Showing posts with label ராமன். Show all posts
Showing posts with label ராமன். Show all posts

Wednesday, June 17, 2020

ராமனுக்கும் அணிலுக்கும் என்ன சம்பந்தமென தெரியுமா?! - தெரிந்த கதை, தெரியாத தகவல்...

பாலையா என்னும் பழம்பெரும் நடிகர் பாமா விஜயம் படத்துல ஒரு வசனம் சொல்வாரு. வாழ்க்கை என்பது விசித்திரமானது. பாடம் சொல்லிக்கொடுத்து பரிட்சை வைக்காது. பரிட்சை வச்சுட்டுதான் பாடமே சொல்லிக்கொடுக்கும்ன்னு சொல்வாரு.  அதேமாதிரிதான் காலமும்..... காலத்தால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு செயலும் வீணாய் நிகழ்வதில்லை. அந்த நிகழ்வின் காரண காரியத்தின் பலன் பின்னாளில் தெரியவரும்.  நாம் வரமா நினைச்சது சாபமா மாறும். சாபம்ன்னு வெறுத்தது வரமாகும்... சாபம் வரமான கதை புராணங்களில் பார்த்திருக்கிறோம். ராமாயணத்தில் நிகழ்ந்த ஒரு துர்மரணம் இரு வரமானதை இன்றைய தெரிந்த புராணம் தெரியாத தகவலில் பார்க்கப்போகின்றோம்..

Wednesday, April 01, 2020

14 வருடங்களுக்கு மேலாக ராமனுக்காக காத்திருந்தது சீதை மட்டுமல்ல!! அனந்தனும்தான்!! - தெரிந்த கதை தெரியாத உண்மை

ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட கதைகளை படித்தவர் குறைவு. படித்தவர் சொல்ல கேட்டவர் நிறைய பேர். அப்படி சொல்பவர்கள் மொத்த கதையினையும் சொல்வது கிடையாது. சில இடைச்செருகல்கள், சில மறைக்கப்பட்டவை, மறந்தவைன்னு அக்கதையில் இருக்கும்.. அந்த மாதிரி  நமக்கு தெரிந்த கதையில் தெரியாத தகவல்களை பற்றித்தான் நாம தெரிந்த கதை.. தெரியாத உண்மை தொடரில் பார்த்துக்கிட்டு வர்றோம்...

Monday, March 30, 2020

காடுகளின் தாய் எதுவென தெரியுமா?! -ஐஞ்சுவை அவியல்

என் ஃப்ரெண்ட் ராஜி பையனுக்கு காய்ச்சல், தொண்டை வலின்னு இருந்திருக்கு. இப்பதான் ஊரெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கே. அவ பையன் வேற கடந்த 15 நாளில் மூணு முறை ஏர்போர்ட்டுக்கு போய் வந்திருக்கான். பதட்டத்துக்கு சொல்லவா வேணும்?! அலறி அடிச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டல் கொண்டுபோனா சாருக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு வடிவேலு காமெடிப்போல டெம்ப்ரேச்சர்கூட பார்க்காம பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து விட்டிருக்காங்க.

Wednesday, February 05, 2020

காவலுக்கு கெட்டிக்காரன் இந்த கருப்பசாமி-சிறுதெய்வ வழிபாடு

மலையாள நம்பூதிரிங்க மாதிரி கொண்டை, தலையில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், முறுக்கிய மீசை, கையில் ஓங்கிய வீச்சரிவாள், மறுகையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழ வரும் இடுப்பு கச்சையுடன் நின்ற கோலத்தில், கருத்த தேகமும், குதிரைமீது அமர்ந்து மிரட்டும் விழிகளுடன் காட்சியளித்தாலும் துடியான காவல் தெய்வமாய் விளங்கும் கருப்பண்ண சாமியைதான் சிறுதெய்வ வழிபாடு தொடரில் பார்க்கப்போறோம். இவருக்கு பொய் , புரட்டு,  திருட்டு, ஏமாற்று வேலைகள்லாம் அறவே பிடிக்காது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவருக்கு எமனாகவும் இருப்பார். தென் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களின் காவல் தெய்வமாய் இவர் இருப்பார்.

கருப்பண்ணன் சாமிக்கு கருப்பு, கருப்பன், கருப்பசாமின்னும் பல பேர் இருக்கு. இடத்துக்கு தகுந்த மாதிரி சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, பதினெட்டாம்படி கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமின்னும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை, சிவன், பத்ரகாளி அம்சம்ன்னு சொல்லப்பட்டாலும் இவர் உருவாக சொல்லும் கதையோ ராமாயணத்தோடு ஒத்துப்போகுது.

ஸ்ரீராமருக்கும் சீதாதேவிக்கு லவன், குசன் என  இரு புதல்வர்கள்ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா,  சீதை குசனை கையோடு அழைத்துக்கொண்டு  ,  லவனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை வால்மீகி முனிவரிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டுவர ஆற்றங்கரைக்கூ சென்றாள். திரும்ப வரும்போது வால்மீகி முனிவர் அங்கு இல்லை அதனால், வால்மீகியிடம் சொல்லாமல் சீதை லவனை தூக்கிக்கொண்டு பர்ணசாலைக்கு வெளியே உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், லவனை காணாது, சீதை சபிப்பாளோ என பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கி சீதையிடம் அழைத்து சென்றார்.


அங்கு, சீதையுடன் லவன் இருப்பதை கண்டு திகைத்து, நடந்ததை சீதையிடம் சொல்ல, வால்மீகியும், சீதையும் செய்வதறியாது நின்றனர்.  மூன்று குழந்தைகளையும் சீதை கண்ணென காத்து வந்தாள். ராமர் சீதையை நாடி வந்ததும் நடந்ததை சொல்லி அவரிடம் உண்மையான லவன் யார் எனக்கேட்டு நின்றாள். 

தீக்குளித்து தன்னை நிரூபித்த சீதை, அப்படியே தன் மகன்களையும் நிரூபிக்க செய்ய சொன்னார்,  உண்மையான லவன் பிழைத்து வர, வால்மீகியால் உருவாக்கப்பட்ட லவன் மட்டும் யாகத்தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து லவனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என கருப்பண்ண சாமி பின்னாடி ஒரு கதை இருக்கு.


ஆதிகாலத்தில் வாழ்ந்த கருப்பண்ணன் என்ற மனிதன் வஞ்சகத்தால் வெட்டுப்பட அவனே கருப்பண்ண சாமின்னு இன்னொரு கதை சொல்லப்படுது. ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமின்னும் இன்னொரு கதை உலவுது. ஆகமொத்தம் எந்த கதையா இருந்தாலும், இவரின் வழிபாடு  பெரும்பாலும்,  இவர், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புறாங்க. எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர்.  படையலை ஏற்றுக்கொள்ளும் கருப்பண்ண சாமியும் கண்மூடாது பக்தர்களின் தேவையறிந்து அருள்பாலிக்கிறார்.

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி.  
சிறுதெய்வ வழிபாடு தொடரும்..
நன்றியுடன்,
ராஜி

Wednesday, July 31, 2019

ராவணனை பழிதீர்த்த சூர்ப்பனகை - வெளிச்சத்தின் பின்னே....


மூக்கும், முலையும் அறுபட்ட வேதனை, வலி, அவமானத்தைவிட ராவணனின் வீழ்ச்சிக்கு அஸ்திவாரம் தோண்டிய திருப்தியில் இலங்கைக்கு பயணமானாள் சூர்ப்பனகை.... 

அண்ணா! என்று அலறிய சூர்ப்பனகையின் குரல் இலங்கையை கலங்கடித்தது. விவரம் என்னவென கேட்ட உற்றார், உறவினர்களையெல்லாம் ஒதுக்கி ராவணனிடம் வந்து நடந்ததை சொன்னாள்.


நமக்கு சொந்தமான பஞ்சவடியில் ராமன் என்பவனும், அவன் மனைவி சீதாவும், அவன் தம்பி லக்குமனனும் வந்து தங்கி உள்ளனர். புதியதாய் வந்திருக்கும் நபர்களை பற்றி அறிய அங்கு சென்று விவரம் கேட்டேன், இலங்காபுரி மன்னனின் அருமை தங்கை என சொல்லியும் திமிராய் பதிலளித்தனர். நான் இன்னாரது தங்கை என சொல்லச்சொல்ல, இது எமது இடம் என சொல்லியும் எனக்கு மரியாதை தரவில்லை.  ராமனின் மனைவி சீதையானவள் பேரழகி, அவளுக்கு ஒப்பானவர் இப்புவியில் இதுவரை பிறந்ததுமில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை. காட்டில் வாழும் ஒரு சாதாரண மனிதனுக்கு அந்த அழகு வசப்படக்கூடாது. மன்னாதி மன்னனாம், அசுரக்குல தலைவனான உனக்கே அவள் சொந்தமாக வேண்டியது என  நினைத்து சீதையை உமக்கு பரிசாய் தர அறிவுறித்தினேன். அதற்கு கிடைத்த பதில்தான் இந்த மூக்கறுப்பும்.. முலையறுப்பும்....
Image result for shurpanakha

ராவணனுக்கு பெண்பித்து உண்டென நன்கு அறிவாள் சூர்ப்பனகை..  தனது தம்பியான குபேரனின் மகன் நளகுபேரனை மணக்க இருந்த ரம்பையை, மருமகள் என்றும் பாராமல் கவர்ந்து வந்தவன்தானே இந்த ராவணன்?!  தன்னை கவர்ந்து கோவத்தில் விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் தலைவெடித்து இறந்து போவாய் என ரம்பை சாபமிட்டதும் சூர்ப்பனகைக்கு நினைவில் வந்தது.

