Showing posts with label இந்திரன். Show all posts
Showing posts with label இந்திரன். Show all posts

Wednesday, April 24, 2019

பாவப்பட்ட அகலிகை - வெளிச்சத்தின் பின்னே!

இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் அர்த்தம் உண்டு. அது நல்லவர்களோ தீயவர்களோ, புல்லோ பூண்டோ, புழுவோ பூச்சியோ ஆக எதுவாய் இருந்தால் அந்த உயிர் படைக்கப்பட்டதற்கும் , அதன் வாழ்வியல் சம்பந்தத்திற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.  அசுரர்கள் படைப்பு, மனிதன் எப்படி வாழக்கூடாதென மக்களுக்கு உணர்த்த மகான்களின் படைப்பு மனிதன் எப்படி வாழவேண்டுமென்பதை உணர்த்த, பசு, காளை, குதிரைகள் அடுத்தவருக்கு உதவ, உழைப்பின் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது. நாய் நன்றியின் அடையாளம், நரி தந்திரத்தின் அடையாளம், காக்கை பகிர்ந்துன்பதின் அடையாளம்...  அதேப்போல் புராண மாந்தர்களின் படைப்பிலும் ஒவ்வொரு அர்த்தமுண்டு.   ஆனால், அகலிகையின் படைப்பிற்கு என்ன அர்த்தம்ன்னுதான் எனக்கு விளங்கவில்லை. 


கற்புக்கரசி யார்ன்னு கேட்டால் சீதா, கண்ணகி, நளாயினி, அகலிகை, அனுசுயான்னு சட்டுன்னு சொல்லிடுவாங்க.  கற்புக்கரசின்ற வார்த்தையை தவிர அகலிகை அனுபவித்தது ஏதுமில்லை. இறைவன் படைப்பினிலே பாவப்பட்ட ஜென்மம்ன்னா அது அகலிகைதான். சுவாரசியமும் சர்ச்சைக்குரிய பாத்திரமும்ன்றதாலயே அவள் பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது... அகலிகை பத்தி சொல்லும்போதெல்லாம் ராமன் கால் பட்டதால் பெண்ணானவள்ன்னு சொல்லி ராமனின் பெருமையை சொல்ல அகலிகை பயன்பட்டாளே தவிர அவளை மனுஷியாகக்கூட மதிக்க மறந்துவிட்டோம்.  அகலிகையின் கதை பல கேள்விகளை நமக்கு முன் எடுத்து வைக்கின்றது. அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.
Ahalya, the wife of the seer Gautama, seated on a plinth with a back, on a terrace with a building behind her. A covered doorway is also shown. She wears lavish textiles and jewellery and holds a flower in her right hand. In front of the plinth is a vase with flowers in. Company School, 18th century, Patna.

அமுதம் வேண்டி பாற்கடலை கடையும்போது அமுதம் வெளிப்பட்டது. அதை பங்கிட மோகினி ரூபத்தில் விஷ்ணு பகவான் தோன்றினார். அவளது அழகில் அனைவரும் மயங்கினர். அந்த அழகினை கண்ட பிரம்மனுக்கு, இந்த அழகு அனைத்தும் அசுர வதம் முடிந்ததும் மறைந்துவிடும். அதனால் அழிவில்லாத அழகை உலகுக்கு கொடுக்க வேண்டுமென எண்ணம் உண்டானது. அதனால் மிக அழகான பெண்ணொருத்தியை படைத்து அவளுக்கு அஹல்யா என பெயரிட்டார். அழகு தமிழில் அவளது பெயர் அகல்யா, அகலிகைன்னு பெயர் உண்டானது. அகல்யான்ற வார்த்தைக்கு அழகின்மை இல்லாதவள்ன்னு அர்த்தம். அதாவது சிறு குறைக்கூட அவளது அழகில் சொல்லமுடியாது என்பதே இதன் பொருள்.  அமுதத்தோடு அகலிகை தோன்றியவள்ன்னும் ஒரு  கதை உண்டு. 

மிக அழகாய் இருந்த அந்த அகலிகையை பாதுகாக்க வேண்டி, முற்றும் துறந்த முனிவரான கௌதமரிடம் கொடுத்து வளர்க்க சொன்னார். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான்  அழகுடன், சிறந்த குணவதியாய் அகலிகை வளர்ந்து வந்தாள். திருமணப்பருவம் வந்ததும் அவளை திரும்ப பிரம்மனிடமே ஒப்படைத்தார் கௌதமர். பிரம்மலோகத்த்திலிருந்த  அவளது அழகு ஈரேழு உலகுக்கும் பரவியது, அவள்மீது தேவர்கள் , உட்பட இந்திரன் அவளை மணக்க விரும்பினர்.  ஒப்பற்ற அழகியும், குணவதியான பெண்ணை மணப்பவன் லேசுப்பட்டவனாய் இருக்கக்கூடாதுன்னு எண்ணிய பிரம்மன்,  உங்களில் யார் முன்னும்பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார்.  அவளை அடைவதற்காக இந்திரன் உள்ளிட்ட அனைவரும்  உலகை சுற்றி முன்னும்பின்னுமாய் முகம் கொண்ட பசுவை தேடி கிளம்பினர்.  (இந்திரன் அழகில் அகலிகை மயங்கி அவரை மணக்க ஆசைப்பட்டதாகவும் சில ராமாயணத்தில் சொல்லப்படுகிறது).

