Friday, November 02, 2018

ஸ்ரீ கபாலேஸ்வரர் மந்திர், நாசிக் - ஷீரடி பயணம்

முக்திதாம் கோவிலிலிருந்து கிளம்பி, போய்க்கிட்டிருக்கும்போது ரெண்டு சின்ன  கோவில் வழியில் தென்பட்டது. அது தத்தாத்ரேயர் கோவில் என எங்களோடு வந்த வழிகாட்டி சொன்னார். மேலும்,    சுற்றுலா பயணிகளின் தொந்திரவு ஏதுமில்லாத, அமைதியான அழகான் கோவில் அது. இதுக்குபேரு ஸ்ரீதத்தா மந்திர்ன்னு சொன்னாங்க. சரி, உள்ள போய் கடவுளை தரிசிக்கலாம்ன்னு நினைச்சா,  நமக்கு பஞ்சவடி போகணும். சீக்கிரம் போனாதான் வண்டி உள்ளே போகமுடியும்.  கூட்டம் அதிகமா இருக்கும் கோவில் அது. கோவில்களிலும் கூட்டம் வந்திட்டா நாம எல்லா இடத்துக்கும் போகமுடியாம ஆகிடும்ன்னு சொன்னதுனால அந்த கோவிலுக்கு போகமுடியாம போச்சு. சாமியை தரிசிக்க முடியாம போனதைவிட ஒருவாரத்துக்கு பதிவு போச்சேன்ற வருத்தம்தான் எனக்கு ஒருவழியா ஒரு நதிக்கரையோரமா வண்டி போய் நின்னுச்சு இந்த இடத்துக்கு பேரு பஞ்சவடியாம்.
இந்த பஞ்சவடி பற்றியும் நாம அடுத்த பதிவுல விரிவா பார்க்கலாம். இங்க நாம படத்துல பார்க்குறது கோதாவரி நதி. இந்த கோதாவரி ஆறு இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் இரண்டாவது இடத்திலிருக்கிறது. இதன் நீளம் 1645 கிமீ மகாராஷ்டிராவிலுள்ள திரியம்பகத்திற்கருகிலிருந்து உற்பத்தியாகிறது இங்கேதான் புகழ்பெற்ற திரியம்பகேஸ்வரர் கோவில் இருக்கு. 12 ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்று. இந்த கோதாவரி ஆற்றில்தான் கோதாவரி புஷ்கரம் கொண்டாடப்படுது. வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி இருக்கும் இந்த பஞ்சவடி. நாம பார்க்கிற இந்த இடத்திற்கு பேரு இராம குண்ட்ன்னு இந்தியில் சொல்லுறாங்க. நாம இராமர்குண்டம்ன்னு சொல்லிக்கலாம் இராமர் வனவாசம் செய்தபோது நீண்டகாலம் நாசிக் பகுதியில்தான் தங்கி இருந்ததாக ஐதீகம். முதலில் நாசிக்கை பஞ்சவடி எனதான் அழைத்தார்களாம்!! பின்னர் நாசிக் என  வழக்கத்திற்கு வந்தது என வழிகாட்டி அண்ணா சொன்னார்.
மேல படத்திலிருக்கும் இந்த இடத்தைத்தான் திரிவேணி சங்கமம்ன்னு சொல்றாங்க. தருணி ,வருணி மற்றும் கோதாவரி இந்த மூன்று நதிகளும் சங்கமாகும் இடம்தான் திரிவேணி சங்கமம். இங்கேதான் இராமகுண்டம் இருக்கிறது. இதைத்தாண்டித்தான் நாம் கபாலேஸ்வரர் கோவிலுக்கு செல்லவேண்டும். எங்க பார்த்தாலும் கூட்டம், நெரிசல்... வழியெங்கும் கடைகள் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கு. நம்முடைய உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி வழிகாட்டியவர் சொன்னார் இங்கே திருட்டு அதிகமாம். பிக்பாக்கட்லாம் சர்வ சாதாரணமாய் நடக்குமென பயம் காட்டினார். அதுலாம் கபாலேஸ்வரர் பார்த்துபார்ன்னு பயமில்லாம  வழியிலிருக்கும் கோவில் மற்றும் திரிவேணி சங்கமத்தை கண்டு ரசிச்சோம். 
போகும் வழியில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தர்நாராயன் கோவில் என போர்ட் வச்சிருக்காங்க.  பேருக்கேத்தமாதிரி  கோவில் சுந்தரமாகத்தான் இருக்கு.  இங்கே கோவில்கள் எங்குமே கருங்கற்களால் கட்டப்படுவதில்லை வெள்ளை மற்றும் கருப்பு மார்பிள் கற்களால் மட்டுமே கட்டப்பட்டு இருக்கு. இந்த கோவிலும் கருப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டு கலைநயத்துடன் பார்ப்பதற்கு அழகா இருக்கு. ஆனா உள்ளே போக முடியலை.  அவ்வளவு கூட்டம் இருந்தது. திரிவேணி சங்கமத்திற்கு செல்பவர்கள் இந்த கோவிலை தவறவிடாதீர்கள். அப்படியே பார்த்திட்டே கபாலேஸ்வரர் கோவிலுக்கருகே வந்திட்டோம் .