இன்றைய பேஸ்புக் காதல்போல் ராவணனுக்கு  சீதையை காணாமலே அவள்பால் காதல் வந்தது.  தங்கையின் அவமானத்தைவிட, காமம் கொப்பளித்தது. சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறை வைத்தான். வானரப்படைகளுடன் வந்து போர் தொடுத்தான் ராமன்.  போரில் வீழ்ந்தான் ராவணன். மண்டோதரி, விபீஷ்ணன் உட்பட அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால், ஒருத்தி மட்டும் மகிழ்ச்சியோடு இருந்தாள். அவ்வாறு மகிந்திருந்த அவள் சீதையல்ல! சூர்ப்பனகை..

சொந்த அண்ணனின் மரணத்திற்காக யாராவது மகிழ்வார்களா?! அதுவும், ராமனின் மனைவி சீதையென்று தெரிந்திருந்தும், சீதை ராமனின்மேல் அளவற்ற காதல் கொண்டிருந்தாள் என்றிருந்தபோதும், அவளுக்கு காவலாய் லட்சுமணன் இருக்கிறான் என இத்தனையும் தெரிந்தும் சீதையின் அழகினை சொல்லி சிறந்த அழகி அண்ணன் வசமே இருக்கவேண்டுமென விரும்பிய சூர்ப்பனகையா இப்படி மகிழ்ந்திருந்தாள்.

அப்படி அவள் மகிழ காரணம் என்னவாய் இருக்குமென யோசித்தால், அதற்கு விடையாய் அவளின் பூர்வ ஜென்மத்தில்தான் விடை கிட்டும்.  சூர்ப்பனகை முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு மகளாகப் பிறந்தாள். முற்பிறப்பில் அவளுக்கு சுமுகி என்று பெயர். ஆனந்த  குருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின் மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகி விரும்பினாள். குருவின் மகள் என்று ஒதுங்கி போனான் சங்கசூடன். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு  வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை மீண்டும் சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள். 
அதற்கு, பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன்,'' என சொல்லி அவளை கண்டித்து, அங்கிருந்து சென்றுவிட்டான் சங்கசூடணன். காதலில் ஏமாற்றமடைந்த சுமுகி, அவனை அடைய வேண்டி, தான் கற்பிழந்துவிட்டதாக சொன்னால், தந்தை தனக்கு அவனையே மணமுடித்து வைப்பார் என எண்ணி,  தனது தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன்  கெடுத்து விட்டதாக பழி சொன்னாள். இதை நம்பிய சுமுகியின் தந்தை, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை  நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக்  கதறினான். உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். "சங்கசூடா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன்,'' என்றான். சங்கசூடணன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே  சூர்ப்பனகை எனப் பெயர்பெற்று வளர்ந்து வந்தாள்.
Urvashi was considered to be the most beautiful of them all, even more so than Rambha, the queen of the Apsaras. Menaka was sent by Indra to seduce the sage Vishvamitra, while Tilottama is responsible for cracking open a can of whoop ass on two Asura whom attempted world domination, Sunda and Upasunda. (Or rather, causing them to beat the shit out of each other to see who got dibs)

கைகேயி, சகுனி, வரிசையில் எதிர்மறை கதாபாத்திரமாய் சூர்ப்பனகை இருப்பதாலும், அசுரக்குல பெண் என்பதாலும் அவளை கோரைப்பற்களுடனும், உப்பிய வயிறுமாய் நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். ஆனால், அவள்
 கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி
மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத்
தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று(ஓர்)
மானின் விழிபெற்று  மயில்வந்த தென வந்தாள்.”
கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின் விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்து ராமனின் அருகில் நின்றாள் சூர்ப்பனகை.  அவள் உடலில் இருந்த சிலம்பு, முத்தாரம், மேகலை ஒலித்து அவளது வருகையினை ராமனுக்கு அறிவிக்கின்றது. வேறு வேலையாய் இருந்த ராமன் அணிகலன்கள் எழுப்பிய ஒலிக்கேட்டு ஓசை வந்த இடத்தை பார்க்கிறான். ஏனென்றால்  அவள் நடந்துவரும்போது சிறு ஒலிகூட எழும்பலியாம். அவள் உடலிருந்த ஆபரணங்கள் ஒலியை வைத்துதான் திரும்பி பார்த்ததா கம்பன் சொல்றார். மலரினும் மெல்லிய பாதத்தினை உடையவளாம் சூர்ப்பனகை. அவள் எடுத்து வைத்த அடிகூட ஒரே சீராய் ஸ்வரங்களைப்போல் இருந்ததாய். மயில், அன்னம்கூட தோற்றுப்போகும் நடைக்கு சொந்தக்காரி என கம்பர் அவளது அழகை வர்ணிக்கிறார் கம்பர்.
 ” விண் அருள வந்ததொரு மெல்லமுதம் என்ன”
என சூர்ப்பனகையின் அழகை கண்டு இவள் யாரோ?! இந்த அழகுக்கும் ஈடு இணை உண்டா என ஏகபத்தினி விரதனான ராமனே வியந்து நின்றானாம். அப்பேற்பட்ட அழகுக்கு சொந்தக்காரிதான் சூர்ப்பனகை.

அருகில் வந்த சூர்ப்பனகையை வரவேற்ற ராமன், அவளை யார்?! வந்த நோக்கம் என்னவென விசாரிக்கிறான். தாடகையின் பேத்தி, கேசியின் மகள், ராவணனின் தங்கை என அறிமுகப்படுத்திக்கொண்டு தன் பெயரை காமவல்லி என சொல்கிறாள்.  தங்களை மணக்கவேண்டும் என்பதே என் நோக்கம் என சூர்ப்பனகை சொல்கிறாள்.

தனக்கு மணமாகிவிட்டதாக ராமன் சொல்கிறான்..

இருக்கட்டுமே! பலதாரம் என்பது உலக வழக்கில் இல்லாதது ஒன்றுமில்லையே! உமது தந்தைக்கும்கூட அறுபதாயிரம் மனைவிகளாச்சே! என்று ராமனை  சூர்ப்பனகை சமாதானப்படுத்தினாள்.

தந்தையை சொன்னதும் ராமனின் முகம் வாடியது.

அதை கவனித்த சூர்ப்பனகை, ஐயனே! என்னை மன்னித்து விடுங்கள். தங்களை சமாதானப்படுத்தவே தந்தையை பற்றி பேசினேன் என்றாள்

எனக்காக எதுவேண்டுமானாலும் செய்வாயா?! என்றான் ராமன்

ம்ம்ம்ம் செய்வேன்,  என்றாள் சூப்பனகை.

நான் உன் பாட்டி தாடகையை கொன்றவன் என தெரியுமா?

தாங்களா என் பாட்டியை கொன்றவர்?! ஏன் என்றாள்

அது விசுவாமித்திரர் சாபத்துக்கு அஞ்சி செய்த பாவம். இனியொருமுறை அப்பாவத்தை நான் செய்யக்கூடாதென  முடிவெடுத்துள்ளேன். கட்டிய மனைவியை தவிக்க விட்ட பாவம் என்னை சேரக்கூடாது. நான் ஏகப்பத்தினி விரதன் என சபதமேற்றுள்ளேன். அதனால், என் தம்பியும் இங்குதான் உள்ளான். அவன் தன் மனைவியை பிரிந்து வந்துள்ளான். நீ அவனை மணந்துக்கொள் என்றான் ராமன். 
No photo description available.
எங்கள் நாட்டில் ஆண்களுக்கு பஞ்சம் ஒன்றும் வந்துவிடவில்லை. நான் வேசியுமில்லை. கண்டவனுடன் ஒன்றுசேர... இதே வார்த்தையை வேறு யாராவது சொல்லி இருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு என ராமனை எச்சரித்தாள்.

எனக்காக எதுவேண்டுமானாலும் செய்வேன் என்றாயே! என அவளது வாக்குறுதியை நினைவுப்படுத்தி, நான் சீதையோடு அவ்வப்போது கூடிக்களிக்கிறேன். ஆனால், என் தம்பியோ மனைவியை பிரிந்து வந்து விரகதாபத்தில் இருக்கிறான். அவனது தாபத்தை தணித்தால் நான் மிக்க மகிழ்வேன். அவன் என்னைவிட அழகன் என்றான் ராமன்.

அழகு முக்கியமில்லை. உங்களுக்காக எரிந்து கரிக்கட்டைப்போல் இருப்பவனுடன் கூடுவேன். எனக்கு உங்களது மனமகிழ்ச்சியே முக்கியம் என்றாள் சூர்ப்பனகை..

ராமனுக்கு அவளது காதல் புரிந்தது. இருந்தும் ஏகபத்தினி விரதன் என எடுத்த சபதம் அவனது நினைவுக்கு வந்து ஏதும் செய்ய இயலாதவனாய், லட்சுமணன் இருந்த திசையை காட்டினான்.

