Showing posts with label சித்தர். Show all posts
Showing posts with label சித்தர். Show all posts

Friday, October 04, 2013

அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில், குரண்டி - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கன்னியாகுமரியில “கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை” அவர்கள்  பிறந்த இடம் இருக்குன்னு அங்க போகலாம் ன்னு பிளான் பண்ணி போகும்போது, பச்சை பசேல்ன்னு வயல் சூழ்ந்து பார்க்கவே ரம்மியமா இருந்துச்சு. சரி, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு வண்டியை விட்டு இறங்கி அக்கம் பக்கம் நோட்டம் விட்ட போது, த்த்த்தூரத்துல இயற்கை கொஞ்சும் இடத்துல  சின்னதா ஒரு கோவில் தெரிஞ்சுது. நீதான் பதிவராச்சே!?  என்னை பத்தி ஊரு உலகத்துக்கு நீதான் அறிமுகப்படுத்தனும்ன்னு கோவில் கெஞ்சுற மாதிரி இருக்கவே,  கோவிலுக்கு போனேன். கேமராவோடு...., 

சுத்தி முத்தியும், ஒரு ஈ, காக்காவை காணோம். துணைக்கு கூப்பிட்டா எங்க வீட்டு நண்டு,. சிண்டு கூட எதும் வரலை. இருந்தாலும், பதிவருக்குண்டான கடமை நம்மை வரவேற்க.., கொஞ்சம் உதறலா இருந்தாலும் பயத்தை மனசுலயும், சிரிப்பை உதட்டுலயும் வச்சுக்கிட்டு கோவிலுக்கு போனேன்......

ஆளே இல்லாத கோவிலில இந்து அறநிலைய துறை சார்பா ஒரு அறிவிப்பு பலகை இருக்கு. அதை பார்த்துதான் சகலமும் தெரிந்து கொள்ளவேண்டியதா இருக்கு.  இந்த கோவிலோட பேரு ”அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில் ” , குரண்டி இந்த ஊர் தேரூர் பக்கத்தில இருக்கு.

போகும் வழியெங்கும் புதர் மண்டி கிடக்கிறது கவனமா தான் போகனும். சரி வாங்க கோவிலுக்கு கிட்டக்க போய் பார்க்கலாம்

முழு கோவிலும் இடிந்த நிலையில் இருக்கும் இந்த கோவிலில் தென்பக்கமா காலபைரவர் அருள் புரிகிறார்.  அவரை வணங்கிட்டு கோவிலை வலம் வர தொடங்கினோம். அங்க சிலர் பூஜைகள் செய்வது போல தான் தெரியுது.

கோவிலின் முன்னே பலி பீடங்களும்,  வரிசையா அடுத்தடுத்து காணபடுது. அங்க பாதம் போன்ற ஒரு அமைப்பு காணப்படுது.   ஒவ்வொரு பலிபீடங்களிலும் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்ததற்கான தடங்கள் இருக்கு.

கொஞ்சம் பயத்தோடுதான் கோவிலை சுத்தி பார்த்தேன். உள்ள போலாமா?  வேணாமா!?ன்னு மனசுக்குள் ஒரு பயம். ஏன்னா. மேற் கூரைகள் இடிந்து விழும் நிலைல பாழடைந்து இருக்கு இக்கோவில். 

கட்டிட கலை அமைப்பு கூட பல்லவக்காலதது அமைப்புல இருக்கு. ஆனா,  குமரி மாவட்டத்தில் சேர, சோழ,பாண்டியர்கள் தான் ஆட்சி செய்திருக்காங்க. சில நாயக்கர் மன்னர்களும் ஆட்சி செஞ்சிருக்காங்க. இதெல்லாம் யோசித்து கொண்டே கோவிலை சுத்தி வந்தேன்.  

கற்கள் எல்லாம் பெயர்ந்த நிலையில் விரிசல்களுடன் இருக்கு.  கற்சுவர்கள் உள்ளே பாசிப்படர்ந்தும், சுவர்கள்லாம் மரங்களின் வேர்களால் உடைந்து காணப்படுது.  வரிகற்கள்,  மேற்கூரையே இல்லாத கருவறை இதெல்லாம் பார்த்துக்கிட்டே சிவனே நீயே துணைன்னு கோவிலுக்கு போனேன்.

 இரண்டாம் நிலையில் சக்கரம் போன்ற அமைப்பும்,  அபிஷேகம் செய்யும் நீர் வடிந்து செல்லும் அமைப்பும் காணபடுது.  அதைத்தாண்டி போனா கருவறை உள்ள சில நாக சிலைகளும், ஒரு சிவலிங்கமும், அதன் அருகில் கைகூப்பிய நிலையில் ஒரு மன்னருடைய சிலையும் காணப்படுது.

