Wednesday, December 20, 2017

வேலூரை சுத்திக்காட்ட போறேன் - மௌனச்சாட்சிகள்


வீட்டின் எதாவது ஒரு இடத்திலிருந்து பார்த்தால் அருவி, கடல்,ஆறு(ஆத்துல தண்ணி இருக்கனும்), இப்படி எதாவது நீர்நிலை இருக்கனும், மரம், செடி, கொடின்னு பச்சை பசேல்ன்னு இருக்கனும். வீட்டின் ஒரு அறையில் கல்கி, சாண்டில்யன், இந்திரா சௌந்திரரஜன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலக்குமாரன் .. இவர்களின் புத்தகம் இருக்கனும், எம்ராய்டரி கிட், கம்ப்யூட்டர், பதிவு போட இணையம் இருக்கனும். பசங்க தங்கள் தேவைக்கு கூப்பிடும்போது போய் உதவிட்டு வந்திடனும். என் அம்மா ஆசைப்படி சின்னதா ஒரு ஆதரவற்ற இல்லம் நடத்தனும் இல்லன்னா அங்க போய் உதவனும். இப்படிதான், என்னுடைய கடைசி காலம் இருக்கனும்ன்னு ஐடியா செஞ்சிருந்தேன்..  அதுவரை வேலூர்ல இருக்கனும்ங்குறது என் ஆசை..

 எந்த ஆசைதான் நிறைவேறி இருக்கு இது நிறைவேற!! குடும்ப சூழல் காரணமா ஆரணிலயே வீடுகட்டி இருக்க வேண்டியதாகிட்டுது. ஆனாலும் வேலூர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. வேலூருக்கு போனாலே தனி உற்சாகம் வந்திடும்.  வேலூர் வெயிலூர்ன்னு இப்ப டிவி நியூஸ்ன்னால பேர் வாங்கி இருந்தாலும். புகழ்பெற்ற பல இடங்கள் வேலூர்ல இருக்கு. பாலாற்றங்கரையில் இருக்கும் வேலூர்ல முதன்முதலில் நான் பார்த்தது வேலூர் கோட்டை.  வேலூர் எத்தனையோ மாற்றங்களை கண்டிருந்தாலும் வேலூர் கோட்டை மட்டும் துளி மாற்றமின்றி அப்படியே இருக்கு.  

. வேலூர் கோட்டையை சுத்தி அகழி உண்டு.  அந்தகாலத்துல  போரின்போது இந்த அகழில முதலையை விடுவாங்கன்னு சொல்வாங்க. இப்ப போட்டிங் விட்டிருக்காங்க. சென்னைல மெரினா பீச் போல, இந்த கோட்டைக்கருகில் இருக்கும் பூங்காவிலும், குழந்தைகள் விளையாட்டு மைதானம், போட்டிங்க்ன்னு இவ்வூர் மக்களுக்கு பொழுதுபோக்கு. 


கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம். எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில். தரைமட்டத்திலிருந்து, கீழாக கட்டப்பட்ட ஆலயம். சிறந்த கலைப்பொக்கிஷமும்கூட. ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு கல்லிலும் இருக்கும் சிற்பங்கள் அத்தனையும் பார்க்க கண்கோடி வேணும். 

வேலூர் கோட்டைக்குள் கோவில் மட்டுமில்லாம சர்ச், மசூதியும் இருக்கு. இதில்லாம அருங்காட்சியகம்ன்னு நிறைய பொழுது போக்கு, அறிவுசார் விசயங்களும் இருக்கு. கோட்டைக்குள், குதிரை வண்டி சவாரி, குதிரை சவாரியும் உண்டு.



 திருப்பதி தேவஸ்தானத்தின் ஒரு கிளை வேலூர்ல இருக்கு. திருப்பதி வெங்கியை மாதிரியே இங்க ஒருத்தர் அருள்புரிகிறார். அதே உயரம், அதே அமைப்புன்னு அப்படியே அவரை ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே இருக்கார். மாதத்தின் ரெண்டாவது சனிக்கிழமை திருப்பதி லட்டு இங்கு வரவைக்கப்பட்டு கொடுப்பாங்க. அதுக்கு முதல்லயே நாம புக் செஞ்சுக்கனும். திருப்பதியில் திருமணம், காது குத்து, ரூம் புக் பண்ணுறதுன்னு எல்லாத்துக்கும் இங்கயே பதிஞ்சுக்கலாம். ஆனா, ஒரு மாசம் முன்னாடியே வரனும். எல்லா சனிக்கிழமையும் சிறப்பு அர்ச்சனை, அலங்காரம் உண்டு. 

