Showing posts with label முத்தம். Show all posts
Showing posts with label முத்தம். Show all posts

Wednesday, July 24, 2013

இது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு!!

  
 நம்ம ஊரு ஆண்களை மன்மோகன் சிங்க் குர்தாவுல எத்தனை  பட்டன் இருக்குனு கேட்டு பாருங்க, படக்கென வந்து விழும் பதில்!! கணக்கு புதிரா?! சட்டென விடை வரும்.., உலக நடப்பு அத்தனையும் விரல் நுனில இருக்கும். ஆனா,    என்ன செய்தா வூட்டுக்காரம்மாவை  நம்ம வழிக்கு கொண்டுவரலாம் ன்ற விஷயத்துல தான் ஆண்களுக்கு பயங்கர குழப்பம்.

சில பொண்ணுங்களுக்கு சாக்லேட் பிடிக்கும், சிலருக்கு ஐஸ்கிரீம் ன்னா கொள்ளை பிரியம்.  சிலருக்கு அம்மா வீடு, சிலருக்கு புடவை.., சிலருக்கு டெட்டி பேர் பொம்மை பிடிக்கும். ஆனா சில பொண்ணுங்க இருக்காங்க பாருங்க. அவங்களை, என்ன வாங்கி குடுத்தாலும் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டாங்க.

செலவே இல்லாத அன்பான கவனிப்பு, அக்கறையான பேச்சு, அப்பப்போ ஆறுதலாய் சில முத்தம் என கொடுத்தால் சொக்கிப்போகும் பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க. உள்ளன்போடு புரிதலும் இருக்கும் துணைதான் என்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருதாம். இதை நான் சொல்லலீங்கோ!! ஒரு ஆய்வோட முடிவு இதெல்லாம்...., உங்க (நல்லா நோட் பண்ணிக்கோங்க சகோ’ஸ் ”உங்க”) காதலியையோ, மனைவியையோ எப்பவும் மகிழ்ச்சியா வச்சுக்கிட்டு, நீங்களும் மகிழ்ச்சியா வாழ, அந்த ஆய்வுல வந்த டிப்ஸ்கள உங்களுக்கு சொல்றேன். கேட்டுக்கோங்க சகோ’ஸ...,

                                         
 பூ கொடுங்கள்:
மல்லியோ, முல்லையோ, கனகாம்பரமோ இல்ல ரோஜாவோ எதாவது ஒரு பூவுக்கு மயங்காத பொண்ணுங்க  யாரும் இருக்கமாட்டாங்க. அதனால,  பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலில் பார்த்த நாள், காதலை உணர்த்திய நாள், லொட்டு, லொசுக்குன்னு எதாவது காரணம் சொல்லி அடிக்கடி பூக்கள் கொடுங்கள். மிகவும் எளிதான, மலிவான பரிசுதான். ஆனா மனதைத் தொடும் பரிசு இது (மனசை இல்லை, கூந்தலை தொடும் பரிசுன்னும், உன் அண்ணிக்கு காலிஃப்ளவர் வாங்கி கொடுத்தேன். பூரிக்கட்டையால மொத்துனா”ன்னு அமெரிக்காவுல இருந்து யாரும் வந்து கமெண்ட் போடக்கூடாது. )

கண் பேசும் வார்த்தைகள்:
கணவனோ, காதலனோ தன்னை மட்டும்தான் பார்க்கனும், கவனிக்கனும்ன்னு 90 வயசு பாட்டி கூட ஆசைப்படும்.  பக்கத்தில் இருக்கும் போது தப்பித்தவறி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்துடாதீங்க .  பக்கத்துல இருக்கும்போது வார்த்தைகளால பேசுறதை விட கண்களால் பேசுறதைதான் பொண்ணுங்க ரொம்ப விரும்புறாங்களாம்(90 வயசு பாட்டிக்கு காதலன் இருப்பானா?! அப்படியே இருந்தாலும் அதுங்களுக்கு கண்ணு தெரியுமான்னும் கமெண்ட கூடாது).

