Wednesday, July 31, 2013

சொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்

டெய்லி ஒரு பதிவு போடுறீங்க.அடுத்தவங்க பிளாக்குக்கும் போய் வர்றீங்க. முஞ்சி புக்குலயும் மொக்கை போடுறீங்க. எல்லாம் சரி உங்க வூட்டுல கிச்சன் எங்க இருக்கு? மாமாதானே சமைக்குறாங்க அக்கா?!ன்னு கமெண்ட்ல கேக்குற  நல்ல நல்ல?! தம்பிகளுக்காக இனி வார வாரம் புதன் கிழமை தோறும் சமையல் பகுதி வரும்.  

அதுக்காக, ஆலு டிக்கி, பட்டர் கோப்தான்னு வாய்ல நுழையாத பதார்த்தம்லாம் பதிவா போட மாட்டேன். ஏன்னா! அதெல்லாம் எனக்கு சமைக்க தெரியாது!! அதனால, வீட்டுல எப்பவும் இருக்குற  மளிகைப்பொருளை வெச்சுக்கிட்டு செய்யுற பதார்த்தம்தான் பதிவுல வரும் பெரும்பாலும் நம்ம அம்மாக்கள் செஞ்ச பாரம்பரிய உணவுகள்தான் வரும்...,

பள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.

எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க.  பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க  மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.

ரொம்ப மொக்கை போடாதே! என்னதான் செஞ்சு இருக்கே?!ன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வா!ன்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)

இன்னிக்கு செய்ய போறது “சொய் உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கம் செய்யுற ஒரு பலகாரம். மத்த ஊருல என்ன பேருன்னு கமெண்ட்ல சொல்லுங்க. இதோட பெயர் காரணம், எண்ணெயில போடும்போது “சொய்”ன்னு சத்தம் வர்றதால இருக்கலாம்ன்னு நானே கெஸ் பண்ணேன். யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை!!

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கிலோ
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
மைதா - 200 கிராம்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
உப்பு  - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


பச்சை பயறை வெறும் வாணலியில  பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும். 


அப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)


குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி  குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.

திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.


வெந்த பச்சை ப்யறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க. 

 
ஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,

 உரல்ல  இல்லாட்டி மிக்சில கரகரப்பா  அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும். புது வீட்டுல இன்னும் உரல் வாங்காததால மிக்சில போட்டு அரைச்சேன்)

 
 அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.

 
 ஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி, அதுல தேவையான புப்ப்பு சேர்த்துக்கோங்க.

ஆப்ப சோடாவயும் போட்டுக்கோங்க.

 தண்ணி கலந்து கட்டி இல்லாம  கரைச்சுக்கனும்.

 பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.

 
 அடுப்புல வாணலியை வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய வைங்க.

கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.



உருண்டை  ஃபுல்லா மாவு இருக்குற மாதிரி முக்கி எடுத்துக்கோங்க.



ரெண்டு பக்கமும்  பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.




சொய்யா உருண்டை ரெடி!!

மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அதனால  குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,

பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும்.  .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம்  கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

அடுத்த வாரம் வேற ஒரு சிம்பிள் ரெசிபியோட வர்றேன்.

35 comments:

  1. செஞ்சு பாத்துட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு சாப்பிட்டு சொல்லுங்க. கொட்டா? ஷொட்டா?ன்னு

      Delete
  2. சொய் சொய்... சொய் சொய்.... கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச... சே... பாட்டு ஞாபகம் வந்து விட்டது... ஹிஹி... செய்து பார்ப்போம்... சரியா வரலே... சென்னை விழாவிற்கு வரும் போது அப்படியே கொண்டு வந்திடுவேன்... ஹா... ஹா... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. சந்திப்புக்கு இன்னும் ஒரு மாசமிருக்கே! அதனால நல்லா வரலைன்னா தூர எறிஞ்சிடுங்க. இல்லாட்டி மண்டபமே நாறிடும்.

      Delete
  3. Replies
    1. நிஜம்தானுங்க. எத்தனை சாப்பிட்டாலும் நெஞ்சு கரிக்காதுங்கம்மா!

      Delete
  4. குர்குரே, லேஸ், மன்ச் இவற்றையெல்லாம் வெளியூர் போனாலும் வாங்கித்தர வேண்டாம்... உடம்பிற்கு நல்லது...

    ReplyDelete
    Replies
    1. மத்த பிள்ளைகளை பார்த்து ஏக்கப்பட்டு நமக்கு தெரியாம வாங்கி சாப்பிடுறதை விட நாமளே வருடத்துக்கு ஓரிரு முறை வாங்கி தருவதில் தப்பில்லன்னு நினைக்குறேன் அண்ணா!

      Delete
  5. எங்க ஊர்ல சுகியன்னு சொல்லுவாங்க நல்ல சத்துள்ள பலகாரம்..கேரளா பக்கம் இதை தட்டப்பயிறும் கலந்து வேகவைத்து செய்து கடைகளிலேயே விற்கிறார்கள்.. நீங்க வறுத்து வேகவைக்க சொல்லியிருக்கீங்க ...நாங்க ஊறவைத்து வேகவைப்போம்...

    ReplyDelete
    Replies
    1. ஊற வச்சு செஞ்சா பச்சை வாசனை வரும்ன்னு எங்க பாட்டி சொல்லும். ஒரு முறை இதுப்போல் முயற்சி செஞ்சு பாருங்க எழில்! சுவையில் வித்தியாசம் உண்ருவீங்க

      Delete
  6. //நீங்க முணுமுணுக்குறது கேக்குது //

    மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்றதுல நீங்க ஒரு "கிங்"கி மேடம்ஜி ...!