 அந்த கோவிலின் எதிர்க்க, மகாராணி ஐஸ்க்ரீம் கடைன்னு ஒன்னு இருக்கு. பொட்டிக்கடை சைசுக்குதான் இருக்கும். ஆனா, கூட்டம் அள்ளும். மாலை வேளையில் தினத்துக்கு ஒரு ஸ்பெஷல் ஐஸ்க்ரீம் கிடைக்கும். இதோட பிராஞ்ச் வேலூர் முழுக்கவும், வேலூர் சுத்துவட்டாரங்களிலும் கிடைக்கும். அருண் ஐஸ், ஜமாய் ஐஸ்க்ரீம்லாம் இதோட டேஸ்ட்க்கு முன்  ஜுஜுபிதான். 

அங்க பக்கத்துலயே ஊரீசு கல்லூரின்னு ஆண், பெண் இருபாலரும் படிக்கும் காலேஜ் இருக்கு. நிறைய பெரிய மனுசங்கலாம் இங்கதான் படிச்சிருக்காங்க. என் அப்பாக்கூட இங்கதான் படிச்சாராம்.  இதுக்கு பக்கத்துலதான் வேலூர் சி.எம்.சியின் கண் மருத்துவமனை இருக்கு.  அதில்லாம, நிறைய அரசு அலுவலகங்களும், கல்யாண், ஜாய் ஆலுக்காஸ் மாதிரியான நகைக்கடைங்க, டார்லிங்க்,, கண்ணா பெரிய்ய்ய்ய்ய்ய ஹோட்டல்களும் இருக்கு.



கோட்டைக்கு எதிரில் இருக்கும் சாரதி மாளிகை. இங்க புத்தகங்கள், துணிகள், நகைகள்ன்னு எல்லாமே கிடைக்கும். இதுக்கு பின்னாடி பெரிய மார்க்கெட் இருக்கு.


வேலூர்க்கு பெருமை சேர்க்கும் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை சி.எம்.சி ஹாஸ்பிட்டல். உலகின் அத்தனை மூலையிலிருந்தும் இங்க சிகிச்சைக்காக வர்றாங்க.  


 மெடிக்கல் சம்பந்தமா படிக்க சி.எம்.சின்னா இஞ்சினியரிங் சம்பந்தமா படிக்க வி.ஐ.டி யூனிவர்சிட்டி.. வெளிநாட்டு பிள்ளைங்கலாம் இங்க படிக்குது. இந்த காலேஜ்ல ஏரோநாட்டிகல் முதற்கொண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வரை படிக்கலாம். இதில்லாம கிங்க்ஸ்டன்னு பெரிய இஞ்சினயரிங் காலேஜ் இருக்கு. என்.டி.டி.எஃப், லா காலேஜ், முத்துராமலிங்கம் பெண்கள் கல்லூரின்னு ஏகப்பட்ட காலேஜ் இருக்கு. பக்கத்துலயே காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து ரயில் உண்டு. இதோ வருது,, இந்தா வந்திடுச்சுன்னு பத்து வருசமா கட்டுமான பணியில் இருக்கு விமான நிலையம். எப்ப வரும்ன்னு தெரியாது.


ராஜாஜி, ரா. வெங்கட்ராமன், வி.வி கிரி, அண்ணா, பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர்ன்னு தொடங்கி ராஜீவ்காந்தி கொலை வழக்கு புகழ் பேரரறிவாளன், நளினி, முருகன் வரை வந்து சென்ற தமிழ்நாட்டிம் இரண்டாவது மிகப்பெரிய சிறைச்சாலை இங்கதான் இருக்கு. 


வேலூர் மலைக்கோட்டை, சஞ்சீவிராயர் கோவில், ராமர் கோவில், செல்லியம்மன் கோவில்ன்னு எத்தனையோ வரலாற்று சிறப்புகள் இருந்தாலும், இப்ப புதுசா ஒரு சிறப்பு சேர்ந்திருக்கு. அது என்னன்னா, தங்கத்தகட்டால் வேய்ந்த கோவிலான பொற்கோவில். இக்கோவில் இருக்கும் ஊரின் பேர் ஸ்ரீபுரம். இந்த கோவில் நிர்வாகத்தால் ஸ்ரீநாராயணி மருத்துவமனையும், கல்லூரியும் உண்டு.   இக்கோவில் அறுகோணம் வடிவிலானது.  கோவில், மற்றும் கோவில் அமைந்திருக்கும் ஊரில் சேரும் கழிவுகள், மற்றும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து கோவிலுக்கு சார்ந்த நிலத்தில் விவசாயம் செய்யுறாங்க. 

வேலூர் பத்தி பதிவெழுதனும்ன்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் ஆசை. ஆனா, எத்தனை முறை போனாலும், படமெடுக்க முடிவதில்லை. அப்படியே படமெடுத்தாலும் பதிவேத்த முடியலை. இனி, பதிவு போட காலம் வாய்க்குமான்னு தெரில. இலவு காத்த கிளி மாதிரி ஆகிடக்கூடாதில்லையா?!  அதான் கூகுள்ல  படங்களை சுட்டு பதிவு போட்டுட்டேன். வேலூர் மீதான என் ஆசை மௌனமாவே என் மனசுக்குள்ளயே அடக்கமாகிடும்போல!


நன்றியுடன்,
ராஜி.

13 comments:

  1. படிச்சுக்கிட்டு வரும்போதே நினைத்தேன் ஜெயிலை காட்டலையேன்னு....... ஸூப்பர் படங்களும், தகவல்களும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வேலூர்ல அதும் ஒரு முக்கியமான இடம்ண்ணே. வேலூர் ஜெயில் இருக்கும் இடம் பேரு தொரப்பாடி. மரங்கள் அடர்ந்து மலைக்கு அருகில் இருக்கும். ரெஸ்ட்ரிக்ட் ஏரியாங்குறதால அமைதியாவும் இருக்கும்.

      Delete
  2. அழகான படங்கள். சிறு வயதில் இங்கே சென்றதுண்டு. நினைவு தெரிந்து அங்கே வந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த லீவுக்கு வரும்போது குடும்பத்தொடு வாங்க. பொற்கோவில் பார்க்கலாம். மாலை நேரத்தில் அத்தனை அழகு. கோவில் வெகு சுத்தம்

      Delete
  3. படங்களும் பகிர்வு அருமை அக்கா..

    ReplyDelete
  4. வேலூரை பார்த்திருக்கிறேன் படங்கள் பகிர்வு அருமை

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் மெரினா, மெட்ரோ, விமானம் தவிர சென்னையின் அனைத்து வசதிகளும் அமைந்த ஊர்

      Delete
  5. ம்ம்ம்... தாண்டிக்கொண்டு தாண்டிக்கொண்டு ஹோசூர் சென்றதுண்டு. கோட்டை, அகழி எல்லாம் பார்க்கவேண்டும் என்று தோன்றும். இன்னும் நேரம் வாய்க்கவில்லை. சமீபத்தில்தான் என் சகோதரர் அங்கு சென்று சுற்றிப்பார்த்து வந்தார். என் உறவினர் ஒருவர் வேலூரில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். என் அக்கா பேரன் அந்த VIT கல்லூரியில் படிக்கிறான். பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் வாங்க. கோட்டை, பொற்கோவில், மட்டுமில்லாம, ஏகப்பட்ட கோவில் இருக்க்கு. அதில்லாம மலைக்கோட்டை இருக்கு. எப்பேர்பட்ட நோயையும் தீர்க்கும் சி.எம்.சி மருத்துவமனை இருக்கு, சி,எம்.சி பிராஞ்ச்ல கண் மருத்துவமனை மற்றும் மனநல மருத்துவமனையும் இருக்கு.

      Delete
  6. படங்களுடன் பகிர்வுஅருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  7. வேலூர் சுற்றிவந்தேன். என்னை பிரமிக்கவைப்பது ஜலகண்டேஸ்வரர் கோயில். பல முறை சென்றுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா, மிகப்பெரிய கோவில் ஆனா கூட்டம் குறைச்சலா இருக்கும்.அங்க போனாலே மனசுக்கு இதமா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில்.

      Delete