான் மனுசி இல்ல சகோ!

   Delete
 19. அந்த கொடூரனை துடைப்பக்கட்டையால் அடித்திருக்க வேண்டும்! உங்களைவிட உங்க பையன் புத்திசாலி போல! பழமொழி சிறப்பு! இருவரும் 12வது கிலோ மீட்டரில் சந்திப்பார்கள்!

  ReplyDelete
  Replies
  1. அவனை தண்டிக்க நமக்கு அதிகாரமில்லையே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 20. பச்சைக் குழந்தையைக் கூட விடமாட்டேன்கிறானுக. It is disturbing to read these news.

  கொஞ்ச வருடம் முன்னால் ஒரு கதை போட்டி நடத்துனாங்க. அதில் இது போல் குழந்தையை வன்புணர்வு செய்வதுபோல் ஒரு கதையை தெரிவு செய்து எரிச்சலை கிளப்பினார்கள் "நடுவர்கள்". நிஜத்தில் நடப்பது ஒருபக்கம்.. இதை கற்பனையிலும் எழுதித் தொலைக்கணுமா என்ன? அந்த child- abuse கற்பனையை மெச்சி அதுக்கு பரிசு வேற கொடுக்கிறாங்க.

  என்னவோ போங்க!

  ReplyDelete
  Replies
  1. கலிகாலம்ன்னு சும்மாவா சொல்றாங்க.

   Delete
 21. Kaalam romba kettu kidakku, vera enna solrathu.... neenga senjathu romba sari.

  Vidai : 12 km

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 22. அப்பு :ஹலோ நான் அப்புதான் பேசுறேன்.நீங்க?
  நான் : தம்பி எம்பேரு சேக்காளி . அவசரமா ஒரு லோடு மண்ணு வேணும்.
  அப்பு : ஒரு நிமிசம் இருங்க அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களுமா சகோ!!?? ஒரு லோடு மண் போதுமா!?

   Delete
 23. 3 மணி நேரம் கழித்து

  ReplyDelete
 24. மிருகங்கள் மனிதர்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.......... :((((

  ReplyDelete
 25. மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். வாழ்த்துக்கள்.உணர்வுபூர்வமான மனதைத் தொட்ட தங்களின் பதிவைக் கண்டேன். வேதனைக்குரியது.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
 26. சிறு குழந்தையிடம் தன் ஆண்மை வீரத்தைக் காட்டும் வீரர்களை நடுத்தெருவில் வைத்து துடைப்பக்கட்டையால் அடிக்க வேண்டும்.

  ReplyDelete