 மனம் கவரும் மாலைப்பொழுது:
 எப்பவும் தன்னோட ஆண், தன் பக்கத்துலயே இருக்கனும்ன்னு ஆசைப்பட்டாலும்!! அது அவ்வளவா சாத்தியமில்லியே! அதனால, முடிந்தவரை மாலை நேரத்துல தன் ஆண் தன்னோட இருக்கனும்ன்னு ஆசைப்படுவாங்க பெண்கள். கூடவே, மழைக்காலமும், சூடான டீயும், கூடவே நீங்களும் இருந்தாதுட்டா அந்த பொண்ணுக்கு ரொம்ப சந்தோசமாம்!! (ம்க்கும், லேசா தூறல் போட்டாலே, நாங்க பாட்டில் ஓப்பன் பண்ணிடுவோமே!ன்னு சொல்லுற ஆண்களும் இனி தொடர வேணாம்னுங்க)
                            

ஒரு நாள் சமைக்கலாம்:
 தினமும் பொண்டாட்டி கையல் சாப்பிட்டு பழகிய ஆண்கள் ஞாயிறு ஒருநாளாவது தன்னோட  கையால சமைச்சு மனைவிக்கு பரிமாறலாம். நீங்க நல்லா சமைச்சிருந்தா அதோட ரிசல்ட் அன்னிக்கு நைட்டே தெரியும் :-). (டெய்லி நாங்கதான் சமைக்குறோம். இதுல ஞாயிறு வேறயா?!ன்னு பொய் சொல்லி யாராவது கமெண்ட் போட்டா!! அந்த கமெண்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவங்க ஹவுஸ் பாசுக்கு அனுப்ப படும்!!)

 பரிசு கொடுப்பது:
என்னதான் கிரடிட் கார்டை தேச்சு ஸ்டார் ஹோட்டல்களுக்கு கூட்டி போனாலும், கண்ணை  பறிக்குற நெக்லஸை வாங்கித் தந்தாலும் அங்கலாம் நீங்க எப்படி அவங்களை கவனிச்சுக்கிறீங்கன்றதை பொறுத்துதான்  அவங்க திருப்தி அமையும். (இல்லாட்டி வீட்டுக்கு வந்ததும், அது நல்லா இல்ல, அந்த டிசைன் வாங்கித் தந்திருக்கலாம், உங்க அம்மாக்கு மட்டும் கேட்டு கேடு செய்வீங்களே!!ன்னு பாட்டுதான் கிடைக்கும்.)

பாதுகாப்பு உணர்வு:
எல்லா பெண்களும்  எப்பவுமே ஆண்களிடம்  எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வைதானாம். பொது இடத்திலோ, தனிமையிலோ, அல்லது சோகத்துலோ இருக்கும்போது யாரை பற்றியும் கவலைப்படாமல் லேசாய் அணைத்து ஆறுதலாய் தோள் கொடுங்க(அதுக்காக, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துல கம்ல் பண்ணுற மாதிரி கட்டிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடி வைத்தியம்லாம் வேணாம். மிக லேசான அணைப்புன்னுதான் சொல்லி இருக்கேன்.)

சின்னதாய் ஒரு கவிதை:
எப்ப பார்த்தாலும் உர்ர்ருன்னு இல்லாம அப்பப்போ  கவிதையா பேசனுமாம். ஒரே வீட்டில் இருந்தாலும்  மெயில் இல்லாட்டி செல்போன்ல மெசேஜ் பண்ணுங்க. சொந்தமா கவிதை எழுத வரலைன்னாலும்  காப்பியடிச்சாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லையாம். அதுலயும்  ஊடல் கொண்டாடும் நேரத்துல இந்த மாதிரியான கவிதை விடும் தூது நல்ல பலன் கொடுக்குமாம்( அதுக்காக, கண்மணி, மானே! தேனே!ன்னு ஓவரா வழியவும் வேணாம். அப்புறம் உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு பூரிக்கட்டையால வாங்க வாய்ப்புண்டு.)

