Monday, July 01, 2019

பால் கவரை வெட்டுறதுக்குமுன் இதை படிங்க! - ஐஞ்சுவை அவியல்

மாமா இன்னிக்கு என்ன நாள்ன்னு தெரியுமா?!
ம்ஹூம் தெரியலியே!
Image result for பிதான் சந்திர ராய்
இன்னிக்கு மருத்துவர்கள் தினமாம். மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2வது முதல்வராய் இருந்த மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தைத்தான் மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுது. பீகார் மாநிலம், பான்கிபூரில் 1882 ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி பிதான் சந்திர ராய் பிறந்தார். இவரது தந்தை சப் கலெக்டராக பணியாற்றியவர். பள்ளிப்படிப்பை பாட்னாவிலும், கல்லூரி படிப்பை கல்கத்தா பிரசிடென்சி காலேஜிலும், பாட்னா கல்லூரியிலும் முடித்தார். பெங்கால் பொறியியல் கல்லூரியிலும், கொல்கத்தா மருத்துவ கல்லூரியிலும் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தார். இரண்டிலும் பிதான் சந்திர ராய்க்கு இடம் கிடைத்தது. ராய் மருத்துவ படிப்பினை தேர்ந்தெடுத்தார். மருத்துவ மேற்படிக்காக அயல்நாட்டுக்கு சென்றார். அங்கு, ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை தொடர்ந்தது ஒரு சாதனை என்றால், இரு படிப்பையும் இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது இன்னொரு சாதனையாகும்.
Image result for பிதான் சந்திர ராய்
கொல்கொத்தா மருத்துவ கல்லூரியிலும், வேறு சில மருத்துவகல்லூரியிலும் பேராசிரியராய் பணியாற்றினார். 1928ல் இந்திய மருத்துவ நிறுவனத்தின் நிர்வாகியாய் இருந்தார். 1931ல் கொல்கத்தா மேயராய் பதவி வகித்தார். 1948ல் காங்கிரஸ் மீதான ஈடுபாட்டினால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைக்காக பாடுபட்டார். காந்திஜி, நேரு உட்பட பலருடன் சேர்ந்து பணியாற்றினார். ’பிதான் தா’(பிதான் அண்ணா) என சக காங்கிரஸ்காரர்களால் அழைக்கப்பட்டார். உடலும், மனமும் ஆரோக்கியமாய் இருந்தால்தான் கடுமையாய் பாடுபடமுடியும் என விடுதலை வேட்கையோடு ஆரோக்கியத்தையும் சேர்த்தே மக்கள் மனதில் விதைத்தார்.
வறுமையில் தவித்த மக்களின் நல்வாழ்க்கைக்காக, ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு மருத்துவமனை, இந்திய மனநல சுகாதார மையம், விக்டோரியா இன்ஸ்டிடியூஷன், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை உருவாக்கினார். சுதந்திரத்திற்கு பின்னர், வங்காளத்தின் முதல்வராய் சந்திர பிதான் ராய்தான் பதவி ஏற்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் விரும்பினர். ஆனால், தனது மருத்துவ சேவைக்கு பதவி தடையாய் இருக்குமென மறுத்துவிட்டார். ஓராண்டுக்கு பின்னர் காந்திஜியின் ஆலோசனைப்படி வங்காளத்தின் முதல்வராய் பதவியேற்றார். வேலையின்மை, பஞ்சம், பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளின் தொல்லை என பலவற்றை சமாளித்து வங்காளத்தை இவரது தலைச்சிறந்த நிர்வாக திறமையால் மீட்டெடுத்தார். 1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு  தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் முதலமைச்சராக தொடர்ந்து இப்பதவியில் இருந்தார். இவர் பதவியில் இருந்தபோது வங்காளம் அபார வளர்ச்சி கண்டது,. அதனால், வங்காளத்தின் சிற்பி எனவும் போற்றப்பட்டார்.  முதல்வராக இருந்தபோதும், தான் நேசித்த மருத்துவதுறையினை விடாமல், ஏழை மக்களுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்தார். தனது வீட்டையும் தனது இறப்புக்கு பின்னர் மருத்துவமனையாக மாற்றப்படவேண்டுமென உயில் எழுதி வைத்தார். இவரது சேவையினை பாராட்டி 1961ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1982ல் தபால் தலையினையும் இந்திய அரசு வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தது. மருத்துவம், நிர்வாகம், அரசியல் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பிதான் சந்திர ராய் தன்னோட 80வது வயதில் தன் பிறந்த நாளன்றே இயற்கை எய்தினார். அவரது சேவையினை மதிக்கும் விதமா அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு பி.சி.ராய் விருது அளிக்கப்படுவதோடு ஒவ்வொரு ஜூலை 1னை இந்திய மருத்துவர்கள் தினமாய் கொண்டாடப்படுது.
இதுவரை தெரியாத தகவலை தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி புள்ள! அதேமாதிரி உனக்கு தெரியாத தகவலை நான் சொல்றேன். அதை நீ தெரிஞ்சுக்கிட்டு அதன்படி நடந்துக்க.
நம்ம வீட்டில்தான் ஸ்டோர்ல போய் பால் வாங்கி வர்றோம். ஆனா, டவுனில் பெரும்பாலும் எல்லார் வீட்டுலயும் பாக்கெட் பால்தான். பால் பாக்கெட்டை வாங்கி வந்து ப்ரிட்ஜில் வச்சுக்கிட்டு தேவைப்படும்போது, பாலிதீன் பாக்கெட்டின் மூலையில் கட் பண்ணி பாத்திரத்தில் ஊத்தறோம். இங்கதான் ஒரு விசயத்தை கவனிக்கனும். 200ml அல்லது அரை லிட்டரோ அல்லது ஒரு லிட்டர் பாலோ எல்லாரும் இப்படிதான் செய்வோம். பால் ஊத்தி கொஞ்சமா தண்ணி ஊத்தி அலசி பாத்திரத்தில் ஊத்திட்டு பால் கவரை சேர்த்து வச்சு பேப்பர் காரர்கிட்ட கொடுத்து காசாக்கிடுவோம். இதுல காசு வந்துச்சுன்ற பெருமையோடு கவரை குப்பைல போடலைன்னு இன்னொரு சமாதானமும் பண்ணிக்குவோம். பால் கவரை யோசிச்ச நாம, பால் பாக்கெட் மூலையில் வெட்டி வீசிய சின்ன துண்டினை என்னிக்காவது யோசிச்சிருப்போமா?!
யோசிச்சதில்லையே மாமா!
யோசிக்க மாட்டோம். ஏன்னா நம்ம டிசைன் அப்படி. வெட்டி வீசப்பட்ட அந்த சின்ன பாலிதீன் துண்டு என்னாகும் தெரியுமா?! கண்ணுக்குத்தெரியாத பல லட்சம் பாலிதீன் துண்டுகள், மண்ணிலும், நீர் நிலைகளுக்கும் போய் சேருது. சென்னையில் ஒரு நாளில் சுமார் 25 லட்சம் லிட்டர் பால் பாக்கெட் செலவாகுது. 200ml, அரை லிட்டர், ஒரு லிட்டர் பாக்கெட்டுனு கணக்கு பண்ணா சுமார் 40 லட்சம் வெட்டப்படுது. இதில் குறைஞ்சது 25 லட்சம் துண்டாவது மண்ணில் வீசப்படும். இது வெறும் பால் பாக்கெட் கணக்கு மட்டும்தான். தயிர், மோர், தண்ணி பாக்கெட், எண்ணெய், ஷாம்பு, மசாலா பாக்கெட்ன்னு நீளும்.. அப்படி கணக்கு பார்த்தால் எத்தனை லட்சம் சின்ன துண்டுகள் தினமும் மண்ணுக்குள் போகுதுன்னு பார்த்தால் தலையே சுத்தும்.