எல்லாரும் உலகை வலம் வர ஆரம்பிக்கும்போது கௌதமர் நந்தவனத்தில் இருந்த பசு ஒன்று கன்று ஈன பிரசவ வலியால் துடிக்க ஆரம்பித்தது. அதற்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார் கௌதமர் .   பசு கன்றினை பிரசவிக்க ஆரம்பித்தது. பசுவின் முன்னும் பின்னுமாய் முகம் கொண்ட பசுவினை கௌதமர் கண்டார்.  கன்றினை ஈன்ற பசுவினை மூன்று முறை வலம்வந்து வணங்கினார்.  பிரம்மன் நிபந்தனைப்படி அவர் அறியாமலே கௌதமர் நடந்துக்கொண்டார்.  அதனால், பிரம்மன் சபையில் அறிவித்தபடி அகலிகையை கௌதமருக்கு திருமணம் செய்வித்தார். இந்திரனோ உலகை முழுக்க தேடியும் அப்படிப்பட்ட பசு கிடைக்கததால் சோர்ந்து போய் பிரம்மலோகம் வந்து சேர்ந்து, நடந்ததை அறிந்து அவமானத்தால் முகம் சிவந்தான். (உலகை மும்முறை வலம் வந்தால் பெண்ணை தருவதாய் பிரம்மன் சொல்ல, எல்லாரும் உலகை சுற்றி வர கிளம்ப, கௌதமர் பசுவுக்கு பிரசவம் பார்க்கிறார். கர்ப்பமடைந்த பசு ஈரேழு உலகுக்கும் சமம்ன்னு வேதம் சொல்லுது. அதன்படி மூவுலகை வலம் வந்ததாய் அர்த்தமாகிறது.) இன்னொரு கதையில் கௌதமரும் சுயம்வரத்தில் ஈடுபட்டதாய் சொல்றாங்க.

இன்னொரு கதைப்படி கௌதமர் நல்ல முறையில் அகல்யாவை வளர்த்து, பத்திரமாய் திரும்ப ஒப்படைத்ததால், அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகன் சொல்லப்படுது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான். ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்த இடத்தில் முக்கியமாய் சொல்லவேண்டிய விசயம் ஒன்று உண்டு. அது என்னன்னா,   கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பதும், கௌதமர் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டவர் என....  
antique Ravi Varma illustration Hindu mythology Ahalya portrait digital download
பிரம்மச்சரிய விரதத்தை  கடைப்பிடித்ததால் அகலிகையுடன் கௌதமர்  உடல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை.  கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே அகலிகை பொழுதை கழித்தாள்.  கௌதமரின் வியர்வை பட்டு அகலிகை கர்ப்பம் தரிக்கிறாள். அவள் சதானந்தன் என்ற ஆண்பிள்ளையை பெற்றெடுக்கிறாள். கௌதமர் பூஜையில் இருக்க, அகலிகை அவருக்கு பணிவிடையில் மூழ்கி கிடந்தாள். ஆனாலும் அவ்வப்போது காம உணர்ச்சி அகலிகைக்கு எழும். கௌதமரின் விரதத்தினை கண்டு அமைதியாய் இருந்துவிடுவாள்.  இப்படியே நாட்கள் நீண்டது..
Image result for அகல்யா

ஒருநாள் கோழி கூவியது. பிரம்ம முகூர்த்தத்தில் முனிவர்கள் குளிக்கவேண்டுமென்பது விதி.   கௌதமர் நீராட அருகிலிருக்கும் நதிக்கரைக்கு செல்கிறார். சிறிது நேரத்தில் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு அகலிகை, கதவை திறந்து, என்ன சுவாமி?! எதாவது மறந்துவிட்டீர்களா?! என விசாரித்தாள். எதையும் மறக்கவில்லை அகலிகா! ஆகாயத்தினை பார். இப்பொழுதுதான் மூன்றாவது ஜாமம் ஆரம்பித்திருக்கின்றது. வா! சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாமென கௌதமர் அழைக்க, அகலிகை பக்கம் சென்று அமர்கிறாள்.    பேச்சு திசை மாறி கௌதமர், அகலிகையுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டார். இதென்ன புது வழக்கம்?! அதுவும் அதிகாலையில்!! போகும் வழியில் பறவைகள், மிருகங்களின் புணர்ச்சியில் இருப்பதை கண்ட மனுசன் மூடு ஏறி வந்துட்டாரோ என மனம் சிந்தித்தாலும், கணவன் சொல்லுக்கு மறுபேச்சு பேசுவது அழகல்ல என எண்ணி, கௌதமருக்கு உடன்பட்டாள். அவளது நீண்ட நாள் ஆசை நிறைவேறி உடலும், உள்ளமும் திருப்தியுற்ற மயக்கம் தெளியாமல் கௌதமரின் அணைப்பில் தன்னை மறந்த நிலையில் அகலிகை இருந்தாள். (இந்திரன் என உணர்ந்தே அகலிகை அமைதியாய் இருந்ததாகவும் ஒருசில ராமாயணத்தில் உண்டு)

அகலிகை! கதவை திற ! என்ற குரல் கேட்டு அகலிகை திடுக்கிட்டு வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.  கதவை திறந்து பார்த்தால் வாசலில் ஒரு கௌதமரும், உள்ளே ஒரு கௌதமரும் இருப்பதைக்கண்டு விக்கித்து நின்றாள்.  இந்திரன் வேண்டுகோளுக்கேற்ப சந்திரன்  சேவலாய் மாறி கூவியதும் நீராட சென்ற கௌதமர் கொஞ்ச தூரம் சென்றதுதான் இன்னும் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்து,  ஏதோ தவறு நடக்க இருக்கிறது என எண்ணி, அவசர அவசரமாக தன் இல்லம் வந்தார் கௌதமர். அங்கு அகலிகையுடன், தன் உருவத்தில் இன்னொருவர் இருப்பதையும் கண்டு நடந்ததை ஞானத்தால் உணர்ந்து கடுங்கோபங்கொண்டு, ஆண்மை தினவெடுத்து எந்த யோனிக்கு ஆசைப்பட்டு அகலிகையுடன் கூடினாயோ,  ஆண்மையற்று அலியாக மாறி,உடலெங்கும் யோனியாய் மாறு என இந்திரனையும், இந்திரனுக்கு உதவிய சந்திரன் உடல் தேய்ந்து பொலிவிழக்கவும் சாபமிட்டார்.  

உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? எத்தனை மந்திரங்கள் கற்றுக்கொடுத்தேன்? கடைசியில் நீ என்ன செய்துவிட்டாய்! பிரம்மனின் புதல்வியான நீயா ஈரேழு உலகங்களும் போற்றும் கற்புக்கரசி? இனிமேல் அப்படிக் கிடையாது. அற்ப உணர்வுகளுக்குப் பலியாகும் சிற்றின்பக்காரியான நீ, எனக்கு மனைவியாக இருக்கத் தகுதியில்லாதவள். என கடுஞ்சொல் வீசினார் கௌதமர். சுவாமி! என்னை தங்களுக்கு தெரியாதா?! தங்கள் உருக்கொண்டு வந்ததால், தாங்கள்தான் என எண்ணி உடன்பட்டுவிட்டேன் என்று கதறினாள் அகலிகை.  பார்க்கும்  பொருளில் எல்லாம் என் உரு காணும் அளவுக்கு என்மீது பிரேமை கொண்டிருந்தால், எனக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் தெரியாதா?!  காமப்பிடியில் மனம் இழந்தாய், மதி இழந்தாய்,  அறுதி இட்டு பிரித்து அரிய விழையவில்லை.. உன் மனமும் அதை நாடியது.. இதுவுமொரு குற்றமே.. ஆகையால் கணவன் யார்?! மாற்றான் யார் என உணராத நீ  எதையும் உணராத கல்லாய் மாறக்கடவது என சாபமிட்டார். 

இந்திரன், சந்திரன், அகலிகை பாவ விமோசனம் வேண்டி நிற்க, உடல் முழுக்க யோனிக்கு பதிலாய் கண்களாய் மாறவும், சந்திரன் சிவனை வேண்டி சாப விமோசனம் பெறவும், ஆயிரம் ஆண்டுகாலம் கழித்து மனிதர்குல மாணிக்கமாய் வரும் ராமரின் கால் தூசு பட்டு (கால் இல்லை.. கால் தூசு பட்டு எனத்தான் சாப விமோசனம் தந்தார். பொண்டாட்டியை அடுத்தவர் தீண்டாம பார்த்துக்கிறாராம்) பெண்ணாய் மாறுவாய் என சாப விமோசனம் தந்தார்.   கோபத்தில் சபித்ததால் கௌதமரின் தவ வலிமை குறைந்தது. அவரும் தவம் செய்ய கிளம்பிவிட்டார்.

தெரிந்தே தவறு செய்த இந்திரன் சுசீந்தரத்தில் வந்து சிவனை வழிபட்டு   தனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான். அவ்வாறே சந்திரனும் சாப விமோசனம் பெற்றான். அவர்கள் இருவரும் தேவர்கள். யாகத்தின் பலனை அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள். அதனால் சாபத்திலிருந்து தப்பித்தனரோ!! ஆனால் அகலிகையோ சாதாரண மானுடப்பெண். ஆதனால் ஆயிரம் ஆண்டுகள் கல்லாய் கிடந்தாள்.  
Image may contain: 4 people, people standing and outdoor

காலம் உருண்டோடியது. ராமன் அந்த பக்கம் வந்தான். அவனது கால் தூசு பட்டது. மீண்டும் உருக்கொண்டாள். பழைய உருவம் மட்டுமல்லாது, பழைய கற்போடு திரும்பினாள். கௌதமரோடு ராமன் அவளை சேர்பித்துவிட்டு அவ்விடம் அகன்றார். அவளும் அவர் பின்னே நடந்தாள்.. ஆனால்  அவள் மனதில் பல கேள்விகள் அலைமோதியது... உலகிலே ஒப்பற்ற அழகியாய் பிறந்தேன்.. குணத்திலும் சிறிதும் பழுதில்லாமல் வளர்ந்தேன். பார்ப்பவர்கள் அனைவரும் மனையாளாய் ஏற்கும்படி இருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய கணவனுக்கு தன்னை மணமுடித்தது ஏன்?! மணம் முடித்தபின்னும் தன்னோட ஆசாபாசங்களை கௌதமர் உணர்ந்து நடக்காதது ஏன்?! தன் பழி உணர்ச்சியையும், காமத்தையும் தீர்த்துக்கொள்ள  இந்திரன் கௌதமர் உருக்கொண்டு வந்தது ஏன்?! சகல மந்திரமும் கற்றுன் தேர்ந்திருந்தும் வந்தது கணவன் அல்ல என்பதை உணரமுடியாமல் காமம் என்னை ஆட்கொண்டது ஏன்?! காமத்தின் பிடியில் சிக்கியது என் தவறா?!  கூவியது பொய்ச்சேவல் என்பதை முற்றும் உணர்ந்த முனிவரும், சிறந்த தவசியுமான கௌதமரால் உணரமுடியாத போது தன்னால் எப்படி போலி கௌதமரை உணரமுடியும்?! கொடுத்த சாபத்தினை இந்திரனுக்கு தளர்த்த முன்வந்த கௌதமர் தனக்கு இரங்காதது ஏன்?! அப்படியெனில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?! தேவர்கள் அறிந்தே எது செய்தாலும் தவறில்லையா?! தெரியாமல் தவறு செய்த மானுடப்பெண்மீது மட்டும் தவறு சொல்வது எப்படி?!  

கைதவறி விழுந்தால் உடைப்பட கற்பு ஒன்றும் மண் சட்டியில்லையே! என பலவாறாய் எண்ணியபடி கௌதமரின் பின்னே மீண்டும் தவ வாழ்க்கைக்கு சென்றாள். அவளின் தவ வலிமையின் பொருட்டு, ராமர்-சீதா திருமணத்தை அகலிகையின் மகனான சதானந்தன் நடத்தி வைக்கும் பாக்கியம் பெற்றாள். ஆனாலும் அவளது கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. உங்களுக்கு தெரிஞ்சா அகலிகையின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன். 

