Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Thursday, March 08, 2018

மகளிர் தின கொண்டாட்டம் நம் நாட்டுக்கு அவசியமா?!

பெண் பிறந்தபோதோ இல்ல பூப்படையும்போதோ இல்ல திருமணத்தின்போதோ முழுமையடைவதில்லை. குழந்தை ஒன்றை பெத்தபின் தான் முழுமையடைகிறாள். உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலமும் பூரணத்துவம் பெறுகிறாள். எல்லா பெண்களும் இப்படி இல்லை. ஒருசில பெண்கள் தங்கள் அன்புகருணைபகிர்தல் மூலம் முழுமை அடைவதோடு தெய்வத்துக்கு சமமாகவும் போற்றப்படுகிறாள்.

சக மனுசங்க முதற்கொண்டு அனைத்து உயிர்களிடத்திலும் ஆதரவு காட்டும் மாசில்லா அன்புஉயிர் மதிப்பில்லா தியாகம்எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் இவை மூன்றும் எல்லா பெண்களிடத்திலும் புதைந்திருக்கும் உணார்வு. மகளாய்சகோதரியாய் தோழியாய்நலம் விரும்பியாய் காதலியாய்மனைவியாய்மருமகளாய்தாயாய்பாட்டியாய்... இப்படி அவள் ஏற்கும் வேடங்கள் எத்தனை எத்தனை?! உறவுமுறைகள் தாண்டியும் அவள் எடுக்கும் அவதாரங்கள் பலப்பல.  உணர்ச்சிகளின் கலவையாய்அதேநேரத்தில் திடமானதொரு படைப்பு பெண்ணைத் தவிர வேற எதுமில்லை. 
பல நூற்றாண்டுகளாய் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள்வன்முறைகள் பல.  பெண்களுக்கு எதிரான மனப்போக்குஅடக்குமுறைகள்சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டி இன்றைய பெண்கள் கல்விகலைஇலக்கியம்தொழில்ன்னு வெற்றி பெற்று வருகிறார்கள்.  முழுமையான சம அந்தஸ்து கிடைக்கலைன்னாலும்கிடைச்ச வாய்ப்புகளில் தங்களோட திறமைகளினால் சாதனை புரிஞ்சுக்கிட்டு வர்றாங்க. இட்லி சுட்டு விற்பது முதல் ராக்கெட் தயாரிப்பு வரை பெண் தன் பங்களிப்பை கொடுத்துக்கிட்டு வர்றாங்க..
பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்ன்னு பாரதியாரின் வரிகளுக்கேற்ப வீட்டைவிட்டு வெளியில் வந்து வெளி உலகை சந்திக்க தொடங்கிட்டாங்க பெண்கள். இந்த சுதந்திரம் சும்மா கிடைச்சுடல. இதுக்காக பெண்கள் பட்டபாடு.. அப்பப்பா! அந்த போராட்டங்களின் வெற்றியை கொண்டாடவும்இனிவரும் காலங்களில் பெண்கள் தாங்கள் பட்ட பாட்டை நினைவுறுத்தவும்தான் மார்ச் 8வது நாளை உலக மகளிர் தினமா கொண்டாடப்படுது.  இந்த நாள் எதுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் மாறிடிவில நிகழ்ச்சியாகவும்வியாபார நிறுவங்களின் தள்ளுபடிசலுகைன்னும்,பணியிடங்களிலும்பள்ளிகல்லூரிகளில் விழான்னும் மாறிப்போச்சு.  
இப்படி கொண்டாடி மகிழக்கூடிய நாள் இல்லை இது. யோசிக்க வேண்டிய நாள். ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகளை  பலரின் ரத்தத்தில் பெற்ற தினமாகும். 18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியிலமர்த்த அனுமதி.  பெண்கள் வீட்டு வேலை செய்யவும்குழந்தைகளை பராமரிக்கும் பொருட்டும் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்விகூட மறுக்கப்பட்டது. மருத்துவம்சுகாதாரமும் கூட என்னவென்று கூட அறியாத காலம் அது.
1857-ஆம் ஆண்டு நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை தவிர்க்க நிலக்கரிச் சுரங்கம்தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணி செய்ய முடியும் என நிரூபித்தனர். ஆண்களுக்கு சரிநிகராக பெண்களால் வேலை செய்ய முடியும் என ஆண் சமுதாயத்திற்கு அப்போதுதான் புரிய வந்தது.
 
