பாலையா என்னும் பழம்பெரும் நடிகர் பாமா விஜயம் படத்துல ஒரு வசனம் சொல்வாரு. வாழ்க்கை என்பது விசித்திரமானது. பாடம் சொல்லிக்கொடுத்து பரிட்சை வைக்காது. பரிட்சை வச்சுட்டுதான் பாடமே சொல்லிக்கொடுக்கும்ன்னு சொல்வாரு. அதேமாதிரிதான் காலமும்..... காலத்தால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு செயலும் வீணாய் நிகழ்வதில்லை. அந்த நிகழ்வின் காரண காரியத்தின் பலன் பின்னாளில் தெரியவரும். நாம் வரமா நினைச்சது சாபமா மாறும். சாபம்ன்னு வெறுத்தது வரமாகும்... சாபம் வரமான கதை புராணங்களில் பார்த்திருக்கிறோம். ராமாயணத்தில் நிகழ்ந்த ஒரு துர்மரணம் இரு வரமானதை இன்றைய தெரிந்த புராணம் தெரியாத தகவலில் பார்க்கப்போகின்றோம்..
Showing posts with label தெரிந்த கதை தெரியாத உண்மை. Show all posts

Wednesday, June 17, 2020
Wednesday, March 18, 2020
நடுவுல கொஞ்சம் கெணத்தை காணோம்.. -தெரிந்த கதை, தெரியாத உண்மை
என் கெணத்தை காணோம். வட்டக்கிணறு, வத்தாத கிணறுன்னு வடிவேலு காமெடியை போல ஊருக்குள் இருந்த கிணறுலாம் காலப்போக்கில் காணாம போயிட்டுது.
Wednesday, May 29, 2019
ராமர் பாலம் உண்மையா?! பொய்யா?! - தெரிந்த கதை.. தெரியாத உண்மை
இன்று நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில்,இராமர் பாலம் பற்றிய சில உண்மைகளையும், ஆச்சர்யமூட்டும் தகவல்களையும் பார்க்கபோகிறோம். இராமர் பாலம் என்று ஒரு பாலம் இருந்ததா?இல்லையா? என பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்ற வேளையில் அது உண்மையா? பொய்யா?என நாம் இங்கே விவாதங்கள் செய்ய இந்தபதிவினை தொடரவில்லை. சில மரபுவழி கதைகளையும், சில வரலாற்றுரீதியான உண்மைகளையும் அதற்கான ஆதாரங்களையும் மட்டும்தான் இங்க பார்க்க போகிறோம்.
இராமர் பாலம் எனபது வரலாற்று தொன்மைமிக்க பாலம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த ராமர் பாலம் கடலுக்கடியில் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் அமைந்திருகிறது.மேலும் திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்கள் இதற்கு சான்று. இதனால் இராமாயணம் சொல்வது உண்மைதான்..பாக் நீரிணைப்பில் உள்ள இப்பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது.இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிக்கின்றன.இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர்.கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் ,முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்லலாம் என சொல்லபடுகிறது. 1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.இராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் 8 வது திட்டை ‘இராமர் திட்டை’ என்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு “நீராட்டல்” எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.மேலும் படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார்.இராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டியது கேமன் இந்தியா என்ற நிறுவனம், இந்த இராமர் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது. இராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த இராமர் பாலம் கட்டப்பட்டது. கி மு 1450 வாக்கில் இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் .அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன அதை சிலர் மரபுவழி செய்தியாகவும் சொல்வதுண்டு.
இந்த இராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான். இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் இருந்தது அங்கே சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதுபோல ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வந்த ஒருகல்லை காட்சிக்கு வைத்திருந்தனர் அங்கு வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த கற்கள் மிதந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இந்த இராம சேது என கூறப்படுகிறது. இதை வெரும் ஐந்து நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நளன் என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது, என சொல்லபடுவதுண்டு.இராம சேது இதை பற்றிய குறிப்புகள் கதைகள் நம்முடைய இதிகாசங்களில் இருக்கின்றன. இராவணனின் ஒற்றன் ஷார்துலா என்பவன் அக்கரையில் முகாம் கொண்டிருக்கும் வானர சேனைகளை பார்த்து பயந்து, இராவணனுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினான். உடனே இராவணன் வானரர்களால் தானே இராமனுக்கு பலம் என அறிந்து தன்னுடைய ராஜ தந்திரங்களை பிரயோகித்தான். சுகா என்ற தன்னுடைய பிரதிநிதியை, சுக்ரீவனிடம் அனுப்பி வாலிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும், தான் சுக்ரீவனை உடன் பிறவா சகோதரனாக மதிப்பதாகவும் சொல்லி, தூது அனுப்பினான். மேலும், சுக்ரீவன் இராமனை விட்டுவிட்டு தன் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்த ஓலையை வானரர்களின் முகாமிற்கு எடுத்து சென்ற போது காவலர்களால் பிடிக்கப்பட்டு அவையின் முன்னே நிறுத்தபட்டான் சுகா. வானரர்கள் அவனை கொல்ல பாய்ந்தனர் .சுகா தன் உயிருக்குப் பயந்து அலறவே அதைகேட்டு வந்த இராமர் எதிரியின் பிரதிநிதியாக வந்திருப்பவரை துன்புறுத்துவது தவறு எனகூறி அவனை விடுவிக்க சொன்னார்.
சுகா இலங்கைக்கு திரும்ம்பி செல்ல ஆயத்தமான போது அவன் வானரர்களின் பலம் மற்றும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சியையும் இராவணனிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பலம் மற்றும் பலவீனம் எதிரிக்கு தெரிந்து விடகூடும்m எனகருதி அவனை கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டான் அங்கதான். வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாக கடலை கடந்து அக்கரைக்கு சென்ற பிறகு தான் சுகாவை விடுவித்தனர். இதை விட சுவராஷ்யமான கதை ஒன்று உண்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியாகிவிட்டன. அபொழுது, கட்டுமான பணிசெய்யும் வானரங்களுக்கு தலைமை நளன் என்னும் வானரம். அவர் ஆஞ்சநேயர் கொடுக்கும் பாறைகளை வலக்கையில் தாங்கி வைத்திருப்பதால் அடுத்தடுத்து ஹனுமன் கொடுக்கும் பாறைகளை, இடக்கையால் வாங்கி பாலத்தில் சேர்த்தார் நளன், அதற்கு ஹனுமன், நான் கொடுக்கும் பாறைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே இந்த நளன், முதலமைச்சரான என்னை மதிக்கவில்லை, என்று எண்ணி தானே அணையில் பாறைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால், அந்த பாறைகள் அனைத்தும் கட்டுமானத்திற்குள் சேராமல் கடலில் மூழ்கி விட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டு இருந்தார் நம் இராமச்சந்திர மூர்த்தி, உடனே ஆஞ்சநேயரை பார்த்து ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இதை பார்த்து கொண்டிருந்த இளவல் இலட்சுமணர் இராமரைப் பார்த்து "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன.ஹனுமான் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அழுந்தி விடுகின்றன. ஏன்?"என்று கேட்டார்.அதற்க்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம். நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும்.அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகமாகும் அதனால் தான் மாதவேந்திரர் என்ற மகரிஷி,ஒருமுறை, ஒரு கானகத்தினுள் சூர்ய கிரகணம் அன்று நீரில் ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார்.அபொழுது இந்த நளன் என்னும் வானரம் குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது எனபது பிடித்தமான ஒன்று. அது நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடி கொண்டிருந்தது முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்.
மாதவேந்திரர் பலமுறை அந்த குட்டி குரங்கை விரட்டியும் நளன் என்ற அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டே தான் இருந்தது, ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் அம்முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க கடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம்செய்ய தொடங்கினார். குரங்கு தான் எறியும் கற்கள் முழுகாமல் மிதப்பதினால் விளையாட்டின் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த ஜபத்தின் நன்மையால் தான், இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அழுந்தாமல் மிதக்கின்றன என்றரர், ஸ்ரீ ராமர் .அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும் என ஸ்ரீ ராமச்சதிர மூர்த்தி லட்சுமணிடம் கூறினார். இவ்வாறாக வானரங்கள் இரவு பகலாக பணி செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தன.அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருணபகவான் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்.
இந்த இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு பல்வேறு கதைகள் சொல்லபடுகிறது. இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும்,ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான, ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது எனவும்.ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் கதைகள் உண்டு. ஆனால், உண்மை என்னவென்று அடுத்துவரும் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாக பார்க்கலாம். மேலும் இதிலும் சிறப்பு என்னவென்றால் புத்தர் இந்த பாலத்தின் மீது நடந்து சென்றதாகவும் வரலாறு உண்டு.
