Monday, May 14, 2012

படித்தால் மட்டும் போதுமா?! - ஐஞ்சுவை அவியல்

                           
என்னடி புள்ள!  காலங்காலத்தாலே  புலம்பிக்கிட்டு இருக்கே?!

அது ஒண்ணுமில்லைங்க மாமா, நம்ம பக்கத்து வீட்டு கதிர் இருக்கானே, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கான். காலேஜுக்குலாம் போய் இருக்கான். ஆனா, அவனுக்கு ஊர் பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியலியே, அதான், அவன்லாம் படிச்சு என்ன புண்ணியம்? யாருக்கு என்ன லாபம்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். அதான் புலம்பிக்கிட்டு இருக்கேன். 

எல்லாருமே பிரகலாதனாகிட முடியுமா புள்ள?!

பிரகலாதனா?யாருங்க மாமா அது? எனக்கு தெரியாம இந்த ஊருல? அவன் வெளியூரா?!

இல்ல புள்ள, இரண்ய கசிபுன்ற ராட்சனோட பையன். அம்மாவோட வயத்துல இருக்கும்போதே நாரதரின் போதனையால தன் அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷ்ணு பகவானின் பக்தனா பிறந்தார்.  பிரகலனாதன், விஷ்ணுவை மறக்க, கொடிய  வழிகளைலாம்  கையாண்டு தோற்று போன  இரண்யகசிபு, எங்கே உன் ஹரின்னு அந்த பச்ச புள்ளையை பார்த்து கோவமா கேட்டானாம்.

ஐயையோ, அப்புறம் மாமா...,

என் ஹரி தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்னு மகன் சொன்னதை கேட்டு, பக்கத்தில இருந்த தூணை தன் கையிலிருந்த கதாயுதத்தால உடைச்சானாம். அப்போ, தூணிலிருந்து விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தாரு. நரசிம்மம்னா...,

எனக்கு தெரியும் மாமா, மனிதன் உடம்பும், சிங்கத்தின் தலையும் சேர்ந்த ஒரு அவதாரம்தான் நரசிம்மம்.

கரெக்டா சொல்லிட்டே புள்ள. நரசிம்மர் போரிட்டு இரண்ய கசிபுவை கொண்ணுட்டார். நரசிம்மரோட உருவத்தை பார்த்து, தேவர்கள் உட்பட எல்லாரும் பயந்தாங்க. அவரோட கோவத்தை போக்க விஷ்ணுவின் பொண்டாட்டியான மகா லட்சுமிதேவிக்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அந்தம்மாவும் புருசன் பக்கத்துல போக பயந்தாங்க.

ம்ம்ம்ம், அப்புறம் எப்படிதான் விஷ்ணு பகவானின் கோவம் போச்சு?

பிரகலாதன்தான் பாட்டுலாம் பாடி விஷ்ணுவோட கோவத்தை போக்குனாரு. அதனால, கோவம் குறைஞ்ச விஷ்ணு, பிரகலாதன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.

என்னாது கடவுள் மன்னிப்பு கேட்டாரா? ஏன் மாமா?

தன் மேல பிரகலாதன் வெச்ச பக்தி உண்மைதானான்னு, சின்ன பையன்கூட பார்க்காம ரொம்ப சோதிச்சுட்டேன். அதனால, என்னை மன்னிச்சு, எதாவது வரம் கேள்ன்னு விஷ்ணு பகவான் பிரகலாதன்கிட்ட கேட்டாராம்.

ஐயனே! ஆசைகள் என் மனசுல  தோணவே கூடாது,  பணம் இருக்குது, படிப்பு இருக்குது. ஆனா, ஆசை வேணாம்ன்னு சொன்னான் பிரகலாதன். குருகுலத்துல  அவன் படிச்சதுது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் இல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக்குறாதுக்கு.

படிச்சா மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துகணும்ங்குற மாதிரி  இருந்த பிரகலாதனின் இந்தப் பேச்சு,  நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. சாமியை பார்த்து பக்தன் தான் உருகுவான். ஆனா, இங்கயோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த சாமி பக்தனை பார்த்து  உருகிப் போனான். இந்த சின்னவயசுல,  எவ்வளவு நல்ல மனசு! ஆசை வேணாம்ங்குறானே! ஆனாலும், அவர் விடலை.