இடப்பக்கமும் ஒரு மன்னர் கும்பிட்ட நிலையிலும்,  ஒரு சிலையும் நடுவே கொன்னை மரமும் வளர்ந்து காணபடுது.   சரி கோவிலின்  வரலாறை தெரிந்து கொள்ளலாம்ன்னு அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டா யாருக்கும் சரியா சொல்ல தெரியலை.  ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டும் கோவிலுக்குள்ளயா போனே!?ன்னு  ஆச்சர்யமா கேக்க, ஏன், போனா என்னம்மான்னு நான் கேக்க!?

கோவிலுக்குள்ள,  அங்க பெரிய நாகம் ஒண்ணு இருக்கு, இந்த ஊர்க்காரங்க பார்த்திருக்காங்கன்னு சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி சொல்ல, என்னமோ என் மேலயே பாம்பு ஏறி இறங்குன மாதிரி ஒரு எஃபெக்ட் உடம்புக்குள்ள.. 

கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ள நெட்டோ!? போல்டோ இருக்காமே! அதுல இது கோரக்கரருடைய சமாதி ன்னு யாரோ சொல்லி, பலர் வந்து இங்க பூஜை பண்ணிட்டு போறங்கன்னு அந்த அம்மா சொன்னாங்க. இந்த கோவில் பத்தி தெரிஞ்சே ஆகனும்ன்னு மண்டை குடைச்சல் எடுக்க இந்த  கோவிலில் ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் யோகிஸ்வரர் குடும்பதினருக்குதான் இதைபத்தி   முழு விவரமும் தெரியும் என்பதால் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களுக்கும் முழு விவரம் தெரியவில்லை 
வருடத்துக்கு சிலமுறை பூஜை செய்வதற்கு போகும் முன்,ஆட்களை கொண்டு அங்க இருக்குற புதர்களைலாம் வெட்டிட்டு,  2 நாள் கம்பு வச்சி சத்தம் எழுப்பி பின் தான் அங்கேபோவாங்களாம் . ஏன்னா, பாம்பு பயம்.   அதனால, யாரும் இதனுள் பாதுகாப்பு இல்லாம போக வேணாம்ன்னு சொன்னார் ஆனாலும் சிலர் இங்க வந்து பூஜை செய்துட்டு போறாங்களாம்.  இந்த கோவிலை இந்து அறநிலைய துறை புதுப்பித்து கட்ரி தருவதா சொல்லி இருக்காங்களாம். 
இங்கே18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்னும் சித்தர் வரும்போது எதிரிகள் அவரை தாக்க வந்ததாகவும்,  அப்ப,   கால் காட்டி மறையும் வித்தைகாட்டி தன்னுடைய பாதங்கள் மட்டும் காட்சியாக விட்டு சென்ற இடம் இத்திருத்தலம் எனபது மட்டும் அவர்களுக்கு தெரிந்த வரலாறு . அதுக்கு சாட்சியா இரண்டு பாதங்கள் மட்டும் இங்க காணப்படுது . பூஜையோ, வழிபாடோ இல்லைன்னாலும் அதன் அழகு பார்பதற்கு மனதை கொள்ளை கொள்ளுது .

கால் வைக்க இடமில்லாத கூட்டம், எட்டுகால பூஜை, புனஸ்காரம், அன்னதானம், தேரோட்டம், நித்தம் ஒரு திருவிழான்னு இருக்குற கோவில்ல மட்டும்தான் இறைவன் திருவருள் கிடைக்குமா!? இதுப்போன்ற பூஜையே இல்லா கோவிலில்கூட இறைவன் திருவருள் கிடைக்கும்தானே!? 

அடுத்த வாரம் வேறொரு கோவில் பத்தி புண்ணியம் தேடி போற பயணத்துல பார்க்கலாம். 

Friday, August 23, 2013

சித்தர் பீடம் திருக்கச்சூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இன்னிக்கு நாம பார்க்க போறது கோவில் இல்லை. ஒரு சித்தர் வாழ்ந்துட்டு போன ஒரு பீடம். அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் உடனாய மருதீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியில் வரும் போது மாலை நேரம் கதிரவன் அந்தி சாயும் வேளை, கோவில் அருகே அழகா, அமைதியான ஒருவித ஈர்ப்போடு ”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”களின் ஜீவ சாமாதியை பார்க்க நேர்ந்தது.  சாமியார், சாமி மடம்ன்றதுல நம்பிக்கை இல்லைன்னாலும், கூட வந்தவங்க போனதாலும், பதிவு தேத்தலாம்ன்னும் போனேன். 
ஆனா, சாமியார் மடம்ன்றதை தவிர மத்த எல்லாமே பிடிச்சு போச்சு. நாங்க  சித்தர் பீடத்துக்கு போன போது உள்ளூர் குழந்தைகள் அங்க வேத பாடங்களை படிச்சுக்கிட்டு இருந்தாங்க.  அங்கே, எங்களுக்கு சித்தர்களின் வாழ்க்கை வரலாறையும், பெருமைகளையும் அங்கே இருக்கிற அம்மையார் சொன்னார்.

