Thursday, July 11, 2013

”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ?!


*  அம்மனுக்கு, பெருமாளுக்கு, பாதாள பைரவிக்குன்னு  நேர்ந்துக்கிட்டு அடிக்கடி  உண்ணாவிரதமிருக்குறவங்களை  ஹோட்டலில் வேலைக்கு வச்சா  ஹோட்டல் முதலாளிக்கு நல்ல லாபம்!!


*ரேஷன் கடையில் வேலை பார்க்குறவங்களை எல்லா ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல், காலேஜ்ல குழாய் மெக்கானிக்காக போட்டா நீரை வேஸ்டாக்காம,  மண்ணெண்ணெய் போல லிட்டர் கணக்கில் மிச்சப்படுத்தி தருவாங்க!!


* கணக்குக் காட்டாத பைனான்ஸ் கம்பெனி ஆளுங்களை ஓட்டப்பந்தயத்துல சேர்த்துவிட்டா கண்டிப்பா  ஒலிம்பிக்கில  கோல்ட் மெடல் கிடைக்கும்!!


* மல்லிகைப்பூ வியாபாரிகளை, ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல் காலேஜ் கேண்டீன்ல   வேலைக்கு சேர்த்தா காய்ஞ்சுப் போன  இட்லியைக் கூட மல்லிகைப்பூ போல பரிமாறி வியாபாரத்தைப் பெருக்கலாம்!!


*  போலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வெச்சா  இன்னும் நிறைய ஆடு, கோழி, மாடு, மீன்லாம் சாகும், அதனால லாபம் கொட்டும்!! 


* கிரிக்கெட்டுல பாலை போட்டோமா எதிரியை அவுட் ஆக்குனமான்னு இல்லாம பந்தை உருட்டுறவகளை ஹாக்கி அணியில சேர்க்கலாம்!!


* என்ன சொல்லியும் திருந்தாம அதிகமா சிகரெட் பிடிக்குறவங்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணத்துல  வேலைக்கு சேர்க்கரெக்கமெண்டேஷன் பண்ணலாம்.


  * குடிச்சுட்டு  கண்டபடி உளர்றவங்களை வயல்ல  குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைக்கு பதிலா  நிக்க வைக்கலாம் (ஆனா, அதுக்கு முன்னாடி வயல்வெளிலாம் எங்கிருக்குன்னு கண்டுப்பிடிக்கனும்..)!!.


* காரணமே இல்லாம அடுத்தவங்க மேல  ”வள்.., வள்”ன்னு  கோபப்படுபவர்களை ஜூவுல  காட்சிப்பொருளாக வெச்சா..,  இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான்  மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க!! 


*மத்தவங்க  காசை ஆட்டையப்போட்டு  வெள்ளையும் சொள்ளையுமா இருக்குறவங்களை, ரயில்மறியல் போராட்டத்துல படுக்கவைத்து நூதனமாக தண்டவாளத்துக்கு ஆப்பு வைக்கலாம்!!


* குடிச்சுட்டு வண்டி ஓட்டுறவங்களை டிரைவர் வேலைக்கு வெச்சா,  அவங்க குடும்பத்துக்கு  இன்சூரன்ஸ் பணம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கு!! கூடவே அவங்க வாரிசுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்பிருக்கு!!


*பிட்பாக்கெட்ஆசாமிங்களை காலேஜ், ஹாஸ்பிட்டல்,ஸ்கூல்ல வாட்ச்மேனாபோட்டா, மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாம ஒரு ரூபா கூட வெளி கேட் தாண்டி போகாது!!

* உடம்பு நல்லா இருந்தும்  கண் தெரியலை, காது கேக்கலைன்னு பொய் சொல்லி பிச்சை எடுக்குறவங்களை வச்சு படம் எடுத்தா ஆஸ்கார் நிச்சயம்!!
*குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன்ன்னு மிரட்டினா நதிநீர் பிரச்சனையே வராது!!

