Showing posts with label பாட்டி வைத்தியம். Show all posts
Showing posts with label பாட்டி வைத்தியம். Show all posts

Tuesday, November 20, 2018

கருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்ன்னு நம்ம ஊரில் சொல்வாங்க. நஞ்சையும் முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. மிளகு கொடி வகையை சார்ந்தது. மிளகு, வால்மிளகு, வெள்ளை மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகுன்னு பலவகை உண்டு.  நறுமண பொருட்களில் ஒன்றான மிளகு நாம நினைக்குற மாதிரி விதையோ காயோ அல்ல. அது ஒரு கனி. மிளகு செடியில் காய்க்கும் பழத்தையே உலர வச்சு மிளகாய் விற்பனைக்கு வருது. உணவுக்கு நறுமணத்தோடு சுவையும் கொடுக்குது. கூடவே மருந்தாகவும் பயன்படுது. பைப்பர் நிக்கரம்(Piper nigrum)ன்ற தாவர பெயரிலிருந்தே பெப்பர்ன்ற வார்த்தை உண்டானது.
மிளகின் பூர்வீகம் நம்ம தென்னிந்தியாதான். கேரளாவில் மிளகு அதிகளவில் பயிரிடப்படுது. மிளகுக்கு கோளகம், குறுமிளகுன்னும் வேற பேருண்டு. மலையாளத்தில் குருமிளகு, கன்னடத்தில் மெனசு, தெலுங்கில் மிரியாலு அல்லது மிரியம், கொங்கணியில் மிரியாகொனுன்னு பேரு. மிளகின் காரத்தன்மைக்கு பெப்பரைன்ன்ற வேதிப்பொருள் காரணமாகுது.  மிளகை கருப்பு தங்கம்ன்னும் செல்லமா கூப்பிடுறாங்க. லண்டனில்  டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததால்தான் கிழக்கிந்தியக் கம்பெனியே துவங்கப்பட்டதுன்னா மிளகின் மதிப்பை தெரிஞ்சுக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் மணப்பெண் சீதனமா மிளகை கொண்டு வருதல் செல்வ செழிப்பின் அடையாளமாய் கருதப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளின் மிளகின் அவசியத்தினால்தான் இந்தியாவுக்கு கடல்வழி கண்டுப்பிடிக்கப்பட்டது.  அப்புறம் நடந்த கதைலாம் நமக்குதான் தெரியுமே!
சுமார் நான்கு அடி மட்டுமே வளரும் தன்மையுள்ள இந்த கொடி, தான் படர்ந்திருக்கும்  சூழலை பொருத்து 12 அடிவரை செழித்து வளரும். இது பல்லாண்டு தாவரமாகும்.  மிளகுக்கு முள்முருங்கை மரம்ன்னா கொள்ளை இஷ்டம். இதன் இலைகள் வெற்றிலை மாதிரி இருக்கும்.  பழுக்காத பச்சை மிளகு காயை சுடுதண்ணியில் ஊறவைத்து பின்னர் வெயிலில் உலர்த்தினால் கிடைப்பதே பொதுவா நாம சமையலுக்கு பயன்படுத்தும் கருமிளகு. சுடுதண்ணியினால் மேல் தோல் உரிந்து பூஞ்சைகளின் உதவியோடு கருமை நிறத்துக்கு வந்திடுது.
வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்களே பயன்படுத்தப்படும். இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்பட்டு,  பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்பட்டு,  பின், பழத்தின் சதைப்பகுதியை தேய்த்து நீக்கி, கடைசியாய் மிஞ்சும் விதைகள் உலர்த்தப்படும். இவ்வாறு உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகளே வெண்மிளகாகும். சில இடத்தில் மிளகு பழத்துக்கு பதிலாய்  பச்சை மிளகு காயும் பயன்படுத்தப்படுது.
கருமிளகை போலவே மிளகு காயை பதப்படுத்துவதால் பச்சை மிளகு கிடைக்குது. பச்சை நிறத்தை தக்க வைக்க கந்தக - டை- ஆக்சைடு கலக்கப்படுவது உண்டு. வினிகரில் மிளகு காயை ஊற வைத்தும் பதப்படுத்துவதால் மிளகு பச்சை நிறத்துடன் இருக்கும். இதேமாதிரிதான் மிளகு பழத்தை வினிகரில் ஊற வைத்து பதப்படுத்துவதால் சிவப்பு மிளகு கிடைக்குது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு  போன்ற தாது உப்புகளும், கரோட்டின், தயாமின்,  ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமீன்களும் மிளகில் இருக்கு. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.  காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. மிளகின் காரமும் மணமும் செரிமானத்தை தூண்டுது. 

