Showing posts with label காலேஜ். Show all posts
Showing posts with label காலேஜ். Show all posts

Thursday, July 11, 2013

”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ?!


*  அம்மனுக்கு, பெருமாளுக்கு, பாதாள பைரவிக்குன்னு  நேர்ந்துக்கிட்டு அடிக்கடி  உண்ணாவிரதமிருக்குறவங்களை  ஹோட்டலில் வேலைக்கு வச்சா  ஹோட்டல் முதலாளிக்கு நல்ல லாபம்!!


*ரேஷன் கடையில் வேலை பார்க்குறவங்களை எல்லா ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல், காலேஜ்ல குழாய் மெக்கானிக்காக போட்டா நீரை வேஸ்டாக்காம,  மண்ணெண்ணெய் போல லிட்டர் கணக்கில் மிச்சப்படுத்தி தருவாங்க!!


* கணக்குக் காட்டாத பைனான்ஸ் கம்பெனி ஆளுங்களை ஓட்டப்பந்தயத்துல சேர்த்துவிட்டா கண்டிப்பா  ஒலிம்பிக்கில  கோல்ட் மெடல் கிடைக்கும்!!


* மல்லிகைப்பூ வியாபாரிகளை, ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல் காலேஜ் கேண்டீன்ல   வேலைக்கு சேர்த்தா காய்ஞ்சுப் போன  இட்லியைக் கூட மல்லிகைப்பூ போல பரிமாறி வியாபாரத்தைப் பெருக்கலாம்!!


*  போலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வெச்சா  இன்னும் நிறைய ஆடு, கோழி, மாடு, மீன்லாம் சாகும், அதனால லாபம் கொட்டும்!! 


* கிரிக்கெட்டுல பாலை போட்டோமா எதிரியை அவுட் ஆக்குனமான்னு இல்லாம பந்தை உருட்டுறவகளை ஹாக்கி அணியில சேர்க்கலாம்!!


* என்ன சொல்லியும் திருந்தாம அதிகமா சிகரெட் பிடிக்குறவங்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணத்துல  வேலைக்கு சேர்க்கரெக்கமெண்டேஷன் பண்ணலாம்.


  * குடிச்சுட்டு  கண்டபடி உளர்றவங்களை வயல்ல  குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைக்கு பதிலா  நிக்க வைக்கலாம் (ஆனா, அதுக்கு முன்னாடி வயல்வெளிலாம் எங்கிருக்குன்னு கண்டுப்பிடிக்கனும்..)!!.


* காரணமே இல்லாம அடுத்தவங்க மேல  ”வள்.., வள்”ன்னு  கோபப்படுபவர்களை ஜூவுல  காட்சிப்பொருளாக வெச்சா..,  இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான்  மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க!! 


*மத்தவங்க  காசை ஆட்டையப்போட்டு  வெள்ளையும் சொள்ளையுமா இருக்குறவங்களை, ரயில்மறியல் போராட்டத்துல படுக்கவைத்து நூதனமாக தண்டவாளத்துக்கு ஆப்பு வைக்கலாம்!!


* குடிச்சுட்டு வண்டி ஓட்டுறவங்களை டிரைவர் வேலைக்கு வெச்சா,  அவங்க குடும்பத்துக்கு  இன்சூரன்ஸ் பணம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கு!! கூடவே அவங்க வாரிசுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்பிருக்கு!!


*பிட்பாக்கெட்ஆசாமிங்களை காலேஜ், ஹாஸ்பிட்டல்,ஸ்கூல்ல வாட்ச்மேனாபோட்டா, மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாம ஒரு ரூபா கூட வெளி கேட் தாண்டி போகாது!!

* உடம்பு நல்லா இருந்தும்  கண் தெரியலை, காது கேக்கலைன்னு பொய் சொல்லி பிச்சை எடுக்குறவங்களை வச்சு படம் எடுத்தா ஆஸ்கார் நிச்சயம்!!




*குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன்ன்னு மிரட்டினா நதிநீர் பிரச்சனையே வராது!!