 நீ ஏதாவது கேட்டுத்தான் ஆகணும்ன்னு, நரசிம்மர் கெஞ்சுனதால , எங்க அப்பாவை தண்டிக்காம அவருக்கு வைகுண்ட  பதவி கொடுக்கனும்ன்னு கேட்டுக்கிட்டானாம்.   அதுக்கு, விஷ்ணு, பிரகலாதா! உன் அப்பா  மட்டுமில்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெத்த அப்பாக்கள்  தப்பே செய்திருந்தாலும், அவங்க என் இடத்துக்கு வந்துடுவாங்க. அவங்க  21 தலைமுறையினரும் புனிதமடைவாங்கன்னு  வரம் தந்தாராம் விஷ்ணு.  தந்தை கொடுமை செஞ்சாரேங்குறாதுக்காக  அவரை பழிவாங்கனும்ன்ற எண்ணம்  பிரகலாதனிடம் இல்லை. படிச்சவங்க  கத்துக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான் புள்ள.

கரெக்டுதானுங்க மாமா.  படிச்ச படிப்பை பயனுள்ள வகையில யூஸ் பண்ணாதானே அந்த படிப்புக்கும் லாபம். மத்தவங்களுக்கும் லாபம்.
                              
அப்புறம்,  நம்ம கம்ப்யூட்டர் பொட்டில  பொட்டில ஒரு ஜோக்கு படிச்சேனுங்க  மாமா. சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிட்டுது.

எனக்கும் சொல்லுடி. நானும் சிரிக்குறேன்.

மனைவி: ஏங்க காரக்குழம்பு செய்யவா? இல்லை கூட்டு செய்யவா?
கணவன்: நீ முதல்ல சமையல் செய்.  நாம அப்புறமா அதுக்கு காரக்குழம்பா? கூட்டான்னு பேர் வச்சுக்கலாம். 

ஹாஹா நல்லாதான் சிரிக்குற மாதிரி இருக்கு. good joke. Very funny,  ஹா ஹா

என்னங்க மாமா திடீர்ன்னு இங்கிலிபீஷ்ல பேசுறீங்க?

நான் கரஸ்ல படிக்குறேன் புள்ள. அதான் இங்க்லீஷ்ல பட்டம் வாங்க போறேஏன். நீதான் படிக்காத தற்குறி. என்னையும் அப்படியே இருக்க சொல்றியா?

யாரு நானா தற்குறி?

இங்க்லீஷ்ல நான் ஒண்ணு கேட்குறேன் பதில் சொல்லு பார்க்கலாம்.

அடியே என்கிட்டயே சவாலா? கேளுடி டான்னு பதில் சொல்றேன்.

அப்படிங்களா மாமோய்?! அதையும் பார்க்கலாம் 7 லெட்டர்ஸ்  உள்ள  ஒரு இங்கிலீஷ் வார்த்தை. அதுல எந்த ஒரு லெட்டரை எடுத்தாலும் அர்த்தம் மாறாது. அது என்ன வார்த்தைன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

அதுவா? அது வந்து..., எனக்கு தெரியலை நீயே சொல்லுடி. அப்படி வா வழிக்கு. நான் சொல்றதுக்குள்ள பிளாக்கர்ஸ் யாருக்காவது தெரிஞ்சா சொல்லட்டும்.  ராத்திரி சாப்பாட்டுக்கு ஓட்ஸ்ல எதாவது செய்யட்டுமா?

                            
ஓட்ஸா? ஓட்ஸ்ன்னதும் உன் ஃபிரண்ட் ராஜி ஞாபகம்தான் வருது.

ஏன்? அவளுக்கென்ன?

அவளுக்கொண்ணுமில்லை. நான் ஒருதரம் அவ வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ அவ, சின்ன பொண்ணு இனியாக்கு 5 இல்ல 6 வயசிருக்கும். அப்போதான் இந்த ஓட்ஸ்லாம் நமக்கு அறிமுகமான டைம். ஓட்ஸ்லாம் சர்க்கரை நோயாளிக மட்டும்தான் சாப்பிடனும்ன்னு பரவலா ஒரு பேச்சு. அதை ராஜி தன் பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பா போல.

நான் போயிருக்கும்போது ராஜி தன் பாட்டிக்கு ஓட்ஸ் பொங்கள் செஞ்சு கொடுத்தா. அப்போ அந்த பாட்டி, இன்யாக்கிட்ட கொஞ்சம் பொங்கள் கொடுத்து காக்காவுக்கு வெச்சுட்டு வான்னு சொன்னாங்க. இனியாவும் அப்படியே செஞ்சா. ஆனா, அப்புறம் பாட்டியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டா பாரு எல்லாரும் சிரிச்சுட்டோம்.

