எங்க ஊர் பக்கம்லாம் தலைப்பிள்ளையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அம்மா, நாத்தனார், தாய்மாமன், அக்கா, அத்தை வீடுகளிலிருந்து விதம்விதமான சாதம், பலகாரம்லாம் செஞ்சு எடுத்துப் போய் கொடுக்குறது வழக்கம். அப்படி எடுத்துப் போற சாத வகைகளில் மாங்காய் சாதம், புளிசாதம், புதினா சாதம், புதினா துவையல் அவசியம் இருக்கும்.
இப்போதான் எல்லா சீசன்களிலும் மாங்காய் கிடைக்குது. அதுக்கு முன்னலாம் சீசன் இல்லன்னாலும் எப்படியாவது மாங்காய்களை வாங்கி சாதம் கிளறிக் கொண்டுப்போய் கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பாங்க.
மாங்காய் சாதம் செய்ய தேவையானப் பொருடகள்:
உப்பு போட்டு உதிரியாய் வடித்த சாதம் - ஒரு கப்
முற்றிய மாங்காய் - 1
ப.மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு,
பெருங்காயம் -சிறிது
மஞ்சப்பொடி - சிறிது
கடுகு - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 3 டீஸ்பூன்
அரிசியை 1 மணி நேரம் ஊற வச்சு உப்பு போட்டு உதிரி உதிரியாய் வடிச்சி, அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வச்சுக்கோங்க. மாங்காயை கழுவி தோல் சீவி துருவிக்கோங்க. பச்சமிளகாயை நீளவாக்குல அரிஞ்சு வச்சுக்கோங்க, இஞ்சியை சுத்தம் பண்ணி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கோங்க.
அடுப்பில கடாய் வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொரிஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்துக்கோங்க.
அடுத்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க விடுங்க.
அடுத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்குங்க.
இஞ்சி போட்டு வதக்குங்க.
அடுத்து மாங்காய் போட்டு வதக்குங்க.
பெருங்காயப்பொடி சேருங்க.
உப்ப்பு சேருங்க.
மஞ்சப்பொடி சேர்த்து சிறு தீயில் வதக்குங்க. மாங்காய்லாம் வெந்து எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சுட்டு இறக்கிடுங்க.
மாங்காய் விழுது ஆறினதும் ஆற வச்சிருக்கும் சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கிளறுங்க.
சுவையான மாங்காய் சாதம் ரெடி. பருப்புகளோடு முந்திரியும் சேர்த்துக்கலாம். இது மாங்காய் சீசன். பிள்ளைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சுக்கு கொடுத்தனுப்பலாம். மிக்சர், வத்தல், அப்பளத்தோடு சாப்பிட நல்லா இருக்கும்.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் கார்னர்ல சந்திக்கலாம்...,
என்ன ருசி..என்ன ருசி.. :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரேஸ்!
Deleteசூப்பர்... நன்றி சகோ...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!
Deleteயாராவது செய்து கொடுத்தால் சாப்பிட நல்லா தான் இருக்கும்
ReplyDeleteஇது நான் செஞ்சதுங்க சகோ! ஈசியானது. பத்து நிமிசத்துல செஞ்சுடலாம்.
Deleteபத்து நிமிஷத்துக்கு மேல வரும் சமையல் எல்லாம் வூட்டுக்காரர்தான் பண்ணுவாங்களோ
Deleteஆமா, நான் பத்து நிமிசத்துக்குமேல கிச்சன்ல நின்னுட்டு இருந்தா பதிவுலகத்தை யார் பார்த்துப்பாங்க.
Deleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteதம 5
மாங்காய் சாத ரெசிப்பிக்கு மிகவும் நன்றி ராஜி. விரைவில் செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteசெஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க கீதாம்மா!
Deleteநல்ல ரெசிப்பி. சாப்பிட்டதுண்டு.... :)
ReplyDeleteDear Admin,
ReplyDeleteYou Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/
நன்றிகள் பல...
நம் குரல்
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteAyurveda Schweiz
Ayurveda Suisse
Ayurveda.ch
Diät Küche Berner Oberland
Fisch Küche Brienz
Indische Küche Interlaken
Seehotel Bären Brienz
Boutique Ganesha
Wohlfühltag Schweiz
Seeterrasse Berner Oberland
Kinderspielplatz Interlaken