 இது மழைக்காலம் கூடவே முன்பனிக்காலம்... முன்பனிக்காலம் பொல்லாததுன்னு என் அம்மா சொல்லும். சளி, இருமல்ன்னு படுத்தி எடுக்கும்.  அதுக்கு தகுந்த மாதிரி ஒரு மருந்து குழம்பை  இன்னிக்கு பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்...
பூண்டு
வெங்காயம்
தக்காளி
புளி
உப்பு
எண்ணெய்.
வறுத்து அரைக்க...
மிளகு -  கொஞ்சம் தாரளமா எடுத்துக்கவும்
வெந்தயம்
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
மிளகாய்,
தனியா
சீரகம்
வறுத்து அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை கொஞ்சம் எண்ணெய் ஊத்தி வறுத்து, வதக்கின பூண்டை சேர்த்து ஆற விட்டு மைய அரைச்சுக்கனும்...
பூண்டு உரிச்சு எண்ணெயில் வதக்கி பாதி எடுத்து அரைக்க வேண்டியதில் சேர்த்துக்கனும்..
வெங்காயம் சேர்த்து வதக்கனும்...

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கிக்கனும்...

தக்காளி வெந்ததும் அரைச்ச விழுதை சேர்க்கனும்...

பெருங்காயப்பொடி,   மஞ்சப்பொடி சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து  கொதிக்க விடனும்.


பச்சை வாசனை போனதும் புளிக்கரைசலை சேர்க்கனும்.
உப்பு சேர்த்து நல்லா கொதிச்சு, எண்ணெய் பிரிஞ்சு தனியா வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சு இறக்கிடனும்.
மிளகை தாராளமாய் சேர்த்துக்கலாம். வெந்தயம் கொஞ்சமா சேர்க்கனும். மிளகு காரத்தினால் உடல் சூடாகாம இருக்கவே வெந்தயம் சேர்க்கடுது. சிலர் வீட்டில் உளுத்தம்பருப்பும், கடலை பருப்பும் சேர்ப்பதில்லை. அது குழம்பை கொழகொழன்னு ஆக்கிடும். இன்னும் சிலர் வீட்டில் பருப்புகளுக்கு பதில் பச்சரிசி சேர்ப்பதுண்டு. கத்திரிக்காய் இருந்தால் சேர்க்கலாம். அதும் தனி ருசி கொடுக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சாதத்தில் கொஞ்சம்  நெய் சேர்த்துக்கலாம். மிளகின் காரம், சாப்பிடும்போதே சளியை கரைச்சு  மூக்கில் நீர் வடிய வைக்கும். உடல்வலிக்கும், காய்ச்சல், சளிக்கும் கைக்கண்ட எளிய மருந்து இது.

நன்றியுடன்,
ராஜி

Monday, October 14, 2013

சந்தனம், விபூதி பூசுவது எதுக்கு..? - ஐஞ்சுவை அவியல்


மாமா! சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது மறக்காம விபூதி பாக்கட் வாங்கி வாங்க. தீர்ந்து போய்ட்டுது. 

ஏன் ஒரு நாள் கூட விபூதி வைக்காம இருக்க மாட்டியளோ!? 

போங்க மாமா! டெய்லியும் குளிச்சுட்டும், வெளில போகும்போதும் நெத்தில விபூதி வச்சே பழகிடுச்சு. வெறும் நெத்தியா பார்க்க என்னவோ போல இருக்கு. ப்ளீஸ் வாங்கி வா மாமா!!

விபூதி இல்லாட்டி என்ன புள்ள!? பவுடர் எடுத்து பூசிக்க. யாருக்கு தெரிய போகுது!?

மாமா! விபூதி பூசுறது பழக்கத்துக்காகவும், அழகுக்காகவும், பக்திக்காகவும் தாண்டி அறிவியல் ரீதியாவும் காரணம் இருக்கு.

என்ன காரணம் புள்ள!?

நம் உடம்புல எல்லா நாடி நரம்புகளும் மூளையோட இணைக்கப்பட்டிருக்கு.  அதுல எல்லா நரம்புகளும் நெற்றிப் பொட்டின் வழியாச் செல்லுது. அதனால, நெற்றிப் பகுதி அதிக சூட்டோடு இருக்கும். நம் அடிவயித்துலயும் நெருப்பு சக்தியிருக்கு. ஆனா, அந்த சூட்டின் தாக்கம் அதிகமா உணரப்படுவது நெத்திப் பொட்டில்தான். அதனாலதான் காய்ச்சல்ன்னா நெத்தியில கைவைச்சு பார்த்து சூட்டை தெரிஞ்சுக்குறோம். வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைச்சு எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பின் வேலை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணிலாம் நாம என்னதான் துண்டு வச்ச்சு துடைச்சாலும் கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிடும். இதனால தலைவலி, தூக்கமின்மைலாம் வரும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேத்ததான் விபூதி வைக்குறதோட நோக்கம். நெற்றிப்பகுதி அதிகமா சூடாவதால கிருமித் தொற்று ஏற்படும். கிருமித் தொற்றைத் மஞ்சள் தடுக்கும். அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம்.  சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதனாலதான் விபூதி, குங்குமம், சாந்துலாம் வைக்கும் பழக்கம் உண்டாச்சு.

அப்படியா! நான் அது ஏதோ பக்திக்காக வைக்குறதுன்னு நினைச்சுக்கிட்டேன். இனி நானும் அதுப்போல வைச்சுக்க பழகுறேன்.

நல்லது மாமா! இந்தாங்க மாமா சாக்லேட்!! 

ஏது புள்ள!? இது புதுசா இருக்கே யார் வாங்கி வந்தது!?

நம்ம ராஜியோட பொண்ணு தூயா இருக்காளே! அவ ஃப்ளைட்ல வேலை செய்யுறது உங்களுக்கு தெரியுமில்ல. அவ, ஆயுத பூஜைக்காக லீவுல வந்திருக்கா. அவ எடுத்து வந்தான்னு சின்ன மண்டையனுக்கு கொடுக்க சொல்லி சாக்லேட் 4 சாக்லேட் கொடுத்தா.

ஓ! சரி, ஏன் ஃப்ளைட்ல சாக்லேட் கொடுக்குறாங்கன்னு தெரியுமா!?

ம்ம் தெரியும் மாமா! தூயா சொல்லிச்சு. சிலருக்கு ஃப்ளைட்ல போகும்போது மயக்கம், தலை சுத்தல்லாம்  வரும். அப்படி வரும்போது, அந்த சாக்லேட்டை சாப்பிட்டா சாக்லேட்டில் இருக்கும் குளுக்கோஸ் இதெல்லாம் வராம தடுக்குமாம். அது மட்டுமில்லாம. மஞ்சக்காமலை இருக்குறவங்க சாப்பாட்டு விசயத்துல அக்கறை இல்லாம இருப்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு டேஸ்டும், எனர்ஜியும் கிடைக்கவே சாக்லேட் தர்றாங்கன்னு சொன்னா.


ம்ம் சரியாதான் சொல்லி இருக்கா. பக்கத்து வீட்டுல யாரோ அழும் சத்தம் கேக்குதே என்ன!?

அதுவா மாமா, நம்ம பூவாயியை தேள் கொட்டிடுச்சு. 

ஓ டாக்டர்கிட்ட கூட்டி போனீங்களா!? இன்னும் இல்ல மாம, வண்டி கொண்டு வர போய் இருக்காங்க. அதுக்குள்ள, நம்ம லட்சுமி பாட்டி வெங்காயத்தை ரெண்டா அறிஞ்சு தேள் கடிச்ச இடத்துல வச்சு அழுத்தி பிடிச்சாங்க. வலி லேசா குறைஞ்சிருக்குன்னு பூவாயி சொல்றா.

ம்ம்ம்ம் எலுமிச்சை பழ விதையோடு உப்பையும் வச்சு அரைச்சு தண்ணில கலந்து குடிச்சாலும் விசம் இறங்கும். நவசாரத்தில் கொஞ்சம் உப்பு சேர்த்தா அது தண்ணியாகிடும், அதை தேள் கொட்டுன இடத்துல வச்சாலும் விசம் இறங்கி வலி குறையும்.
                               


அப்படியா!? இனி நினைவில் வச்சுக்குறேன் மாமா! ராஜியோட பையனுக்கு 5 இல்ல 6 வயசிருக்கும்ப்பொது அவனை கூட்டிட்டு ஷாப்பிங் போனோம். அப்போ, கச்சா பைட் சாக்லேட் கேட்டான். ராஜியும் வாங்கி கொடுத்தா. சாப்பிட்டு முடிச்சதும், மிண்டும் கேக்கவே ராஜி தன் கிட்ட பைசா இல்ல. அதனால வாங்கி தர முடியாதுன்னு சொன்னா.

அதுக்கு அவன், அதான் மார்க்கட்டுல வாங்குன மாங்கா பைல இருக்குல்ல நம்ம பெரியப்பா கடைல ஜெராக்ஸ் எடுத்துக்கலாம். ஜெராக்ஸ்க்கு பைசா கொடுக்க வேணாம். சாக்லேட்டும் கிடைக்கும்ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான்.

உன் ஃப்ரெண்ட் போலவே அவ பிள்ளையும் அதி புத்திசாலிதான் போ.

என் ஃப்ரெண்டையும், அவ பையனையும் குறை சொல்லுறீங்கல்ல. இப்ப ஒரு விடுகதை கேக்குறேன். விடை சொல்லுங்க பார்க்கலாம். 

முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. 
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது
 இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. 
முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். 
மொத்தத்தில் அழகிய பெயர். 
அது என்ன?!

 அது வந்து..., 

யோசிச்சு வைங்க. நான் போய் டீ போட்டு எடுத்து வரேன்.