மாலை நேரத்தில் எதாவது சூடா சாப்பிடலாம்ன்னு இருக்கும்போது சட்டுன்னு செஞ்சுடலாம் இந்த போண்டாவை...
Showing posts with label போண்டா. Show all posts
Showing posts with label போண்டா. Show all posts
Tuesday, April 07, 2020
Monday, October 07, 2013
பால் போண்டா - கிச்சன் கார்னர்
ஸ்கூல் விட்டு வரும் பிள்ளைகளுக்கு கடையில வாங்குன நொறுக்கு தீனி வாங்கி தர்றதுக்கு பதிலா, வீட்டிலேயே செய்த பலகாரத்தை கொடுத்தா உடம்புக்கும் நல்லது. நம்ம குழந்தைகளுக்காக நாம் கொஞ்சம் மெனக்கெடுறோம்ன்னு ஒரு சின்ன திருப்தி நமக்கு. அதுவே கொஞ்சம் சத்தானதா இருந்தா நல்லதுதானே!! அப்படி ஒரு சத்தான பலகாரம்தான் பால் போண்டா.
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 1 கப்
நொய் - ஒரு கைப்பிடி
பால் - 200 மிலி
சர்க்கரை- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஆப்ப சோடா - சிறிது
ஏலக்காய் பொடி - சிறிது
நொய், உளுத்தம்பருப்பை தனித்தனியே ஊற வைக்கவும், முதலில் நொய்யை மையை அரைத்து, அதனுடன் உளுத்தம்பருப்பை கொட்டி,, லேசா தண்ணி தெளிச்சு கெட்டியாக அரைக்கவும். மாவுடன் உப்பு, ஆப்ப சோடாவை சேர்த்து ஆட்டி எடுத்து வைக்கவும்.
பாலை காய்ச்சி அதனுடன் சர்க்கரை கொட்டி கலக்கவும்
வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணேய் ஊற்றி காய்ந்ததும், மாவை சிறு, சிறு போண்டாக்களாக இட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
சுட்டெடுத்த போண்டாக்களை சூடு ஆறும் முன் பாலில் போடவும்.
ஐந்து நிமிசம் கழிச்சு பாலில் ஊறின போண்டாக்களை எடுத்து பரிமாறவும்.
உளுத்தம்பருப்புல புரோட்டின் இருக்கு. பால்ல புரோட்டீன், கால்சியம், கொழுப்பு, மக்னீசியம், மாவுச்சத்துலாம் இருக்கு. ரெண்டுமே வளரும் பிளைகளுக்கும், பெண்களுக்கும் நல்லது. அதுக்காக ஆண்களுக்கு நல்லதில்லையான்னு கேக்காதீங்க, ஆண்களோட எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது.
எங்க ஊர் பக்கம் புதுசா கல்யாணம், ஆனவங்களுக்கு வைக்கும் விருந்துக்கும், கல்யாணம், காது குத்து, சடங்குக்கு பத்திரிகை வைக்க வரும்போதும் கிடா வெட்டு விருந்துலாம் கிடையாது. ஒன்லி சைவசாப்பாடுதான். அந்த மாதிரியான விருந்துக்கு காலைல டிஃபனுக்கு இந்த பால் போண்டா கண்டிப்பா இருக்கும்.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.
Wednesday, August 21, 2013
கார போண்டா - கிச்சன் கார்னர்
சொல்லிக்காம கொள்ளாம திடீர்ன்னு வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டாங்க. ஆனா, அவங்களுக்கு கொடுக்க நொறுக்ஸ் எதும் வீட்டுல இல்ல. என்ன செய்யலாம்னு கையை பிசைஞ்சுக்கிட்டு நிக்காம சட்டு புட்டுன்னு செஞ்சு அசத்துற ஒரு போண்டா இது...,
தேவையான பொருட்கள்:
நல்லா புளிச்ச இட்லி இல்ல தோசை மாவு - 1 கப்
மைதா மாவு - 4 கப்
வெங்காயம் - 2 பெருசு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - கொஞ்சம்
அதுல மைதா மாவை கொட்டிக்கோங்க.
அதுல உப்பு சேர்த்துக்கோங்க.
