கல்வி, காசு, மரியாதை , வீரம் , வீடு , மனை,கால்நடை , வேலை , குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை, திருமணம்ன்னு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு  விரதம் இருக்கு.  ஆனா அழகுக்கு?! ம்ம்ம் அதை கொடுக்கவும் ஒரு  விரதம் இருக்கு. அதுக்கு பேரு ' ரம்பா திருதியை ' . 
 ஒருமுறை, இந்திரலோகத்தில்  சபை கூட்டப்பட்டது.  அதுசமயம் விருந்தினர்களை மகிழ்விக்க இந்திரலோகத்தின் அழகு மங்கைகளான ரம்பை, ஊர்வசி, மேனகையை நாட்டியமாட இந்திரன் பணித்தான். ரம்பைக்கு  முதல் அழகி தான்தான் என மனசுக்குள் கர்வம் தலை தூக்கிய தருணமிது .  மூவரும் அற்புதமாய் நடனமாடினார். ஆனாலும், தன்னை சிறந்தவளாய் காட்டிக்கொள்ள, பரத விதிகளை மீறி  சுழன்று சுழன்று ஆடினாள் . இதன் காரணமாய் அவள் நெற்றி நெற்றிப்பொட்டும், பிறை சந்திரனும் கீழே விழுந்தது . 
அதனால் ரம்பை நிலைக்குலைந்து போனாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும், 
மேனகையும், ரம்பையைப் பார்த்து ஏளனமாய்  சிரித்து , அரங்கை 
விட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய ரம்பை, கீழே விழுந்த நகைகளை  எடுத்துக் கொண்டிருந்தபோது, ‘இன்றைய  சகுனம் சரியில்லை.. சபை 
கலையலாம்’ என்று உத்தரவிட்டான் இந்திரன். ஏற்கனவே, ஊர்வசி, மேனகை செய்கையால் அவமானப்பட்டிருந்த ரம்பை இந்திரன் செய்கையால் மேலும் மனம் நொந்து போனாள் . ஊண் , உறக்கமின்றி தவித்த ரம்பை இந்திரனை சென்று சந்தித்தாள்.
‘இந்திரதேவா! நேற்று எனக்கு அவையில் நடந்த அவமானத்துக்கு பரிகாரம் செய்ய 
வேண்டும். அந்த சம்பவத்தால், என்னுடைய முதல் அழகி என்ற பட்டம் பறிபோய் 
விட்டதோ என்று அஞ்சுகிறேன்’ என்று கலங்கினாள்.  நடனம் என்பது விதிகளுக்கு உட்பட்டது.  நீ விதிகளை மீறி ஆடியதால், சிறிது காலத்துக்கு முதல் அழகி என்ற பட்டத்திலிருந்து விலகி இரு என அறிவுறுத்தினார். இதைக்கேட்டதும் , ரம்பை துடித்து போய் , தேவேந்திரா! தேவ உலகின் அதிபதியான நீங்கள் என்னை விலக்கி வைக்கலாமா?. 
அதற்கு பதிலாக என்னுடைய தவறை திருத்திக்கொள்ள, பரிகாரம் சொல்லுங்கள்’ என
 வேண்டினாள். அவளது மன வேதனையை உணர்ந்த இந்திரன், ‘சிவபெருமானை அடையும் நோக்கில், பார்வதிதேவி பூமியில் அவதரித்திருக்கிறார்.
 அவர் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவம் இருக்கிறார். அந்த கவுரிதேவியை 
விரதமிருந்து வழிபாடு செய்தால் உனக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும் என ஆலோசனை கூறினான். 
இந்திரன் ஆலோசனைப்படி,  பூலோகம் வந்த ரம்பை, கவுரிதேவியைத் தேடினாள். பூலோகம் எங்கும் தீபங்கள் 
வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. அது கார்த்திகை மாதம். அந்த ஒளியில் 
அன்னையை நம்பிக்கையோடு தேடிய ரம்பைக்கு அன்னையின் தரிசனம் கிடைத்தது. 
கார்த்திகை மாத அமாவாசைக்கு இரண்டாம் நாள் துவிதியை திதி. அந்த நாளில் 
மஞ்சளால் அம்பிகை பிரதிமையை செய்து வைத்து, விரத பூஜை செய்தாள் ரம்பை. 
மஞ்சள் கொண்டு அன்னையை வணங்கியதால் இந்த பூஜைக்கு ‘தீந்திரிணி கவுரி 
விரதம்’ என்ற பெயரும் உண்டு. தீந்திரிணி என்றால் மஞ்சள் என்று பொருள்.
ரம்பையின் பூஜையை ஏற்றுக்கொண்ட கவுரிதேவி, மறுநாள் அவளுக்கு சொர்ணதேவியாக 
காட்சி தந்தாள். ரம்பையை மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாக ஆகும்படி 
அருளியதுடன், அவளது அழகையும், ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருள் 
செய்தாள். மேலும் ரம்பை இருந்த விரதம் ‘ரம்பா திருதியை’ என்று பெண்களால் 
தங்கத் திருவிழாவாக கொண்டாடப்படும் என்றும் ஆசீர்வதித்தாள். 
ரம்பைக்கு கவுரி தேவி காட்சிதந்தபோது, அழகுக்கு உரிய கார்த்திகேயனை மடியில்
 வைத்தபடி பொன்மேனியளாக இருந்தார். 
 ரம்பான்னா  வாழை என்ற அர்த்தம் .  நாலாபுறமும் வாழை மரங்கள் 
கட்டி, நடுவில் தேவியின் சிலை  அல்லது படம் வைத்து நன்கு அலங்கரித்து, மஞ்சளால்  
பூஜை செய்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, நிறைய வாழைப் பழங்களையும் 
பட்சணங்களையும் நிவேதனம் செய்து, பெண்கள், குழந்தைகளுக்கு  தானம் செய்து பூஜையை நிறைவு செய்ய  வேண்டும்.  
 தான் அழகாய் இருக்க வேண்டுமென நினைக்காத மனிதரில்லை . அதனால் ரம்பா விரதம் இருப்போம் . என்றும்  அழகாய் இருப்போம். 
நன்றியுடன்,
ராஜி 
 



 
 



இப்படியும் ஒரு விரதமா.... :)
ReplyDeleteஎல்லோரும் எல்லாவற்றிற்கும் விரதம் இருந்தால் என்னாவது!
தினம் ஒரு விரதம் இருக்கனும், அப்பதான் கெட்ட சிந்தனை வராது. ஆனா, இதுக்குலாம் பைசாவுக்கு எங்க போறதுன்னுதான் தெரில
Deleteஅருமையான விரதம்.....என்ன, நமக்குத் தான் எதுவும் சித்திக்க மாட்டேங்குது.....பகிர்வுக்கு நன்றி,தங்கச்சி.......
ReplyDeleteஉங்களுக்கு பதில்தான் நான் சிந்திக்குறேனே! வீட்டுக்கு ஒரு புத்திசாலி இருந்தா போதும்ண்ணே
Deleteநானும் விரதம் இருக்கலாம்னு... நினைக்கிறேன்.
ReplyDeleteவிரதம் இருக்குறதுக்கு ஒன்னும் சொல்லல. ஆனா, அழகு வேண்டின்னா ஒரு அட்வைஸ், நீங்க இப்பவே அழகுதான்ண்ணே. அதும் உங்க மீசை... வெரி நைஸ்.
Deleteஅழகான விரதம்.
ReplyDeleteநன்றிம்மா
Deleteமிகப் புதிய தகவல்.
ReplyDeleteபுதுசில்ல, பழசு கண்ணா பழசு
Deleteஇதற்கும் விரதமா?
ReplyDeleteசகோதரியாரே, Google Feedlyஇல் தங்களின் பிளாக்கை திறப்பதற்கு முன்,
இப்பதிவின் தலைப்பு
அழகாய் இருக்க ஒரு விரோதமா?
என்று வருகிறது
ஒருமுறை சரிபாருங்களேன்
தம+1
நேத்து லாப்டாப் ஓ.எஸ் மாத்தி வந்தது, nhm writer மக்கர் செய்ய, பிளாக்ல வரும் தமிழ் பாண்டையே யூஸ் செஞ்சதாலயும், கடமை ஆத்த வேண்டி அவசர பதிவு வேற, இப்படி சொதப்பிட்டுது.
Deleteஅழகுக்காக....
ReplyDeleteஅழகான ஒரு விரதம்....
அழகான படங்களுடன்....
அழகான செய்திகளுடன்....
அழகான ராஜிக்கா தளத்தின் மூலமாக அறிந்துக் கொண்டேன்....
(அடடா..அழகான கவிதை..)
கவிதை... கவிதை....
Deleteநேற்றைய ரம்பாதான் அழகியா
ReplyDeleteரம்பா இல்லப்பா ரம்பைதான் அழகி.
Deleteவிரதம் உடலுக்கா உள்ளத்திற்கா! எது அழகு!
ReplyDeleteரெண்டுத்துக்குமேதான்பா.
Delete