Wednesday, May 02, 2012

கைவண்ணம், கலைவண்ணம் இங்கே பாருங்க...,


எங்க அண்ணன் மகளுக்கு சடங்கு. அதுக்கு,நான் அத்தை சீர் செய்யனும். அதனால, ஷாப்பிங்க் கிளம்பினேன். காதுக்கு கம்மல், ஃபேன்சி ஐயிட்டம்லாம் வாங்கிட்டேன். பட்டு சாரி வாங்கலாம்ன்னு கடைக்கு போனேன். நிறைய புடவைகள்லாம் கடைக்காரர் எடுத்து போட்டார். பொம்பளைங்களுக்குதான் புடவை விசயத்துல திருப்தி வராதே. அதனால, அண்ணன் பொண்ணுக்கிட்டயே போன் போட்டு கேட்டேன். எப்படிப்பட்ட சேலை வேணும்ன்னு கேட்டேன். எனக்கு பிளெய்ன் பட்டு சேலைதான் வேணும்ன்னு அடம்பிடிக்க சிகப்பு கலர்ல ப்ளெய்ன் பட்டு சேலை 2400 ரூபாய்ல வாங்கி வந்துட்டேன்.
                                      
வாங்கி வந்ததுலாம் அவக்கிட்ட காட்டினேன். எல்லாமே நல்லா இருக்கு அத்தைன்னு சொன்னா.  ஆனா, எனக்குதான் சேலைல மனசு ஏத்துக்கலைடா, 5000 ரூபாய்ல வைர ஊசி போட்ட மயில் கழுத்து கலர் சேலை பார்த்தேன். ஆனா, நீதான் பிளெய்ன் சேலைக்கு அடம்பிடிச்சியேன்னு சொல்ல, அத்தை, பிளெய்ன் சேலை 2400, வைர ஊசி சேலை 5000ரூபாய். உனக்கு நான் 2600 ரூபாய் மிச்சப்படுத்தியிருக்கேன்னு சொன்னா. ஆஹா, நம்ம மருமகளுக்கு நம்ம மேல என்ன கரிசனம், அத்தைக்கு காசு செலவாகிடக்கூடாதேன்னு சொல்றாளேன்னு ஒரு செக்கண்ட் சந்தோசம் பட்டுக்கிட்டு என்ன இருந்தாலும்  பிளெய்ன் சேலை தரோமேன்னு தயக்கமா இருக்குடான்னு சொன்னேன். என்னது, பிளெய்ன் சேலை தரப்போறியா?! என் சடங்குக்கு இன்னும் 10 நாள் இருக்கு. உனக்குதான் எம்ப்ராய்டரி போடத் தெரியுமே, பத்து நாளைக்குள்ள இதுல எம்ப்ராய்டரி போட்டு எனக்கு கிஃப்ட் பண்ணிடுன்னு சொன்னா.
                                    

அவ்வ்வ்வ் பயபுள்ள என்னமா பிளான் போடுதுன்னு சொல்லி, பத்து நாள்தான் டைம்ங்குறதால, சிம்பிளாதான் டிசைன் பண்ண முடியும்ன்னு சொன்னேன். ஓக்கே அத்தை, நீ எம்ப்ரய்டரி போட்டு தந்தாலே போதும்ன்னு சொன்னான். கடைக்கு போய், மல்டி கலர் கோன் திரெட், ரெடி மேட் பூ, சில்க் தெரெட், குந்தன் கல், மல்டி கலர்ல குட்டி குட்டி லீஃப்ன்னு பர்ச்சேஸ் 400 ரூபாய்ல முடிச்சுட்டேன்.
           
                                    
பார்டர்ல  கொடி கொடியா போற மாதிரி ஒரு டிசைன் போட்டேன். கொடிக்கு “காம்புத்தையல்” போட்டு  லீஃப் வச்சு தச்சேன். கொடில பூவுக்கு பதில் அங்கங்கு, ”கமல் தையல்” போட்டு நடுவுல வெள்ளைகலர் சூரியகாந்தி போல கல் வெச்சு தச்சுட்டேன்.
                                        
 முந்தானைல மூணு ஹார்ட் ஷேப்பை ஒண்ணா ஒட்டுனது போல ஒரு டிசைன் போட்டு ஜரிகை நூலால் “சங்கிலி தையல்” போட்டு தைச்சேன். இரண்டு ஹார்ட்டுக்கு நடுவுல லீஃப் வெச்சு தச்சுட்டேன்.
                                        