அப்படி என்னதான் கேட்டா மாமா?!

ஏன் பாட்டி உனக்குதான் சுகர் அதனால ஓட்ஸ் சாப்புடுறே. காக்காக்கும் சுகரா? அதனால அதுக்கும் ஓட்ஸ் பொங்கல் வைக்குறியான்னு கேட்டா.

ஹா ஹா இனியா ரொம்ப சுட்டி. இப்படிதான் எதாவது கேட்டு ராஜியை வம்புக்கு இழுக்கும் ஹா ஹா. ஆ ஐயோ.., அம்மா...,
                                      
                                           
ஏன் என்னாச்சு புள்ள?!

ஒண்ணுமில்லைங்க மாமா, பல் வலிக்குது. கடைவாய் பல் சொத்திஅயா இருக்கு. அது ரெண்டு நாளா ரொம்ப வலிக்குதுங்க மாமா. நைட்லாம் தூக்கமே இல்ல.

இதுக்குதான் இனிப்புலாம் சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும், சாக்லேட், கற்கண்டுலாம் கடிச்சு சாப்பிட கூடாது. அதிக குளிர்ச்சி, சூடானதை சாப்பிட கூடாது. சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும். காலையில எழுந்ததும் பல் துலக்கனும்.  ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி பல் துலக்கனும். வருசத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டர்கிட்ட போய் ஆலோசனை கேட்கனும்.

சரிங்க மாமா, அதெல்லாம் இனி கரெக்டா செய்றேன். இப்ப வலிக்குதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க மாமா. மிளகுத்தூளுல  கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்குறா பல்லுல  தடவி வந்தா வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறிச்சு  நல்லா  கடிச்சு  சாப்பிட்டு வந்தாலும் பல் வலி குறையும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தாலும் சொத்தைப்பல் குறையும்.

ஆனா, இதெல்லாம் சும்மா தற்காலிகமாதான் செஞ்சுக்கனும். உடனே மறக்காம பல் டாக்டகிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும். நான் போய் கழனில மடை திருப்பிவிட்டு வரேன். சாயந்தரமா டவுனுக்கு போய் உன் பல்லை புடுங்கலாம்.

என்னங்க மாமா, இப்படி கிண்டல் பண்றிங்களே!?

சும்மா தமாஷ் பண்ணே புள்ள. சொத்தை பல்லை எடுத்துட்டு வந்துடலாம்.

சரிங்க மாமோய்.நானும் சீக்கிரம் வீடு வேலைலாம் முடிச்சு வைக்குறேன்.

24 comments:

 1. அந்த இங்லிபீசு வார்த்தை என்னங்க...?

  ReplyDelete
 2. அந்த இங்கிலீஸ் வார்த்தைய நான் சொல்ல அனுமதி உண்டாம்மா... பல்வலிக்கு டிப்ஸ்ம் பிரகலாதன் கதையும் அருமை. இனியா... சான்ஸே இல்லை. எவ்வளவு புத்திசாலித்தனமா கேட்ருக்கா. ரசிச்சு சிரிச்சேன். என்னது... சொல்லிடலாம்கறியாம்மா... சரி, அந்த இங்கிலீஸ் வார்த்தை : POST BOX. Hi... Hi...

  ReplyDelete
 3. அருமை அருமை..ரசித்துப் படித்தேன்..

  ReplyDelete
 4. கணேஷ் கூறியது...

  அந்த இங்கிலீஸ் வார்த்தைய நான் சொல்ல அனுமதி உண்டாம்மா... பல்வலிக்கு டிப்ஸ்ம் பிரகலாதன் கதையும் அருமை. இனியா... சான்ஸே இல்லை. எவ்வளவு புத்திசாலித்தனமா கேட்ருக்கா. ரசிச்சு சிரிச்சேன். என்னது... சொல்லிடலாம்கறியாம்மா... சரி, அந்த இங்கிலீஸ் வார்த்தை : POST BOX. Hi... Hi..
  >>>
  போங்கண்ணா. இப்படியா முதல்லயே வந்து விடை சொல்லுவீங்க. மத்தவங்களை கொஞ்சம் யோசிக்க விட்டிருக்கலாமில்ல. தூயா குடுத்த கேள்வி சட்டுன்னு கண்டுபிடிக்குற மாதிரி ஆகிடுச்சே.