இந்த ராமர் பாலம் எவ்வாறு ஆதம் பாலம் என மாற்றி அழைக்கப்பட்டது என பார்ர்க்கலாம். உலக புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் எடுக்க பட்ட ஆய்வுகள், அறிக்கையாக சமர்பிக்கப்பட்டன. அதில் 1747 ல் நெதர்லாந்த் நாட்டில் உள்ள ஒரு அறிக்கையில் தனுஷ்கோடிக்கு முன்னே ஒரு கோவில் இருந்ததாகவும் தெளிவாக இந்த இராமர் பாலத்தை, இராமர் பிரிட்ஜ் என்றே குரிபிடுகின்றனர். அவர்கர் (டச்சுகாரர்கள் )அந்த சமயத்தில் இந்தோனேஷியா தீவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள்.
மேலும் 1788 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜோசப் பார்க்ஸ் என்ற தாவரவியல் ஆராய்ச்சியாளர் இராமர் கோவிலை பார்த்து, இராமர் கோவில் என்று எழுதி தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்க கூடிய அந்த பாலத்திற்கு இராமர் பாலம் என தெளிவாக விளக்கியுள்ளார்.அந்த வரைபடம் முகலாய சக்ரவர்த்திகளின் ஹிந்துஸ்தான் வரைபடங்கள் (Hindhusthaan Map of Mohal Empaires ) என்ற நூலில் 5 X 6 அடி வரைபடமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்னமும் இருக்கிறது.
இது பிரிடிஷ்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கி பி 1799 ல எடுக்கப்பட்டது அவற்றில் கூட இராமர் பிரிஜ் .இராமர் பிரிஜ் இ ராமர் பிரிஜ் என்றுதான் வரிக்கு வரி சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வறிக்கை மேலும் சிங்கள தீவிற்கும் பாரதத்திற்கும் நடுவில் இருக்க கூடிய ஒரு பாலம் இதில் நடந்து கொண்டு இருக்கிறார்கள், இது நடை பாதை,இங்கு மக்களும் இதில் இருக்கும் திட்டுகளில் வாழ்கிறார்கள், என்று கூறுகிறது.ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல் புவியல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ரன்னல் என்னும் ஆங்கிலேயே அதிகாரி இந்த இராமர் பாலத்தை ஆடம் பிரிட்ஜ், என 1804 ம் ஆண்டு மாற்றி எழுதினார். அதிலிருந்து 1804 க்கு பிறகு வந்த வரைபடங்களில், இராமர் பாலம் ஆதாம் பாலமாக மாற்றி எழுதபட்டது.
இதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது இராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்.துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago) ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார். அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார். இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே, இராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில், மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில், இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார். எப்படி இராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது. மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது.நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.
அதேபோல அல்-பிருனி (Abū al-Rayhān Muhammad ibn Ahmad al-Bīrūn known as Al-Biruni )என்ற இஸ்லாம் அறிஞர், இவரது காலம் 4 அல்லது 5 செப்டம்பர் 973 முதல் 13 டிசம்பர் 1048 வரை, இவர் கூட இந்த இராமர் பாலத்தை பற்றி குறிபிடுகிறார். அதை சேது பந்து என குறிபிடுகிறார். இராமேஸ்வரத்திர்கும், அஹ்னா என்ற இடத்தையும் (ஸ்ரீலங்காவில் இருக்க கூடிய ஒரு கிராமத்தின் பெயர்) அதை இரமேஸ்வரத்தோடு இணைக்க கூடிய பாலத்தின் பெயர் சேதுபந்து என குறிபிடுகிறார். மேலே இருக்கும் வரைபடத்தை தெளிவாக பார்த்தல் இது புரியும்.
புராணங்களில் பண்ண்டிய மன்னர்களது காலங்களில், குமரி கண்டம் இருந்த போது, பாண்டிய நாட்டையும் சிங்கள நாட்டையும் இணைப்பது சேதுகா எனப்படும் இந்த ராம சேதுவாகும்.
நமது வேதங்களில் குரிபிடபட்டுள்ளதை போல ,தாமிரபரணி கபாடபுரத்தில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு செல்லும் வழி இந்த இராமர் சேது வழியாக செல்லும் என குறிபிடப்பட்டுள்ளது.
அதேபோல 1903 ள் மெட்ராஸ் பிரசிடென்சி அட்மினிஸ்ட்ரேட்டிவ் அறிக்கையில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள்.ஆதாம் பாலம் என்று குறிபிடுவது இராமர் பாலம் என்றும் சொல்லபடுகிறது எனவும் 1480 வரையிலும் பாரத்தையும் சிங்களத்தையும் இணைத்து இது ஒரு பாலமாக இருந்தது அந்தபாலம் அபொழுது ஏற்பட்ட ஒரு கடல்சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து தனிதனி திட்டுகளாக மாறிவிட்டன என்றும்,அப்படி தண்ணீருக்குள் மூழ்கிய பாலமானது தண்ணீருக்கடியில் 4 அடியில் இருந்து 10 அடிவரை மூழ்கியது எனவும் சொல்லப்பட்டது..மேலும், 1744 ல அலெக்சாண்டர் ஹமில்டன் என்பவர் நான் சிங்கள நாட்டிற்கு இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் என்று எழுதி இருக்கிறார்.
நம் புராணங்களில் நம் இதிகாசங்களில் இராமர் பாலம் பற்றிய குறிப்புகள் நிறைய இடங்களில் சொல்லபடுகிறது. இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், மகாபாரதத்தில் வியாசர் சொல்லுகிறார், மேலும் இரண்டாம் புரவரசேனா என்னும் ராஜா (கி பி 550-600), அவர் சேது பந்தனம் என்ற காவியமே எழுதி இருக்கிறார்.அதேபோல தாமோதர சேனா சேதுபந்தன காவியம் என்று ஒன்றையும் எழுதி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் இந்த ராம சேது என்னும் இராமர் பாலம் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது அது ஒரு புண்ணியஸ்தலம் அங்கு சென்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது .
இதை விஞ்னான பூர்வமாக நிருபித்தும் உள்ளனர். டாக்டர் பத்ரிநாராயணன் என்பவர் ஒரு ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம் சென்னை. (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி நடந்த ஒரு கருத்தரங்கில் (seminar ) ஒரு ஆய்வு அறிக்கையை (Presentation)சமர்பித்தார். அவர்களுடைய குழு இராம சேதுவில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாதிரி வடிவங்களில் துளையிட்டுள்ளனர். அதன் மாதிரிகளை எடுத்து பார்த்தபோது அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல், அதற்குமேல் கற்கள், அதற்குமேல் மணல்திடல் ,அதற்குமேல் கற்கள், என்னமாதிரி கற்கள் என்றால் Coral rocks பவள பாறைகள் கடலில் கிடைக்கும் சங்கு அவை கல்லாக மாறியிருக்கும் அவை கடலில் மிதக்கும் ஆனாலும் எடைகளையும் தாங்கும் அந்தமாதிரியான கற்களை கொண்டு இதை நிர்மாணித்திருகிறார்கள்,என்று கண்டுபிடித்து ஆய்வு அறிக்கையை தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்த பாலம் திட்டமிடப்பட்டு செய்யபட்டது ,என்று அந்த ஆய்வின் மூலம் தெரியபடுதபட்டுள்ளது .இந்த அமைப்பில் பவளப்பாறைகள் இந்த இடத்தில இருக்க வாய்ப்புகள் இல்லை எனவும், பவளப்பாறைகள் இந்தமாதிரி, அமைப்பில் மாற வாய்ப்பு இல்லை எனவும்,அவை வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்றும் இதற்கான ஆதாரம் இராமேஸ்வரத்திலும் சரி, மகா தீர்த்தத்திலும் சரி, ஸ்ரீ லங்கா பகுதிகளிலும் சரி, கற்களால் ஆன ஆயுதங்களை உபயோக படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆயுதங்களினால் பவளபாறைகள் செதுக்கபட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது,என ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் .
மார்ச் 2007 ல நம்முடைய அரசாங்கமும் இதைபற்றிய தெளிவான அறிக்கைகளை கொடுத்துள்ளது. பதிவின் நீளம் கருதி அந்த படத்தை இடமுடியவில்லை. மேலும், சில கல்வெட்டுகளின் மூலம், கிருஷ்ண தேவராயர் 1508 ல் எழுதிய சாசனத்தில் என்னுடைய சாம்ராஜ்யம் இராமர் சேது அதாவது இராமர் பாலம் வரையிலும் இருந்கிறது .நான் மேருவிர்கும் சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
சோழ மன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் 1000 ம் வருடங்களுக்கு முன்னால் வேலாம்சேரி செப்பு தகட்டில், அவர் சேது தீர்த்தத்திற்கு சென்றதும், துலாபாரம் கொடுத்ததையும் பொறித்துள்ளார். இதைதவிர ஆயிரகணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சேது காசுகள் என்றும் ஆரிய சக்ரவர்த்தி காசுகள் என்றும் அழைக்கப்பட்டன. இதில் சேது என்று அழகாக தமிழில் எழுதபட்டு இருக்கிறது இதற்க்கு மேலும் நிறைய ஆதராங்கள் இருகின்றன அவற்றை எல்லாம் இங்கே ஆதாரத்துடன் விளக்க ஆரம்பித்தால் பிறகு நம்முடைய பதிவு ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டுதான் செல்லும். இவ்வுவளவு, ஆதாரங்களையும் படிக்காமல் ஒருவர் இராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றை படிக்கவில்லை வரலாற்றை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். மீண்டும் சுவாரஸ்யமான கதையுடன் அடுத்தவாரம் தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம்..
மீள்பதிவு..
நன்றியுடன்,
ராஜி
இராவணன் சீதையை தூக்கி சென்றதினால்தான் இராமர் பாலம் தோன்ற காரணமாயிருந்தது. அதனால்தான் சீதையை மீட்க இராம, இராவண யுத்தம் தொடங்கியது. சீதாபிராட்டியை இராவணன் தூக்கி செல்லும்போது ஜடாயு என்ற பறவை இராவணணை வழிமறித்தது. ஜடாயுவுக்கு மட்டும் ஏன்? இராமன்மீது அவ்வளவு பாசம். அந்த பாசத்தின் பின்னும்
ஒரு சிறிய கதை உண்டு கருடனை நம் எல்லோருக்கும் தெரியும். அந்த கருடனின் அண்ணன் அருணன்.இந்த அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு, ஒருமுறை சம்பாதிக்கும் ஜடாயுவுக்கும் இடையில் ஒரு போட்டி, இருவரில் யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான்.அப்போது, சூரிய வெப்பத்தால் சம்பாதியின் சிறகுகள் கருகின. முடிவில் இராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன. ஆகையால்,இருவருக்கும் ராமன்மீது தீராத பக்தி உண்டு

இராவணன் சீதையை தூக்கி செல்லும்போது பராக்கிரமம்மிக்க ஜடாயு இராவணன்மேல் பாய்ந்து தாக்கினான் இராவணன், தன்னுடைய கொடிய வேலை ஜடாயுவின்மீது எறிந்தான் அந்த வேலினால் ஜடாயுவை ஒன்றும் செய்ய முடியவில்லை.மேலும் ஜடாயு இராவணனின் மார்பிலும் தோள்களிலும் தன் சிறகுகளால் ஓங்கி அடித்தான்.அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். ஜாடயுவை எந்த ஆயுத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகையால், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளினை கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான்.இந்த சந்திரகாசம் என்னும் வாளுக்கும்் ஒரு தனிக்கதை உண்டு.
இராவணன் பலமுறை பலரிடம் தோற்றதினால் துவண்டு போயிருந்தான். வாலியிடம் ஒருமுறை நேருக்குநேர் யுத்தத்திலும் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்று போனான்.மேலும் கைலாயத்தில் சென்று தன்னுடைய பராக்கிரமத்தை காட்டவே சிவபெருமானின் கால் கட்டைவிரலால் அழுந்தபட்டு மலையின் கீழ் நசுங்கி கிடந்தான்.அப்பொழுது, தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து அதன் மூலம் கானம் இசைத்து சிவனின் அருளை பெற்றான்.சிவன் அளித்த ஆயுதமே சந்திரகாசம், என்னும் வாள். இந்த சந்திரகாசமானது இந்திரனின் வஜ்ராயுதத்தை விடவும் பலம் பொருந்தியது இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது அதனால் தான் ஜடாயு வீழ்ந்தபோது மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் எனவும் சொல்லப்படுவதுண்டு.
ஜடாயு கூறியதை வைத்து சீதா பிராட்டியை தூக்கி சென்ற இலங்கேஸ்வரனான இராவணனை வதம் செய்ய ஸ்ரீ ராமர் தலைமையில், ஹனுமன் அமைத்த பாலமே, இது என்று சொல்லும் இலங்கை வாழ் மக்கள், இதை ஹனுமன், பாலம் என்றும் சொல்வதுண்டு,இந்த இராமர் பாலத்தின் கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்களையும் அதிசயங்களையும் நாசா அண்மையில் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படபடங்களை கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக தெளிவாக ஒரு செய்தியை வெளியிட்டது. இராமர் பாலம் உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் உள்ள உயர்தரமான பொறியியல் தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு பாலத்தை கட்டமுடியாது,என கூறியது. மேலும் இராமர் பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல,மற்றும் இது வெறும் கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மேலும்,இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை இதன் முனைகள் உறுதியாக மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் என தெளிவாக தெரிகிறது என ஒரு அறிக்கயை வெளியிட்டது.இராவணன் பலமுறை பலரிடம் தோற்றதினால் துவண்டு போயிருந்தான். வாலியிடம் ஒருமுறை நேருக்குநேர் யுத்தத்திலும் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்று போனான்.மேலும் கைலாயத்தில் சென்று தன்னுடைய பராக்கிரமத்தை காட்டவே சிவபெருமானின் கால் கட்டைவிரலால் அழுந்தபட்டு மலையின் கீழ் நசுங்கி கிடந்தான்.அப்பொழுது, தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து அதன் மூலம் கானம் இசைத்து சிவனின் அருளை பெற்றான்.சிவன் அளித்த ஆயுதமே சந்திரகாசம், என்னும் வாள். இந்த சந்திரகாசமானது இந்திரனின் வஜ்ராயுதத்தை விடவும் பலம் பொருந்தியது இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது அதனால் தான் ஜடாயு வீழ்ந்தபோது மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் எனவும் சொல்லப்படுவதுண்டு.
இராமர் பாலம் எனபது வரலாற்று தொன்மைமிக்க பாலம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த ராமர் பாலம் கடலுக்கடியில் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் அமைந்திருகிறது.மேலும் திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்கள் இதற்கு சான்று. இதனால் இராமாயணம் சொல்வது உண்மைதான்..பாக் நீரிணைப்பில் உள்ள இப்பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது.இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிக்கின்றன.இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர்.கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் ,முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்லலாம் என சொல்லபடுகிறது. 1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.இராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் 8 வது திட்டை ‘இராமர் திட்டை’ என்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு “நீராட்டல்” எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.மேலும் படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார்.இராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டியது கேமன் இந்தியா என்ற நிறுவனம், இந்த இராமர் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது. இராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த இராமர் பாலம் கட்டப்பட்டது. கி மு 1450 வாக்கில் இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் .அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன அதை சிலர் மரபுவழி செய்தியாகவும் சொல்வதுண்டு.
இந்த இராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான். இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் இருந்தது அங்கே சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதுபோல ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வந்த ஒருகல்லை காட்சிக்கு வைத்திருந்தனர் அங்கு வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த கற்கள் மிதந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
சுகா இலங்கைக்கு திரும்ம்பி செல்ல ஆயத்தமான போது அவன் வானரர்களின் பலம் மற்றும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சியையும் இராவணனிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பலம் மற்றும் பலவீனம் எதிரிக்கு தெரிந்து விடகூடும்m எனகருதி அவனை கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டான் அங்கதான். வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாக கடலை கடந்து அக்கரைக்கு சென்ற பிறகு தான் சுகாவை விடுவித்தனர். இதை விட சுவராஷ்யமான கதை ஒன்று உண்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியாகிவிட்டன. அபொழுது, கட்டுமான பணிசெய்யும் வானரங்களுக்கு தலைமை நளன் என்னும் வானரம். அவர் ஆஞ்சநேயர் கொடுக்கும் பாறைகளை வலக்கையில் தாங்கி வைத்திருப்பதால் அடுத்தடுத்து ஹனுமன் கொடுக்கும் பாறைகளை, இடக்கையால் வாங்கி பாலத்தில் சேர்த்தார் நளன், அதற்கு ஹனுமன், நான் கொடுக்கும் பாறைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே இந்த நளன், முதலமைச்சரான என்னை மதிக்கவில்லை, என்று எண்ணி தானே அணையில் பாறைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால், அந்த பாறைகள் அனைத்தும் கட்டுமானத்திற்குள் சேராமல் கடலில் மூழ்கி விட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டு இருந்தார் நம் இராமச்சந்திர மூர்த்தி, உடனே ஆஞ்சநேயரை பார்த்து ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இதை பார்த்து கொண்டிருந்த இளவல் இலட்சுமணர் இராமரைப் பார்த்து "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன.ஹனுமான் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அழுந்தி விடுகின்றன. ஏன்?"என்று கேட்டார்.அதற்க்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம். நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும்.அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகமாகும் அதனால் தான் மாதவேந்திரர் என்ற மகரிஷி,ஒருமுறை, ஒரு கானகத்தினுள் சூர்ய கிரகணம் அன்று நீரில் ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார்.அபொழுது இந்த நளன் என்னும் வானரம் குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது எனபது பிடித்தமான ஒன்று. அது நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடி கொண்டிருந்தது முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்.
மாதவேந்திரர் பலமுறை அந்த குட்டி குரங்கை விரட்டியும் நளன் என்ற அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டே தான் இருந்தது, ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் அம்முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க கடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம்செய்ய தொடங்கினார். குரங்கு தான் எறியும் கற்கள் முழுகாமல் மிதப்பதினால் விளையாட்டின் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த ஜபத்தின் நன்மையால் தான், இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அழுந்தாமல் மிதக்கின்றன என்றரர், ஸ்ரீ ராமர் .அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும் என ஸ்ரீ ராமச்சதிர மூர்த்தி லட்சுமணிடம் கூறினார். இவ்வாறாக வானரங்கள் இரவு பகலாக பணி செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தன.அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருணபகவான் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்.
இந்த இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு பல்வேறு கதைகள் சொல்லபடுகிறது. இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும்,ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான, ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது எனவும்.ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் கதைகள் உண்டு. ஆனால், உண்மை என்னவென்று அடுத்துவரும் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாக பார்க்கலாம். மேலும் இதிலும் சிறப்பு என்னவென்றால் புத்தர் இந்த பாலத்தின் மீது நடந்து சென்றதாகவும் வரலாறு உண்டு.
இந்த ராமர் பாலம் எவ்வாறு ஆதம் பாலம் என மாற்றி அழைக்கப்பட்டது என பார்ர்க்கலாம். உலக புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் எடுக்க பட்ட ஆய்வுகள், அறிக்கையாக சமர்பிக்கப்பட்டன. அதில் 1747 ல் நெதர்லாந்த் நாட்டில் உள்ள ஒரு அறிக்கையில் தனுஷ்கோடிக்கு முன்னே ஒரு கோவில் இருந்ததாகவும் தெளிவாக இந்த இராமர் பாலத்தை, இராமர் பிரிட்ஜ் என்றே குரிபிடுகின்றனர். அவர்கர் (டச்சுகாரர்கள் )அந்த சமயத்தில் இந்தோனேஷியா தீவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள்.
மேலும் 1788 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜோசப் பார்க்ஸ் என்ற தாவரவியல் ஆராய்ச்சியாளர் இராமர் கோவிலை பார்த்து, இராமர் கோவில் என்று எழுதி தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்க கூடிய அந்த பாலத்திற்கு இராமர் பாலம் என தெளிவாக விளக்கியுள்ளார்.அந்த வரைபடம் முகலாய சக்ரவர்த்திகளின் ஹிந்துஸ்தான் வரைபடங்கள் (Hindhusthaan Map of Mohal Empaires ) என்ற நூலில் 5 X 6 அடி வரைபடமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்னமும் இருக்கிறது.
இது பிரிடிஷ்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கி பி 1799 ல எடுக்கப்பட்டது அவற்றில் கூட இராமர் பிரிஜ் .இராமர் பிரிஜ் இ ராமர் பிரிஜ் என்றுதான் வரிக்கு வரி சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வறிக்கை மேலும் சிங்கள தீவிற்கும் பாரதத்திற்கும் நடுவில் இருக்க கூடிய ஒரு பாலம் இதில் நடந்து கொண்டு இருக்கிறார்கள், இது நடை பாதை,இங்கு மக்களும் இதில் இருக்கும் திட்டுகளில் வாழ்கிறார்கள், என்று கூறுகிறது.ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல் புவியல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ரன்னல் என்னும் ஆங்கிலேயே அதிகாரி இந்த இராமர் பாலத்தை ஆடம் பிரிட்ஜ், என 1804 ம் ஆண்டு மாற்றி எழுதினார். அதிலிருந்து 1804 க்கு பிறகு வந்த வரைபடங்களில், இராமர் பாலம் ஆதாம் பாலமாக மாற்றி எழுதபட்டது.
இதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது இராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்.துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago) ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார். அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார். இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே, இராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில், மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில், இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார். எப்படி இராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது. மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது.நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.
அதேபோல அல்-பிருனி (Abū al-Rayhān Muhammad ibn Ahmad al-Bīrūn known as Al-Biruni )என்ற இஸ்லாம் அறிஞர், இவரது காலம் 4 அல்லது 5 செப்டம்பர் 973 முதல் 13 டிசம்பர் 1048 வரை, இவர் கூட இந்த இராமர் பாலத்தை பற்றி குறிபிடுகிறார். அதை சேது பந்து என குறிபிடுகிறார். இராமேஸ்வரத்திர்கும், அஹ்னா என்ற இடத்தையும் (ஸ்ரீலங்காவில் இருக்க கூடிய ஒரு கிராமத்தின் பெயர்) அதை இரமேஸ்வரத்தோடு இணைக்க கூடிய பாலத்தின் பெயர் சேதுபந்து என குறிபிடுகிறார். மேலே இருக்கும் வரைபடத்தை தெளிவாக பார்த்தல் இது புரியும்.
புராணங்களில் பண்ண்டிய மன்னர்களது காலங்களில், குமரி கண்டம் இருந்த போது, பாண்டிய நாட்டையும் சிங்கள நாட்டையும் இணைப்பது சேதுகா எனப்படும் இந்த ராம சேதுவாகும்.
நமது வேதங்களில் குரிபிடபட்டுள்ளதை போல ,தாமிரபரணி கபாடபுரத்தில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு செல்லும் வழி இந்த இராமர் சேது வழியாக செல்லும் என குறிபிடப்பட்டுள்ளது.
அதேபோல 1903 ள் மெட்ராஸ் பிரசிடென்சி அட்மினிஸ்ட்ரேட்டிவ் அறிக்கையில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள்.ஆதாம் பாலம் என்று குறிபிடுவது இராமர் பாலம் என்றும் சொல்லபடுகிறது எனவும் 1480 வரையிலும் பாரத்தையும் சிங்களத்தையும் இணைத்து இது ஒரு பாலமாக இருந்தது அந்தபாலம் அபொழுது ஏற்பட்ட ஒரு கடல்சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து தனிதனி திட்டுகளாக மாறிவிட்டன என்றும்,அப்படி தண்ணீருக்குள் மூழ்கிய பாலமானது தண்ணீருக்கடியில் 4 அடியில் இருந்து 10 அடிவரை மூழ்கியது எனவும் சொல்லப்பட்டது..மேலும், 1744 ல அலெக்சாண்டர் ஹமில்டன் என்பவர் நான் சிங்கள நாட்டிற்கு இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் என்று எழுதி இருக்கிறார்.
நம் புராணங்களில் நம் இதிகாசங்களில் இராமர் பாலம் பற்றிய குறிப்புகள் நிறைய இடங்களில் சொல்லபடுகிறது. இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், மகாபாரதத்தில் வியாசர் சொல்லுகிறார், மேலும் இரண்டாம் புரவரசேனா என்னும் ராஜா (கி பி 550-600), அவர் சேது பந்தனம் என்ற காவியமே எழுதி இருக்கிறார்.அதேபோல தாமோதர சேனா சேதுபந்தன காவியம் என்று ஒன்றையும் எழுதி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் இந்த ராம சேது என்னும் இராமர் பாலம் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது அது ஒரு புண்ணியஸ்தலம் அங்கு சென்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது .
இதை விஞ்னான பூர்வமாக நிருபித்தும் உள்ளனர். டாக்டர் பத்ரிநாராயணன் என்பவர் ஒரு ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம் சென்னை. (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி நடந்த ஒரு கருத்தரங்கில் (seminar ) ஒரு ஆய்வு அறிக்கையை (Presentation)சமர்பித்தார். அவர்களுடைய குழு இராம சேதுவில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாதிரி வடிவங்களில் துளையிட்டுள்ளனர். அதன் மாதிரிகளை எடுத்து பார்த்தபோது அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல், அதற்குமேல் கற்கள், அதற்குமேல் மணல்திடல் ,அதற்குமேல் கற்கள், என்னமாதிரி கற்கள் என்றால் Coral rocks பவள பாறைகள் கடலில் கிடைக்கும் சங்கு அவை கல்லாக மாறியிருக்கும் அவை கடலில் மிதக்கும் ஆனாலும் எடைகளையும் தாங்கும் அந்தமாதிரியான கற்களை கொண்டு இதை நிர்மாணித்திருகிறார்கள்,என்று கண்டுபிடித்து ஆய்வு அறிக்கையை தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்த பாலம் திட்டமிடப்பட்டு செய்யபட்டது ,என்று அந்த ஆய்வின் மூலம் தெரியபடுதபட்டுள்ளது .இந்த அமைப்பில் பவளப்பாறைகள் இந்த இடத்தில இருக்க வாய்ப்புகள் இல்லை எனவும், பவளப்பாறைகள் இந்தமாதிரி, அமைப்பில் மாற வாய்ப்பு இல்லை எனவும்,அவை வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்றும் இதற்கான ஆதாரம் இராமேஸ்வரத்திலும் சரி, மகா தீர்த்தத்திலும் சரி, ஸ்ரீ லங்கா பகுதிகளிலும் சரி, கற்களால் ஆன ஆயுதங்களை உபயோக படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆயுதங்களினால் பவளபாறைகள் செதுக்கபட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது,என ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் .
மார்ச் 2007 ல நம்முடைய அரசாங்கமும் இதைபற்றிய தெளிவான அறிக்கைகளை கொடுத்துள்ளது. பதிவின் நீளம் கருதி அந்த படத்தை இடமுடியவில்லை. மேலும், சில கல்வெட்டுகளின் மூலம், கிருஷ்ண தேவராயர் 1508 ல் எழுதிய சாசனத்தில் என்னுடைய சாம்ராஜ்யம் இராமர் சேது அதாவது இராமர் பாலம் வரையிலும் இருந்கிறது .நான் மேருவிர்கும் சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
சோழ மன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் 1000 ம் வருடங்களுக்கு முன்னால் வேலாம்சேரி செப்பு தகட்டில், அவர் சேது தீர்த்தத்திற்கு சென்றதும், துலாபாரம் கொடுத்ததையும் பொறித்துள்ளார். இதைதவிர ஆயிரகணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சேது காசுகள் என்றும் ஆரிய சக்ரவர்த்தி காசுகள் என்றும் அழைக்கப்பட்டன. இதில் சேது என்று அழகாக தமிழில் எழுதபட்டு இருக்கிறது இதற்க்கு மேலும் நிறைய ஆதராங்கள் இருகின்றன அவற்றை எல்லாம் இங்கே ஆதாரத்துடன் விளக்க ஆரம்பித்தால் பிறகு நம்முடைய பதிவு ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டுதான் செல்லும். இவ்வுவளவு, ஆதாரங்களையும் படிக்காமல் ஒருவர் இராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றை படிக்கவில்லை வரலாற்றை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். மீண்டும் சுவாரஸ்யமான கதையுடன் அடுத்தவாரம் தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம்..
மீள்பதிவு..
நன்றியுடன்,
ராஜி
Wednesday, March 13, 2019
அனுமனுக்கு வால்மீகி காட்டிய நன்றிக்கடனே சுந்தர காண்டம் - தெரிந்த கதை, தெரியாத உண்மை
ராமாயணத்தை ஏழு காண்டங்களாக பிரிச்சு வச்சிருக்காங்க. எல்லார் வீட்டிலும் இருக்க வேண்டியது சுந்தர காண்டம். எதாவது கஷ்டமான சூழலில் சிக்கி தவிக்கும்போது சுந்தர காண்டத்தினை பாராயணம் செய்தால் நம்ம கஷ்டம்லாம் விலகும் என்பது நம்பிக்கை. சுந்தர காண்டம் என்பது அனுமன் சீதையை தேடி இலங்கைக்கு போனது, அங்க சீதையை கண்டது, ராமர் வருவார் என தைரியமளித்தது, அவளிடம் கணையாழி பெற்று திரும்பியது, ராம தூதன் என ராவணன் அறிந்து, அனுமன் வாலில் தீ வைப்பது, இலங்கை தீக்கிரையாக்கியது, கண்டேன் சீதையை என ராமனிடம் உரைத்தது வரையிலான செய்திகளை உள்ளடக்கியதாகும்.