இதுதான் கபாலேஸ்வரர் கோவிலின் முகப்பு மிகப்பழமையான கோவில் இது தரைமட்டத்திலிருந்து உயரமா இருப்பதால் படியேறிதான் செல்லனும். இந்த கோவிலை பத்தி இங்க இரண்டுவிதமான கதைகள் சொல்லப்படுது. சிவன் தவறுதலாக ஒரு பசுவை கொன்றுவிட்டதாகவும், அந்த பாவத்தை இங்கிருக்கும்  இராம குண்டத்தில் நீராடி சாபவிமோசனம் பெற்றதாகவும் அதற்கு நந்தி பகவான் குருவாக இருந்து வழிகாட்டியதால் இங்கே நந்தி வாயில் காப்பானாக இல்லாமல் குருநந்தி என ஒரு கதை சொல்றாங்க ஐந்து தலைகளுடைய பிரம்மாவின் அகம்பாவத்தை ஒழிக்க சிவபெருமான் ஒரு தலையை கிள்ளி எறிந்தார்.  அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்திசெய்ய நந்தியம் பெருமான் வழங்கிய யோசனையின்படி பஞ்சவடியில் இராம்குண்டத்தில் மூழ்கி எழுந்து பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார் என்பதால் இங்கு நந்திதேவர்  குருவாக  எழுந்துதருளியுள்ளார் என இரண்டாவது கதையும் சொல்றாங்க. அதனால்தான் வழக்கமான சிவன் கோவில்களுக்கு முன்னே இருக்கும்  நந்தியம்பெருமான் இங்கே இல்லை. இங்க ஒவ்வொரு திங்கட்கிழமையும் விஷேச தினங்களாம்.  அன்றைய தினம் இங்க நல்ல கூட்டம் இருப்பதா சொல்லப்படுது .
இந்த திருக்கோவில் பேஷ்வாக்களால் புதுப்பிக்கப்பட்டதென இந்த ஆலயத்தினுள் ஒரு குறிப்பு உள்ளது. கோவிலினுள்ளே இருக்கும் ஆலமரத்தின் அடியில் மிகச்சிறிய கருங்கல்லால் ஆன ஒரு லிங்கம் இருக்கு. வழக்கமான லிங்கத்தை போலில்லாம வட்டவடிவமான ஒரு பாறாங்கல்லின் நடுவில் அமைந்துள்ளது. அங்கிருப்பவர்களிடம்  இதுபற்றி கேட்டபோது , இது சுயம்புவாக தோன்றியதென்றும், ஆதிகாலத்திலிருந்தே இந்த லிங்கம் இங்கதான் இருக்குது என சொன்னாங்க.   அந்த லிங்கத்தை .தொட்டு வணங்கி கோவிலை சுற்றிவந்து படியேறினோம் .
நம்மூர் கோவில்களைபோல போட்டோ எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும்,  .ஆனா இங்கிருப்பவர்கள் செலஃபி, போட்டோலாம் எடுத்துக்கொண்டுதான் இருந்தனர். எல்லா ஆலயங்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு சந்நிதிக்கும் படியேறிதான் போகனும். இது இராமகுண்டத்திற்கு நேர்ரெதிராகவே இருக்கு. இங்க இன்னொரு அதிசயம் என்னனா அகர்பத்தியிலிருந்து செல்லும் புகையானது சிவன் சிலையின் மூக்கு வழியாக செல்லும்.  அதை சிவன் மூச்சுக்காற்று பட்டு செல்கிறது என சொல்றாங்க.
இங்கிருக்கும் தீர்த்தத்தில் சிலர் நீராடுகின்ற்னர். சிலர் தலையில் தண்ணீர் மட்டும் தெளித்துக்கொள்கின்றனர். கால் நடக்கமுடியாதவங்க, வயசானவங்கலாம் குறைஞ்சது 50 ல இருந்து 60 படிவரைக்கும் ஏறி சொல்லவேண்டியது இருக்கும். ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடிலாம் சுந்தர்நாராயண் கோவிலிலிருந்து பார்த்தால் இங்க இருக்கும் இந்த கோவிலை  தரிசிக்கலாமாம்!! ஆனா இப்ப ஆக்கிரமிப்புகள் அதிகமாகி குடியிருப்புகள், லாட்ஜ்கள்,கடைகள் என கோவிலே தெரியாதளவு மாறிப்போச்சு என ஒரு ஈந்திக்காரர் சொல்லிக்கிட்டிருந்தார் .
இங்கே மூல சந்நிதிக்குள் விருப்பப்பட்டா நாமே பூஜைகளை செய்யலாம் சிலநாட்களில் கூட்டம் கூடுதலாக இருந்தால் செல்லமுடியாது. பிரதோஷ தினங்களிலும் சில விஷேசநாட்களிலும் பக்தர்கள் 108 முறை வலம் வருதலும், அடிபிரதட்சனம், அங்க பிரதட்சனம்னலாம் நடக்குமாம். இங்க காயத்ரிதேவி, விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தனி சந்நிதிகள் இருக்கு. மேலும் சிவராத்திரி அன்று மிகவும் விசேஷமாக இருக்குமாம் .
இந்த கோவில் தினமும் காலை 5 மணிக்கு நடைதிறந்து, பின்னர் 10 மணிக்கு விஷேச பூஜைகள் நடக்குமாம். பின்னர் மதியம் 12 மணிக்கு நடையடைத்து பின்னர், 4 மணிக்கு நடைதிறந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும் . நாசிக் பஞ்சவடி செல்பவர்கள் இந்த கோவிலையும் தரிசிக்க தவறாதீர்கள் .
ஒருவழியாக தரிசனத்தை முடித்து கும்பமேளா நடக்கும் கோதாவரி கரையை அடைந்தோம். இங்கிருந்துதான் முக்கியமா பஞ்சவடியை சுற்றியுள்ள இடங்களுக்கு தரிசனம் செய்யமுடியும். நாங்கள் சென்ற காரை ஓரங்கட்டிவிட்டு குழுவாக ஆட்டோவில் பயணம் செய்தோம். காரணம் நாம சுற்றிப்பார்க்கும் இடங்கள்லாம் குறுகலான சந்துகள் நிறைந்தது.மேலும் வேகவேகமா அடுத்தடுத்த கோவிலுக்கு செல்ல ஆட்டோவே சிறந்தது. சரி இந்த பஞ்சவடி என்றால் என்ன அர்த்தம்?! அங்கே என்ன என்ன கோவில்கள் இருக்கு. என்ன விஷேசம் என அடுத்த பயணம் பஞ்சவடியில் இருந்து பார்க்கலாம் .