”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமிகள்” சேக்கிழார் பிறந்த தொண்டை நாட்டில் படப்பை என்னும் ஊரில் நெசவு தொழில் செய்யும் குடும்பத்தில் அவதரித்தாராம்.  இளமையில் குலத்தொழிலை செய்து வாழ்ந்துவந்திருக்கிறார்.  இளவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் ஞானத்தை தேடி காசிக்கு சென்றாராம். அங்கு பாம்பன் ஸ்வாமிகள் தங்கி இருந்த மடத்தில் தங்கி இருந்து தொண்டாற்றினாராம் 
”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”களின் தத்துவமும் பக்தியும், தொண்டும் பெருமானை ஈர்க்கவே கனவில் காட்சி கொடுத்து நீ தெற்கு திசையில் உள்ள திருகச்சூருக்கு சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் அம்மை அப்பனுக்கு தொண்டு செய்து அருள் பெறுவாய் என கூறினாராம்.

 மதுரை வந்து அங்கிருந்த திருஞானசம்பந்தர் மடத்தில் தங்கி இருந்து பிறகு சிதம்பரம் சென்று அங்கிருந்து படப்பை வழியாக திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசித்து  திருக்கழுகுன்றம் வந்து  வேதகிரீஸ்வரரை வணங்கிவிட்டு திருக்கசூரை வந்து சேர்ந்திருக்கிறார்.

 பின்னர் தாழக்கோவிலில் தரிசனம் செய்து ஒத்தையடி பாதைவழியே  மலைகோவிலை அடைந்தபோது தாயார் காட்சி அளித்திருக்கிறார். தாயாரை தரிசித்து விட்டு நவாப் காலத்தில் கட்டப்பட்ட கோபுரம் இல்லாத நுழைவாயில் வழியாக சென்று சுவாமியையும் அம்பாளையும் தரிசித்து வெளியே வரும்போது அவர் பார்வை மங்கி இருள் ஆனதாம்.  பிறகு ஆலயத்தினுள் செனற உடன் பார்வை தெரிந்ததாம்.  உடனே அங்கேயே தங்கி இருந்து முட்புதர்களை லாம் சீர் செய்து கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் செய்து வந்தாராம்.

இவர் இரும்பை பொன்னாக்கி அதன் மூலம் கும்பாபிஷேகம் நடத்தினாராம். கதை கேட்டப்படியே,  அவருடைய ஜீவசமாதியை தொழுது பின் வெளியே வந்தோம்.

”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”கள் அங்கே இருந்த அரசமரத்தை காட்டி இந்த மரத்தில் கிழக்கு நோக்கி ஒரு கிளை வரும்.  எப்போ அந்த கிளை வாடுதோ அப்போ என் விதி முடியும் என்றாராம்.  அதேபோல் அவர் பிச்சை எடுத்த அன்னத்தை சிவன் முன் வைத்து சிவனோடு கலந்து விட்டாராம்.  பின்பு கிழக்கு நோக்கிய நிலையில் அவரை பிரதிஷ்டை செய்து சாமாதி எழுப்பினார்களாம்.  வருடம் தோறும் அவர் சமாதியான நாளை குருபூஜை செய்து கொண்டாடி வருகின்றார்களாம்.
  
சுவாமிகளின் சமாதியை தரிசித்து விட்டு வெளியே வரும்போது அவருடைய சீடர் மௌன குரு வீராசாமிகள் ஜீவ சமாதி காணபடுகிறது.  அவர்தான் குழந்தைவேல் சுவாமிகளின் வாழ்க்கை சரிதத்தை தொகுத்து எழுதினாராம் .அதில் நிறைய தகவல்கள் காணபடுகின்றன. சித்தர் பீடத்தில் அவை கிடைகின்றன.

ஜீவ சமாதி வழாகத்தில் நல்ல பசுமையான காட்சியோடு சாய்பாபா சிறிய உருவமாக இயற்கை சூழலில் அருள் புரிகிறார்.
இச்சித்தர் பீடத்தின் கட்டிட பணிகள் கொஞ்ச கொஞ்சமா நடந்துக்கிட்டு வருது.
பீடத்தின் கருவறையையும், கோபுரமும தரிசித்து வெளியே வந்தோம் .
இந்த சித்தர் பீடத்தில் அன்னதானமும் ஒவ்வரு பொர்ணமி அன்றும் வழங்க படுகிறது நாமும் அதற்கு நம்மால் ஆனா உதவிகளை அளிக்கலாம் விருப்பம் உள்ள பக்தர்கள் "அருள்மிகு மருந்தீஸ்வரர் தியாகராஜர் திருக்கோவில் இறைபணி சபை" குழந்தைவேல் சுவாமி வீரா சுவாமி மடம்,74,மலைக்கோவில் தெரு ,திருகச்சூர் .மொபைல்  9445693021 என்ற எண்ணிர்க்கும் தொடர்பு கொள்ளலாம்


சித்தரின் ஆசிகள் கிடைத்த கையோடு அடுத்த கோவிலுக்கு பயணமானோம் ..அதை அடுத்த வாரம் அக்கோவிலின் விவரத்தோடு பார்க்கலாம்.