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...
நன்றியுடன்,
ராஜி

Friday, April 19, 2019

முன்ஜென்ம வினை தீர சித்ரா குப்த வழிபாடு

இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ணமிக்கும் நிறைய தொடர்புண்டு. அதுலயும் சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது.  வசந்தக்கால தொடக்கம் சித்திரை  மாதம். அதேப்போல,  சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது.  மத்த பௌர்ணமிக்கில்லாத சிறப்பு இந்த பௌர்ணமி ஏன் விசேஷமானதுன்னு இனி பார்க்கலாம்.



குடும்பம், வியாபார செய்யும் இடம்ன்னு எங்கும்  வரவு, செலவுலாம் சரிவர கணக்கு வச்சு நிர்வகித்தால்  அந்த இடம் ஓகோன்னு வரும். அப்படி வரவு செலவை பார்த்துக்குறவங்களுக்கு வயசுல சின்னவங்களா இருந்தாலும் அங்கு மரியாதை, பொறுப்புன்னு சற்று தூக்கலா இருக்கும்.  சாதாரண வீடு, கடைக்கே இப்படின்னா, உயிர்களின் பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, சுகம் துக்கம்ன்னு வரவு செலவு வச்சுக்குற வேலை எப்பேற்பட்டது?! எந்தவித சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் எள்முனை அளவும் தன் கடமைல இருந்து தவறாமல் கடமையை ஆற்றிவருபவர் சித்திரகுப்தன். இவரின் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படுது.

வட இந்திய கதை...

வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த  தெய்வம் இந்த சித்திரகுப்தன். வட இந்திய மதமான சமண மதத்தின் தெய்வம் இவர்ன்னும் சொல்லப்படுது. சமண மதம் மட்டும்தான் இறப்பை முன்னிறுத்தி அறம் கூறுவதால், மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

தென் இந்திய கதை.....

கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் உணர்ந்து சிவப்பெருமானிடம் முறையிட்டார். சிவப்பெருமான் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவப்பெருமானின் கட்டளையை  சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார்.  சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாறியது.   நீளாவதியின் அழகில் மயங்கி அவளை மணக்கிறார். அதன் விளைவாய்  சித்திரகுப்தன் பிறந்தார், சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. கர்ணன் கவசகுண்டலங்களோடு பிறந்த மாதிரி ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு கொண்ட நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார்.  பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்லுது.


அனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள்.  அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென  எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார்.  சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்திரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று. விரதமிருந்து  சித்திரகுப்தனை  வழிப்படுவோரின் பாவச்சுமை ஏறாதென சிவப்பெருமான் வாக்களித்தார். சித்திரக்குப்தனின் திருமணநாளும் சித்ரா பௌர்ணமியே.


காமதேனு மகனாய்....
அகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவப்பெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்திரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்திரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துறதில்லையாம்.


சித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் மனதில் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும்.  இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின்  செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.

சித்ரகுப்தனை வழிபடும் முறை...

பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானையும் அவருக்கு அருகில்  தேங்காய்க்கு பதிலாய் மாங்காய் வைத்த கும்பம்   வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து  சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள், பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், பனங்காய் வைத்துப் படைக்க வேண்டும்.  தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து குழம்பு வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயாசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், மற்றும் நீர்மோர்  வைத்து படைக்க வேண்டும். நம் வாழ்வு இனிமையாய் இருக்க இனிப்புகளும். கனிவாக வாழ்வமைய கனிகளும்  படைக்க வேண்டும்.. நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். வீட்டில்  மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறனும்ன்னு மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபாடு செய்கின்றோம்.  மா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கல சொம்பில் நீரும், செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் வழக்கம். 



இவரை, பக்கம் பக்கமாய்  மந்திரங்கள் கொண்டு ஜெபிக்க வேண்டாம். செய்த தவறுகளை எண்ணி மலையளவு செய்த பாவத்தினை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எண்ணி எம்மை காப்பாற்றுங்கள் என வேண்டினாலே போதும். இவரருக்கு பானகம் பிடித்த நைவேத்தியம்.   இத்தினத்தில், எண்ணெய் தேய்த்து குளித்தலும் நல்லது. இதுவரை செய்த பாவங்களை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று இதற்கு பொருள்.   இத்தினத்தில் நீர்தானம், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் தானம் செய்வது சிறந்தது.  கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் இருக்கு.  காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

நன்றியுடன்,
ராஜி

Tuesday, January 15, 2019

தைப்பொங்கலும் வந்தது... பாலும் பொங்குது...