ராமாயண கதையிலேயே சுந்தர காண்டத்துக்கென தனி இடம் உண்டு. பாராயணம் என்றால் மனம் ஒன்றி படிப்பது என பொருள். சுந்தர காண்டத்தினை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தீமைகள் விலகி, நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. சுந்தர காண்டத்தினை படிப்பது ராமாயணம் முழுவதையும் படிப்பதற்குச் சமம். பிரச்சனைகளில் சிக்கி, கலங்கி தவிக்கும்போது சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதால் மனத் தெளிவும், அமைதியும் ஏற்படும். வால்மீகி சம்ஸ்கிருதத்தில் எழுதிய சுலோகங்களைப் படிப்பதுதான் பாராயண முறையாகும். சம்ஸ்கிருத எழுத்துக்களைப் படிக்க முடியாதவங்க சுலோகங்களின் தமிழ்(தாய்மொழி) எழுத்து வடிவங்களைப் படிக்கலாம்.
சுந்தர காண்டத்தின் குறிப்பிட்ட சில அத்தியாயங்களை குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் படிக்கலாம் என நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். சுந்தர காண்டம் முழுசையும் படிக்குறதுலாம் இந்த எல்லாராலும் ஆகாது, சில பகுதிகளையாவது படிக்கட்டுமேன்னுகூட இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்திருக்கலாம். சீதையைக் கண்டுப்பிடிக்க முடியாமல் அனுமன் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளலாமாவென சிந்திக்கிறார். பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்த்து, ராமரை தியானித்து உற்சாக மனநிலையைப் பெறுவதை 13வது பாடல் விளக்குகிறது. இதில் மொத்தம் 73 சுலோகங்கள் இருக்கு. தினம் பத்து சுலோகங்கள்வீதம் படித்தால் ஒரு வாரத்தில் இந்த பாடலை படித்து முடிக்கலாம். அடுத்து மனச்சோர்வுடன் இருந்த சீதைக்கு சில நல்ல சகுனங்கள் தென்படுவதை 29வது பாடல் விவரிக்கிறது. இதில் இருப்பது எட்டு சுலோகங்கள்தான். தினமும் இதைப் பாராயணம் செய்வது அனைவராலும் முடியும். மனச்சோர்வாய் இருக்கும்போது இந்த பாடலை படிக்கலாம்.

ராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தின் நாயகன் ராமன், நாயகி சீதை, தியாகத்தின் உருவங்களான லட்சுமணன், பரதன், ஊர்மிளா, மண்டோதரி, வில்லனான ராவணன் என எந்த காண்டத்துக்கான தலைப்பிலும் இவர்களது பெயர்கள் இருக்காது. ஆனால், வால்மீகி அனுமனின் அரிய செயல்கள் அனைத்தையும் கொண்ட ஒரு பகுதிக்கு அனுமன் பெயரை தாங்கிய தலைப்பில் வைக்க விரும்பினார். இதற்கு அனுமன் மறுப்பு தெரிவித்தார். அப்படியே ஆகட்டுமென வால்மீகி இப்பகுதிக்கு சுந்தர காண்டம் எனப் பெயரிட்டார். பெயர்காரணத்தினை வால்மீகியிடம் அனுமன் கேட்க சுந்தரம் என்றால் அழகு. எனவே இது ஒரு அழகான (சிறப்பான) காண்டம் எனப் பொருள் கொள்ளலாம் என வால்மீகி சொல்ல, அனுமன் மனம் சமாதானமடைந்தது.

வனவாசம் முடித்து வந்த ராமனுக்கு பட்டாபிஷேகம் முடிந்தது. அனைவரும் மகிழ்ந்திருந்த ஒரு அதிகாலை வேலையில் ராமன் வேடிக்கை பார்க்க, சீதை வெள்ளி மணி ஒலிக்கு ஈடாக சிரிப்பினை சிந்த, பரதன், லட்சுமணன், சத்ருக்ணன் துரத்த, அனுமன் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தான். சகோதரகள் மூவர் கையில் ஸ்நான எண்ணெயும், ஸ்நான பொடியும் இருந்ததைக்கண்ட அன்னையர் மூவரும் என்னவென்று விசாரிக்க, இன்று அனுமனது பிறந்த நாள் அதனால் ஸ்நானம் செய்யவேண்டி அழைத்தால் மறுக்கிறார் என அன்னையர்களிடம் மூவரும் புகார் பட்டியல் வாசித்தனர். அன்னையரும் ஸ்நானம் செய்ய மறுத்ததன் காரணத்தை அனுமனிடம் கேட்க, எண்ணெய் ஸ்நானம் செய்ய நேரம் பிடிக்கும், அத்தனை காலம் என்னால் ராமனை பிரிந்திருக்கா ஆகாதென அனுமன் சொல்ல, உன் அருகிலேயே நான் இருக்கிறேன் என ராமன் வாக்களிக்க அனுமன் ஸ்நானம் செய்து முடித்தார்.

பட்டாடை உடுத்தி, அணிகலன் அணிந்து ராமனை பணிந்து நின்றார் அனுமன். அரண்மனை விழாக் கோலம் பூண்டது. அண்மையில்தானே ராமர் பட்டாபிஷேகம் முடிந்தது. பின்னர் எதற்காக இவ்விழாக் கோலம் என்பதை அறிய அனைவரும் காத்திருந்தனர். இந்நிலையில் அரசவை கூடியது. அப்பொழுது, சுந்தரா! என்றழைத்தபடியே அஞ்சனை அரண்மனையுள் நுழைந்தாள். தன் மகன் அனுமனின் அழகிய திருக்கோலம் கண்டாள். அனுமனும் ஓடி வர, ஆரத்தழுவிக் கொண்டாள் அனுமனின் அன்னை. ராமரும் சீதையும் பரிசுகளை அனுமனுக்கு வழங்கி, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தனக்குப் பிறந்த நாளா என்று ஆச்சரியக்குறி தோன்ற கண்களை விரித்து பார்த்தார் அதைவிட, ஆச்சர்யம் அஞ்சனை தன்னை சுந்தரா! என அழைத்தது. அன்னையிடம் காரணம் கேட்டார்.