அடிக்கடி பேசுங்க:
மனைவியை விட்டு வெளியூர் போய் இருக்கும்போது  செல்போனில் அடிக்கடி பேசுங்க.  அப்படி முடியாத நேரத்துல  ஐ லவ் யூ , ஐ மிஸ் யூ”  ஐ ம் பிசி.  கால் யூ லேட்டர்”ன்னு மெசேஜ் அனுப்புங்க. வேலை நேரத்துல கூட நம்ம நினைப்பு அவருக்கு வருது!!னு சந்தோசப்பட்டுக்குவாங்க. (மெனக்கெட்டு டெமேஜர்கிட்ட ஃபீல்டு வொர்க் வாங்கி வெளியூர் போறதே அவங்க நினைப்பு இல்லாம இருக்கத்தான். இது பொறுக்காம பேசனும், மெசேஜ் அனுப்பனும்”ன்னு மெசேஜ் சொல்றீங்களே ராஜி அக்கா! இது நியாயமா?!ன்னு  பிரகாஷ் முணு முணுக்குறது இங்க கேக்குது!!)

கை பிடித்துச் செல்லுங்களேன்:
  எங்காவது வெளியூர்களுக்கு போகும்போதுலாம் , கல்யாணம் ஆன புதுசுல எப்படி அவஙக் கையை பிடிச்சுட்டு ஊரை சுத்துனீங்களோ?! அதுப்போல உங்க வூட்டம்மா  கையை பிடித்துச் போங்க. அது மாதிரி கூட்டி போகும் போது  பாதுகாப்பு உணர்வை உணர்வதோடு, எத்தனை பெண்கள் இந்த உலகத்துல இருந்தாலும் அவர் என்னை மட்டுமே விரும்புறார்ன்னு பெண்களுக்கு தோணுமாம் (வெளியூருக்கு கூட்டி போறதே கூட்டத்துல தொலைச்சுட்டு வரத் தான். இதுல கையை வேற பிடிச்சுக்கனுமா?!ன்னு ரூபக் குமார் சண்டைக்கு வரப்போறார்.)

கட்டிப்பிடி வைத்தியம்:
காலையில  எழுந்ததும் காஃபி எங்கே?! என் சாக்ஸ் துவைச்சியா?! லேப்டாப் சார்ஜ் போட்டியா?! செல்போன்ல பேலன்ஸ் பார்க்க கூடாதா?! என் பிரஷை காணோம்ன்னு ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி கத்திக்கிட்டே படுக்கையை விட்டு எழுந்துக்காம, மனைவியை அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்தம், லைட்டா ஒரு புன்னகையோட குட் மார்னிங் சொல்லி பாருங்க. அப்புறம் அந்த நாள் முழுக்க இனிய நாள்தான்(அதுக்காக, ராஜி அக்கா! சொல்லிட்டாங்கன்னு காலைல அரிபுரின்னு வேலையா இருக்கும்போதோ இல்ல குட்டீஸ் இருக்கும்போதோ கட்டிப்பிடிச்சு உங்க மேல விழ வேண்டிய பூரிக்கட்டை என்மேல ரீடைரக்ட் பண்ணி விட்டுடுடாதீங்க சகோ’ஸ்.)

டிஸ்கி: முன்னலாம், மனசுக்கு தோணுறதை டைப் பண்ணி பதிவா போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன். ஆனா, இப்போ பாருங்க, எனக்கு, சகோன்ற பேருல எதிரிங்கலாம் அதிகமாயிட்டதால அவங்க என்ன கமெண்ட் போடுவாங்கன்னும் ஒரு மாதிரி ஜிந்திச்சு பதிவு போட வேண்டியதா இருக்கு :-(

Wednesday, May 29, 2013

எங்கள் காதல்


   

அந்த நாள்...,
 நான் முத்தமிட்ட ”அந்த” நிமிடங்கள்!!

என் வாழ்வை..,
 சிறகடிக்கவைத்த நிமிடங்கள் அது!!

எனக்கு மட்டும் அல்ல??
 அவளுக்கும் தான்!!

அவளும், என்னை மறுப்பதாக இல்லை!!
நானும் அவளை மறப்பதாக இல்லை!!