லட்சுமணனை நெருங்கிய சூர்ப்பனகை, தனது காதல் மொழிகளை சொல்லி, ராமனது வேண்டுகோளையும் சொன்னாள். தாய்க்கும்மேல மதிக்கும் அண்ணிக்கு போட்டியாய் வந்திருக்கும் சூர்ப்பனகை எரித்துவிடுவதுப்போல பார்த்து கண்டபடி அவளை திட்டினான்.   ராமனும், லட்சுமணனும் தன்னை ஏற்றுக்கொள்ள தடையாய் இருப்பது சீதை என்று உணர்ந்த சூர்ப்பனகை சீதையை கொன்றுவிட நினைத்து சீதையை நோக்கி பாய்ந்தாள். சீதை அலறியபடி அங்கும் இங்கும் ஓடினாள். 
சீதையின் அலறல் சத்தம் கேட்டு லட்சுமணன் பாய்ந்து வந்து சூர்ப்பனகையின் மூக்கினையும், முலையினையும், காதினையும் அறுத்து எறிந்தான்.  அழுதபடியே அங்கிருந்து சூர்ப்பனகை இலங்கை நோக்கி நடந்தாள். அதன்பின் நடந்த கதை ஊரறியும். ஆனால், அறியாத கதை ஒன்றுண்டு...

இலங்கையினை நோக்கி நடந்த சூர்ப்பனகையை, வலிக்கிறதா சூர்ப்பனகை என வானிலிருந்து வந்த ஒரு குரல் ஆறுதல் படுத்தியது. அக்குரலுக்கு சொந்தக்காரன், சூர்ப்பனகையின் கணவனான, வித்யுத்ஜிகவனின் குரல் கேட்டு, ராமன்மேல் தான் உருவாக்கிக்கொண்ட காதலும், உறுப்புகள் அறுபட்ட வலியும் மறைந்தது. 

வித்யுத்ஜிகவன் அரக்கக்குலத்தின் பலம் வாய்ந்த ஒரு பகுதியினரின் தலைவன். அவனுக்கு  சூர்ப்பனகையை திருமணம் செய்துவித்தான் ராவணன். இருவரும் மனமொத்து மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ராவணனுக்கு மூவுலமும் தனது ஆட்சிக்கு கொண்டுவர எண்ணினான். வித்யுத்ஜிகவனின் வம்சாவளியினர் தங்கம் போன்ற உடல் பொலிவை கொண்டவர்கள். மனிதர்களால் கொல்லமுடியாத வரம் வாங்கி வந்தவர்கள். ராவணனால் அவர்களை வெல்லமுடியாதென ராவணனுக்கும் தெரியும். இருந்தாலும், மண்ணாசை யாரை விட்டது?!  தங்கையின் கணவன் நாடு எனவும் பாராது, முக்கியமான தலைவர்கள் இல்லாதபோது வித்யுத்ஜிகவனின் நாட்டின்மீது போர் தொடுத்தான் ராவணன். 

வேறுவழியின்றி ராவணனுடன் நேருக்கு நேர் மோதினான் வித்யுத்ஜிகவன். பல நாட்கள் போர் நீண்டது. ராவணன் தோல்வியை சந்திக்கும் நேரம் நெருங்கியது. ராவணனின் கர்வம் அவனை சூழ்ச்சியில் ஈடுபட செய்தது. சூழ்ச்சி செய்து தங்கையின் கணவனான வித்யுத்ஜிகவனை வெட்டி கொன்று, போரில் வெற்றிப்பெற்றதாக அறிவித்தான் ராவணன்.

தங்கையின் கணவனை கொன்ற குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி வெற்றிக்களிப்போடு இலங்கைக்கு பயணமானான் ராவணன். கணவனின் உடலைக்காண, வந்த சூர்ப்பனகை,  சுவாமி! தங்களை சூழ்ச்சி செய்து கொன்ற என் அண்ணனான கயவனை நான் கொல்வேன். என்னால், முடியாவிட்டால் அவனைப்போலவே நானும் சூழ்ச்சி செய்து அவனை வீழ்த்துவேன். என சபதமெடுத்து இலங்கைக்கு வந்து அண்ணனிடம் தஞ்சம் புகுந்தாள்.
Image result for shurpanakha

அவளது சபதத்தினை உணராத ராவணன். தங்கையை தனது ஆளுமைக்குட்பட்ட பஞ்சவடி பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். பஞ்சவடியில் ராவணனை வீழ்த்தும் நாளுக்காக காத்திருந்தாள். ராமன்+சீதை+லட்சுமணன் அங்கு வந்து தங்கிய செய்தி கேள்விப்பட்டாள். ராமன் தனது பாட்டியான அரக்கி தாடகியை வீழ்த்தியவன். சாதாரண மானுடன் என்ற சேதியும் அவளது காதுக்கு எட்டியது. மானுடனால் மட்டுமே தன்னை கொல்லப்படவேண்டும் என்று ராவணன் வரம் வாங்கி வந்த  சேதியும் சூர்ப்பனகை அறிவாள். வித்யுத்ஜிஜவனவை தற்காலிகமாக மறந்தாள். ராமன்மேல் காதல் கொண்டாள். லட்சுமணன்பால் காமபித்து ஏற்பட்டவளாய் நடித்தாள். சீதையின்பால் பொறாமைக்கொண்டாள். 

ராவணன் வீழ்ந்த சேதி கேட்டு ராமர் லட்சுமணருக்கு மானசீகமாய் நன்றி சொல்லி, ராமசீதையை ஆத்மார்த்தமாய் வணங்கி, விபீஷ்ணன் ஆண்டபோதும், தன் கணவனை கொன்ற ராவணன் ஆண்ட  நாட்டில் வாழப்பிடிக்காமல் கண்காணாத தூரம் சென்று தனது இறுதி காலத்தை கழித்து வந்தாள்.

 சூர்ப்பனகையின் அழகும், பதிபக்தியும், தெய்வ பக்தியும், மதியூகமும் உலகின் பார்வைக்கு மறைந்தது.  தன் வாழ்வை அழித்த ராவணனை பழிவாங்க ராமனை விரும்பியதாய் நடித்ததால் அனைவரும் அருவெறுப்பான தோற்றமும், வெறுக்கத்தக்க குணாதிசயம் கொண்ட பெண்ணாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவனே சூர்ப்பனகை.  

காரணமில்லாமல் காரியமில்லை.. அதற்கு சூர்ப்பனகையின் திடீர் காதலும் ஒரு சாட்சி.

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி


Friday, February 08, 2019

பத்ரமாருதி மந்திர் குஹுல்டாபாத்-அவுரங்காபாத்

ஒருவழியாக ஸ்ரீகிரிஸ்னேஸ்வரர் திருக்கோவிலை தரிசித்து முடிச்சுட்டு, அப்படியே அங்க ஒரு புகழ்பெற்ற ஹனுமான்ஜி கோவில் இருக்கிறது போகலாமான்னு  வழிக்காட்டி கேட்டார்.கூடுதலா ஒரு பதிவு கிடைக்குற ஆர்வத்துல ரெடி, ஜூட், ஒன்,டூ,த்ரீ.. வண்டிய எடுங்கன்னு சொல்லவும்,  வண்டி பத்ரமாருதி கோவிலுக்கு சென்றது இந்த குஹுல்டாபாத் பற்றி சொல்லனும்னா இந்த ஊரின் பழமையான பெயர் பத்ராவதி, மொகலாயர்கள் இந்த இடத்தை ஆக்கிரமித்தபோது இந்த ஊரின் பெயரை குஹுல்டாபாத்ன்னு மாத்திட்டாங்களாம்!! இந்தியில்  பத்திராவதின்னா பவித்திரமான தலம்ன்னு பொருளாம்! (அப்படியா வெங்கட் அண்ணா, கீதாக்கா!) மொகலாயர்களின் வழக்கத்தில் இருந்த பார்சி மொழியில் சொர்க்கத்தின் நுழைவாயில் ன்னும் பொருளாம். எந்த மொழியில் பார்த்தாலும் எப்படி பார்த்தாலும் இது பவித்திரமான தலம்தான் என்பதை நேரில் போய் பார்த்தால் நாமே ஒத்துக்குவோம். 
இந்த கோவிலை ஸ்லீப்பிங் ஹனுமான்ஜி கோவில்ன்னு சொல்றாங்க. அதாவது, ஹனுமன் படுத்திருக்கும் நிலையிலிருக்கும் கோவில்ன்றதால  இந்த பேராம்.  இதுப்போன்ற தோற்றத்தில் ஹனுமன் கோவில் கொண்டிருப்பது இந்தியாவில் வெகுசில இடங்களில் மட்டுமே! இதேப்போல் மத்திய பிரதேசம் மாநிலம் சிந்துவாடாவில் உள்ள சாம்வலின்ற இடத்துல இதேமாதிரி ஸ்லீப்பிங் ஹனுமான் மந்திர் கோவில்  மலைமீது இருக்குது. இங்கு ஹனுமான் அருகில் கதாயுதம் இருக்க, அரைக்கண் மூடியிருக்க, கால்மேல் கால் போட்டுக்கொண்டு அரைத்தூக்க நிலையில் அனுமன் உள்ளார். இராம-ராவண யுத்தம் மற்றும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின்னர், இங்கு வந்து ஆஞ்சனேயர் ஓய்வெடுப்பதாக ஐதீகம்.’