நீ பிறந்தபோது அழகிய முகத்தோடுதான் இருந்தாய். அதனால் சுந்தரா எனப்பெயரிட்டு அழைத்து வந்தோம். ஒருநாள் கனியென நினைத்து சூரியனை பிடித்து விழுங்க, அப்போது ஏற்பட்ட போரில் இந்திரன் உன் தாடையை கதாயுதத்தால் தாக்க உனது தாடை பெரியதாகியது. பெரிய தாடையை உடையவன் என்ற பெயர்படும்படி உனது பெயர் அனுமன் என நிலைத்தது என அஞ்சனை சொல்லி முடித்தாள். இதைக்கேட்டதும், அனுமன் ஓட்டமெடுத்தார். அந்த ஓட்டம் வால்மீகியிடம் போய் முடிந்தது. சுந்தர காண்டத்திற்கு பெயர் மாற்றும்படி வால்மீகியிடம் கேட்டார். அது நடவாத காரியம். ராமாயணம் எழுதி முடித்தாகிவிட்டது என வால்மீகி சொல்லி, அனுமனை தேற்றினார்.
இந்த பஞ்சாயத்து ராமரிடம் சென்றது. ராமர் வால்மீகியிடம் அனுமனுக்காக பரிந்து பேசினார். அதற்கு வால்மீகி, சுந்தரன் என்ற சொல்லுக்கு அழகன் என்ற அர்த்தம் மட்டுமில்லாது காதலரிடையே தூது செல்பவன், அரச தூதன் என்ற அர்த்தமுண்டு. நீ இரண்டு பொறுப்புக்களையுமே ஏற்றுச் செயல்பட்டிருப்பதால் இதற்கு சுந்தர காண்டம் எனப்பெயரிடப்பட்டது சுந்தரம் என்றால் குரங்கு என்று ஒரு பொருளும் உண்டு. அதுமட்டுமில்லாமல், இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என அனுமன் பெயரினை வைக்க எனது நன்றிக்கடனும் ஒரு காரணம் என வால்மீகி ராமரிடம் கூறினார். இதென்ன புதுக்கதை என வால்மீகியிடம் ராமன் விசாரிக்க.. வால்மீகி நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தார்.
பலசாலி, சிரஞ்சீவி, ராம பக்தர், பிரம்மச்சாரி... என அனுமனை பற்றி பல தகவல்கள் நமக்கு தெரியும். ஆனா, அவர் ராமாயணத்தை எழுதி இருக்கார்ன்னு நம்மில் கித்னா பேருக்கு மாலும்?! ராமா! அனுமன் சிறந்த எழுத்தாளரும்கூட... வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியபின் ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தேன்,. அந்த சிகரத்திலிருந்த பாறைகளின்மீதும், கற்களின்மீதும் எழுதப்பட்டிருந்ததை படிக்க நேர்ந்தது. அந்த வாசகங்கள்லாம் தங்களின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரித்திருந்தன. அவை, நான் எழுதிக்கொண்டிருக்கும் ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் உள்ளவையாக இருந்தது. பிரமித்து நின்ற நான். அதை எழுதியவர் யார் என அங்கு தேடினேன். அங்கு, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், இங்க பாறைகளில் எழுதியவர் யாரென கேட்க, ராமனின் கதை யுகம்யுகமாய் பேசப்படவேண்டி நான்தான் நான் ராமனை சந்தித்தது முதல் பட்டாபிஷேகம் வரையிலான நிகழ்ச்சிகளை நகத்தால் பாறைகளில் எழுதினேன். ஆனாலும் தாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ராமாயணத்துக்கு இது ஈடாகாதெனவும், எதாவது தவறிருந்தால் எடுத்துச்சொல்லும்படி அனுமன் கேட்டார். சிறப்பானதொரு காவியத்தை படைத்துவிட்டு தவறிருந்தால் சொல்லுமாறு நின்ற அவரது பணிவினையும், தங்கள்மீதான பக்தியினையும் எண்ணி என் கண்களில் கண்ணீர் பெருகியது.
எனது கண்ணீருக்கான காரணத்தை அனுமன் கேட்க, இந்த கருத்தாழமிக்க உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என நான் பதிலுரைத்தேன். என் பதிலைக்கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் என்னை வணங்கி, ''தாங்கள் எழுதிய ஸ்ரீராமக்காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்க்கிக்கொண்டிருக்கும் காவியமே ராமனும் பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது'' இருக்கவும்கூடாதென அமைதியுடன் கூறினார். அனுமன் தான் எழுதியதை அழித்தாலும், அந்த பாடல்கள் என் மனதில் பதிந்துவிட்டது. அவரது அந்த தியாகத்தினை எண்ணி அவர் உங்களை சந்தித்தது முதல் சீதையினை கண்ட தகவலை தங்களிடம் சொல்லும் வரையிலான பகுதிக்கு அவரது பெயரினை சூட்ட ஆசைப்பட்டேன். ஆனால் அனுமன் மறுக்கவே, சுந்தரன் என அஞ்சனை அன்னை அழைத்த பெயராலேயே சுந்தர காண்டம் என பெயரிட்டு எனது நன்றிக்கடனை தீர்த்துக்கொண்டேன் என வால்மீகி ராமனிடம் சொன்னார். இதைக்கேட்ட ராமனும் சுந்தரகாண்டத்தினை படிப்பவர்களுக்கு தீவினை அண்டாது, தன்னம்பிக்கை பிறக்கும். திருமணம் கைகூடும். ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், உடல் வலிமை, திறமை, துணிச்சல் பெறலாம் என அருளினார்.
"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்."
எங்கெல்லாம் ராமனின் கதை பாட/சொல்ல/கேட்கப்படுகிறதோ அங்கெல்லாம் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கிய நிலையில் கண்களில் நீர் வழிய ராமனின் கதையைக் கேட்டபடி அனுமன் நின்றிருப்பாராம் ஆஞ்சனேயர்! பரந்து விரிந்திருக்கும் கோவில்களிலும், உயர்ந்து நிற்கும் சிலைகளிலும் கடவுள் இருப்பதில்லை. நம்பிக்கை கொண்டோரின் உள்ளத்திலேதான் கடவுள் இருக்கிறார். இதைதான் அனுமன் கதை நமக்கு சொல்லுது... நம்பிக்கைதானே எல்லாம்!?
நன்றியுடன்,
ராஜி.
பலசாலி, சிரஞ்சீவி, ராம பக்தர், பிரம்மச்சாரி... என அனுமனை பற்றி பல தகவல்கள் நமக்கு தெரியும். ஆனா, அவர் ராமாயணத்தை எழுதி இருக்கார்ன்னு நம்மில் கித்னா பேருக்கு மாலும்?! ராமா! அனுமன் சிறந்த எழுத்தாளரும்கூட... வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியபின் ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தேன்,. அந்த சிகரத்திலிருந்த பாறைகளின்மீதும், கற்களின்மீதும் எழுதப்பட்டிருந்ததை படிக்க நேர்ந்தது. அந்த வாசகங்கள்லாம் தங்களின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரித்திருந்தன. அவை, நான் எழுதிக்கொண்டிருக்கும் ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் உள்ளவையாக இருந்தது. பிரமித்து நின்ற நான். அதை எழுதியவர் யார் என அங்கு தேடினேன். அங்கு, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், இங்க பாறைகளில் எழுதியவர் யாரென கேட்க, ராமனின் கதை யுகம்யுகமாய் பேசப்படவேண்டி நான்தான் நான் ராமனை சந்தித்தது முதல் பட்டாபிஷேகம் வரையிலான நிகழ்ச்சிகளை நகத்தால் பாறைகளில் எழுதினேன். ஆனாலும் தாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ராமாயணத்துக்கு இது ஈடாகாதெனவும், எதாவது தவறிருந்தால் எடுத்துச்சொல்லும்படி அனுமன் கேட்டார். சிறப்பானதொரு காவியத்தை படைத்துவிட்டு தவறிருந்தால் சொல்லுமாறு நின்ற அவரது பணிவினையும், தங்கள்மீதான பக்தியினையும் எண்ணி என் கண்களில் கண்ணீர் பெருகியது.