அடுத்து ஆப்ப சோடா சேர்த்துக்கோங்க.
வெட்டி வெச்ச வெங்காயத்தை சேருங்க.
பொடியா வெட்டுன பச்சை மிளகாயை சேர்த்துக்கோங்க.
பொடியா நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துங்க.
நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்துக்கோங்க.
தண்ணி சேர்த்து இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியா பிசைஞ்சு வச்சுக்கோங்க.
அடுப்புல வாணலியை வச்சு சமையல் எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க.
சூடான எண்ணெயில பிசைஞ்சு வெச்ச மாவை போண்டாவா போட்டு ரெண்டு பக்கமும் பொன்னிறமா சிவக்க விட்டு எடுங்க.
மேல மொறு மொறுன்னும், உள்ள சாஃப்டாவும், தக்காளி சாஸ் இல்லாட்டி கார சட்னியோடு சூடா பரிமாறுனா நல்லா இருக்கு. கார சட்னி எப்படி செய்யுறது எப்படின்னு இங்க போய் பார்த்துக்கோங்க. மழை நேரத்துல செஞ்சு சாப்பிட்டா கூடுதல் ருசி தெரியும். மாவை பிசைஞ்சு ஒரு பத்து நிமிசம் மூடி வெச்சு போண்டா செஞ்சா சாஃப்டா இருக்கும்.
அடுத்த வாரம் வேறொரு ஈசியான ரெசிபியோட வரேன்.
Wednesday, July 31, 2013
சொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்
டெய்லி ஒரு பதிவு போடுறீங்க.அடுத்தவங்க பிளாக்குக்கும் போய் வர்றீங்க. முஞ்சி புக்குலயும் மொக்கை போடுறீங்க. எல்லாம் சரி உங்க வூட்டுல கிச்சன் எங்க இருக்கு? மாமாதானே சமைக்குறாங்க அக்கா?!ன்னு கமெண்ட்ல கேக்குற நல்ல நல்ல?! தம்பிகளுக்காக இனி வார வாரம் புதன் கிழமை தோறும் சமையல் பகுதி வரும்.
அதுக்காக, ஆலு டிக்கி, பட்டர் கோப்தான்னு வாய்ல நுழையாத பதார்த்தம்லாம் பதிவா போட மாட்டேன். ஏன்னா! அதெல்லாம் எனக்கு சமைக்க தெரியாது!! அதனால, வீட்டுல எப்பவும் இருக்குற மளிகைப்பொருளை வெச்சுக்கிட்டு செய்யுற பதார்த்தம்தான் பதிவுல வரும் பெரும்பாலும் நம்ம அம்மாக்கள் செஞ்ச பாரம்பரிய உணவுகள்தான் வரும்...,
பள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.
எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க. பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.
ரொம்ப மொக்கை போடாதே! என்னதான் செஞ்சு இருக்கே?!ன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வா!ன்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)
இன்னிக்கு செய்ய போறது “சொய் உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கம் செய்யுற ஒரு பலகாரம். மத்த ஊருல என்ன பேருன்னு கமெண்ட்ல சொல்லுங்க. இதோட பெயர் காரணம், எண்ணெயில போடும்போது “சொய்”ன்னு சத்தம் வர்றதால இருக்கலாம்ன்னு நானே கெஸ் பண்ணேன். யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை!!
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கிலோ
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
மைதா - 200 கிராம்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

பச்சை பயறை வெறும் வாணலியில பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும்.
அப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)
குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.
திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.
திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.
வெந்த பச்சை ப்யறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க.
ஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,
உரல்ல இல்லாட்டி மிக்சில கரகரப்பா அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும். புது வீட்டுல இன்னும் உரல் வாங்காததால மிக்சில போட்டு அரைச்சேன்)
அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.
ஆப்ப சோடாவயும் போட்டுக்கோங்க.
பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.
கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.
ரெண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.
சொய்யா உருண்டை ரெடி!!
மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அதனால குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,
பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும். .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம் கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
அடுத்த வாரம் வேற ஒரு சிம்பிள் ரெசிபியோட வர்றேன்.
Subscribe to:
Posts (Atom)