முதலில் இந்த கோவிலில் வழிபட வந்த பக்தர்கள், ஹனுமன் சிலை நின்றக்கோலத்தில் இருந்திருக்கலாம். பின்னர் இயற்கை சீற்றத்தில் விழுந்திருக்கலாமென்றும், தூக்கி பழையபடி  நிறுத்துவதற்கு முயற்சி செய்தபோது, எத்தனை தரம் தூக்கி நிறுத்தினாலும் அந்த ஹனுமார் திரும்பத்திரும்ப நழுவிப் படுத்துக்கொண்டாராம். ஆகையால், அவரை அப்படியே வைத்து வழிபடத் தொடங்கிவிட்டனராம் .
இதேப்போல் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரிலிருந்து சுமார் 170 கிமீ தூரத்தில் உள்ள புல்தா மாவட்டத்தில் உள்ள  லோனார்ன்ற பகுதியில் ஸ்ரீவராஹர் கோயில் உள்ளது. இங்கிருந்து சுமார்  2 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எரிநட்சத்திரப்பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட மண்டபத்தில் தரைமட்டத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். இந்த மலைக்கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள பாறையில் 8  அடி  நீளத்தில் சயனத்திருக்கோலத்தில் கண்களை நன்றாக மூடிக்கொண்டு ஹனுமன் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் காட்சியை காணலாம். உறங்கும் கோலத்தில் ஹனுமன் காட்யளிக்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்று என சொல்லப்படுது. இந்தக்கோவிலை சோபில்லா மாருதி மந்திர்ன்னு சொல்றாங்க. அதேசமயம் இங்க வழிபடுறவங்களும் சத்தம் எழுப்பாம வழிபட்டுட்டு செல்வாங்களாம் இதேபோன்ற அமைப்பு கொண்ட ஒரு கோவில்தான் இந்த பத்ரமாருதி மந்திர்.
கோவில் வளாகத்தினுள்ளும் சரி, வெளியேயும் சரி நிறைய இடங்கள் இருக்கின்றன. நம் கார் நிறுத்துவதற்கும் ,உள்ளே அமர்ந்து ஓய்வெடுப்பதற்கும் பெரிய மண்டபம் போன்ற அமைப்பு இருக்கிறது. இந்த கோவிலினுள் போட்டோ எடுத்தாலும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அது ஏனோ தெரியவும் இல்லை. நிறைய பேர் செலஃபி, போட்டோன்னு சாமிய கும்பிடுவதைவிட மொபைலை பார்த்துக்கிட்டு போஸ் கொடுத்துக்கிட்டு நிற்பதுதான்அதிகம். நீ ஏன்மா படமெடுக்கிறேன்னு என்னைய கேட்கக்கூடாது. நான் பதிவு தேத்தி பதிவிட்டு சமூக கடமை ஆத்தோ ஆத்துன்னு ஆத்துறேனே தவிர, செல்பிலாம் எடுக்க மாட்டேன். செல்பிக்கும் நமக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரம். செல்பிக்குன்னே என் சின்ன பொண்ணை பெத்து வளர்த்து வச்சிருக்கேன். அதுதான் விதம்விதமா ரகம்ரகமா போட்டோவா எடுத்து தள்ளும். சரி, சுயபுராணம்லாம் போதும். கூட்டம் அதிகம் இருந்தா பக்தர்கள் ஹனுமானை தரிசிக்க எல்லா கோவில்களில் வைத்திருப்பது போன்றே இங்கும் ஒரு கண்ணாடி வழியாக அனுமனை தரிசிக்கலாம். சரி செல்பி கதை பேசிக்கிட்டே கோவிலின் வரலாறை பார்க்க மறந்திட்டோம் .
பத்ராவதின்ற அழைக்கப்பட்டு வந்த இந்த ராஜ்ஜியம், இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னனின் மகளின் பெயராலே அழைக்கப்பட்டதென சொல்லப்படுது. அதைபத்திய  வரலாற்று குறிப்பும் இங்கே செவிவழி கதையாக சொல்லப்படுது. முன்பொருகாலத்தில் பத்ரசேனன்ன்ற அரசன் நீதிநேர்மை தவறாமல் இந்த ராஜ்ஜியத்தை ஆண்டுவந்தானாம். அவன்  ஶ்ரீராமரின் பரம பக்தனாக விளங்கினானாம். இராம ராஜ்ஜியத்தை போலவே தன் குடிமக்களும் மிகவும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென விரும்பினானாம். அதற்கு ஶ்ரீராமரை உதாரண புருஷராகவும், பரம பவித்திரமானவருமாக இந்த அசரன் கருதினானாம். ஸ்ரீராமரை வழிபடுமுன் இங்கிருக்கும் பத்திரகுண்ட் என்னும் திருக்குளத்தில் நீராடிவிட்டுதான் இராமரை வழிபட செல்வானாம்.  இராமரின் அருளால் அரசனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்ததாம். அதற்கு பத்திரா என்று திருநாமம் சூட்டி வளர்த்துவந்தானாம் கல்வி ,கலை,ஞானங்களில் வல்லவராக திகழ்ந்த பத்திராவின் பெயரால்தான் இந்த இடத்திற்கு பத்ராவதி என்று பெயர்வந்ததாக சொல்றாங்க.
சரி கதையை கேட்டுகிட்டே மூலவர் அருகில் வந்துட்டோம். எல்லா கோவில்களையும் போல இங்க நாம் உள்ளே சென்று வழிபடமுடியாது. நாம் மேடைமேல் நின்று வழிபடலாம். கீழிருக்கும் பள்ளத்தில் ஹனுமான் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரிகிறார் .எல்லோரும் தரிசனம் செய்யும் அளவிற்கு வட்டவடிவமாக இந்த மூலவரை சுற்றி பாதை போன்று வழிவமைத்துள்ளனர். வடநாட்டில் எல்லா கோவில்களைப்போல், இந்த கோவிலும் வெள்ளை மார்பிள் கற்களால் கட்டியிருக்கிறார்கள் .கோவிலின் உள்ளே வேலைப்பாடுகள் பார்பதற்கே அழகாக இருக்கிறது .
சரி, தொடர்ந்து நாம இந்த கோவிலின் ஸ்தல புராணத்தை பார்க்கலாம். அரசராக இருந்தாலும் பத்திரசேனா சங்கீதத்திலும் பாடல்கள் புனைவதிலும்  தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஶ்ரீராமரின்மேல் பல பாடல்கள் எழுதி தினமும் மனமுருக பாடுவாராம். அப்படி பாடும்போது தன்நிலை மறந்து பாடுவாராம். மக்கள் எல்லோரும் அவர் படலைக்கேட்டு  அவரது இசையில் மயங்கி விடுவார்களாம். மிகவும் நேர்மையாக அரசாட்சி செய்துவந்த, அவருக்கு  தன் பதவிமீதோ, புகழ், கௌரவத்தின்மீதோ எந்தவித பற்றுதலும் இல்லாமல் வாழ்ந்துவந்தாராம். அவரது பற்றற்ற இந்நிலையை கண்ட மக்கள், அவர் ராஜாவானபோதிலும் ரிஷியைபோல் இருப்பதால் "ராஜரிஷி" என்றே அழைத்தனர். ஶ்ரீராமரின் பெயரில் இருந்த பக்தியினால் சிலசமயம் இரவு முழுவதும் கூட அரசன் பாடிக்கொண்டே இருப்பாராம்.
வாங்க! இப்ப கொஞ்சம் வசதியா நின்னு ஹனுமனை தரிசித்துக்கிட்டே  தொடர்ந்து வரலாறை பார்க்கலாம் .இப்படியே அரசன் இராமரை குறித்து தினமும் பாடிக்கொண்டு இருந்ததால் எங்கெங்கெலாம் இராமரின் நாமங்கள் உச்சரிக்கப்படுகின்றதோ அங்கெலாம் ஶ்ரீராம பக்த ஹனுமார்,பக்தியுடன் வருவார் என்பது ஐதீகம். .அதேபோல் அரசன் பத்திரசேனா மனமுருகி இராமரின் பெயரில் பாடல்கள் பாடும்போதெல்லாம் ராமபக்த ஹனுமார் அவரது பாடல்களை கேட்க பத்திராவதி க்ஷேத்திரத்திற்கு வந்தார். அன்று பத்திரசேனரின் பாடல்கள் மிகவும் இனிமையாக இருந்தது. அவர் இதயத்தின் ஒவ்வொரு அணுவும் பக்தியில் உருகியது. அந்த பக்தியின் பிரபாவம் பாடலிலும் அவரது குரலிலும் வெளிப்பட்டது. க்ஷேத்திரமே ஸ்தம்பித்ததுபோல் பக்தியின் அலை அடித்தது. இரவிலும்கூட பறவைகள், பசுக்கள் அரசனது பாடலில் உருகின. மரங்கள் காற்றுகூட ஸ்தம்பித்தது. தங்கள் அசைவினால் சப்தம் வருமே என்று பயந்தன. அப்படி ஒரு பக்தியின் வெளிப்பாடு இருந்ததாம்.
அப்பொழுது அங்கு வந்திருந்த ஹனுமன் பத்திரசேனனின் பாடலிலும், இராம பக்தியிலும் தன்னை மறந்து சிறிது சாய்ந்த நிலையில் ரசிக்க ஆரம்பித்து :"பாவசமாதி" என்னும் யோக நிலையை அடைந்தார். இதேப்போல் இராமனிடம் ஒன்றி பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்த பத்திரசேனன் மெதுவாக சகஜ நிலைக்கு வந்தபோது அவர் அருகில் ஹனுமன்  பாவசமாதி நிலையில் இருந்தததை கண்டார். இவ்வளவு அருகாமையில் அனுமனை  கண்டவுடன் அரசனுக்கு  ஒன்றும் புரியவில்லை. ஹனுமனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஸ்பரிசம் பட்டவுடன்தான் ஹனுமான்  பாவசமாதி நிலையிலிருந்து வெளியே வந்தார். "பத்திரசேனா! உமது ஶ்ரீராம பக்தியை கண்டு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஶ்ரீராமரின் தரிசனம் உனக்கு  சீக்கிரமே கிடைக்கும். உனக்கு  ஏதேனும் வேண்டுமென்றால் தயங்காது கேள் என்று   பத்திரசேனனிடம் ஹனுமன் கேட்டார்.
உடனே பத்திரசேனன், அனுமனிடம் பிரபோ! ஶ்ரீராமரின் பரிபூர்ண ஆசிகள் பெற்ற நீங்களே என்பாட்டில் மகிழ்வடைந்ததே  நான் செய்த புண்ணியம். அந்த புண்ணியத்தின் பலன், தாங்கள் எனக்கு தரிசனம் தந்ததால் நான் புனிதமடைந்தேன். அஞ்சனை மைந்தனே! ராமனின் பக்தனே! இந்த பாவசமாதி நிலையில்  எனக்கு ஆசிகள் வழங்கியதுபோல், இங்கு வரும் பக்தர்களுக்கு நீங்கள் அருள் புரியவேண்டும் என்று வேண்டினான். மேலும் இங்குவரும் கன்னிப்பெண்களுக்கு . நல்ல வரன் அமைய நீங்கள்தான் அனுகிரகிக்க வேண்டும்."என்று வேண்டி நின்றான் அரசன். பத்திரசேனனை ஆசிர்வதித்த ஹனுமன் அவருக்கு கொடுத்த வாக்குபடியே இந்த க்ஷேத்திரத்தில் பாவசமாதி நிலையிலிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து எல்லா மங்களங்களும் பக்தர்களுக்கு வழங்குகிறார்.என்பது ஐதீகம்.
தரிசனம் முடிந்து வெளிவரும் வாயிலில் சனிபகவானது சந்நிதி ஒன்று இருக்கிறது. அங்கேயும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர் கோவிலினுள் ஒரு பஜனை மண்டபம் இருக்கு. நிறைய பக்தர்கள் அங்க பஜனை பாடல்களை பாடுகின்றனர். படுத்த நிலையில் அனுமன் அருளும் இந்த வித்தியாசமான தரிசனம் மனதுக்குள் ஒரு தனி ஆனந்தத்தைப் பொங்கச் செய்கிறது. நாங்களூம் ஒருவழியாக ஸ்லீப்பிங் ஹனுமான் மந்திரில் இருந்து தரிசனம் முடித்து வெளியேவந்தோம். வெளியே சிறுவர்களுக்கான ராட்டினங்களும், கடைகளும் நிறைய இருக்கின்றன, இங்கே பால்கோவா விஷேசமாக தயாரிக்கிறாங்க போல! எல்லா கடைகளிலும் பால்கோவாவை விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள் .
இந்த யாத்திரை நல்லபடியா முடிச்சிட்டு, வெளியே வரும்போது அருகில் உள்ள யூனஸ்கோவின் உலக வரலாற்று பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லோரா குகைகளுக்கும், அஜந்தா ஓவியங்களையும் பார்க்க ஆவலாக இருந்தோம். இதுவரை நாம இந்த பயணத்தில் கோவில்களை பற்றி பார்த்தோம் இனி அடுத்தவாரம் வேறு கோவிலிருந்து உங்களை சந்திக்கிறேன் .அதேசமயம் அஜந்தா எல்லோரா குகைகளுக்கும் விரைவில் உங்களை அழைத்துச்செல்கிறேன் .
நன்றியுடன்
ராஜி

