பள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.
எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க. பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.
ரொம்ப மொக்கை போடாதே! என்னதான் செஞ்சு இருக்கே?!ன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வா!ன்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)
இன்னிக்கு செய்ய போறது ”சொய்யா உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கமும், சுய்யம்ன்னு மதுரை, நெல்லை, காரைக்குடி பக்கமும் சொல்லுற ஒரு பலகாரம். இதோட பெயர் காரணம் என்னன்னு நீண்ட நாள் ஆராய்ச்சி செஞ்சு கண்ட உண்மை என்னன்னா, இந்த உருண்டை கலவையை எண்ணெயில போடும்போது “சொய்ய்ய்ய்ய்ய்ய்”ன்னு சத்தம் வர்றதால இந்த பேர் வந்துச்சு. யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! பேச்சு பேச்சாதான் இருக்கனும். சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை!!
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கிலோ
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
மைதா - 200 கிராம்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
பச்சை பயறை வெறும் வாணலியில பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும்.
அப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)
குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.
திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.
திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.
வெந்த பச்சை பயறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க.
ஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,
உரல்ல இல்லாட்டி மிக்சில கரகரப்பா அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும்.
அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.
ஆப்ப சோடாவயும் போட்டுக்கோங்க.
பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.
கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.
ரெண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.
மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அத குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும். .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம் கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
நன்றியுடன்,
ராஜி.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
நன்றியுடன்,
ராஜி.
பார்க்க நல்லாத்தான் இருக்கு! :)
ReplyDeleteசாப்பிடவும் நல்லா இருக்கும்ண்ணே
Delete//கல்யாணம் ஆன புது பொண்ணு மாதிரி கையாளனும். //
ReplyDeleteஇது வேறயா!! ஆரோக்கிய சமையல்.
என்னதான் சொல்லுங்க... அந்தக் காலத்துல அஞ்சு பைசாவுக்கு ஒரு கமர்கட் வாங்கி வாய்ல அடக்கினா அன்னிக்கில்லாம் வாய்லயே இருக்கும்...
ஆமா, தேன் மிட்டாய், கமர்கட், எலந்தை வடைன்னு அதுலாம் அந்தக்காலம்
Deleteஎங்கள் ஊரில் சுழியன் என்று சொல்வார்கள். வெல்லப்பாகு உருக்கி பயிறைப்போட்டு கிளறி பூரணம் செய்வார்கள். படங்’கள் அருமை!
ReplyDeleteரைட்டோ!! சுகியன்னும் சொல்லுவோம். எங்க ஊர்ல இதேதான் கொஞ்சம் மாவுல பயற வறுத்து பொடி பண்ணி அரிசி மாவுல மஞ்சள் தூள் கலந்தும் முக்கி (மைதாவும் கொஞ்சம் கலந்துக்குவாங்க) செய்யறது.தேங்காய் உண்டு..முந்திரிக் கொத்து, அப்புறம் அதே தான் கருடனுக்குப் பிரசாதமா படைப்பாங்க அமிர்த கலசம்னு சொல்லுவாங்க..ஸேம் தான் வேக வைக்காம...பாதி வேக வைச்சு இடித்து... பெரிய உருண்டையா...ஸேம் இலங்கையில் பயிற்றம்பணியாரம்னு சொல்லுவாங்க..கொஞ்சம் வித்தியாசம்
ReplyDeleteகருப்பட்டியிலும் செய்வாங்க...தேங்காய்பால் கலந்து பாகு வைச்சு கலந்து அப்புறம் மைதாவுல முக்கியும் செய்வாங்க. நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு...
நாங்க சொல்ற சுகியன் தேங்காய் வெல்லம் ஏலம் செர்த்து இதே போல உருட்டி மைதாவுல முக்கி பொரிக்கறது...இல்லைனா உளுந்து மாவுல இப்படி நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு..
உங்க குறிப்புகள் படங்கள் நல்லாருக்கு ராஜி
கீதா
செய்து பார்க்கணும் இப்போதெல்லாம் எதையும்செய்து பார்க்க முடிவதில்லை வாழ்த்துகள் சுகியன் ஓக்கே
ReplyDeleteசுகியன் முயற்சிக்க வேண்டும் இந்த பருப்பில் நாங்கள் கடலை பருப்பில்தான் செய்வோம்
ReplyDeleteதஞ்சையில் சுழியம் என்று சொல்வார்கள்
ReplyDeleteஅருமை
தம +1
உண்டால் தானே இனிது தருவார் யாரே!
ReplyDeleteஎனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சது. சுழியன் ன்னு சொல்வோம் . பார்க்கவே நாவூருது//
ReplyDelete