டிஸ்கி: முகநூல்ல இருந்து சுட்டு பட்டி, டிங்கரிங்க் பார்த்தது.., இப்படி  சொல்லாமயே இருப்பேன். ஆனா, கடைசி டிப்சுக்காகதான் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்!!

24 comments:

 1. டிங்கரிங்க் நல்லாவே பார்த்துள்ளீர்கள்...!

  ReplyDelete
 2. யக்கோவ்... உங்களுக்கு மட்டும் எப்படி மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யுதுங்க...

  ReplyDelete
  Replies
  1. யாரு தங்கச்சி தெரியுமுல்ல ? ஹா ஹா ஹா....

   Delete
 3. வீட்டு காரங்க மண்டையை பூரிக்கட்டையால் பதம் பார்கிறவுங்களுக்கு என்ன வேலை கொடுக்கலாம்????

  ReplyDelete
  Replies
  1. சிரிப்ப அடக்க முடியவில்லை சகோ .நல்ல கேள்வி :))))))))))))

   Delete


  2. ஆஹா....... தங்கச்சிய காட்டி கொடுக்காதீங்கய்யா...

   Delete
 4. கற்பனை நல்லா இருக்கு..!

  ReplyDelete
 5. இப்படியெல்லாம் யோசிக்க டைம் இருக்கா ?

  ReplyDelete
 6. யூஸ் பண்ணலாம் பிரச்சனை வராம இருந்தாசரி...

  வித்தியாசமான சிந்தனை...

  ReplyDelete
 7. நல்ல யூஸ்புல் சிந்தனையைத் தேடி பிடித்து டிங்கரிங் செய்து
  எங்களுக்குப் பதிவாக்கியமைக்கு மிக்க நன்றி ராஜி மேடம்.

  (எப்படித்தான் இப்படி சிந்திக்கிறாங்களோ...ம்ம்ம்!!)

  ReplyDelete
 8. நல்ல சிந்தனை! :)

  டிங்கரிங், பட்டி பார்க்கறது எல்லாம் நல்லாத்தான் பாக்குறீங்க!

  ReplyDelete
 9. ஆஹா எப்படிலாம் யோசிக்கிறீங்க,சூப்பர்ர்!!

  ReplyDelete
 10. அட வித்தியாசமான சிந்தனை..

  ReplyDelete
 11. ///காரணமே இல்லாம அடுத்தவங்க மேல ”வள்.., வள்”ன்னு கோபப்படுபவர்களை ஜூவுல காட்சிப்பொருளாக வெச்சா.., இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க!! ///


  நீங்க சொன்னது எல்லாம் சரி ஆனா இங்கேதான் கொஞ்சம் இடிக்குது ”வள்.., வள்”ன்னு கத்துவது நாய் குரங்க அல்ல குரங்கு வந்து மரத்துக்கு மரம் தாவுவது அதனால் எம் எல் ஏக்களை ஜூவுல காட்சிப்பொருளாக வெச்சா.., இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க!!


  என்ன நான் சொல்வது சரிதானே /

  ReplyDelete
  Replies
  1. சரி சரி டிங்கரிங் கூகுள் செய்த சதியே ஹி ஹி....

   Delete
 12. Romba Romba nallave yosichirukkeenga. Innum nalla idhumadhiriye yosinga engalukku nalla pathivu kidaikkum.

  ReplyDelete
 13. இப்பிடிதான் அருவாளை குண்டக்க மண்டக்க வீசனும் அப்போதான் இது நாஞ்சில்மனோ தங்கச்சின்ர பயம் இருக்கும் எல்லாருக்கும் ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 14. நல்லாத்தான் யோசிக்கிறீங்க

  ReplyDelete
 15. அம்மனுக்கு நாராயணுக்கு வேண்டிகிட்டா சரி ..யாரு அந்த பாதாள பைரவி ..

  ReplyDelete
 16. பாதாள பைரவி கிட்ட வேண்டிகிட்டது

  ReplyDelete
 17. ஸ்ஸ்ஸ் ப்பாஆஆஆ முடியலை....

  ReplyDelete
 18. ஹா..ஹா...நல்ல கற்பனை..

  ReplyDelete