மாலை நேரத்தில் எதாவது சூடா சாப்பிடலாம்ன்னு இருக்கும்போது சட்டுன்னு செஞ்சுடலாம் இந்த போண்டாவை...
எங்க ஊருபக்கம் கல்யாணங்களில் காலை டிபனுக்கு கடலை மாவு போண்டா போடுவாங்க. நமக்கு லக் இருந்தால் சூடாய் கிடைக்கும். இல்லன்னா ஆறினதுதான் கிடைக்கும். இந்த போண்டா ஆறிட்டா நெஞ்சடைக்குற மாதிரி இருக்கும். போண்டாவின் மேல் இருக்கும் மொறுமொறுப்பானதை மட்டும் தின்னுட்டு உள்ளிருக்கும் மாவை வச்சுட்டு வந்திடுவேன். பலமுறை முயற்சி செய்தபின் இப்ப சாப்டானா ஆறினாலும் சாப்பிடுற மாதிரி போண்டா செய்ய வந்திட்டுது. கல்யாணங்களில் அரிசி மாவு கலக்க மாட்டாங்களோ என்னமோ தெரில. சாஃப்டா இருக்கமாட்டேங்குது. மாலை நேரத்துல காஃபியோடு சாப்பிட சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு- 1/2 கப்
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 2
ஆப்ப சோடா - சிறிது
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு சேர்த்துக்கனும்..
உப்பு, மிளகாய் தூள், ஆப்பசோடா சேர்த்து நன்றாக கலந்துக்கவும்..
பொடியா நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்..
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக்கனும்..
தண்ணி சேர்த்து பிசைஞ்சுக்கனும். ரொம்ப கெட்டியா இல்லாம கொஞ்சம் இளக்கமா இருக்கனும். மாவு கெட்டியா இருந்தால் ஆறினதும் சாப்பிட்டாமாரடைக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் மாவை உருட்டி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சூடா இல்லாம ஆறினதை சாப்பிட்டால்கூட நெஞ்சடைக்காம இருக்கும். தக்காளி சாஸ், புதினா சட்னி, தக்காளி சட்னியோடு சாப்பிட சூப்பரா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி
நாளை செய்வதாக சொன்னார்கள்...
ReplyDeleteசெஞ்சுட்டாங்களா?!
Deleteசகோதரி , எப்போவுமே தாமு சொல்வது மாதிரி நீங்கள் கிச்சன் கார்னரில் சொன்னபடி முயற்சிகள் சரியாய் வராமல் !பொழுது போகவில்லையென்றால் நீங்கள் சொன்ன போண்டாவை செய்து புருஷன்மார்கள் பல்லை பதம் பார்க்க போகின்றார்கள் சில இல்லத்தரசிகள் -பாவம் சகோதரி எங்கள் ஆண்கள் 144 தடை வேறு ! வேண்டாமென்று சொன்னாலும் வெளியே போக முடியாது -அடுத்த வேளை சோத்துக்கு மெஸ் எதுவும் கிடையாது ,பாவம் ஆண்கள் படும் பாடு-பெண்கள் போண்டாவால் படுத்தும் பாடு -எடுத்தும் அடிக்கலாம் -தேங்காய் சிதறுவது போல சிதறும் சிலர் செய்தால்
ReplyDeleteஎங்க வீட்டில் இந்த கதையெல்லாம் செல்லுபடியாகாது . சாப்பாடு நல்லா இல்லைன்னா ஒரு வாய்கூட சாப்பிட மாட்டாங்க.
Deleteநல்ல குறிப்பு. இந்த கட்டாய விடுமுறை நாட்களில் வீட்டில் இருப்பவர்கள் செய்து சாப்பிடலாம்.
ReplyDeleteமாலை வேளை காபியோடு சாப்பிட நல்லா இருக்கும். ஆனா, எங்க ஊரில் காலை டிபனுக்கு இந்த போண்டாவை போடுவாங்க.
Deleteஎளிதாக இருப்பதால் முயற்சிக்கலாம். என்ன, ஆப்ப சோடா வீட்டில் இருக்காது...!
ReplyDeleteஇருக்காதா?! ஆப்ப சோடா சேர்க்காமல் போண்டா சுட்டால் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நானும் செய்றேன்
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஉங்கள் குறிப்புகள் சூப்பர். செய்வதுண்டு ராஜி. அரிசி மாவு கலந்தும் கலக்காமலும்...
ReplyDeleteஇதையே கேரளத்தில் அரிசி மாவு இல்லாம கடலை மாவுல நிறைய வெங்காயம் போட்டு உள்ளி வட என்று செய்வார்கள் அதுவும் ரோட்டோரக் கடைகளில் ரொம்ப ஃபேமஸ்.
கீதா
அதிகமா தண்ணியும் சேர்க்க மாட்டாங்க கீதாக்கா..
Deleteஇலகுவான போண்டா செய்து பார்திடுவோம்.
ReplyDelete