பொங்கல் பண்டிகைன்னாலே புது துணி, டிவியில் புது படம்,  ரேஷன்ல ஒரு கிலோ அரிசியும்,  பணமும், இலவச வேட்டி சட்டையுமாய் இந்த கால பிள்ளைகளுக்கு மாறிட்டுது.  ஆனா, பொங்கல் பண்டிகை நமது பண்பாடு, கலாச்சாரம், கலை, வாழ்வியல்முறையினை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்வதோடு, உலகுக்கே சோறு போடும் உழவனுக்கும், அவனுக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாதான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுது.  இன்றைக்கு பொங்கல்ன்னு அழைக்கப்படும் இந்த விழா சங்ககாலத்தில் தைந்நீராடல்ன்னு பேர். . தைந்நீராடல்ன்னா  மார்கழி, தை மாத விடியற்காலையில் ஆற்றுநீரும், குளத்துநீரும் வெதுவெதுப்பா இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பான நீரில்  நீராடி இறைவனை தொழுது மகிழ்ந்தனர். இதனையே சங்க இலக்கியங்கள் தைந்நீராடல் எனக் குறிப்பிடுகின்றது.  
ஆடிப்பட்டம் தேடி விதைன்னு.. சொல்லும் பழமொழிக்கேற்ப ஆடியில் விதை விதைத்து, நடவு நட்டு, களை பறித்து, ஆறு மாதங்கழித்து மார்கழியில் அறுவடை செய்யும் உழவர்கள், விவசாயத்தில் தங்கள் தொழிலுக்கு பலவிதத்தில் உதவிய கால்நடைகளுக்கு நன்றி  சொல்ல விழா எடுத்து கொண்டாடி மகிழ்வதே இப்பண்டிகையின் தாத்பரியம். மார்கழி கடைசியிலிருந்து காய்கறிகள் நல்ல விளைச்சலும், அறுவடை முடிச்சு வந்த தானியங்களை தூசு நீக்கி, தரம் பிரிச்சு, மூட்டையாக்கி விற்பனைக்கும், சேமிச்சு வைக்கவும்ன்னு ஏகப்பட்ட வேலைகளும், வேலைவாய்ப்பும் இருக்கும். வேலைவாய்ப்பு இருந்தால் பணப்புழக்கம் இருக்கும். இதனால் திருவிழா, வீடு சீர் செய்ய, கல்யாணம் காதுகுத்துன்னு சுபநிகழ்ச்சிகள் நடத்த இப்படி பசி இல்லாம, மக்கள் மகிழ்ந்திருக்கும் காலம் தைமாதத்தில் தொடங்குவதால்தான்    ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்னும் பழமொழி உண்டாச்சு.

வானியல் சாஸ்திரப்படி சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் நிர்ணயம் செய்யப்படுது. கடவுள் இல்லை என்பவர்கள்கூட வணங்கும் ஒரே தெய்வம் சூரியன். இவர் தனுர்ராசியிலிருந்து மகரராசிக்கு மாறும் நாளில்தான் தைமாதம் பிறக்குது. இதிலிருந்து உத்திராயன புண்ணியகாலம் ஆரம்பமாகுது. உத்திராயனம் என்பதற்கு வடக்கு நோக்கி நகர்தல்ன்னு அர்த்தம். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்தாலும், இன்றுமுதல் அவருடைய சஞ்சாரம் சற்றே வடக்கு நோக்கி சாய்ந்திருக்கும் என்கிறது வானியல். இதிலிருந்து ஆறுமாத காலம் தேவலோகவாசிகளுக்கு பகல்பொழுது என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியனை வழிபடும் சமயத்திற்கு ‘சவுரம்’ என்பது பெயர். இன்றைக்கு இச்சமயத்தில் இருந்தவர்களெல்லாம் சைவத்தோடும் வைணவத்தோடும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அனைத்து சமயத்தவராலும் சூரியன் வழிபடப்படுகிறார்.
தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகை தமிழகமும், தமிழர்கள் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. இந்த பண்டிகையை  மகர சங்கராந்தியாக  மத்த மாநிலத்துக்காரங்க கொண்டாடுறாங்க. அதேசமயம் அறுவடை திருநாள் எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன்ன்னும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி ன்னும் கொண்டாடப்படுது. இந்தியாவிற்கு அப்பாலும் பொங்கல் பண்டிகை களைகட்டுது. இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வெவ்வேறு பேர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுது.
நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதின்ற பேரிலும்,  தாய்லாந்தில் சொங்க்ரான் ன்னும், லாவோஸ் மக்களால் பி மா லாவ்ன்னும், மியான்மரில் திங்க்யான்ன்னும்  பொங்கல் கொண்டாடப்படுது. இலங்கையில் தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுறாங்க. சிங்கப்பூர், மலேசியாவிலெல்லாம் அரசு விடுமுறையே உண்டு. போனவருசம் கனடா, பிரான்ஸ் நாட்டு பிரதமர்கள் பொங்கல் திருநாளுக்காக வாழ்த்துகள் சொன்னாங்க. 
பொங்கல் பண்டிகை  கி.மு. 200 - கி.மு. 300 காலக்கட்டத்திலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்திருக்கு.பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தைந்நீராடலின்போது சங்ககால பெண்கள் 'பாவை நோன்பு'ன்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர். பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 400-கி.பி.800) பொங்கல் பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாக இருந்திருக்கு. தமிழ் மாதமான மார்கழியின் (டிசம்பர் - ஜனவரி)போது இது கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டி இளம்பெண்கள் விரதமிருந்து  வேண்டுவர். 
பாவைநோன்பு இருக்கும் பெண்கள் மார்கழிமாதம் முழுக்க பால் மற்றும் பால்பொருட்களை சாப்பிடமாட்டாங்க. தங்கள் முடிக்கு எண்ணெடுவது, கண்ணுக்கு மையிடுவது, மருதாணி மாதிரியான அழகுப்படுத்திக்கொள்ள மாட்டாங்க. கடுமையான சொற்களை பேசாம, காலையில் குளிச்சுமுடிச்சு,  ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணின்ற பெண் தெய்வத்தின் சிலையை அந்த காலத்துல வணங்கி வந்ததா குறிப்புகள் சொல்லுது. தைமாத முதல்நாள் தங்கள் நோன்பை முடிச்சுப்பாங்க.  நல்ல கணவன் அமையவும், நெற்பயிர்கள், பயிர்கள் செழிக்க தேவையான மழையை கொண்டு வருவதற்காகவுமே இந்த நோன்பு உண்டானது.. பழமை வாய்ந்த இந்த மரபுகளும், சடங்குகளும்தான் படிப்படியா மாறி இன்னிக்கு பொங்கல் பண்டிகையா மாறி இருக்கு.
ஒரு ஜுவல்லரில போன பொங்கல் பண்டிகைக்காக தங்கத்தில் செய்த பொங்கல்பானை. (ஃபேஸ்புக்ல சுட்டது)
இன்றைய பொங்கல் பண்டிகைக்கு வித்திட்டது. தைந்நீராடலும், பாவைநோன்புமே ஆகும். தைந்நீராடல் பற்றியும், பாவை நோன்பின்போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவா சொல்லப்பட்டிருக்கு. குலோத்துங்கான்ற அப்படி நிலத்தை தானமாய் வழங்குவதை பொங்கல் பண்டிகையின்போது  செய்வதை வழக்கமாய் கொண்டிருந்தார்ன்னு  திருவள்ளூர் வீரராகவா கோவிலில் இருக்கும் கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கு. 
பொங்கல் பண்டிகை பற்றிய புராணக்கதைகள் இரண்டிருக்கு.  ஒன்னு சிவபெருமானுடன் தொடர்புடையது, இன்னொன்னு இந்திரனுடன் தொடர்புடையது. நந்தி புராணத்தின்படி, ஒருமுறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் குளியல் செய்து, மாதம் ஒருமுறை மட்டுமே உண்ணுமாறு சிவபெருமான் கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும் உணவு உண்டு, மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் சிவபெருமான் சொன்னார் என அனைவரிடமும் நந்தி சொல்லிவிட்டார். இதனால் கோபங்கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழவேண்டுமென சாபமிட்டார். அதனால்தான் ஏர் உழ, நீர் இறைக்க, நெல் அடிக்க, வண்டி இழுக்க என மாட்டிற்கும், உழவுக்கும் தொடர்புண்டானதாம். 