எனது கண்ணீருக்கான காரணத்தை அனுமன் கேட்க, இந்த கருத்தாழமிக்க உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என நான் பதிலுரைத்தேன். என் பதிலைக்கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் என்னை வணங்கி, ''தாங்கள் எழுதிய ஸ்ரீராமக்காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்க்கிக்கொண்டிருக்கும் காவியமே ராமனும் பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது'' இருக்கவும்கூடாதென அமைதியுடன் கூறினார். அனுமன் தான் எழுதியதை அழித்தாலும், அந்த பாடல்கள் என் மனதில் பதிந்துவிட்டது. அவரது அந்த தியாகத்தினை எண்ணி அவர் உங்களை சந்தித்தது முதல் சீதையினை கண்ட தகவலை தங்களிடம் சொல்லும் வரையிலான பகுதிக்கு அவரது பெயரினை சூட்ட ஆசைப்பட்டேன். ஆனால் அனுமன் மறுக்கவே, சுந்தரன் என அஞ்சனை அன்னை அழைத்த பெயராலேயே சுந்தர காண்டம் என பெயரிட்டு எனது நன்றிக்கடனை தீர்த்துக்கொண்டேன் என வால்மீகி ராமனிடம் சொன்னார். இதைக்கேட்ட ராமனும் சுந்தரகாண்டத்தினை படிப்பவர்களுக்கு தீவினை அண்டாது, தன்னம்பிக்கை பிறக்கும். திருமணம் கைகூடும். ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், உடல் வலிமை, திறமை, துணிச்சல் பெறலாம் என அருளினார்.
Wednesday, February 06, 2019
மகாலட்சுமி பொருட்செல்வம் மட்டும் தருபவளா?! தெரிந்த கதை... தெரியாத தகவல்
பொதுவா மகாலட்சுமின்னாலே பணம், நகை, தங்கம்ன்னு வாரிக்கொடுக்கும் செல்வத்துக்கு அதிபதின்னு மட்டும்தான் நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா லட்சுமி தேவி வெறும் பணம், தங்கம், வைரம், வைடூரியத்தை வழங்குபவள் இல்லை. தனம், தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், தைர்யம், வைராக்யம், வெற்றி, மனச்சாந்தி என அனைத்து செல்வத்தையும் வழங்குபவளே மகாலட்சுமி. பணம் படைத்தவர்களையே 'லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள்’ ன்னு சொல்றோம். ஆனால், பெற்றோர், உற்றார், நட்பு, மனைவி, குழந்தை, பசு, வயல்வெளியோடு மகிழ்ச்சியோடு இருப்பவனை அப்படி சொல்வதில்லை. அதுசரி, எது மகிழ்ச்சி தரும்ன்னு அறியாத ஆட்கள்தானே நாம! அது தெரிஞ்சா நாம ஏன் இப்படி கஷ்டப்படுறோம்.

இப்படிலாம் நாம பணம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து பூஜைகள் செய்வோம்ன்னுதான் ஒரு திருவிளையாடலே நடந்திருக்கு. மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா?ன்னு இன்றைய தெரிந்த கதை, தெரியாத தகவல் தொடரில் பார்க்கப்போறோம்.!!

ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். ஆதிபராசக்தியின் இடபாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி. ஆதிபராக்தியின் வலபாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி. 'ரமா’ ன்ற சொல்லுக்கு மிகவும் அழகானவள் எனப்பொருள். ரமாதேவியை ஆதிபராசக்தி 'மகாலட்சுமி’ எனப் பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என அப்போது தேவி பாகவதத்தில் எதும் குறிப்பில்லை. அவள் அன்பின் வடிவம், விஷ்ணு பத்தினி, விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்று மட்டுமே தேவி பாகவதம் கூறுகிறது.

துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோக செல்வங்கள்ன்னு சொல்லப்படும் வலம்புரி சங்கு, காமதேனு என அனைத்தும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான சுவர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தனர். அவர்கள்முன் காட்சியளித்த விஷ்ணுபகவானிடம் தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர்.
காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி ''நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்காக, நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதில் தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள்' என மகாவிஷ்ணு தேவர்களுக்கு வரமளித்தார்.

பாற்கடலைக் கடைவதென்பது அத்தனை சுலபமா? மகாவிஷ்ணுவே இதற்கு வழி கூறினார். ''மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி உங்கள் கோரிக்கை நிறைவேறுமென என வாக்களித்தார்.

பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது.

பாற்கடலிலிருந்து வலம்புரி சங்கு, காமதேனும், ஐராவதம், ரம்பை, ஊர்வசி, மேனகை உள்ளிட்ட 60,000 பெண்கள், மூதேவி எனப்படும் மூத்த தேவி, மாதிரியான அபூர்வமான பல அரியவைகள் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும், அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, ''என்னை அடைய வேண்டுமென்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என்னைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்'' எனக்கூறினாள்.

அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையிலிருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். ''எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். செய்வாள் என பிரம்மதேவரே சொல்வதாய் தேவி பாகவத்தில் சொல்லப்பட்டிருக்கு. எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள்'' எனவும், ''மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள்'' எனவும் பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார்.

மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட சுவர்க்க லட்சுமி மீண்டும் தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. மகாலட்சுமி துதி பாடி அவளை தேவர்கள் வணங்கினர்.

திசைக்காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்குத் தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் கிடைக்கும் செல்வங்கள் அனைத்தும் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும்மிக்க மனிதர்கள் சிலருக்கும் பொருட்செல்வங்கள் இருக்கலாம். அது, அவர்கள் பூர்வஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை.

மகாலட்சுமி என்பவள் பொருட்செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல. மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.

ஆதி லட்சுமி: இவளுக்கு 'ரமணா’ன்ற பேரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள்.

தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்குபவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.

தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது 'தனம்’ எனப்படுகிறது. தனம்ன்னா பொருள் செல்வம். இன்னிக்கு நாம பரவலா கும்பிடும் லட்சுமிதேவி இவள்தான். அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.
சந்தான லட்சுமி: குழந்தை செல்வம் இல்லன்னா எத்தனை செல்வமும் பெற்றிருந்து பலனில்லை. துணை இல்லாமல் குழந்தை இல்லை. சிறந்த வாழ்க்கைத்துணையையும், குழந்தைச்செல்வத்தையும் அளிப்பவள் இவளே!

கஜ லட்சுமி: லட்சுமிக்கு 'க்ஷீராப்தி தனயை’ ன்னு இன்னொரு பெயருண்டு. இதற்கு பாற்கடலில் தோன்றியவள் என அர்த்தம். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலய கர்ப்பக்கிர வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் இருக்கும். மனத்தூய்மையையும், மனஅமைதியையும் தருபவள் இவள்.

வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம்.

விஜய லட்சுமி: கடுமையான முயற்சியும், உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி. வெற்றிக்கு அதிபதி இந்த தேவி.

தைரிய லட்சுமி: கல்வி, செல்வம், குழந்தை, மனைவி, வீடு, வாசல் மட்டும் இருந்தால்போதுமா?! அதை கட்டிக்காக்க தீயவர்களோடு தைரியம் வேணுமே! தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல்பலம், வைராக்யம், தைரியம் இவற்றை தருபவள் இந்த தைரியலட்சுமி.
அஷ்டலட்சுமிகளில் யார் பெரியவர் என போட்டி எழுந்ததாம். அதனை நீருபிக்க பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ்ந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது. நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசலருகே கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். தான்யலட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று. அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர். அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, ''தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!'' எனக் கதறினான். அவனது வேண்டுகோளுக்கிணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் அவனோடு இருந்தாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் அந்தப் பணக்காரன்.

அதனால் எதை இழந்தாலும் தைரியத்தை இழக்காமல் இருந்தால் எல்லாவற்றையும் போராடி பெற்றிடலாம். தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என சாஸ்திரம் சொல்கிறது. இதையேதான் மகாலட்சுமியும் சொன்னாள். வாழ்வில் எல்லா செல்வமும் கிடைக்க மகாலட்சுமி அருள்புரியட்டும்..
நன்றியுடன்,
ராஜி
Subscribe to:
Posts (Atom)