இப்ப டாட்டா.. பை பை....
நன்றியுடன் 
ராஜி 

19 comments:

  1. ஒரு வாரம் போனால் என்ன ? அருமையான விளக்கமான பதிவு கிடைத்து விட்டதே...!

    ReplyDelete
    Replies
    1. இல்லைங்கண்ணே ..அடுத்து எங்களைப்போல் புதியதாக செல்பவர்களுக்கு இந்த தொடர் உதவியாக இருக்கவேண்டும். .அவ்வுளவு தொலைவுவரை பயணம் செய்வதே அங்கிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிடவும் ,தரிசிக்கவும்தான் ,இருந்தாலும் காலமும் ,கடவுள் அருளும் கூடிவந்தால் மீண்டும் ஒருமுறை சென்று விடுபட்ட இடங்களை பற்றியும் பதிவிடவேண்டும் என்பதே என்விருப்பம் .

      Delete
  2. ராஜி நல்ல இடங்கல். தத்தாத்ரேயர் கோயில் ரொம்ப அழகா இருக்குமே! அதுவும் நதிக்கரையிலலதான் போட்டிங்க் கூட உண்டு. இக்கரையிலிருந்து மறு கரை பார்த்தா அங்க மலை அடிவாரம்...செமையா இருக்கும்..கோயிலே படித்துறைலதான் இடம் பெயர் ந்ரசிம்ஹவாடி.

    பூனாவில் என் மைத்துனர் குடும்பம் இருக்கறதுனால அங்க போக வேண்டி வந்தப்ப போன இடங்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நீங்க சொல்ல சொல்ல அந்த கோவிலை பார்க்காமல் வந்துவிட்டோமே என்ற கவலை வந்துவிட்டது.நிச்சயமாக மீண்டும் செல்லவேண்டும்.அந்த இயற்கை அழகை கேமிராவுக்குள் கொண்டுசென்று எல்லோரும் படித்து பயன்பெறும் வகையில் பெரிய பதிவாக எழுதவேண்டும்.நேரமும் இறையருளும் கைகூடி வந்தால் ...

      Delete
  3. உங்க பழைய பதிவுகளையும் பார்க்கணும்...உங்க மகளுக்கு என்னாச்சு? ஸ்ரீராம் கேட்டிருந்தாரே அதான்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நேரமிருக்கும்போது இணைப்பை நானே கொடுக்கிறேன் கீதாக்கா.