Wednesday, January 30, 2019

தியாகக்குணம் ஆணுக்கும் உண்டு- வெளிச்சத்தின் பின்னே

வலி, அவமானம், வேதனை, தியாகம்லாம் பெண்ணினத்துகே உரியதுன்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா பாவப்பட்ட உயிரினம் எதுன்னு கேட்டா அது ஆணினம்தான். விட்டுக்கொடுத்தல், உணர்ச்சியினை வெளிக்காட்ட முடியாமை, பொறுப்புணர்ச்சின்னு போற்றத்தக்க பல விசயங்கள் ஆணிடம் உண்டு. தேதி நினைவில் கொள்ள முடியாமை, ஒரு நேரத்தில் ஒரு விசயத்தில் மட்டுமே கவனம் செலுத்தமுடியும், அவசரம், கோவம் மாதிரியான சில குணங்களால் ஆண்களுக்கு கெட்டப்பேரு.
Dasaratha offers half the payasam to his main Queen Kausalya (right), half of the remainder to Sumitra (middle), and the remaining quarter he offers half to Kaiykeyi (left) and the rest back to Sumitra. Southern Andhra Pradesh (north of Madras), bordering Karnataka, around 1720-1730
ராமாயணத்துல அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களில் சத்ருக்ணன் பாத்திரமும் ஒன்று. அப்பாத்திரம் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவு. மொத்த ராமாயணத்துலயும் அவர் வாய் திறந்து பேசினதா  சொல்லப்படும் தருணங்களை விரல்விட்டு எண்ணிடலாம். தசரத மகாராஜாவுக்கு பிள்ளையில்லாத குறையை போக்க, புத்திரகாமேட்டி யாகத்தை நடத்த, அதில் கிடைத்த பாயாசத்தை  அறுபதினாயிரம் மனைவிமார்களில் பட்ட மகிஷியான கோசலைகும்,  அன்புக்கு பாத்திரமான கைகேயிக்கு இருபங்காக கொடுத்தார். தங்களுக்கு கிடைத்த  பாயாசத்திலிருந்து கொஞ்சமென சுமித்ரைக்கு கைகேயியும் கோசலையும்  சுபத்ரையிடம் கொடுத்தனர்.
Image may contain: 1 person
கோசலைக்கு விஷ்ணுவின் அம்சமான ராமரும், கைகேயிக்கு விஷ்ணு கையிலிருக்கும் சக்கரம் பரதனாகவும், சுமித்தரைக்கு ஆதிசேஷன் லட்சுமணனாகவும், விஷ்ணு கையிலிருக்கும் சங்கு  சத்ருக்ணனாகவும் அவதரித்தன. லட்சுமணன் எப்படி ராமர்மேல் பாசம் வைத்திருந்தானோ அதுமாதிரியே பரதன்மேல் மிகுந்த பக்தியும், அன்பும் வைத்திருந்தான் சத்ருக்ணன்.சத்ருக்ணன் பாசக்காரன் மட்டுமல்ல சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர், மக்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவர், வீரதீரத்துல் லட்சுமணனுக்கு சற்றும் சலைத்தவனில்லை. அதேநேரம் ராமன், பரதனைப்போல சாந்தசொரூபியாய்  இல்லாம லட்சுமணனைப்போல கோவக்காரன். நீதிநேர்மை, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன்.  ராமன் திருமணத்தின்போது சீதையின் மூன்றாவது தங்கையான ஸ்ருதகீர்த்தியை மணந்தான்.  திருமணம் முடிந்த, சில மாதங்களில், பரதன், தன் தாய்மாமன் வீட்டிற்குப் புறப்பட்டபோது, பரதனுடன் சத்ருக்ணனும் சென்றுவிட்டதாய் புராணங்கள் சொல்கிறது.
அதன்பிறகு தசரதன் இறந்த செய்தி கேட்டு, பரதனுடன் சத்ருக்ணன் நாடு திரும்பும்போதுதான் அவனைப்பற்றிய குறிப்புகள் மீண்டும் ராமாயணத்தில் வருகிறது. ! ராமனும், சீதையும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதைக்கேட்டு, முதலில் வருத்தமடைந்து, பின்னர்  தன் அண்ணனான லட்சுமணன்மீது கடுங்கோபம் கொள்கிறான்.  அப்பா, அம்மாக்களை, சிறைபிடித்தாவது, ராமன் காட்டிற்குச் சென்றதைத் தடுத்திருக்க வேண்டாமா? எனக் கோபம்கொள்கிறான். இதனை பரதனுடனும் பகிர்ந்து கொள்கிறான்.
பரதனுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஆடை அலங்காரத்தோடு தனது எண்ணம் பலித்ததை எண்ணி மகிழ்ச்சியாய், மந்தரை அந்த பக்கமாய் வருகிறாள்., இதனைப்பார்த்த சத்ருக்ணன் கோபம் கொள்கிறான்! மந்தரையின் முடியைப் பிடித்திழுத்து கைகேயின் அரண்மனை விட்டு வெளியேத்த இழுத்து செல்கிறான்.  இதனைப் பார்த்த கைகேயியின் தோழியர், கைகேயிடம் சென்று நடந்ததைக் கூறுகின்றனர்! உடனே கைகேயி வந்து சத்ருக்ணனிடம், மந்தரையை விடுவிக்கும்படி சொல்கிறாள். அந்தக் கைகேயியையும் கடிந்து கொள்கிறான் சத்ருக்ணன்.  , மந்தரையை கொல்லத் துடிக்கிறது அவன் மனம். அப்போது பரதன் அங்கு வருகிறார். பெண்களைத் துன்புறுத்துவது சரியல்ல. இதனை ராமன் கேள்விப்பட்டால், உன்மீது கோபம் கொள்வார்.  மந்தரையை விட்டுவிடு என சத்ருக்ணனுக்கு ஆலோசனை கூறுகிறார். பரதனின் ஆலோசனைப்படி மந்தரையை விட்டுவிடுகிறான் சத்ருக்ணன்.
Image result for சத்ருக்ணன்