டிஸ்கி: முகநூல்ல இருந்து சுட்டு பட்டி, டிங்கரிங்க் பார்த்தது.., இப்படி  சொல்லாமயே இருப்பேன். ஆனா, கடைசி டிப்சுக்காகதான் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்!!

Wednesday, March 27, 2013

மறந்துப்போன காதலனுக்கு கடிதம்

     உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி எழுதி , யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடிதத்தை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ள என்றா? அல்லது பாசத்துடன் என்றா? அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்.., 
    என்னை எப்படியடா மறந்தாய்? உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டு ஆண்டுகளா என்ன? நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.
       எனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடியெடுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது?
 
உன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ? என் மீதான உன் வேட்கை அதிகமானதா? பிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்து இருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின் விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும்!!??

  மீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,
அதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரிவோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,
   நீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் என் பிரிவை எண்ணி உன் கண்ணில் கண்ணீர் அரும்பியதே மறந்துவிட்டாயா? பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா
  பின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்ற பின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,
 
பின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்!!??
   ஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்பதுகிலோ வெள்ளி, "புதுவண்டி" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்!!
 
     உன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் "ஓட்டி"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை "ஓட்டி" பழகியிருக்கிறேன் என்றாய்..,
   மெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,நீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் பமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன் .நீ என் நில பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி....,
 
    "சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா? ,இதற்கு நீ என்னை அழித்ே  போட்டிருக்கலாம்
இப்படிக்கு,
உன் பிரிவை எண்ணி வாடும்
உன் மிதிவண்டி
           

   சே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்.., 
    காலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந் ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்கு அவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.
 
  அவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.
மருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு "இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றது நினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .
 
காலையில் முதல் வேலையா எழுந்து "ஷெட்டுல இருக்குற தன்னோட பழைய மிதிவண்டியை போய் பார்க்கனும்" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போனன்.



Monday, April 23, 2012

கழுதையாக மாறிய ஹீரோ - ஐஞ்சுவை அவியல்

சிவனின் அம்சம்...,                
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.


ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.


ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.


ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.


இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
                               
கழுதையாக மாறிய ஹீரோ...
டைரக்டர்: ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!  
ப்ரொடியூசர்: சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையா மாத்திடறது மாதிரி எடுத்திடலாம். 
                                 
கணக்கு போடலாம் வாங்க...,
ஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ 1, 50காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையை கொடுக்க கூடியவை. பையில் எத்தனை எத்தனை காசுகளாக இருந்தது. பையிலிருந்த மொத்த பணமிருந்தது?
விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்....,  
எப்படிலாம் யோசிக்குறான்!? 
சமீபத்துல என் பொண்ணு தூயா படிப்பு விசயமா வேலூர்ல இருக்குற இன்ஜினியரிங் காலேஜுக்கு நான், தூயா, என் பையன் அப்பு மூணு பேரும் போனோம்.  அப்போ எதாவது சாப்பிடலாமேன்னு அங்கிருக்கும்  கேண்டீனுக்கு போனோம். 
ஜூஸ் கார்னர்ல போய் என்ன ஜூஸ் இருக்குன்னு கேட்டோம். அவங்க ஜூஸ் பேரை சொல்லிக்கிட்டே வந்தாங்க. JAVA green juice, JAVA Blue juice,  JAVA Orange juicen ன்னும்,  அது புதுசா இருக்கவே JAVA green juice ஒண்ணு வாங்கி வந்து குடிக்க ஆரம்பிச்சவன் திடீர்ன்னு...,
 ஏம்மா, இது  இன்ஜினியரிங் காலேஜ் அதனால ஜூஸுக்கு JAVAன்னு பேர் வச்சிருக்காங்க. இதுவே மெடிக்கல் காலேஜா இருந்தா, tablet, injection, pshiyoன்னு பேர் வைப்பாங்களான்னு கேட்டான். அதை கேட்டு அங்க இருந்த ஸ்டூடண்ட்ஸ்லாம் எப்படிலாம் யோசிக்குறடான்னு கிண்டல் பண்ண, அவன் அசடு வழிய நின்னான்.
செஞ்சுதான் பாருங்களேன்..., 
பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம். வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது. மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும்.