இப்படி வீசப்படும் சின்ன துண்டு கழிவுநீர் காவாயில் அடைச்சுக்கும், கடல், ஏரி, குளம் குட்டைல இருக்கும் உயிரினத்துக்கு பேராபத்தா முடியும். அதனால் இனிமே, எண்ணெய், ஷாம்பு, பால், தயிர்ன்னு எந்த பாக்கெட்டை வெட்டினாலும் மேல படத்தில் காட்டி இருக்குற மாதிரி வெட்டனும். இதை நினைவில் வச்சுக்க.

நினைவில் வச்சுக்கிறேன் மாமா. நீயும் இன்னும் ஒன்னை நினைவில் வச்சுக்க. கடவுளினால் ஆகாதது ஒன்னும் இல்ல. எல்லாம் அவன் காப்பாத்துவான்னு சொல்லிக்கிட்டு திரியிறியே! இந்த பிள்ளையை ஏன் கடவுள் காப்பாத்தலை!? கேட்டால் கர்மான்னு ஒற்றை வார்த்தையில் முடிச்சுடுவீங்க. கடவுளுக்கு பிடிச்ச மாதிரி அவரை கும்பிட்டுக்கிட்டே இருந்தால் மார்க்கண்டேயன், சத்யவான் மாதிரி அவர்களது கர்மா மாத்தி அமைக்கப்படும். கும்பிடலைன்னா இப்படி வேதனைப்படனுமா?!


பிட்டுக்கு மண் சுமந்தபோது  மனித உருவில் வந்த இறைவனின்மீது விழுந்த பிரம்படி  அனைத்து உயிரினத்தின்மீதும் பட்டதாம். அதுமாதிரி இந்த சிறுவனின் வலி இறைவனுக்கு உணர்ந்திருக்கனுமே! கோவில் அன்னதானத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தின் சிறுவன் சரிக்கு சமமா உக்காந்தன்னு சொல்லி அடுப்பிலிருந்த தோசைக்கல்மீது உக்கார வச்சிருக்கு, இதை பார்த்திட்டிருந்த உன் சாமியை என்ன சொல்ல?!

இந்தா புள்ள! இதுக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னா.....

நீ வாய மூடிக்கிட்டு இரு போதும்.  எல்லாமே மாயை. அதில் ஆன்மீகம் மட்டும் விதிவிலக்கில்லை. இந்த விளம்பரங்கள் மாதிரி பில்டப் கொடுத்த விசயம்தான் கடவுளும்.... இதை சொன்னா என்மேல் கோவம் வரும். எனக்கு ஏகப்பட்ட வேலை கெடக்கு.. நான் போறேன்.. 
இந்த விளம்பரங்களை பார்த்துட்டு நீங்களும் கிளம்புங்க!

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. பால் கவர் விஷயங்கள் வாட்ஸாப்பில் வளம் வந்தபோதே பார்த்தேன். தோசைக்கல்லில் உட்காரவைக்கப்பட்ட கொடுமை மிகக்கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. நான் ட்விட்டர்ல சுட்டேன். அதில்லாம ஒரு புத்தகத்திலும் இந்த டிப்ஸ் இருக்கு.. அந்த சிறுவனின் கதி பாவம்தான்

      Delete
  2. தோசைக்கல்லில் உட்காரவைக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை

    ReplyDelete
    Replies
    1. பார்த்ததும் மனசு பதரி போச்சுண்ணே.

      Delete
  3. நல்ல பகிர்வு.
    தோசைக்கல்லில் உட்காரவைக்கப் பட்டது கொடுமை... வேதனை.
    பால் பாக்கெட் விவரம் முகநூலில் வாசித்திருக்கிறேன்.
    அருமை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. பால் பாக்கெட்டினை நான் ட்விட்டரில் சுட்டேன்..

      வடநாடு கற்காலத்துக்கு போய்க்கிட்டிருக்கோன்னு சந்தேகமா இருக்கு..

      Delete
  4. //கோவில் அன்னதானத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தின் சிறுவன் சரிக்கு சமமா உக்காந்தன்னு சொல்லி// - அடப்பாவிகளா.... கோவிலுக்குப் போயும் புத்தி வரலையே இவங்களுக்கு. பசி என்று வருபவனுக்கு உணவு இடணும் என்ற சாதாரண புத்தி இல்லையே இவங்களுக்கு. வயிறு எல்லாருக்கும் ஒன்றுதானே. ரொம்பவும் மனதைப் பாதித்த புகைப்படம்.

    இப்படிச் செய்தவனுக்கு எந்த மாதிரி மோசமான வாழ்க்கை அமையப்போகுதோ..

    ReplyDelete