  ReplyDelete
 5. எல்லாமே அருமை எழுத்து நடை சொல்லு வழக்கு பிடிச்சிருக்கு - அந்த ஏழு எழுத்து.........தெரியுமே ஹே ஹே.
  இனியா ஹா ஹா ஹா அறிவு கொழுந்து,
  பல் மருத்துவம் சில எனக்கு புதுசு

  மொத்தத்தில் அவியல் அட்டகாசம்

  ReplyDelete
 6. அடாடா... மருமக தூயா என்மேல வருத்தப்பட்ருச்சா... ஸாரிம்மா... இனி விடை தெரிஞ்சாலும் கடைசில வந்தே சொல்றேன். சரியா...

  ReplyDelete
 7. அவியல் ரொம்ப பிரமாதமா இருக்கு சகோ...இன்னும் நிறைய அவியல் போட்டிருக்கலாம்னு தோனுது...

  ReplyDelete
 8. "அவியல்" நன்று.

  இனியா நல்ல சூட்டி.

  ReplyDelete
 9. I searched google and got the answer as post box

  ReplyDelete
 10. ஒவ்வொரு பதிவிலும் அவியலின் சுவை கூடிக்கிட்டெ போகுது. நல்லா இருக்கு

  ReplyDelete
 11. சூப்பாரா கேள்வி கேட்டாங்க காக்கைக்கும் சுகரா அருமை சகோ .
  த.ம .4

  ReplyDelete
 12. நல்ல மகன் பொறந்தால் தந்தை கவலைப்படவேண்டாம். 7 லெட்டர் என்னனு தெரியலை. ஆனா.. நிறைய லெட்டர் உள்ள ஆங்கில வார்த்தை தெரியும். வேறென்ன...POSTBOX தான்.

  ReplyDelete
 13. அட பார்ரா எல்லோரும் எவ்வளவு அறிவாளியா இருக்காங்க, எத்தனை பேறு கரெக்ட்டா விடையை சொல்லியிருக்காங்க.., ச்சே நாமதான் ரொம்ப டிர்ட்டியா இருக்கோமோ ..?

  ஹி ஹி ஹி அந்த ஜோக் .., இனிமே ஆபீஸ்ல உட்கார்ந்துகிட்டு ஜோக்ஸ் படிக்கக்கூடாது சிரிச்சா ரிசப்ஷனிஸ்ட் முறைச்சு பாக்குறாங்க ..!

  ReplyDelete
 14. அருமையான ஐஞ்சுவை சமையல் சகோதரி...

  ReplyDelete
 15. சாமியை பார்த்து பக்தன் தான் உருகுவான். ஆனா, இங்கயோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த சாமி பக்தனை பார்த்து உருகிப் போனான்.

  பக்தி அவியல் அருமை !

  ReplyDelete
 16. பல் வலிக்கு கிராம்பு தைலம் உள்ள பற்பசை வைத்தாலும் வலி குறையும்..

  கொய்யா இலைகள் கொழுந்தாக பறித்து மென்று துப்பினாலும் அதிலுள்ள குளோரபில் வலியை சற்று அப்போதைக்கு குறைக்கும்...

  ReplyDelete
 17. இந்த மாமாவையும் ஆண்டியையும் வெச்சே ஃபுல்லா அவிசுட்டீங்க... ஹ்ம்ம்.. புது புது ஐட்டமா போட்டு காமிக்கிறீங்க.. எத்தன வீட்டுல ஆம்பளைங்க இதெல்லாம் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல...

  ReplyDelete
 18. anth english vaarthai enna?

  joke!
  nalla iruththathu!

  kuzhanthai kelvikalukku-
  pathil solla nammaala mudiyaathu!

  nalla pakirvu!

  ReplyDelete
 19. வழக்கம் போல நன்றாக இருந்தது. பல்வலி போக சிறந்த மருந்து எந்த பல் வலிக்குதோ அந்த பக்க கன்னத்தில் நல்லா ஒரு குத்து குத்தினால் பல்வலி போகிடும். ஆனா இந்த முறை யூஸ் பண்ணினால் சைடு ஃஎபெக்ட்டாக பல்வலி போகி கன்னம் நல்லா வலி எடுக்கும்.

  ReplyDelete
 20. பல் போனால் சொல் போச்சு.. சொல் போனால் போஸ்ட் போச்சு ஹி ஹி

  ReplyDelete
 21. அருமையான ஐஞ்சுவை அவியல் சகோ !

  ReplyDelete
 22. ஐஞ்சுவை அவியலின் சுவை அபாரம்.

  ReplyDelete
 23. அருமையான ஐஞ்சுவை சமையல்மொத்தத்தில் அவியல்அருமை

  ReplyDelete
 24. சுவை,தேன் நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete