புதன், மே 16, 2012

ஐ மிஸ் யூ டா செல்லம்......

I MISS YOU என்பதின் தமிழாக்கம் என்ன ????

நான் உன்னை தொலைத்து விட்டேன் என்பதா ???

கைக்குள் இருந்த ஒன்று
இல்லாத வெறுமை உணர்வை
சொல்லுவதா  "I MISS YOU"?!

தேடி தேடி அலைந்தும்
கிடைக்காதோ என்ற பய உணர்வை
பறைசாற்றுவதா "I MISS YOU"?!

எண்ணமெல்லாம் தனக்கே என்று
குத்தகை எடுத்து கொண்ட ஆக்கிரமிப்பை
வெளிபடுத்துவதா "I MISS YOU"?!

பிரிவின் துயரத்தை
துயரத்தின் வலியை அழகாக
கூறுவதா "I MISS YOU"?!

பல உணர்வின் கலவையான
"I MISS YOU" எனற சொற்றொடருக்கு இணையான
தமிழ் வாக்கியம் என்ன ??????????????

டிஸ்கி: தெரிஞ்சவங்க அர்த்தம் சொல்லிடுங்கப்பா.  ?!இல்லைன்னா பார்ட் டூ ரிலீஸ் பண்ணிடுவேனாக்கும்

19 கருத்துகள்:

 1. sathiyamaa enakku-
  theriyaathu!

  aanaal-
  nalla kavithai -
  ithu!

  பதிலளிநீக்கு
 2. நோஓஓஓ! இந்த ஆட்டத்துக்கு நான் வரல்லை. ஏன்னா எனக்குத் தெரியாது... அப்பாலிக்கா பாக்கலாம் சிஸ்டர்!

  பதிலளிநீக்கு
 3. ஹி ஹி நான் கொஞ்சம் இங்லிபீஸ்ல வீக்கு .., அதுனால அடுத்த பதிவுக்கு ஏதுனாச்சும் கருத்துபோடுறேன் இப்போ கழண்டுக்கிறேன் ஹி ஹி ஹி ..!

  பதிலளிநீக்கு
 4. I miss you shall be translated as :

  உன் இல்லாமையை உணர்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. இதை எழுத்தாளர் சாரு நிவேதாவிடம் எழுதி கேட்கவும் ஆனால் அதில் பெரும் ஆபத்து இருக்கிறது. I Missing you என்று எழுதி கேட்டால் அப்படியா கண்ணே என்று பதில் கடிதம் எழுத ஆரம்பித்து விடுவார்

  பதிலளிநீக்கு
 6. அட ஆமா இல்லெ. இதுக்கு என்ன அர்த்தம்?

  பதிலளிநீக்கு
 7. I MISS YOU இதுக்கு OPPOSITE மட்டும் தெரியும். I SIR YOU கரெக்டா? ஐயோ! இதுக்கெல்லாமா அடிக்க வருவாங்க...

  பதிலளிநீக்கு
 8. பசங்க படிக்க வெளியூர் போனா கவலைப்படாதிங்க.......

  அவங்க முன்னேற்றத்துக்கான படிக்கட்டில் ஏறிட்டு இருக்காங்கன்னு பெருமைப்படுங்க

  பதிலளிநீக்கு
 9. நான் ஐந்தாம் வகுப்புல இங்கிலீசு பெயில்/// அதுக்கப்புறமா அந்த கருமத்தை நினச்சிக்கூட பார்க்கல்ல...

  இப்ப இப்பிடி ஒரு பதிவப்போட்டு பீதிய கிளப்பிட்டீங்களே...:(

  பதிலளிநீக்கு
 10. என்னாது அப்படின்னா அப்படிதான் ஹே ஹே ஹே

  பதிலளிநீக்கு
 11. ஒரு சொற்றொடர் குறித்த
  தொடர் சிந்தனை அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. ஐ மிஸ் யூ = நான் தான் உன்னோட டீச்சர்!

  பதிலளிநீக்கு
 13. அட பாருங்க பா..
  எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

  "வசந்தங்களை எனதருகே கொண்டுவரும்
  உன் நினைவுகளை சுமந்துகொண்டு
  உன் அருகாமையை இழக்கிறேன்"
  என்ற நீண்ட
  நெடும் வாக்கியத்தை மிகவும் சுருக்கிய
  ஆங்கில வாக்கியத்தைக் கொண்டு
  அழகிய பதிவு சகோதரி....

  பதிலளிநீக்கு
 14. ஐ மிஸ் யூ டா செல்லம்......"

  தினமும் தானே புலம்பிக்கொண்டிருக்கிறோம் !

  பதிலளிநீக்கு
 15. நன் உன்னைத் தவறவிடுறேன்னு சொல்றதை ஐ மிஸ் யூடா சொன்னா ஒரு கிக் இருக்கத்தான் இருக்கு ராஜி !

  பதிலளிநீக்கு
 16. செல்லங்களை விட்டுப் பிரிவது சிரமம்தான் சிலநாட்களானால் பழகிவிடும்.

  பதிலளிநீக்கு
 17. உன் அருகாமை இன்மையின் வலியினை உணர்ந்தேன்!!!

  பதிலளிநீக்கு