பெண்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்பட்டது. இதனால் கிளர்ந்து எழுந்த பல பெண்கள் 1857-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அதிர்ந்துபோன அதிகார வர்க்கம் அப்போராட்டத்தை அடக்க முயற்சித்தது. அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமை இனம் என்று பெண் தொழிலாளர்கள் “சம உரிமை, சம ஊதியம், 8 மணி நேர வேலை” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 1907-ஆம் ஆண்டு மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.   இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பெண் தொழிலாளிகள், பல பெண்கள் அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவரான கிளாரே செர்கிளே மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆணாதிக்க சமூகத்தில் பல ஆண்டுகள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து 1920-ல் சோவியத் ரஷ்யாவில் நடந்த பெண்கள் போராட்டத்தில் அலெக்ஸாண்டாரா கெலுன்ரா-தான் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினம் என பிரகடனம் செய்தார். 1921-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றோம்.
19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆரம்பித்த இந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்த பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணர தொடங்கினர். வேத காலங்களில் கார்கிமைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகள் மெத்த படித்தவர்களாகவும்கணவர்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையானவர்களாகவும் இருந்தனர் என உபநிடதம்ரிக் வேதம் மூலம் அறிய முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை அப்படியே தலைகீழாக சரிய தொடங்கியது. சதி எனும் உடன்கட்டை ஏறுதல்சிறு வயதில் திருமணம் என்ற பிற்போக்குத்தனங்கள் தலை தூக்கின. சில பெண்கள் வயது வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்த பெண்கள் ஆயுள் முழுவதும் விதவையாக சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது. கணவனோடு சேர்த்து உடன்கட்டை ஏற்றும் கொடுமையும் நடந்தது.
கோவில்களில் நாட்டியமாடும் பெண்கள் தேவதாசி என்றழைக்கப்பட்டனர். நாட்டியக் கலையை வளர்த்த்தில் இவர்களது பங்கு மிக முக்கியமானது. கடவுளுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கடவுள்களுக்கு தாசிகளாக இருந்துகோவில் வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தனர். பிற்காலத்தில் கோவில்களில் வருமானம் குறைய குறைய இவர்களது நிலை சிறிது சிறிதாக மாறி மனிதர்கள் குறிப்பாக பணம் படைத்த ஆண்கள் மற்றும் பண்ணையார்களின் ஆசை நாயகிகளாக மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கல்வியே பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என கருதிய பல பெண்கள் ரகசியமாகவே கல்வி கற்றனர். குறிப்பாக இந்தியாவில் பெண்கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் சாவித்திரி பாய் புலே பெண்களுக்கான முதல் பொதுப்பள்ளியை உருவாக்கினார். அதே போல சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்ககூடாது எனும் மனுநீதி கடந்து, தடைகளை மீறி சமஸ்கிருதம் கற்று பண்டிதரானார் ராமபாய். பழங்குடியினர்கள். தேவதாசிகள் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் கல்வி கற்க இரவு பாடசாலை தொடங்கியவர் முத்துலெட்சுமி ரெட்டி. இது போன்று வரலாற்றில் பல பெண்கள் பல்வேறு ஆபத்துக்களை கடந்து தடைகளை மீறி வீரம் செறிந்த போராட்டங்களை நட்த்தியுள்ளனர். இது எத்தனை பெண்களுக்கு தெரியும்
பெண்கள் இன்றளவும் கல்விசுகாதாரம்அரசியல் போன்ற அடிப்படை உரிமைகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. பழமையான சிந்தனையிலிருந்து விடுபட்டு சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைக்கும் பெண்களை இந்த ஆணாதிக்க சமூகம் தற்சார்புடனோ அல்லது சுயமரியாதையுடனோ வாழவிடுவதில்லை. பொதுவாகஇந்தியாவில் பெண்களின் நிலை என்பது முரண்பாடுகள் நிறைந்தது.  குட்டைப்பாவாடை அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி உதட்டு சாயம் பூசி இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாய் திரியும் அதே நேரத்தில் தாய்தந்தைமாமன்மச்சான் சகோதரனுடனும் பக்கத்து தெருவுக்கு போய் வரவும் அனுமதி கேட்டு நிற்கும் கொடுமையும் நடக்குது. தேவதாசி முறைபிற்போக்கான எண்ணங்கள்பெண்களை உடல்ரீதியா பார்த்தலை தவிர்த்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை  குறைவுதான்.  நதிஊர்மலை என எல்லாத்துக்கும் பெண் பெயர் வைத்து வணங்கும் அதேவேளையில் அதே பெண்ணை தவறாய் பார்க்கும் போக்கும் நம் நாட்டில் உண்டு.
குடும்பத் தேவை­களை பூர்த்திசெய்­வதில் ஆண்­­ளுக்கும்குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வதில் பெண்ணுக்கும் சற்று அதி­­மான கடமை இருப்பது உண்மை. சம­ ­ரிமை பேசும் மேற்­கத்­திய நாடு­களில் பெண்­ ­ழுச்சி ஏற்­பட்­டதன் விளைவு கருப்பைச் சுதந்­திரம் அதி­­மாகி இல்­லறம் என்ற முறை தகர்க்­கப்­­டு­கி­றது. எல்லாத்தையும் மேற்கத்திய நாடுகளை  பார்த்து காப்பியடிக்கும் நாம இதையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிருக்கோம். 
குட்டைப்பாவாடை அணிந்து ஆணை எதிர்த்து பேசி, வீட்டுக்கு அடங்காம தன் இஷ்டத்துக்கு ஊர் சுத்த இந்த சுதந்திரம் பெறலை. தன் நிலை உணர்ந்து, பொறுப்போடு நடந்துக்கனும். அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி அடக்க வேண்டிய இடத்தில் அடக்கனும்.  இன்னிக்கு என்னதான் பெண்கள் முன்னேறிட்டாங்கன்னு சந்தோசப்பட்டாலும் இன்னிக்கும் பெண்குழந்தைகளை கருவிலோ சிசுவிலோ கொல்லும் பழக்கம் இருக்கு
பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கு. தான் மட்டும் தன்னிறவு அடைஞ்சிட்டா போதாது.  இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதாரசமூககலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை அனைவரும் பெற போராடனும். வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.

