சிறு வயதில் அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கையின் சிறு நினைவு மீட்டலே இந்த தொகுப்பு....
பாடங்கள் போரடிக்கும்போது , வெட்டியாய் இருக்கும்போதும் பேப்பருக்கு அடியில் சில்லறைக்காசை வச்சு, பென்சிலால் தேய்ச்சா, மேல் பேப்பரில் சில்லறைக்காசின் அச்சு விழும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDxqxdri4t6Lp_zvAI_Ups8INOM7MTe8gACaCcs1ia8qlDMnI-izQn2tYcqaH8krcts2cLMDf7rAOTdzIjquRi7Iwnhrndflle8HzYd2WTNAqqeDcZHxS6ZDF-5k95w_Sli2iwNDSqjPyz/w640-h588/318fa64922ce829fa6779bdba7197724.jpg)
பென்சில், ரப்பர், பேனாக்களை அட்டைப்பெட்டியில் வாங்கி வீட்டில் வச்சு பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பும் காலமிது. கேட்டதும் கிடைக்குறதால் பொருளோட அருமை தெரியாமல் தொலைச்சுட்டு வருவது, பாதி பென்சிலை தூக்கிப்போடுறதும் நடக்குது. ஆனா, தேய்ஞ்சுப்போன சிறு பென்சிலை வீட்டில் காட்டினாலும் புதுசு வாங்கி தரமாட்டாங்க. கெஞ்சி கூத்தாடனும்...
உக்காந்தபடியே நோகாம விளையாடும் விளையாட்டு. ஒரு எழுத்தினை சொல்ல, அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் மனிதன், பூ, நாடு/ஊர், பழம், மிருகத்தின் பெயரை எழுதனும்... நாடு/ஊரு, விலங்கோட பேரு ஒரு கட்டத்தில் கிடைக்கவே கிடைக்காது. அதுலதான் மார்க் குறைஞ்சு போகும்.
டிசம்பர் பூ மாதிரி பூக்கும் காட்டுப்பூவின் விதை இது. இதை தண்ணியில் போட்டால் வெடிக்கும். கிளாசில் இருக்கும்போது வாய்க்குள் போட்டு வெடிக்கவிடுவோம். எச்சிலில் நனைச்சு தேமேன்னு உக்காந்திருக்கும் பக்கத்துல இருக்கும் ஆள்மேல் வச்சு வெடிக்கும்போது அவங்க திடுக்கிடுறதை ரசிப்போம். சில சமயத்துல ஃப்ரெண்ட் மேல வச்சு வெடிக்காம போகும். மீண்டும் எச்சிலில் நனைக்க வாயில் வைக்கும்போது வாயிலேயே வெடிச்சு நம்மை திடுக்கிட வைக்கும்.
நாம் சிறுவயதில் பயன்படுத்திய பல பொருட்கள் இன்று மாற்றமடைஞ்சு வேற மாதிரி ஆகிட்டுது. ஆனா, சேஃப்டி பின் எனப்படும் ஊக்கு மட்டும் அதே வடிவத்தில் இருக்கு. ஆனா, அதே சேஃப்டி பின்னின் தலைப்பாகத்தில் குரங்கு, பூனை, பூன்னு வடிவம் இருக்கும். அதை வாங்கி தாவணி, சுடிதார்ன்னு அணிஞ்சு ஸ்டைல் காட்டி இருக்கோம்..
கொரோனா சைசிலிருக்கும் இந்த காயை உடைச்சு, உருட்டி, பொரட்டி சின்ன வயசில் விளையாடி இருக்கோம். அந்த காய்தான் நம்மை பழிவாங்க கொரோனா உருவெடுத்து வந்திருக்குப்போல!!
இந்த வார நினைவுமீட்டல் எப்படி இருக்கு?!
நன்றியுடன்
ராஜி...
கொரோனா வடிவிலான காய் ஆச்சரியப்படுத்துகிறது சகோதரி
ReplyDeleteநினைவுமீட்டல் முடிவில் மிரட்டினால் எப்படி...?
ReplyDeleteரசனை. காணொளியில் வரும் பாடல் என்ன பாடல்?
ReplyDeleteஅந்தக் கொரோனா போன்ற காய்
ReplyDeleteஇந்தக் கொரோனா நோயைத் தந்ததோ?
கொரானோ போன்ற காய் மட்டும் விளையாடியதில்லை அது என்ன காய் எனத் தெரியவில்லை. ஆமணக்கம் காய், முள்முருக்கம் பூ காய் விளையாடி இருக்கிறோம்.
ReplyDeleteகொரோனா காய் பார்த்த ஞாபகம் வருகிறது சகோ
ReplyDelete