Saturday, June 20, 2020

லெமனே இங்கு சிவனாய்.. -சுட்ட படம்

பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து இன்னிக்கு விடுதலை.. இணையத்தில் பார்த்து ரசித்தவற்றின் தொகுப்பு இது.. முன்னாடியே பார்த்திருந்தால் மன்னிச்சு...



கொரோனா  தாக்கும்ன்னு  முன் எச்சரிக்கையுடன் இருக்கோம்ன்னு  எம்புட்டு அழகா ஃபேஸ் ஷீட் போட்டிருக்குது பாருங்க...
மானத்தை வாங்குறதுக்குன்னேஊருக்குள் ரெண்டு, மூணு பேரு இருப்பாங்க போல!!
சட்டையில் தேசியக்கொடி குத்திக்குறதும், வண்டியில் தேசியக்கொடியை வரைஞ்சுக்குறதும், ஃபேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ் அப்புல பொங்குறதும் தேச பக்தி கிடையாது. உண்மையான தேச பக்தி இதுதான்..
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! சித்தத்தில் இருக்கும் சிவன் லெமனில் இருக்க மாட்டாரா?! லெமனே இங்கு  சிவனாய்...

முன்னலாம் வீடுகளில் கண்டிப்பா இரண்டு வாசல் இருக்கும்.. நீள, அகலம்ன்னு வீடு விசாலமா இருக்கும். மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைச்சலா இருக்கும். ஆனா, இப்ப சோபா, கட்டில், டைனிங்க் டேபிள், டிவி ஸ்டாண்ட், பிரிட்ஜ், ஏசி, டிவி...ன்னு வீடு முழுக்க பொருட்களா அடைச்சு வச்சிருக்கோம். அதுமட்டுமில்லாம ஒரே ஒருவாசல்தான். 20 வருசத்துக்குமுன் ஒருவேளை வீட்டில் தீப்பிடிச்சால்  வீட்டில் இருக்குறவங்க தப்பிக்க எவ்வளவு நேரமாகும்ன்றதும், இப்ப தீப்பிடிச்சால் எவ்வளவு நேரத்தில் தப்பிக்கலாம்ன்னு அழகா இந்த வீடியோ சொல்லுது. எத்தனை ஆபத்தான வாழ்க்கையை நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்ன்னு இனியாவது உணர்வோமா?!

கொரோனா சேலை முதற்கொண்டு கொரோனா ஹேர் கட்டிங்க், கொரோனா தோசை, கொரோனா போண்டா, கொரோனா தோடுன்னு கொரோனா மட்டுமில்ல, கொரோனா வராமல் தடுக்க நாம பயன்படுத்தும்  மாஸ்க்கூட என்ன பாடுபடுதுன்னு பாருங்க...
பயலுகளைவிட பெண் குழந்தைகள் பாசமானவை. இந்த பாப்பாவின் நடையும், அதன் குழைவும், முடிவில் தரும் முத்தமும்  ரசிக்க வைக்குது...

சுட்ட படத்தை ரசிச்சீங்களா?!
நன்றியுடன்,
ராஜி

3 comments:

  1. உண்மையான தேச பக்தி - மிகவும் வருத்தப்படுகிறேன்...

    ReplyDelete
  2. காணொளிகளும் படங்களும் நன்று.

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன். லெமன் லிங்கம் நல்லாவே இருக்கு.

    ReplyDelete