Sunday, June 21, 2020

குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல இந்த பாட்டு - பாட்டு புத்தகம்

கோதுமை ஊற வைத்து ஆட்டி,  பால் எடுத்து, புளிக்க வைத்து, வாணலியில் நெய் சேர்த்து அதில் நீர்த்த கோதுமை பாலை சேர்த்து கிளறி, சர்க்கரை சேர்த்து கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, சுருண்டு வரும்போது இறக்காம விட்டால் அடிப்பிடிச்சு மொத்த உழைப்பும் வீண்,

 அதுமாதிரிதான், கிராமத்து அத்தியாயத்தில் வரும் ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது.... பாட்டும். அட்டகாசமான இசை, மண் மணக்கும் வரிகள்,  திறமையான பாடகர்கள்ன்னு பார்த்து, பார்த்து தயாரிச்சவங்க, நடிகர், நடிகையை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டுட்டாங்க. 
துள்ளலான இசையில் எஸ். ஜானகியின் கிறங்கடிக்கும் குரலுக்கு ஏற்ற மாதிரி அஅஆஆஆஆஆத்துமேட்டுலன்னு குழைவா பாட ஆரம்பிப்பாரு மலேசியா வாசுதேவன்... பாட ஆரம்பிக்கும் இந்த பாட்டை முகத்தில் எந்தவித எக்ஸ்பிரஷனும் காட்டாத நடிகர், நடிகையை வச்சு படமாக்கி வீணாக்கிட்டாங்க..  மோகன் அல்லது ஆரம்பகாலத்து விஜயகாந்தை வச்சு படமாக்கி இருந்தால் பாட்டு ஹிட் அடிச்சிருக்கும். 
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது...
ஆத்துமேட்டுல 
ஒரு பாட்டு கேக்குது...
ஆடும் கீத்துல காத்துல 
தாளம் போட்டு..
ஆத்துமேட்டுல
ஒரு பாட்டு கேக்குது...

காட்டுல கட்டில் ஒன்னு போடவா?!
கையில் கட்டிக்கொண்டு ஆடவா?!
ஹே ஹே என்ன ஆச?!
ஏக்கம் வந்து பேச..
கண்ணுக்குள்ள மோகம்  தோணுது..
கன்னிப்பொண்ணை காணும்போது..

அஆஆஆத்துமேட்டுல..
ஒரு பாடு கேக்குது...

கேக்கடவா?!
ஒன்னே ஒன்னு கேக்கவா?!
சேக்கவா?!
கையில் உன்ன சேக்கவா?!
ம்ஹூம் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்,,,

சொல்ல சொல்ல வேகம் ஏறுது..
தூக்கிக்கிட்டு போகப்போறேன்..

அஆஆஆத்துமேட்டுல  
ஒரு பாட்டு கேக்குது..
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது..

படம் கிராமத்து அத்தியாயம்
இசை:இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
எழுதியவ: கண்ணதாசன்

இந்த பாடல் பிடிச்ச அளவுக்கு படமாக்கியவிதம் எத்தனை பேருக்கு பிடிச்சிருக்கு?!
நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. பாட்டு நல்லா இருக்கு. நான் இதுவரை கேட்டதில்லை. இனி கேட்டுப்பார்க்கிறேன் மேடம்.

    ReplyDelete
  2. செல பாட்டு. இதே படத்திலான SPB யின் பாட்டும் பிடிக்கும். ஜயச்சந்திரன் பாட்டும் பிடிக்கும்.

    ReplyDelete
  3. தாளம் போட வைத்து, கேட்கும் அருமையான பாடல்...

    ReplyDelete
  4. இனிமையான பாடல். மீண்டும் கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
  5. மிகவும் பிடித்த பாடல் ராஜி. பட விவரம் எதுவும் தெரியாது. ஆனால் பாட்டு கேட்டிருக்கிறேன் நிறைய

    கீதா

    ReplyDelete