உடனே சத்ருக்ணன் சாந்தமடைந்து மந்தரையை விட்டு விடுகிறான்.  இதன்பின், ராமர், சீதா, லட்சுமணனை திரும்ப அழைத்துவர, பரதனுடன், சத்ருக்ணனும் செல்கிறான். சித்ரகூடத்தில் ராமர் தங்கியிருந்த இடத்தை முதலில் கண்டு பிடித்தது சத்ருக்ணந்தான்.  ராமனை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, பரதனுடன் அழைக்கிறார்.
Related image
 மந்தரை, கைகேயியை சத்ருக்ணன் கடிந்துக்கொண்ட தகவல் தெரிய வந்து விடுகிறது! பரதனுடன், ராமனுடைய பாதுகையைப் பெற்று, நாடு திரும்ப எத்தனிக்கும்போது, ராமன் சத்ருக்ணனை அழைத்து, நீ அன்னை கைகேயிடம் அன்பு பாராட்டவேண்டும். ஒருபோதும் கோபித்துக் கொள்ளக்கூடாது, மந்தரையையும் நிந்திக்கக்கூடாதென அறிவுரை கூறிகிறார். பிறகு பரதனுடன், சத்ருக்ணன் நாடு திரும்புகிறார். பரதன், நாட்டின் பரிபாலனத்தை சத்ருக்ணனிடம் ஒப்படைத்து, கிட்டத்தட்ட தவவாழ்வினை அரண்மனையிலிருந்தபடியே ராமனை போலவே பரதனும் வாழ்ந்தான். பரதன் சார்பாக திறம்பட நாட்டினை ஆண்டான் சத்ருக்ணன். 
Do not abuse food.  Do not discard food.  Grow food in abundance!
இதன்பின் சத்ருக்ணன் பற்றிய தகவல்கள் ராமர், இலங்கையிலிருந்து திரும்பும் போதுதான் மீண்டும் வருகிறது. அனுமார் வந்து பரதனிடம், ராமனின் வருகையைத் தெரிவிக்கிறார். உடனே, பரதன் தம்பி சத்ருக்ணனை அழைத்து, பிரமாதமாக வரவேற்க ஏற்பாடு செய் என்கிறார். இதற்காக வழிகளை செப்பனிட்டு, கட்டிடங்களை அலங்கரித்து நகரை அழகுமிக்கதாக, சத்ருக்ணன் மாற்ற ஏற்பாடு செய்தான்.  ராமர் பட்டாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது.
அதன்பிறகு மீண்டும் சத்ருக்ணன் பற்றிய தகவல்கள், லவணாசுரன் என்னும் அசுரன் கொடுமைகள் பற்றி ரிஷிகள் புகார் கூறும்போதுதான் வருகிறது.  பட்டாபிஷேகம் முடிந்து, பல ஆண்டுகள் கழிந்து, லவணாசுரன் கொடுமைகள் பற்றி அறிந்த ராமன், அவனைக் கொல்ல பரதனை அனுப்பலாமென  ஆலோசிக்கிறார். அப்போதுதான் சத்ருக்ணன் அண்ணன் ராமனிடம் அந்த வாய்ப்பு தனக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறார். தம்பியின் வேண்டுதல் கேட்டு மகிழ்ந்த ராமன், ஆஹா! நீயே அதற்குச் சிறந்தவன். நீயே அவனைக் கொல்! நீ அவனை ஜெயித்து வந்தபின், லவணாசுரன் ஆண்டுவந்த  மது நாட்டின் அரசனாக பட்டாபிஷேகம் செய்விக்கிறேன் என ராமன் கூறியதைக் கேட்ட சத்ருக்ணன், தன்னுடைய பண்பை இவ்விடத்தில் வெளிப்படுத்துகிறார்.
Of the many illustrations by Raja Ravi Varma (1848–1906) which are available at Wikipedia, this is one of my favorites. I really like the details here, such as Rama's sandals on the throne. I was glad to include this in the Sunday class announcements since Sunday is a busy day; I hope a lot of people got to see this one.
நான் லாவணாசுரனைக் கொல்கிறேன் எனக்கூறியது என் வீரத்தை வெளிப்படுத்தத்தான். என் அண்ணா பரதன்.  அவனே அதனையும் ஆளட்டும்! அதற்குத் தாங்கள் உத்தரவிட்டாலே மகிழ்வேன் என்கிறார். ஆனால் ராமரோ, வென்றவன் அவனே  அரசாளவேண்டும். ஆக வென்றால் நீதான் மகுடம் சூட்டிக்கொள்ள வேண்டும். இது ராமனின் உத்தரவு. மறுப்பு கூறாதே! உத்தரவிட்டு பெரும்படையை சத்ருக்ணனுடன் ராமன் அனுப்பி வைக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவுப்படுத்தவேண்டும். லவணாசுரனை வெல்ல சத்ருக்ணன் புறப்படுபோது சீதை கர்ப்பிணியாய் இருந்தாள். ராமனின் சந்தேகத்திற்கு மீண்டும் ஆளான சீதை, காட்டுக்கு சென்று வால்மீகி ஆசிரமத்தை சரணடைகிறாள். இந்த வால்மீகி ஆசிரமத்தில் சத்ருக்ணன் ராமர் படையுடன் வந்து ஒருநாள் தங்குகிறார். அப்போது சீதைக்கு லவகுசர்கள் பிறக்கின்றனர். பிறகு ஏழு நாட்கள் பயணம் செய்து யமுனை நதிக்கரையில் இருந்த சயவன மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அங்கு லவணாசுரன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக்க்கொண்டு,  சத்ருக்ணன் கடும்போர் புரிந்து கடைசியில் அவனை தன்னுடைய அம்பினால் கொல்கிறார். அனைவரும் அவனை வாழ்த்துகின்றனர்.
Magic Transistor
ராமன் வாக்களித்தபடி  மது நாட்டுக்கு மன்னனாகி, புதிய மதுராவை உருவாக்குகிறான். இன்றைய மதுரா சத்ருக்ணனால் நகரமாக உருப்பெற்றதுன்னு குறிப்புகள் சொல்லுது. பனிரெண்டு வருடங்கள் ஆண்டபின் மீண்டும் அயோத்தி நோக்கி வருகிறார். வழியில் மீண்டும் வால்மீகி ஆசிரமத்தில் தங்குகிறார். அப்போது லவ-குசர்கள் ராமனின் கதையை இசையாக்கிப் பாடுவதை கேட்கிறார். 
அயோத்தி சென்று ராமரை சந்திக்கிறார். ராமருடனேயே வாழ விரும்புகிறார். ஆனால், ராமரோ, சத்திரிய தர்மம், ராஜபரிபாலனம் செய்வதுதான். ஆக தொடர்ந்து மதுராவை  ஆள்வதே சரி. அதனைக் கடமையாகக் கொண்டு செயல்படு என அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு சத்ருக்ணன் பற்றிய தகவல் மீண்டும்  ராமர், தனக்குக் கடைசி காலம் வந்துவிட்டதை உணர்ந்து கொள்ளும்போதுதான் வருகிறது.  இதனை அறியும் சத்ருக்ணன், தன்னுடைய இரு மகன்களுக்கும் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, ராமனைத் தேடி வருகிறார். ராமன் சரயு நதியில் இறங்கி, மூழ்கும்போது, அவரைப் பின்பற்றி, சத்ருக்ணனும் மூழ்கிவிடுவதாக ராமாயணம் சொல்லுது. சத்ருக்ணன், மதுராவை நீண்ட நாள் ஆண்டார் எனவும் மதுராவில் சொல்லப்படுது. எது உண்மைன்னு சத்ருக்ணன் மட்டுமே அறிவார்.
 ராமாயணத்தில் சொற்ப இடங்களில் வந்தாலும் சகோதரர்கள்மீது அளவற்ற பாசம், நீதி நேர்மை, திறமை, வீரம்ன்னு சகல நல்ல குணத்துடன் வாழ்ந்த  சத்ருக்ணன் பேர் பரதன், லட்சுமணன் அளவுக்கு பேசப்படலைன்னாலும்  பாயம்மல் -திருச்சூர் (கேரளா), முனிக்கேஷ் - ( ரிஷிகேஷ் ரெடி) கன்ஸ்டிலா அருகில் - மதுரா - உத்தரப்பிரதேசம் என மூன்று இடத்தில் தனிக்கோவில் அமைத்து சத்ருக்ணனை வழிபடுகின்றனர்.