      மகளுக்கு காய்ச்சல் சரியாகிட்டுது. ஆனா, டான்சில் பிரச்சனை இருக்குறதா சொல்லி இருக்காங்க. இனிதான் E.N.T டாக்டரை பார்க்கனும்

      Delete
  4. இரு அரிய கோயில்களைக் கண்டோம். காசிப்பயணத்தின்போது அப்பகுதியில் திரியம்பகேஸ்வரர் கோயில் பார்த்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. இரு கோவில்கள் இல்லீங்கப்பா ,நிறைய அற்புதமான கோவில்கள் இருக்கு .அதில் திரயம்பேகேஸ்வரர் கோவிலும் ஒன்று .சிற்பங்கள் எல்லாம் அவ்வுளவு அழகு .அதுபற்றிய பதிவும் தொடராக வெளிவரும்.தொடர்ந்து பதிவுகளை படித்து வாங்க..நன்றிப்பா

      Delete
  5. //கடவுள் அருளும் கூடிவந்தால் மீண்டும் ஒருமுறை சென்று விடுபட்ட இடங்களை பற்றியும் பதிவிடவேண்டும்//

    இதற்காகவாவது மீண்டும் சென்று வருவீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஈ லோகத்தில் என்னை புரிஞ்சுக்கிட்ட ஒரு ஆள் உண்டெங்கெனில், அந்த ஆளு நீங்க ஒருத்தர்தான்ண்ணே.

      என்னை புரிந்து கொண்டதுக்கும், கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்கண்ணே

      Delete
  6. படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து நம்ம பதிவை பார்த்தீங்கன்னா அடுத்தமுறை இங்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்லும் போது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.நம்மூர் கோவில்களை சுற்றி சுற்றி வந்தாகிவிட்டது .இப்ப வட இந்திய பக்கம் வரை பதிவுகள் போயாச்சு ,இனி உலக அளவில் இருக்கும் கோவிகளுக்கும் செல்லவேண்டும் என்று ,எனக்காக பிரார்த்தித்து கொள்ளுங்கள்.நன்றி சகோ.

      Delete
  7. ஆட்டோ காரங்க ஆடாவடி பத்தி சொல்லுங்க அக்கா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.இரண்டு மூன்று இடங்களை காட்டிவிட்டு பயணம் முடிந்தது என்று சொல்லி விடுவார்களாம்.கட்டணமும் கூடுதலாக வசூலிப்பார்களாம்.ஆனால எங்களை கூட்டி சென்ற 4 ஆட்டோக்களை ஓரு சிறிய வயது ஆட்டோதம்பி வழிநடத்தினார்.பொருமையாக ஒவ்வொரு இடத்தையும் விளக்கி சொன்னார்.அவரை பார்த்து மற்றவர்களும் பேசாமல் இருந்துவிட்டார்கள் .ஆனால் எவ்வுளவு வேகமாக முடிக்கிறார்களோ,அதே வேகத்தில் நம்மைப்போல் வெளியூரில் இருந்து சுற்றுலா வரும் அவர்களை நோக்கி ஓடி போய்விடுகிறார்கள் .அவர்களின் வேகம்தான் அவர்களின் அன்றைய வருமானத்தை நிர்ணயம் செய்கிறது .நாங்கள் ,பேசிய தொகைக்கு மேலே கூடுதலாக தருகிறோம் எங்களுக்கு பொறுமையாக சொல்லி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டோம் .ஆனால் அவர் நிறைய விளக்கம் கொடுத்தார் .எல்லாமே மராட்டி .ஹிந்தியில் இருந்தது .ஆனால் புரிந்துகொள்ளும் அளவு மூளை வேலை செய்தது .ஏன்னா நாம தான் அழகான அறிவான எங்கப்பாவுக்கு ஒரே பொண்ணாச்சே ...ஏதோ திட்டுற மைண்ட் வாய்ஸ் இங்கே வரை கேட்கிறது.உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தம்பி.

      Delete
  8. படங்களும் பகிர்வும் அருமை
    தொடருங்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள்.

      Delete
  9. பயணம், பணிச்சுமை காரணங்களால் இணையம் பக்கம் வர இயலவில்லை. விடுபட்ட பதிவுகளையும் படிக்க வேண்டும்.

    பயணம் நல்லது - ஆதலினால் பயணம் செய்வோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணே,ரொம்பநாள் கழிச்சு வந்திருக்கிறீங்க.நீங்க பயணம் நல்லதுனால சொன்னதுனால பயணமா போயிட்டு இருக்கிறேன் .பதிவா எழுதிக்கிட்டு இருக்கிறேன் .

      Delete
    2. நீங்களும் கட்டாயம் இந்த இடத்திற்கெல்லாம் சென்றிருப்பீங்க ..உங்க கருத்துக்களையும் ,நிறை குறைகளையும் சொல்லுங்க .அண்ணி நலமா கேட்டதா சொல்லுங்க,நன்றி அண்ணா.

      Delete