அடுத்தகதை தேவலோகத்துக்கே  அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்துவந்த இந்திரனுக்கு பாடம் புகட்ட எண்ணிய  கிருஷ்ணர்,  இனி இந்திரனை வணங்கவேண்டாமென கூறினார்.கிருஷ்ணர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்ட மக்கள் இந்திரனை வணங்காமல் புறக்கணித்தனர்.  இதனால் கோபங்கொண்ட இந்திரன், புயல் மழையை உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது. கிருஷணரோ மனித இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின், தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்த இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டான். கிருஷணரும் இந்திரனை மன்னித்து அவனுக்கு மக்கள் வருடமொரு விழா  எடுப்பதாக வாக்களித்தார். அதுவே பொங்கல் பண்டிகையின் முன்னோடி.
ஆடி முதல் மார்கழி மாதம் வரை நீண்ட இரவும், தை முதல் ஆனிவரை நீண்ட பகலும் இருக்கும். இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் இத்தினத்தை வாழ்வில் வெளிச்சம் பிறக்க நீண்ட பகலை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுது. விவசாயத்துக்கு உதவும் ஏர் கலப்பை மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்களை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள் வணங்குவர். 
இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த உடலும் பஞ்சபூதங்களால் ஆனது. நாம் உண்ணும் ஒவ்வொரு தானியமும் பஞ்சபூதங்களால் ஆனதே. இப்படி எல்லாமே பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனதே இவ்வுலகம். அதை உணர்த்தவே பஞ்சபூதங்களான காற்று, ஆகாயம், நீர், நிலம், நெருப்பின் கலவையால் உருவான மண்பானையில் பொங்கல் வைக்கப்படுது.  பொங்கல் பொங்கி வரும்போது வடக்குதிசையில் பொங்கினால் பணவரவும், தெற்கு திசையில் பொங்கினால் செலவும், கிழக்கில் பொங்கினால் வீட்டில் சுபநிகழ்ச்சியும், மேற்கில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தங்குமென்பது நம்பிக்கை.
பொங்குதல்ன்னா மிகுதல், அதிகமாதல், பெருகுதல், மிஞ்சுதல், நெருங்குதல்ன்னு அர்த்தம். வீடுகளில் இந்த மாதத்தில் தானியங்கள். காயகறிகள் நிரம்பி இருக்கும். மிதமிஞ்சியதை உறவுக்காரங்க, நட்புகளுக்கு கொடுப்பாங்க. அவங்க வீட்டிலும் பொருட்கள் நிரம்பி இருக்கும்.  விளைப்பொருட்களைக்கொண்டு பண்டிகை அன்னிக்கு  பால் பொங்கி, அரிசி பொங்கி அதனால் மகிழ்ச்சி பொங்கும். அதனால்தான் இப்பண்டிகைக்கு பொங்கல்ன்னு பேர் உண்டானது.

பொங்கல் பொங்கும் நேரம்
நோய் இல்லா வாழ்வும்...
நிறைந்த செல்வமும் எல்லார்
வாழ்விலும் குறைவில்லாமல் கிடைத்து
அன்புடனும், நேசத்துடன் வாழ
வழி செய்யட்டும்.
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
நன்றியுடன்,
ராஜி



Monday, January 14, 2019

தள்ளவேண்டியதை தள்ளி, கொள்ளவேண்டியதை கொண்டு...

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.  இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. 

போகியன்னிக்கு நம்மோட பித்ருக்கள் நம்ம வீட்டுக்கு வருவதா சாஸ்திரம் சொல்லுது. அதனால, அவர்களுக்குப் பிடித்த உணவைப்   படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீபாராதனைச் செய்து வணங்கனும்.  இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட வழக்கம். ஆனா, இப்ப அதிகாலையில் எழுந்து குப்பைகளை கொளுத்துவதோடு முடிஞ்சு போச்சுது. வெறும் குப்பைகளை மட்டும் எரிக்குறதில்லை இந்த பண்டிகையின் நோக்கம்.   இன்றைய தினத்தில் நம் தீய எண்ணங்கள், குணங்கள், நடத்தைகளை எரித்து,   தை பிறக்கும் நாள் புதிய எண்ணங்களுடன் ஒரு புதிய மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்பதே இப்பண்டிகையின் நோக்கம். 
இந்திரனுக்கு 'போகி' என்றொரு பேரு இருக்கு. இந்திரன் மழைக்குரிய கடவுளா நம் புராணங்கள் சொல்லுது. அதனால,  அவரை வழிப்பட்டால், மழை பொழிந்து பயிர்கள் செழிக்குமென  மக்கள் நம்பினர். நீரின்றி அமையாது உலகுங்குறதால, உலக இயக்கத்துக்கு முக்கிய காரணியான வருணபகவானுக்கு முதல்நாள் நன்றி சொல்லி கொண்டாடுகின்றனர். 

பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து வாங்கி வருவதுன்னு சகலரும்  பிசியா இருப்பாங்க. விவசாயிகள் விளைப்பொருட்களின் அறுவடையிலும், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்வோர், நகை செய்வோர்ன்னு சகலரும் தங்கள் தொழிலை கூடுதல் நேரமெடுத்து செய்வதால் அவர்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக்காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப்போனது
போகிபண்டிகை கொண்டாடும் வழக்கம், நம்ம ஊர், ஆந்திரா, தெலுங்கானா, வடநாடுகளிலும் உண்டு. இன்றைய தினத்தில் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூவை சொருகி வைப்பர். வைகறையில் 'நிலைப்பொங்கல்' வைப்பாங்க.  வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றை நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். இதை வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் செய்து படைப்பாங்க. ஒருசிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்தும் வழிபடுவாங்க.  போகி எரிக்கும்போதும், நிலைப்பொங்கல் வைக்கும்போதும் சிறுவர்கள் பறை மாதிரியான மேளத்தை அடிப்பாங்க. 

ஆனா, இன்னிக்கு பண்டிக்கைக்கான நோக்கம் மறைந்து வெறும் கொண்டாட்டமே மிச்சம் நிக்குது. போகி கொண்டாடுகிறேன்ன்னு சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துறது வழக்கமாகி போச்சு. இப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி, ஈகோ இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம்.   போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறாம பார்த்துப்போம்.  நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கலாம்.  போனது போகட்டும். இனி வரும் காலம் நல்லதாய், சந்தோசமாய் அமையட்டும். 

சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் போகி பொங்கல் தின வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்,
 
.

Saturday, January 13, 2018

புது மனிதனாய் அவதாரமெடுக்க உகந்த நாள் - போகி பண்டிகை


பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரங்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.  இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. 



போகி அன்னிக்கு நம்மோட பித்ருக்கள் நம் வீட்டுக்கு வருவதா சாஸ்திரம் சொல்லுது. அதனால, அவர்களுக்குப் பிடித்த உணவைப்   படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்கனும்.  இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட வழக்கம். ஆனா, இப்ப அதிகாலையில் எழுந்து குப்பைகளை கொளுத்துவதோடு முடிஞ்சு போச்சுது. வெறும் குப்பைகளை மட்டும் எரிக்குறதில்லை இந்த பண்டிகையின் நோக்கம்.   இன்றைய தினத்தில் நம் தீய எண்ணங்கள், குணங்கள் எரித்து,   தைப் பிறக்கும் நாள் புதிய எண்ணங்களுடன் ஒரு புதிய மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்பதே இப்பண்டிகையின் நோக்கம். 




இந்திரனுக்கு 'போகி' என்றொரு பேரு இருக்கு. இந்திரன் மழைக்குரிய கடவுளா நம் புராணங்கள் சொல்லுது. அதனால,  அவரை வழிப்பட்டால், மழை பொழிந்து பயிர்கள் செழிக்கும் என  மக்கள் நம்பினர். நீரின்றி அமையாது உலகுங்குறதால, உலக இயக்கத்துக்கு முக்கிய காரணியான வருணபகவானுக்கு முதல் நாள் நன்றி சொல்லி கொண்டாடுகின்றனர். 


 பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து வாங்கி வருவதுன்னு சகலரும்  பிசியா இருப்பாங்க. விவசாயிகள் விளைப்பொருட்களின் அறுவடையிலும், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்வோர், நகை செய்வோர்ன்னு சகலரும் தங்கள் தொழிலை கூடுதல் நேரமெடுத்து செய்வதால் அவர்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது



போகி பண்டிகை கொண்டாடும் வழக்கம், நம்ம ஊர், ஆந்திரா, தெலுங்கானா, வடநாடுகளிலும் உண்டு. இன்றைய தினத்தில் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூவை சொருகி வைப்பர். வைகறையில் 'நிலைப்பொங்கல்' வைப்பாங்க.  வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றை நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். இதை வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் செய்து படைப்பாங்க. ஒருசிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்தும் வழிபடுவாங்க.  போகி எரிக்கும்போதும், நிலைப்பொங்கல் வைக்கும்போதும் சிறுவர்கள் பறை மாதிரியான மேளத்தை அடிப்பாங்க. 

ஆனா, இன்னிக்கு பண்டிக்கைக்கான நோக்கம் மறைந்து வெறும் கொண்டாட்டமே மிச்சம் நிக்குது. போகி கொண்டாடுகிறேன்ன்னு சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துறது வழக்கமாகி போச்சு. இப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி, ஈகோ இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம்.   போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறாம பார்த்துப்போம்.  நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கலாம்.  போனது போகட்டும். இனி வரும் காலம் நல்லதாய், சந்தோசமாய் அமையட்டும். 

எல்லோருக்கும் போகி தின வாழ்த்துகள்.

நன்றியுடன்,
ராஜி.

Tuesday, November 21, 2017

அழகாய் இருக்க ஒரு விரதமா?!

கல்வி, காசு, மரியாதை , வீரம் , வீடு , மனை,கால்நடை , வேலை , குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை, திருமணம்ன்னு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு  விரதம் இருக்கு.  ஆனா அழகுக்கு?! ம்ம்ம் அதை கொடுக்கவும் ஒரு  விரதம் இருக்கு. அதுக்கு பேரு ' ரம்பா திருதியை ' . 

 ஒருமுறை, இந்திரலோகத்தில்  சபை கூட்டப்பட்டது.  அதுசமயம் விருந்தினர்களை மகிழ்விக்க இந்திரலோகத்தின் அழகு மங்கைகளான ரம்பை, ஊர்வசி, மேனகையை நாட்டியமாட இந்திரன் பணித்தான். ரம்பைக்கு  முதல் அழகி தான்தான் என மனசுக்குள் கர்வம் தலை தூக்கிய தருணமிது .  மூவரும் அற்புதமாய் நடனமாடினார். ஆனாலும், தன்னை சிறந்தவளாய் காட்டிக்கொள்ள, பரத விதிகளை மீறி  சுழன்று சுழன்று ஆடினாள் . இதன் காரணமாய் அவள் நெற்றி நெற்றிப்பொட்டும், பிறை சந்திரனும் கீழே விழுந்தது . 

அதனால் ரம்பை நிலைக்குலைந்து போனாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும், மேனகையும், ரம்பையைப் பார்த்து ஏளனமாய்  சிரித்து , அரங்கை விட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய ரம்பை, கீழே விழுந்த நகைகளை  எடுத்துக் கொண்டிருந்தபோது, ‘இன்றைய  சகுனம் சரியில்லை.. சபை கலையலாம்’ என்று உத்தரவிட்டான் இந்திரன். ஏற்கனவே, ஊர்வசி, மேனகை செய்கையால் அவமானப்பட்டிருந்த ரம்பை இந்திரன் செய்கையால் மேலும் மனம் நொந்து போனாள் . ஊண் , உறக்கமின்றி தவித்த ரம்பை இந்திரனை சென்று சந்தித்தாள்.

‘இந்திரதேவா! நேற்று எனக்கு அவையில் நடந்த அவமானத்துக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அந்த சம்பவத்தால், என்னுடைய முதல் அழகி என்ற பட்டம் பறிபோய் விட்டதோ என்று அஞ்சுகிறேன்’ என்று கலங்கினாள்.  நடனம் என்பது விதிகளுக்கு உட்பட்டது.  நீ விதிகளை மீறி ஆடியதால், சிறிது காலத்துக்கு முதல் அழகி என்ற பட்டத்திலிருந்து விலகி இரு என அறிவுறுத்தினார். இதைக்கேட்டதும் , ரம்பை துடித்து போய் , தேவேந்திரா! தேவ உலகின் அதிபதியான நீங்கள் என்னை விலக்கி வைக்கலாமா?. அதற்கு பதிலாக என்னுடைய தவறை திருத்திக்கொள்ள, பரிகாரம் சொல்லுங்கள்’ என வேண்டினாள். அவளது மன வேதனையை உணர்ந்த இந்திரன், ‘சிவபெருமானை அடையும் நோக்கில், பார்வதிதேவி பூமியில் அவதரித்திருக்கிறார். அவர் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவம் இருக்கிறார். அந்த கவுரிதேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் உனக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும் என ஆலோசனை கூறினான். 


இந்திரன் ஆலோசனைப்படி, பூலோகம் வந்த ரம்பை, கவுரிதேவியைத் தேடினாள். பூலோகம் எங்கும் தீபங்கள் வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. அது கார்த்திகை மாதம். அந்த ஒளியில் அன்னையை நம்பிக்கையோடு தேடிய ரம்பைக்கு அன்னையின் தரிசனம் கிடைத்தது. கார்த்திகை மாத அமாவாசைக்கு இரண்டாம் நாள் துவிதியை திதி. அந்த நாளில் மஞ்சளால் அம்பிகை பிரதிமையை செய்து வைத்து, விரத பூஜை செய்தாள் ரம்பை. மஞ்சள் கொண்டு அன்னையை வணங்கியதால் இந்த பூஜைக்கு ‘தீந்திரிணி கவுரி விரதம்’ என்ற பெயரும் உண்டு. தீந்திரிணி என்றால் மஞ்சள் என்று பொருள்.

ரம்பையின் பூஜையை ஏற்றுக்கொண்ட கவுரிதேவி, மறுநாள் அவளுக்கு சொர்ணதேவியாக காட்சி தந்தாள். ரம்பையை மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாக ஆகும்படி அருளியதுடன், அவளது அழகையும், ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருள் செய்தாள். மேலும் ரம்பை இருந்த விரதம் ‘ரம்பா திருதியை’ என்று பெண்களால் தங்கத் திருவிழாவாக கொண்டாடப்படும் என்றும் ஆசீர்வதித்தாள். ரம்பைக்கு கவுரி தேவி காட்சிதந்தபோது, அழகுக்கு உரிய கார்த்திகேயனை மடியில் வைத்தபடி பொன்மேனியளாக இருந்தார். 

 ரம்பான்னா  வாழை என்ற அர்த்தம் .  நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் சிலை  அல்லது படம் வைத்து நன்கு அலங்கரித்து, மஞ்சளால்  பூஜை செய்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, நிறைய வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் நிவேதனம் செய்து, பெண்கள், குழந்தைகளுக்கு  தானம் செய்து பூஜையை நிறைவு செய்ய  வேண்டும்.  
 தான் அழகாய் இருக்க வேண்டுமென நினைக்காத மனிதரில்லை . அதனால் ரம்பா விரதம் இருப்போம் . என்றும்  அழகாய் இருப்போம். 
நன்றியுடன்,
ராஜி