பேசப்படாத கதாபாத்திரத்துடன் மீண்டும் வருவேன்...
நன்றியுடன்,
ராஜி

Wednesday, January 23, 2019

பிள்ளைக்காக கணவனை பலிக்கொடுக்க துணிந்த தாய் - வெளிச்சத்தின் பின்னே

அந்த நேரத்தில்  சகல ஜீவராசிகளிலும் கோசலையைவிட அத்தனை மகிழ்ச்சியாய் வேறு யாராவது இருந்திருப்பார்களா என யோசித்தால், இல்லைன்னுதான் சொல்லனும். ஏன்னா, தன் மகன் ராமன், அயோத்திக்கு அரசனாகி நாடாளப்போகிறான். நாளைக்கு அவனுக்கு பட்டாபிஷேகம். மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது. ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியோ துக்கமோ எதுவா இருந்தாலும் கணவன்கிட்டதான் பகிர்ந்துப்பாங்க. கோசலையும் தன் கணவன் வருகைக்காய் காத்திருந்தாள்.
ராமனின் பிறப்பு, சகல கலைகளிலும் அவனின் திறமை, அகலிகை சாபம் நீக்கியது, விஸ்வாமித்திரனின் யாகம் காத்தது. கற்புக்கரசியான மகாலட்சுமியின் அவதாரமான சீதையை மணந்தது, காட்சிக்கு எளியவனாய், இன்சொல் மட்டுமே பேசுபவனாய், பழக இனிமையானவனாய்,  குடும்பத்தார்  மட்டுமல்லாது அயோத்தி மக்களின் மனசையும் கவர்ந்தவன். அவன் நாடாளப்போகிறான் என்றதும் நாடே விழாக்கோலம் பூண்டது.  நாட்டு மக்கள் தங்கள் வீட்டு பையனே அரசனாவதாய் நினைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில்  திளைத்து, வீட்டை, தெருக்களை வண்ணப்பொடிகளாலும், காவியாலும் அலங்கரித்ததோடு தங்களையும் அலங்கரித்து பட்டாபிஷேக நிகழ்ச்சிக்காக காத்திருப்பது கோசலையின் காதுக்கு எட்டி ராமனை சுமந்த வயிற்றினை பூரிப்போடு தடவியபடி கணவனுக்காக காத்திருந்தாள்.
Image result for கோசலை
பட்டாபிஷேக ஏற்பாடுகள் பற்றி கணவரும், தன் சக்காளத்திகளும் ஆவலோடு பேசுவதை கேட்க, மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள வருவார்கள் என அவர்களின் வருகைக்காக தனது இருப்பிடத்தை தயார் செய்து காத்திருந்தாள்.  தன்னைவிட  ராமன்மேல் அன்பும், கவனிப்பும், அக்கறையும் கொண்டு  தன் பிள்ளைப் போலவே நேர்த்தியோடு பார்த்துக்கொண்ட தன் இளையவளான கைகேயின் செயலும், அவளின் மகிழ்ச்சியும் அவள் மனக்கண்முன்  நிழலாடியது. 
Image result for கோசலை
ராமன் பிறந்ததும் முதன்முதலில் கைகேயியின் கைகளில்தான் தசரதன் தந்தார். அதுக்கு காரணமாய் தசரதன் சொன்னது, கைகேயி அரச வம்சத்தவள். கைகேய நாட்டின் இளவரசி. அவளுக்கு அரண்மனை சுகபோகங்கள், அதிகாரங்கள், ஆனந்தங்கள் எல்லாமே அத்துப்படி. ஆனால், கோசலையோ எளிமையான குடும்பத்தில் பிறந்தவள். அவளுடைய எதிர்பார்ப்புகளும், தேவைகளும், இயலாமை எல்லைக்குள் அமைதிபட்டுக் கொள்ள வேண்டியவை. ஓர் அரசனுக்குப் பட்டத்து ராணியாக ஆனபிறகும் தன் குடும்ப எளிமை, பணிவு, அடக்கம் எல்லாம் தொடர்ந்து அவளிடம் நீடித்தன. ஆனால், கைகேயி அப்படியில்லை. தனக்கு அடிமை செய்ய தன் அரண்மனையிலிருந்தே தனக்கு அதுவரை பணிபுரிந்து கொண்டிருந்த சேடிப்பெண்ணை உடன் அழைத்து வந்தது முதல், தன் அரச தோரணையிலிருந்து சிறிதும் இறங்காதிருந்தாள். 
Related image
இத்தனை பகட்டும் வெளியில் இருந்தாலும்,  பகட்டின் அளவுக்கு உள்ளே மென்மையும்,அன்பும் பூரணத்துவமாய் அவளிடம் குடி கொண்டிருந்தது. , அவளின்  அன்பை, கருணையை,  இரக்கத்தை,கைகேயியின் மனதின் இன்னொரு பக்கத்தை, வெளியே தெரிந்த அதிகாரத் தோரணை நீறு பூத்த நெருப்பாக மூடியிருந்தது. பேச்சில் கம்பீரம் இருந்தாலும், எதிரே இருப்பவரின் வயது, பதவியை அனுசரித்துதான் வார்த்தைகள் வெளியே வரும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தசரதன் தன் குழந்தையை முதலில் அவள் மடியில் தவழவிட்டிருக்கிறான். பின்னால் நாடாளப் போகும் குழந்தை, ஏற்கெனவே ஒரு நாட்டின் இளவரசியாக வாழ்ந்தவள், இப்போது ராஜ மகிஷியாக இருப்பவள் பொறுப்பில் வளருவதுதான் பொருத்தமா இருக்கும். அதனால்தான் தனது மூத்தமகனை கைகேயிடம் தசரதன் தந்தார். அவரது எதிர்பார்ப்புக்கேற்ப, ராமனுக்கு ராஜ தந்திரம், போர்க்கலைகள், தர்ம நியதிகள் என அனைத்தும் அன்னைக்கு அன்னையாய், குருவுக்கு குருவாய் இருந்து கைகேயி போதித்தாள்.  ஆக, ராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதில் தன்னைவிட கைகேயிதான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வாள் என கோசலை நினைத்தாள்.
Image result for கோசலை
அடுத்து, இரண்டாவது இளையவலான சுமித்திரை. கைகேயியின் அதிகார தோரணை, ராஜவம்சம், அறிவாற்றல் இவையெல்லாம், கைகேயியிடம் நெருங்கி பழக கோசலையை தடை செய்தது. அதனால், தனது சுகதுக்கங்களை சுமித்திரையிடமே கோசலை பகிர்ந்துக்கொள்வாள். ராமன்மீதான சுமித்திரையின் அன்பும் கைகேயி, கோசலைக்கு சற்றும் குறைந்ததில்லை. தனது இரண்டு மகன்களில் லட்சுமணனை ராமனின்சேவைக்காகவும், சத்ருக்கனனை பரதனின் சேவைக்காகவும் அர்ப்பணித்தவள், . தானும் கைகேயியும் ஆளுக்கு ஒரு பாகம் அவிர்பாக பாயசத்தைக் கொடுத்ததால், அதனால் தனக்குப் பிறந்த குழந்தைகளை ஒரு நன்றியறிதலாக இப்படி மூத்தாள் குழந்தைகளுடன் பழக விட்டிருப்பாளோ? அவர்களும் தாயின் விருப்பம் போலவே ராமனுடனும், பரதனுடனும் ஒன்றிப் போய்விட்டார்களோ!  எப்படி பார்த்தாலும்  சுமித்திரையும் ராம பட்டாபிஷேகத்தில் பேராவலோடு இருப்பாள். அவளுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வோம் என காத்திருந்தாள். 
Image result for சோழி போட்டு பார்த்தல்
நேரம் கடந்தது.. ஆனாலும், ஒருவரும் தனது இல்லம்தேடி வரவில்லை. அதனாலென்ன?! தானே அவர்களை போய் சந்திப்போம் என கோசலை கிளம்பினாள். முதலில் கைகேயியைப் பார்க்கப் போவோமென  கோசலை கைகேயியின் அரண்மனையை அடைந்தாள். அவளது அந்தப்புரத்தில் கைகேயி, அரண்மனை பிரதான ஜோதிடரிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது. சரி, பேசி முடிக்கட்டுமென அவர்களுக்கிடையே புக விரும்பாதவளாக வாயிலுக்கு வெளியே காத்திருந்தாள். தன் தலையில் இடிவிழப்போவதை அறியாதவளாய் கைகேயியை சந்திக்க காத்திருந்தாள்.
Image result for கோசலை
பேரதிர்ச்சியை நேரில் கண்டவராய் ஜோதிடர் சொல்லிக்கொண்டிருக்க,  அந்த பேரதிர்ச்சியை கைகேயி கவலையுடன் உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.   அவர்கள் இருவரின் பேச்சிலும் ராமன், பரதன் பெயர்கள் அடிபடுவதும் கோசலைக்கு கேட்டது. சரி, ராம பட்டாபிஷேக சந்தோஷத்தைப் பிறகு பகிர்ந்து கொள்ளலாம். இப்போது கைகேயி கவலையோடு இருக்கிறாள் என அங்கிருந்து நகர்ந்து தன் இல்லம் சென்றாள். ஆனாலும், அவளது மனது, ராமர் பற்றி ஜோதிடம் பார்க்க இப்போது என்ன நேர்ந்தது?!  என கோசலை குழம்பி தவித்தாள். அன்றிரவு தூக்கத்தை தொலைத்த கோசலை விடிந்ததும் முதல்வேலையாய் அரண்மனை தலைமை ஜோதிடரை அழைத்துவரச்சொன்னாள்.  அவரிடம் நேற்று நடந்ததை, கைகேயியும் அவரும் பேசியதை கேட்க நேர்ந்ததை பற்றி எடுத்துக்கூறியதுடன், தான் கணித்த ஜோதிடக்குறிப்புகளை கோசலைக்கும் எடுத்துக்கூறினார் ஜோதிடர்.  அதைக்கேட்டதும் இடிவிழுந்த மரமாய் நிலத்தில் சாய்ந்தாள் கோசலை.   ஜோதிடம் பலிக்கும். அப்படியானால், அதில் சொல்லி இருக்கும் இழப்புக்கும், பரிகாரத்துக்கும் தன்னை தயார் செய்துக்கொண்டு ஒருவாறாய் கைகேயியின் வரத்துக்கு உயிர் தந்து ராமனை காட்டுக்கு அனுப்ப மறுப்பேச்சு பேசாமல் அமைதியாய் இருந்தாள். 
Image result for கோசலை
ராமன் காடு சென்றான். பரதன் ராமனின் பாதுகையை அரியணையில் வைத்து சீரும் சிறப்புமாய் நாடாண்டான். வாலி வதம், ராவண வதம் முடிந்து, ராமர், லட்சுமணன், சீதை மீண்டும் அயோத்தி வந்தனர். அரண்மனை வந்த ராமன் முதலில் கைகேயியை வணங்கி நின்றான். இதனைக்கண்டும் கோசலையும் அமைதியாய் இருந்தாள். இதனைக்கண்டலட்சுமணன் வெகுண்டெழுந்தான். எல்லோரும் கலைந்து சென்றபின் கோவத்தோடு கோசலை இல்லம் சென்றான். 
Image result for கோசலை
கைகேயி தன் மகன் பரதனுக்காக சதிவலை பின்னி ராமனை காட்டுக்கு அனுப்பினாள். ராமன் எதையும் மனதில் கொள்ளாமல் தன்னை வளர்த்த கைகேயியை வணங்கி நின்றான். ராமனின் சொந்தத் தாயான நீங்கள் எப்படி ராமன் காட்டுக்கு செல்ல அனுமதித்தீர்கள்?! சரி, கணவனின் வரத்துக்காக அன்று அமைதியாய் இருந்தாலும், இன்றாவது உங்கள் மகனின் நிலைக்காக கைகேயியிக்கு எதிராக ஏன் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை? தன் மகனுடைய மகுடம் பறிக்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தமில்லையா? வாரிசு உரிமைப்படி, நியாயப்படி, சட்டபூர்வமாகவே உங்கள் மகனுக்கு கிடைக்க வேண்டிய உரிமை கைநழுவிப் போனதற்காக அன்று நீங்கள் ஏன் கோபப்படவில்லை? கைகேயி வரம் கேட்டிருந்தாள். தசரதன் வரம் தருவதாய் வாக்கு கொடுத்திருந்தார். இது அவர்கள் இருவரும் தனிப்பட்ட விசயம். அந்த தனிப்பட்ட விசயம்  தன்னையும் தன் மகனையும் தாக்குவதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்?! உங்கள் மனக்கசப்பை சிறிதும் வெளிப்படுத்தாமல் அமைதியாய் இருந்த, இருக்கும் காரணமென்ன?! கைகேயி அரச வம்சத்தவள், தான் அவ்வாறில்லை என்ற தாழ்வு மனப்பான்மை காரணமா?  அப்படியே இருந்தாலும், தசரத மகா சக்கரவர்த்தியின் முதல் மனைவின்ற அந்தஸ்து பெரியதில்லையா? அந்த உரிமையில் நீங்கள் கைகேயியின் ஆணவக் கோரிக்கை நிறைவேறாதபடி செய்திருக்க முடியாதா? தசரதன் அவளுக்கு வரத்தின்மூலம் பரதன் முடிசூட வேண்டும் என்று கைகேயி வலியுறுத்தும்போது   ராமனை சக்கரவர்த்தியாக்கி, பரதனை ராமனுக்கொப்பாக இன்னொரு தேசத்துக்கு அரசனாக ஆக்கியிருக்கலாமே?  அல்லது பரதனே ஒட்டுமொத்தமாய் நாடாளட்டும். ஆனால் ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டாமெனவாவது தசரதனிடம் கேட்டிருக்கலாமே!இந்த சமரச சிந்தனை ஏன் உங்களுக்கு  தோன்றவில்லை என பலவாறாய் தனது ஆதங்கத்தை லட்சுமணன் கொட்டி தீர்த்து, காட்டுக்கு சென்றதால்தானே  சீதை அயலானிடம் சிறைப்பட்டு ராமன் அவதிப்பட்டு நரக வாழ்வை வாழ நேர்ந்ததென முடித்தான்.
“ஆனால், நான் என் மகனை முற்றிலுமாக இழந்திருப்பேன். அந்த ரகசியம் தெரியுமா உனக்கு?” என ஒற்றைக் கேள்வியில்  லட்சுமணன் வாயை அடைத்தாள் கோசலை. மறுப்பேச்சின்றி நின்ற லட்சுமணனை கண்ட கோசலை ஆமாம் லட்சுமணா! கைகேயியும், ஜோதிடரும் பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்க நேர்ந்ததும், அயோத்தி நாட்டின் அமைப்புப்படி அந்த நேரத்தில் யார் அரசனாய் இருப்பார்களோ அவர் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் சொன்னதை கைகேயிடம் சொன்னதை கேட்டுத்தான் ராமன் உயிரை காப்பாற்றவே தான் அமைதியாய் இருந்ததாகவும், தன்னைப்போலவேதான் ராமனுக்கு தாயினும் மேலாய் கண்ணும் கருத்துமாய் வளர்த்த கைகேயியும் கணவனை இழந்தாலும் ராமன் உயிர்ப்பிழைக்க நினைத்தே பரதன் நாடாள, ராமன் காட்டுக்கு செல்லும் வரம் கேட்டாள். ராமன் உயிர்பிழைத்திருக்க வேண்டியே தானும் அமைதியாய் இருந்ததாய் கோசலை லட்சுமணனிடம் தன் நிலையை எடுத்துக்கூறினாள்.
Image result for கோசலை
 நான் யாருக்காகப் பேசுவது? புது வாழ்வு துவங்கப்போகும் என் மகன் ஆயுள் நிலைப்பது முக்கியமா? ஆண்டு அனுபவித்து, வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் கணவன் உயிர் முக்கியமா?! என கைகேயி யோசித்ததைப்போன்றே தானும் யோசித்துதான் கைகேயியின் வரத்துக்கு எதிராய் எதுவும் கருத்து கூறவில்லை.  அதேநேரத்தில் பரதன் உயிரிழப்பதையும் நான் விரும்பவில்லை. அவன் அரியணையில் அமரக்கூடாதென கடவுளிடம் தினமும் வேண்டிக்கொண்டிருந்தேன். தன் வேண்டுதலும் பலித்து எனது எந்த புதல்வர்களும் அந்த அரியணையில் அமராமல் இக்கட்டான அந்த 14 வருடமும் அந்த அரியணை காலியாவே இருந்தது. அதுமில்லாமல், இந்த சூழ்நிலையை விட்டால் பிறகெப்போதும் தசரதன் கைகேயிக்கு அளித்த வரத்தினை நிறைவேற்ற முடியாது. கணவன் அளித்த வரத்தினை செயல்படுத்துவதும் மனைவியின் கடமைகளில் ஒன்று. அதையும் தான் நிறைவேற்றிவிட்டதாய் தன் நிலையை கோசலை எடுத்து சொன்னாள்.கோவம் தணிந்து தாயாய், மனைவியாய், நாட்டின் அரசியாய் தன் கடமையை சரிவர நிறைவேற்றிய கோசலையின் கால்களில் தன் கோபம் முற்றிலும் நீங்கியவனாய் லட்சுமணன் விழுந்து பணிந்தான்.  
60,000 மனைவிகளில் கோசலை, கைகேயி, சுமித்ரை மட்டுமே நமக்கு தெரிஞ்சிருந்தாலும் கைகேயி மட்டுமே ராமாயணம் முழுக்க நெகட்டிவ் கேரக்டரே ஆனாலும் கைகேயியின் பெயரே அடிபடும். ராமனை பெற்ற கோசலை பாத்திரம்கூட அதிகம்  பேசப்பட்டிருக்காது. நாடாள வேண்டிய மகனை காட்டுக்கு அனுப்பவும், கணவன் உயிரிப்பார் என தெரிஞ்சும் கைகேயியிக்கு கணவர் அளித்த வரம் நிறைவேற்றப்படவேண்டுமெனவும் நாடாள வேண்டிய மகனை காட்டுக்கு அனுப்ப துணிந்த அந்த தாயின் தியாகத்தினை ராமாயணம் அதிகம் பேசப்படாமலே போனது வருத்தமே!

மீண்டும் ஒரு அதிகம் பேசப்படாத கதாபாத்திரத்தோடு வருவேன்...












நன்றியுடன்,
ராஜி.