                                        
 இப்போ முந்தானையும், பார்டரும் ரெடி, இருந்தாலும் என்னமோ குறையுற மாதிரி இருக்கவே, பார்டர் டிசைன்னுக்கு கொஞ்சம் மேல அங்கங்க ஒரு பூக்கொடி “காம்புத் தையல்” போட்டு குந்தன் திலகம் கல்லை வெச்சு தச்சு, ரெடிமேட் பூவை அங்கங்கு வெச்சு தெச்சு, இலைக்கு பச்சை குந்தன் கல்லும் காம்பின் முடிவில் அகல் விளக்கு கல்லையும் வெச்சு தைச்ச பின் பூக்கொடி ரெடி.
                                                       

                            

                            
அங்கங்கு, அந்த பூக்கொடியை போட்டு விட்டபின் சேலை ரெடி. அயர்ன் பண்ணி சடங்குல சீர் செஞ்ச பின், அதை அண்ணன் மகள் கட்டி அவள் முகத்துல வந்த சந்தோசத்தை பார்த்தப்பின் 10 நாள் நான் பட்ட உடல் கஷ்டம் பஞ்சாய் பறந்து போச்சு. என்னதான் 10000 ருப்பாய் குடுத்து சேலை எடுத்து வந்திருந்தாலும் ரெண்டு பேருக்கும் இவ்வளவு திருப்தி வந்திருக்குமான்னு தெரியல. 
                                        
                             
                                 
                                
எம்ப்ராய்டரி பண்றவங்களுக்கு டிப்ஸ்: நல்ல வெளிச்சமான இடத்துல உக்காந்து போடுங்க. ஊசில நூலை ரொம்ப நீளமா போடாம, ஒரு முழம் அளவுக்கு கோர்த்துக்கிட்டா நூல் சிக்கல் விழாது. நூல் கண்டுல இருந்து  தேவையான அளவு நூலை எடுத்து ஒரு சுத்து சுத்தி முடி போட்டு வச்சுக்கிட்டா நூல் சரியாம இருக்கும். கற்கள், சமிக்கிலாம் மீதமாச்சுன்னா ஒரு கவர்ல போட்டு பின் பண்ணி வச்சுக்கிட்டா, குட்டி பசங்க பாவாடை, சட்டை, ஃபேண்ட்ல சின்ன சின்ன டிசைன் போட உதவும்.

நன்றி:   எம்ப்ராய்டரி போட, நூல் கோர்த்து கொடுத்து, கற்கள் பதித்து  உதவி செஞ்ச என் மழலை செல்வங்களுக்கு

22 comments:

 1. ஆஹா... தங்கையின் கை வண்ணம் கண்ணையும் மனசையு்ம் பறிக்குது. பிரமாதம்மா! என்னோட டி ஷர்ட்டுல கூட உன்னை ‌எம்பிராய்டரி கைவண்ணம் காட்டச் சொலலிப் போட்டுககணும்னு ஆசையே வந்துடுச்சு...!

  ReplyDelete
 2. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உங்களிடம் இவ்வளவு பொறுமையும் திறமையும் இருப்பதை கண்டு வியக்கின்றேன்? கண்ணையும் மனசையு்ம் பறிக்குது உங்களின் கை வண்ணம் .வாழ்த்துக்கள்.

  ராஜி மறக்க வேண்டாம் உங்களுகளின் இன்னொரு சகோதரனின் மகள் அமெரிக்காவில் இருப்பதை மறந்து விடாதீர்கள், இப்போதே சேலையை ரெடிபண்ண ஆரம்பிச்சுடுங்க

  ReplyDelete
 3. கணேஷ் கூறியது...

  ஆஹா... தங்கையின் கை வண்ணம் கண்ணையும் மனசையு்ம் பறிக்குது. பிரமாதம்மா! என்னோட டி ஷர்ட்டுல கூட உன்னை ‌எம்பிராய்டரி கைவண்ணம் காட்டச் சொலலிப் போட்டுககணும்னு ஆசையே வந்துடுச்சு..
  >
  அண்ணன் மகளுக்கு மட்டுமல்ல, அண்ணனுக்கும் என்னால் எம்ப்ராய்டரி போட்டு தர முடியும்.

  ReplyDelete
 4. Avargal Unmaigal கூறியது...

  வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உங்களிடம் இவ்வளவு பொறுமையும் திறமையும் இருப்பதை கண்டு வியக்கின்றேன்? கண்ணையும் மனசையு்ம் பறிக்குது உங்களின் கை வண்ணம் .வாழ்த்துக்கள்.

  ராஜி மறக்க வேண்டாம் உங்களுகளின் இன்னொரு சகோதரனின் மகள் அமெரிக்காவில் இருப்பதை மறந்து விடாதீர்கள், இப்போதே சேலையை ரெடிபண்ண ஆரம்பிச்சுடுங்க
  >>>
  சரிங்க சகோ. ஆனால், ஒரு எம்ப்ராய்டரிக்காக சடங்கு வரைக்கும் ஏன் காத்திருக்கனும். இப்பவே பாப்பாவோட அளாவு சொல்லுங்க. பாவாடை சட்டை ரெடி பண்ணி அணுப்பிடுறென்.

  ReplyDelete
 5. என்னது? உங்க அண்ணன் பொண்ணுக்கு சீரா? ஏன் எங்களை கூப்பிடலை? ஓ சி சோறுன்னா ஓடி வந்துடுவோமே? ஹி ஹி

  ReplyDelete
 6. அத்தை கையால அழகான சேலை... ஒரே வருத்தம் எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம். சாப்பாட காலி பண்ண வேண்டாமா?

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  என்னது? உங்க அண்ணன் பொண்ணுக்கு சீரா? ஏன் எங்களை கூப்பிடலை? ஓ சி சோறுன்னா ஓடி வந்துடுவோமே? ஹி ஹி
  >>>
  எங்க ஊர் பக்கம்லாம் ஃபங்க்‌ஷனுக்கு வந்தால் மொய் வைக்கனும். உங்களுக்கு வசதி எப்படி?

  ReplyDelete
 8. விச்சு கூறியது...

  அத்தை கையால அழகான சேலை... ஒரே வருத்தம் எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம். சாப்பாட காலி பண்ண வேண்டாமா
  >>>
  சாப்பாட்டை காலி பண்ணதானே?! அடுத்த ஃபங்கஷனுக்கு கூப்பிடுறேன் சகோ

  ReplyDelete
 9. ஆஹா 2400 ருபாய் சேலை இப்போ 4000 ரூபாய் சேலை ஆகிருச்சே அக்கா.. ?

  தங்களது திறமைக்கு ஒரு சல்யூட் ..!

  ReplyDelete
 10. 5000 ரூபாயில் வைர ஊசி புடவை வாங்கினாலும் அத்தையின் கைவண்னத்திற்கு ஈடு ஆகுமா!

  மருமகள் அத்தையின் அருமை அறிந்தவராய் இருக்கிறார். மருமகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அப்டியே உங்க சின்ன நாத்தனாருக்கும் ஒரு சிவப்பு பட்டு புடவை ரெடி பண்ண ஆரம்பிங்க... பத்து நாள் இல்ல... இன்னும் பத்து மாசம் டைம் இருக்கு...:)

  ReplyDelete
 12. அருமையான கலர்.. தங்கள் ஜொலிக்கும் கைவண்ணத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 13. 10000 ரூபாய்க்குப் புடவை வாங்கினாலும் ஆரி ஒர்க் , கல் ஒட்ட என்று இன்னொரு புடவை செலவு செய்கிறார்கள் இங்கே..

  ReplyDelete
 14. உங்களுக்கு நிறைய பொறுமை..
  கைவேலையோ அருமை..

  டி ஆர் அளவுக்கு போறதுக்கு முன்னாடி நிப்பாட்டிக்கிறேன்...

  சி பி கமென்ட் ஓகே ரகம்...

  ReplyDelete
 15. அருமையான கலர்.. தங்கள் ஜொலிக்கும் கைவண்ணத்திற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 16. எங்க ஊருக்கு வாங்க ..... எல்லா விதமான சேலைகளையும் அள்ளிக்கிட்டு போகலாம் !

  ReplyDelete
 17. அருமையான கைவண்ணம் சகோ... பாராட்டுகள்.

  ReplyDelete
 18. எனக்குப் பிடிச்ச உன்னோட பதிவு ஒண்ணை இன்னிக்கு வலைச்சரத்துல குறிப்பிட்டிருக்கேம்மா. நேரமிருக்கும் போது பார்த்து அவசியம் கருத்துச் சொல்லணும்.

  http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

  ReplyDelete
 19. என்ன அழகா வேலை செய்திருக்கீங்க ராஜி. கண்ணை வைத்தால் எடுக்க முடியவில்லை. கற்பனத்திறனும் கைவண்ணமும் அழகோ அழகு.
  இந்த மாதிரி அருமையான அத்தை கிடைக்கக் கொடுத்துவைத்திருக்கணும். உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. //சரிங்க சகோ. ஆனால், ஒரு எம்ப்ராய்டரிக்காக சடங்கு வரைக்கும் ஏன் காத்திருக்கனும். இப்பவே பாப்பாவோட அளாவு சொல்லுங்க. பாவாடை சட்டை ரெடி பண்ணி அணுப்பிடுறென். /

  உங்களின் கள்ளம் கபடம் இல்லா அன்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இப்படி சொன்னதே நீங்கள் பாவாடை சட்டையை அனுப்பிவைத்தற்க்கு இடான சந்தோஷம் தோன்றியது. நன்றி ராஜி

  ReplyDelete
 21. வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. அழகான பதிவு நல்லா இருக்குங்க வாழ்த்துகள் மா

  ReplyDelete