உங்க வூட்டுக்காரரை உங்க கைப்பிடியில வச்சுக்கனுமான்னு கேட்டு பாருங்க..... ‘ஆமாம், ஆமாம்’ ன்னு தங்கமணிகளாம் ஜெட் வேகத்துல பதில் சொல்வாங்க.
வூட்டுக்காரரோட அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய ஈசியான வழிகள் பல இருக்கு. ஆனால், கொஞ்சமே கொஞ்சமா நம்மளை நாம மாத்திக்கிட்டால் போதும்.. கணவர் உங்க கைப்பிடிக்குள்ளதான்....,
காதலிக்கும்போதோ அல்லது காதலர்கள் மட்டும் தான் ”ஐ லவ் யூ” சொல்லனும்ன்னு இல்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லிக்கலாமே. தினமும் உங்க கணவரிடம் ”ஐ லவ் யூ” சொல்லுங்கள். அவரும் மகிழ்ந்து போய் ”ஐ லவ் யூ டூ டா செல்லம்” ன்னு சொல்வார்(அதுக்காக யாராவது கெஸ்டுங்க முக்கியமா மாமியார் நாத்தனார் வரும்போது சொல்லி கேலிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)
கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்க. திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். (புத்தி தெரிய ஆரம்பித்த பிள்ளைகள் இருப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிங்க. அப்புறம் அப்பா அம்மாக்கு இளமை திரும்பிட்டுதுன்னு கேலி பேசும்ங்க).
கணவருக்கு மரியாதை கொடுங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டா விட்டுக் கொடுத்துச் செல்லுங்க. நீங்க ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.
என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும்ன்னு நம்புங்க.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்க. நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்க.
கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீங்க. உங்க பிரச்சனைகளை நீங்க பேசித் தீர்த்துக் கொள்ளுங்க. இல்லைன்னா சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீங்க. அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமான்னு கணவர் புகழ் பாடுங்க. உங்களவருக்கு உங்க மீது கிரேஸ் கூடும்.
கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்க. கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்க, விளையாடுங்க. இது மன இறுக்கத்தைப் போக்கும்.
உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீங்க. குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லைன்னா உங்க வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றதாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்க. அவர் புரிந்து கொள்வார்.
உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றீங்கன்னு உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.
சண்டை போடாத கணவன், மனைவி இந்த உலகத்துல இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.
கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்க வசப்படுத்தனும்னு அவசியமில்லை. அன்பாலும் உங்க பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் உங்களவரிடம் அருமையான மாற்றங்களை…!
ஹா ஹா ஹா நல்லா அறிவுரை சகோ பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல கருத்துகள் .. அனுபவ கருத்துகள் போல உள்ளது
ReplyDeleteஇனிய வாழ்க்கைக்கு பெண்கள் பின்பற்றவேண்டிய நல்ல அறிவுரை கருத்துக்கள் ..பகிர்வுக்கு நன்றி
ReplyDeletemmm...!
ReplyDeletenalla visayangal!
vilanga vaiththathai vida-
eanga vaiththu vittathu!
ஒன்றை எடுத்துக் காட்டாக சொல்ல இயலாது அனைத்தும் தேவையே அருமை! சா இராமாநுசம்
ReplyDeleteம்... அருமையான யோசனைகள். அதிலும் புகுந்த வீட்டினரைக் குறை கூறும் மனைவிகளைக் கணவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கணவரோடு அவரது குடும்பத்தையும் நேசிக்கும் பெண்களைத்தான் மிகவும் விரும்புவர். இந்த ஒரு விஷயத்தில் பெண்கள் அனுசரித்து நடந்தாலே வாழ்க்கை இன்பமயமாய் இருக்கும். பகிர்வுக்கு நன்றி ராஜி.
ReplyDeleteசீக்கரம் அந்த புள்ளைய உங்க கிட்ட அனுப்பி வெக்குறேன்... இப்புடி நாலு வார்த்த நல்ல விதமா டியூஷன் எடுத்துவிட்டு அனுப்புங்க... முக்கியமா அந்த ரெண்டாவது யோசனைய அழுத்தம் திருத்தமா சொல்லி அனுப்புங்க... :)
ReplyDeleteமனம் விட்டு பேசினாலே பாதி பிரச்சனை குறைஞ்சிரும் .., நல்ல கருத்துக்கள் சகோ ..!
ReplyDeleteஹி ஹி அதுக்காக இப்பிடி ஒரு படத்தை போட்டிக்க வேண்டாம் ..!
எனக்கு திருமணமாகும் முதல் இத சொன்னீங்களே நன்றி அக்கா? உங்கள் அனுபவமா?
ReplyDeleteஎப்படி சுகங்கள் ராஜி அக்கா?
வீட்டில எல்லாரும் சௌக்யமா?
அனுபவம் பேசுகிறது!
ReplyDeleteஎன் வலைப்பூவுக்கு வாருங்களேன் -
http://shravanan.blogspot.in/2012/04/blog-post.html
கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்க வசப்படுத்தனும்னு அவசியமில்லை...//
ReplyDeleteசி பி கமேன்ட்டுக்காக வெயிட்டிங்...-:)
சபாஷ் சரியான கருத்துக்கள் மேடம்
ReplyDeleteபெண்களுக்கு பிடிக்காத ஆனால் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல தகவல்களை தந்த ராஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான பதிவு! பெண்கள் படிக்க வேண்டியது ஆனால் அதிகமா ஆண்கள்தான் கமெண்ட் போட்டிருக்காங்க......ம்ம்ம்என்ன பண்ணுவது?
ReplyDeleteபயனுள்ள அறிவுரை
ReplyDelete(நேற்று பலதடவை முயன்றும்
கமெண்ட் பாக்ஸ் திற்க்காமல் தகராறு செய்தது
அதனால்தான் பின்னூட்டம் குறைவாக இருக்கிறது என நினைக்கிறேன் )
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எக்ஸலண்ட்! ஒவவொரு அறிவுரையும் பொன்னெனத் தகும். மிகமிகப் பயனுள்ள பகிர்வு. நன்று!
ReplyDeleteசில வீட்ல மட்டும் Husbands எல்லாம் Wife காலையே சுத்திச் சுத்தி வர்றாங்களே, எப்படின்னு நினைச்சதுண்டு. இப்பத் தெளிவாப் புரிஞ்சுது. பிற்காலத்துல எனக்குப் பயன்படற மாதிரி Useful TIPS கொடுத்த உங்களுக்கு My Heartful Thanks...!
ReplyDeleteஎல்லா கருத்துக்களும் ஏற்புடையது.
ReplyDeleteநன்றி.
ஐ கெட் எ டைட்டில் டூ மீ - ஹவுஸ் ஓனர் பெண்ணை கைக்குள் அடக்கிக்கொள்வது எப்படி ? )
ReplyDeleteசரியா சொன்னீங்க!உங்களவர் உங்க கைக்குள்ளதான் நிச்சயம் இருப்பார் போலவே!
ReplyDeleteநல்ல கருத்துக்கள் ! பாவம் அவர் ...............?!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியை. ஏகலைவன் மாதிரி நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன்...
ReplyDeleteபாருங்களேன் அதை,"உங்க மனைவியை உங்க கைப்பிடிக்குள் வைக்கனுமா?-நம்பள்கி."