பெண்களால் பிறந்தோம்பெண்மையை போற்றுவோம்!!
நட்புடன்,
ராஜி

Wednesday, March 08, 2017

மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா?!


உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?
பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.
இனி மகளிர் தினம் உருவான வரலாறு பார்ப்போம்..


மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றில் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! .


பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரேக்கத்தில்...

 பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சுப் புரட்சியின்போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்தன்மை வேண்டிப் போராடினார்கள்.



ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள, கோஷங்கள் வானைப் பிளக்க, அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரெனக் கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களை சமாதானப்படுத்தினான். அது இயலாமல் போகவே, அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.
ஐரோப்பாவில்...

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட, ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8-ஆம் நாள்தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அமெரிக்காவில்....

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியால் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதன்பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. 1910 இ-ல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடிப் பெண்கள் தினத்தைச் சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1911 மார்ச் 19-இல் முதல் சர்வதேசப் பெண்கள் தினம் இலட்சக்கணக்கானப் பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் கருகி இறந்தனர். இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.

ரஷ்யாவில்.....

1917-இல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்தச் சமயத்தில் ரொட்டிக்காகவும், அமைதிக்காகவும் பெண்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23. ஆனால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள். ஆகவேதான் மார்ச் 8 இல் பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது..ஐ.நா.&வும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமத்துவக் கோரிக்கைகளுக்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி, பெண்களுக்குச் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேசக் கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்தது.

மகளிர் தினமான இந்நாள்...

1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

1977-இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் நலன் குறித்துச் சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.
அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின. பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சி நான்கு வழிகளில் வழிகாட்டி, முயற்சியும் செய்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்கள் எனவும் முண்டாசுக் கவிஞன் பாரதி முழங்கினான். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்!
பெண்கள் பற்றிய செய்திகள் சில...

* உலகில் உள்ள ஏறத்தாழ 3 கோடி அகதிகளில் 80 முதல் 85 சதவித்தினர் பெண்கள்.

* தினமும் பிரசவத்தின் போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள்.

* ஸ்வீடன், கனடா, நார்வே, அமெரிக்கா, பின்லாந்துப் பெண்கள் ஆயுள், கல்வி, வருமானம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

* பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து. 1893-ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள்.

* இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர். சர்வதேச நாடாளுமன்றங்களில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

* ஸ்வீடனில் 1995-இல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர். அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை
நன்றியுடன்..








ராஜி.


Saturday, March 08, 2014

என்னைக் கவர்ந்த பெண்கள்

மீனாட்சி பாட்டி(அப்பாவை பெற்றவள்): 

சிறு வயதிலிருந்தே பாட்டிக்கும், எனக்கும் அதிகம் ஒட்டுதல் இல்லை. ஆனாலும், என் அம்மாவை என் பாட்டிக் கொடுமைப் படுத்தியும் கூடபாட்டியைப் பற்றி அம்மா பெருமையாய் சொல்வாங்க. கடுமையான உழைப்பாளி, இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப் பட்டு,  மூத்தாள் பிள்ளையையும் தன் பிள்ளையோடு தன் பிள்ளைகள் மூன்றை வளர்த்தவள்.  தனியாளாய் உழைத்து வீடு, கழனி வாங்கி மூத்தார் மகனுக்கு ஒரு வீடு தந்து கல்யாணம் கட்டி வைத்து அனுப்பி, தன் மகனுக்கு எங்கெங்கோ அலைந்து ஒரு அரசாங்க வேலையை வாங்கித் தந்து, பென்கள்ளுக்கு திருமணம் செய்து வைத்து..., யார் தயவும் இல்லாமல் தன் 82 வயது வரை கழனி, வீடு வாசல்ன்னு வாழ்ந்து கடைசி இரண்டு வருடத்தை என் அப்பாவின் நிழலில் இருந்து இறவனடி சேர்ந்தவர். யாரும் பசியோடு இருப்பதை காண சகியாதவர்.தன்னந்தனியாய் கழனியில் இரவு முழுக்க தங்கி உழைக்கும் தைரியசாலியும், கடின உழைப்பையும் கொண்ட பெண்மனி. உன் பாட்டியை போல இருன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.

விருதாம்பாள் பாட்டி(அம்மாவைப் பெற்றவள்):
நோயாளி கணவனுக்கு வாழ்க்கைப் பட்டு நான்கு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகனைப் பெற்றவர். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் நெசவு செய்து பிள்ளைகளைக் கரையேத்தியவர். பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்து மகனுக்காகப் பாடுபட்டவர். மகன் நல்ல நிலைக்கு வந்ததும் சொன்ன ஒரு உதாசீன வார்த்தைக்காக உயிரையே விட்டவள். ரோசக்காரி. 
(என் அம்மா)
ஜானகி (என்னை பெற்றவள்):
கடின உழைப்பும் சிக்கனமும் சேர்ந்தவள். வீட்டு விசயம் வெளியில் வரக்கூடாதுன்னு சொல்லுவாங்க(ஆனா, அவங்களைப் பத்தியே பதிவுப் போடுறேன்). படிப்பறிவு இல்லாட்டியும்,எதை எப்படி செய்யனும்ன்னு அழகா யோசிச்சு செய்வாங்க. கல்யாண வயசுல யாரையாவது பார்த்துட்டாப் போதும் உடனே மனசுல கணக்குப் போட்டு கல்யாண புரோக்கரா மாறிடுவாங்க. அதுக்கு என்கிட்ட திட்டு வாங்கினாலும் அந்த பழக்கத்தை மட்டும் விட மாட்டாங்க. தன் மாமியார் போலவே யாரையும் பசியோட இருக்க விட மாட்டாங்க. கூடவே தன் அம்மாவைப் போல ரோசக்காரி. அதனால நான் எதும் அதிகம் எதிர்த்து பேச மாட்டேன்.

கமலா டீச்சர்: 
ஆனா, ஆவன்னா கைப்பிடித்து எழுத வைத்தவர். தனக்கு குழந்தை இல்லாத காரணத்துக்காய் தன் கணவர் இரண்டாவது மனைவி கட்டி வந்து கொடுமை படுத்திய போதும் புன்னகை மாறாதவர். தன் சோகத்தை, பள்ளியின் வளர்ச்சியில் மறந்தவர்.

மீனாட்சி டீச்சர்:
காதல் தோல்வியால் திருமணம் செய்யாதவர். படிப்பில் ஆர்வம் இல்லாதவங்கக் கூட இவர் பாடமான தமிழில் பாஸ் ஆகிடுவோம். அவரின் மடிப்புக் கலையாத காட்டன் சேலைக்கும், அமைதியான சுபாவத்தைப் பார்த்து தன் பிள்ளைகளை டீச்சருக்குப் படிக்க வச்ச பெற்றோர்கள் ஏராளம். எந்த காதலன் இவரை வேணாமின்னு ஒதுக்குனானோ அவன் மனைவி இறந்துவிட தன் பிள்ளைகளுக்கு தாயாய் இருக்க வேண்டி கல்யாணம் செய்துக்க வந்தவனை ஒதுக்கி, அவன் பிள்ளைகளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு தாயாய் இருந்தவர். 

தூயா(மகள்):
குழந்தைத் தனத்தோடு சுத்திக்கிட்டு இருந்தவளைத் தாயாய் மாற்றியவள். குழந்தையாய், ஆசிரியராய், தோழியாய், தாயாய், மகளாய் பல்முக காட்டுபவள். 

இனியா: 
தாயாய் ஆனப் பின்னும் விளையாட்டுத்தனமாய் இருந்த என்னை பொறுப்பானவளாய் மாற்றியவள்

மற்றவர்கள்: சமையல் கற்றுத் தந்த பக்கத்து வீட்டு அக்கா, பொழுதன்னிக்கும் வீடுகளில், ரைஸ் மில்லில், ஸ்கூலில் வேலை பார்த்து உழைக்கும் எதிர் வீட்டு செல்வியக்கா. ஒற்றை மகளாய் பிறந்து தாய்க்கும், புகுந்த வீட்டுக்கும் உழைக்கும் பக்கத்து வீட்டு விமலா, ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் திருமணமாகி பிள்ளை இல்லாததால் மாமியாரிடமும், கணவனிடமும் கொடுமைகளை அன்பவித்துக் கொண்டே அப்பா, அம்மாவிடம் சந்தோசமாய் இருப்பதாய் நடிக்கும் பக்கத்து வீட்டு ஹேமா. கணவன் இல்லாத போதும் கௌரவமாய், ஒழுக்கமாய் நெசவு செய்து குடும்பத்தை கரை சேர்த்த கோடி வீட்டு அத்தைன்னு இன்னும் மனம் கவர்ந்த பெண்கள் இருக்காங்க...

ஆனா, என் மகள்கள் தவிர்த்து மற்றவர்களுக்குலாம் மகளிர் தினம்ன்னு ஒண்ணு இருக்குறதாவது தெரியுமா!?

Thursday, March 08, 2012

பெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்

                                    
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!
                                     

ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள்
பெண்!!!

செலவு செய்தாலும்
எதோ ஒரு வகையில்
சேர்த்து வைப்பவள்
பெண் ...!

தங்கமாய் வாங்கினாலும்
தன் மகள்
தாலிபாக்கியம் பெற
தந்து விடுகிறாள்
பெண்!!!

புடவை வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்க்கிறாள்
பெண்...!!!

தன் வயிறு காய்ந்தாலும்
மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள்
பெண்...!!!

கணவன் கயவன்
என்றாலும்
காரணம் இவள் என்று
கெட்ட பெயர்
வாங்கிக்கொள்கிறாள்
பெண் ...!!!

கொண்டவன்
குடிகாரன் ஆனாலும்
குடித்துவிட்டு அடித்தாலும்
குடும்பத்தை காக்கிறாள்
பெண்...!!!

பசி என்று
வரும் பிள்ளைக்கு
பச்சை தண்ணீராவது
தந்து விடுவாள்
பெண்...!!!

எப்போதும்...
பெருமையை
பிறருக்கு கொடுத்து
தான் மட்டும்
சிறுமை பெறுகிறாள்
பெண்...!!!
சுட்ட டிஸ்கி: 
                       
 இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மைமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தாராம், யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்களாம். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்... டிஸ்கி ஒரு வலைப்பூல சுட்டது. வலைப்பூவின் பெயர் நினைவில்லை. அவருக்கு என் நன்றி

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!