மனங்களையும்..., மணங்களையும்...,
சுமந்த படியே...,  
என்றும்..., 
 ”எங்கள் காதல் ”!!

Tuesday, February 19, 2013

நிழலாய் போன நிஜம்...,

   
எங்கோ நெடுந்தூரம் அழைத்து செல்கிறாய்....,
கால் வலிக்குது என்கிறேன் நான்..,
ஆழ்ந்தப் பார்வை பார்த்துவிட்டு
என் கைப் பிடித்துக் கொள் என்கிறாய்.
உற்சாகத்தோடு நடந்தேன் "உயிருள்ளக் கவிதையாய்!!??

யாரும் அறியாதபோது, சட்டென்று இழுத்து
உதட்டோடு உதடு பொருத்தி என் உயிர்த் தேடலை
முடித்து வைத்தது உ(எ)ன் முத்தம்....
திருப்தியாக நடந்தேன் "இனிய கவிதையாய்!!??

நீதான் முக்கியம் என்று நீ உரைத்தப் போது
கர்வத்தோடு நடந்தேன்....
"உற்சாகமான கவிதையாய்!!?? ....,

ஆனால்,
என் இத்தனை நிஜக்கவிதைகளும்
"அவளைப் போல் நீ வரமுடியுமா”??
என்று கேட்ட ஒரு கேள்வியில்
"நிழலாய்" போய்விட்டது!!

Thursday, April 26, 2012

உங்க வூட்டுக்காரரை உங்க கைப்பிடிக்குள் வைக்கனுமா?!

                                  
உங்க  வூட்டுக்காரரை உங்க கைப்பிடியில  வச்சுக்கனுமான்னு கேட்டு பாருங்க.....  ‘ஆமாம், ஆமாம்’ ன்னு தங்கமணிகளாம் ஜெட் வேகத்துல பதில் சொல்வாங்க.

வூட்டுக்காரரோட அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய ஈசியான வழிகள் பல இருக்கு. ஆனால், கொஞ்சமே கொஞ்சமா நம்மளை நாம மாத்திக்கிட்டால் போதும்.. கணவர் உங்க கைப்பிடிக்குள்ளதான்....,

காதலிக்கும்போதோ அல்லது காதலர்கள்  மட்டும் தான் ”ஐ லவ் யூ” சொல்லனும்ன்னு இல்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லிக்கலாமே. தினமும் உங்க கணவரிடம் ”ஐ லவ் யூ” சொல்லுங்கள். அவரும் மகிழ்ந்து போய் ”ஐ லவ் யூ டூ டா செல்லம்” ன்னு சொல்வார்(அதுக்காக யாராவது கெஸ்டுங்க முக்கியமா மாமியார் நாத்தனார் வரும்போது சொல்லி கேலிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)

கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்க. திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். (புத்தி தெரிய ஆரம்பித்த பிள்ளைகள் இருப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிங்க. அப்புறம் அப்பா அம்மாக்கு இளமை திரும்பிட்டுதுன்னு கேலி பேசும்ங்க).

கணவருக்கு மரியாதை கொடுங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டா விட்டுக் கொடுத்துச் செல்லுங்க. நீங்க ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.

என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும்ன்னு நம்புங்க.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்க. நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்க.

கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீங்க. உங்க பிரச்சனைகளை நீங்க பேசித் தீர்த்துக் கொள்ளுங்க. இல்லைன்னா சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீங்க. அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமான்னு கணவர் புகழ் பாடுங்க. உங்களவருக்கு உங்க மீது கிரேஸ் கூடும்.

கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்க. கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்க, விளையாடுங்க. இது மன இறுக்கத்தைப் போக்கும்.

உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீங்க. குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லைன்னா உங்க வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றதாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்க. அவர் புரிந்து கொள்வார்.

உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றீங்கன்னு உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.

சண்டை போடாத கணவன், மனைவி இந்த உலகத்துல இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.

கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்க வசப்படுத்தனும்னு அவசியமில்லை. அன்பாலும் உங்க பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் உங்களவரிடம் அருமையான மாற்றங்களை…!