    //யாருப்பா அது கல்லெடுக்குறது //

    அது கல்லு இல்லீங்கோ சொய் உருண்ட ...!சொய்ங் ...சொய்ங் ...!

    சொய் உருண்ட - சுகியம் - எங்க ஊர்ல சீயம் .
    பாசிப்பருப்புல செஞ்சது சா...ப்...ப்..டுருக்கேன் . அட்டகாசமா இருக்கும் .



    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  7. அப்படியே எனக்கும் பார்சல் அனுப்புங்க சகோதரி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா!முகவரி சொல்லுங்க சகோ!

      Delete
  8. எங்க ஊர்லியும் இதுக்கு பேர் சொய்யாந்தான்... உடலுக்கு எந்த பின்விளைவையும் ஏற்படுத்தாத உணவு... அளவாக சாப்பிடும் வரையிலும்...

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்பிடியா! கருத்துக்கு நன்றி சங்கவி!

      Delete
  9. இங்க வாற எல்லாரும் சோம்பேறிப் பசங்க .செய்தே சாப்பிட மாட்டாங்க .
    எங்க குடும்மா தங்கச்சி நான் மொத்தமா வீட்டில கொண்டு போய் சாப்பிட்டிற்று சொல்லுறன் :))))) (இது தான் அரசியலுங்கோ
    கண்டுக்காதீங்க :))))))))))) )வாழ்த்துக்கள் சகோ தொடரட்டும் ஒவ்வொரு புதனும் அருமையான சமையல் குறிப்புகள் .

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் செஞ்சு தரேன். சுவைச்சு சாப்பிடுங்க அக்கா! அடுத்த புதன் என்ன செய்யலாம்ன்னு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்!!

      Delete
  10. Replies
    1. மகிழ்ச்சிக்கு என்ன காரணம்ன்னு சொன்னா நாங்களும் மகிழ்ச்சியாய் இருப்போமே ஐயா!

      Delete
  11. எங்கள் ஊரில் சுசியம் என்று சொல்வோம். கடலைபருப்பும் உள்ளே வைக்கலாம். பாசிப்பருப்பு உடலுக்கு நல்லது. நீங்கள் சொல்வதுபோல் எண்ணெயில் போடும் போது சொய் என்பதால் இந்த பேரு வந்து இருக்கலாம். வீட்டில் சத்தானது செய்து கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்து இருப்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது போல ஒரு முறை கடலைப்பருப்பில் செஞ்சு பார்க்குறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  12. சொய்யா உருண்டை......

    பசி நேரத்துல கொஞ்ச வேகமா படிச்சப்ப, செய்யா உருண்டைன்னு படிச்சுட்டேன்.... செய்யாத உருண்டைக்கு கூட ஒரு பதிவு போடறாங்களேன்னு நினைச்சேன்! :)

    இது வரை செஞ்சு பார்த்ததில்லை! செஞ்சுடுவோம்.... :)

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பார்த்து பாராட்டு மட்டும் எனக்கு சொல்லுங்க.

      Delete
  13. சொய்ங்..சொய்ங்...சொய்யா உருண்டை... படிக்க படிக்க சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. உங்க தெளிவுரை, அணிந்துரை செம.. வரவர காமெடியா நல்லாவே எழுதுறீங்க.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சகோ!

      Delete
  14. //எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க. // அப்பா கூட 'எங்கம்மா': 'நான்' என்று பொய் சொல்லாத உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சகோ ...

    எங்க ஊர் பக்கம் சுகியம்னு சொல்லுவாங்க, பாட்டி செய்யும் தீபாவளியின் முக்கிய இனிப்பு...

    ReplyDelete
  15. நாங்கள் இதை சுகியம் என்று சொல்வோம். பாசிபயருக்குப் பதிலாக நாங்கள் கடலைப் பருப்பு போட்டு வெல்லம் சேர்த்து இதே போல் தான் செய்வோம். தீபாவளியன்று காலையில் இருக்கும் அருமையான இனிப்புப்
    பலகாரம்.
    உங்கள் சொய்யா என்னை சாப்பிட சொல்கிறது. சொய்யா விற்கு அருமையான முன்னோட்டம்.

    ReplyDelete
  16. சரி செய்முறை சொல்லிவிட்டீர்கள் எனி சாபிடுவது எப்படி பின் விளைவுகள் சாரி பின் குறிப்பு ஒன்றும் சொல்லவில்லையே

    ReplyDelete
  17. பாவம் உங்க ஊட்டுக்காரர்.இவ்வளவு நேரமா படம்பிடிகறதிலேயே நேரத்தை செலவிட்டா அவர் நிலையை எண்ணி வருத்தப் படுகிறேன்

    ReplyDelete
  18. ஒ.. இதுக்கு பேர்தான் சோயா உருண்டையா?

    ReplyDelete
  19. இதுக்கு எங்க ஊரில தோய்ப்பன் என்று சொல்லுவினம்.

    ReplyDelete
  20. நீங்க சொய்யா உருண்டை என்று சொல்வீஙகளா? நாங்க சுழியன் என்று சொல்வோம். சுகியன், சுசியம், சீயம், தோய்ப்பன் என்று பல பெயருண்டு என்று இப்போதுதான் தெரிகிறது. எங்கள் வீடுகளில் வருடத்துக்கு ஒருமுறை தீபாவளி அன்று மட்டும் கட்டாயம் வடையோடு தலைகாட்டும். பகிர்வுக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
  21. டிவியில சமையல் ப்ரோக்ராம் பாத்தா மாதிரி ஒரு திருப்தி. ஒவ்வொரு ஸ்டேஜுலயும் ஒரு ஃபோட்டோன்னு நீங்க ஒரு நல்ல ஃபோட்டோகிராஃபர்னும் காட்டிட்டீங்க... ஆக, நீங்க ஒரு சகலகலாவல்லின்னு தெரியுது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete