Wednesday, May 09, 2012

காதல் என்றால் என்ன?!(படித்ததில் பிடித்தது..,)


“என்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- அன்பே… 
நீ என்னை மறப்பாய்.”
“என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- அன்பே… 
நீ என்னை நினைப்பாய்.”
காதலையும்,  வாழ்க்கையையும்,  மனித மனங்களையும், மனதின் தேடுதலையும், மனதின் ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது. எப்போதோ படித்து வெறுத்த கவிதையிது.

ஆனால், வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்… காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும், இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பட்டது.

காதல் என்பது இவ்வளவு தானா என்ன?
காதல் எவ்வளவு உயர்வானது?!

எதிர்கால  வாழ்க்கைக்காக, பார்த்து, ரசித்து, சிரித்து, மயங்கி, உலகே காலடியில் என்று இறுமாந்திருந்த  காதலை மறக்க முடியுமா? கவிதையா இது..? ச்ச்சீசீசீசீ எனறு தோன்றியது. ஆனால், அதுவே இன்று, சிலவற்றை படித்து, பல்வேறு மனிதர்களை சந்தித்து, வாழ்க்கையில் அடிப்பட்டு, உலகை உணர ஆரம்பித்த பின்  கவிதையின் பொருள் உண்மையென்றே தோன்றுகிறது.


உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா, காதல் மட்டும்?! மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை. உற்று பார்த்தால்  காதல் கூட அப்படித்தான் என்றே தோன்றுகிறது.

நான் பார்த்த காதலும், காதலர்களும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது.  காதலியாக அல்லது காதலனாக  பார்த்த போது இருந்த முகம் + மனம் – இப்போது வேறு ஒருவரின் மனைவியாக அல்லது கணவனாக  பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக.

நீ  இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவனும் சொன்னாள்… அவளும்  சொன்னான்… ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் . அது நடந்ததா?! இல்லையே… ஆனாலும் வாழ்கிறோம்.

பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்களாக இருப்பவர்கள் ?!.  ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். அவன் அல்லது அவள்  போன பின்னால் எல்லாமே  விட்டு போய் விடவில்லை.

அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறோம். சினிமாவை ரசிக்க்கிறோம். இடை இடையே அவள்(ன்) ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடமோ அல்லது தன் மழலை செல்வத்திடமோ பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது. 

பின் … “அவனி(ளி)ல்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி வாழ்வதாக” தோன்றுகிறது.

அப்படியெனில் காதல்..?

காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா..? – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா, அதுவா… வேறு எதுவா..? இப்படித் தான் எதையாவது நினைத்து நாம் வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ,  விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன.

“எழுதுங்கள் இவன் கல்லறையில் –
 அவள் இரக்கமில்லாதவன் என்று… ”
 பாடுங்கள் இவன் கல்லறையில் –
 இவன் பைத்தியக்காரன் என்று,” 
என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா?

போய் விட்டான்(ள்) அடுத்து என்ன செய்வது? எதிர்காலம், வேலை, குடும்பம், தங்கை, பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறார்கள், ஆனால், உண்மை வேறு தானே?

ஏதோ ஒன்று, அவனை(ளை) விட்டு  விலகும்படி தூண்டியது என்பதே உண்மை. காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான். காதல் கூட நாளாக நாளாக சலித்து தான் போகிறது.
ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது? பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நாமாக விலகினால் நமக்கது கௌரவம். இல்லையென்றால், காயப்பட வேண்டியிருக்கும்.

யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும்? யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை அவனு(ளு)க்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துங்கள்.

வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும்; ஆனால் இருக்காது.  கிடைப்பது போல் இருந்தது; ஆனால் கிடைக்கவில்லை. அதனால், மனசை தேற்றிக் கொள்ள வேண்டும். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.

உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.
டிஸ்கி: மெயிலில் வந்த ஒரு கட்டுரையை பட்டி, டிங்கரிங்க் செஞ்சு பதிவாக்கிட்டேன். 

31 comments:

 1. முதல்ல படிப்போம்

  ReplyDelete
 2. என்ன திடீர்ன்னு காதல் பத்தின விரிவான ஆராய்ச்கிக் கட்டுரை. நான் காதரிக்கிறேன். சக மனிதர்களை. வாழ்க்கையை. நட்புகளை உறவுகளை எல்லா நாளும் நேரமும் காதலுடனே செல்கிறது, மற்றபடி கதைகளும் சினிமாவும் கூறும் காதல் எனக்கு... ஹூம்... கட்டுரை நல்லாவே இருக்குதும்மா...

  ReplyDelete
 3. மெயில்ல வந்த கட்டுரையை பட்டி. டிங்கரிங் செஞ்சு பதிவா... எனக்கும் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே... ஒருத்தனும் இப்படி பதிவு தேத்தற மாதிரி எதும் அனுப்பறதில்ல... ப்ரெண்ட்ஸ்... நோட் பண்ணுங்கப்பா...

  ReplyDelete
 4. இதுல ஏதோ பெரிய உள்குத்து இருக்குன்னு நினைக்கிறேன் கணேஷ் அண்ணே...!!!

  ReplyDelete
 5. வாழ்க்கை வாழ்வதற்கே இல்லையா அருமை அருமை...!!!

  ReplyDelete
 6. இன்ட்லி, தமிழ் பத்து ஒர்க் ஆகலை???

  ReplyDelete
 7. படித்ததில் பிடித்தது

  ReplyDelete
 8. ரசித்து படித்தேன்,

  உண்மைதான் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.

  ReplyDelete
 9. என்னய மாதிரி சின்னப் புள்ளைங்க காதல்னா என்னன்னு தெளிவாப் புரிஞ்சுக்கற மாதிரி சொல்லித் தந்ததுக்கு ரெர்ம்ப தாங்க்ஸ் வாத்தியாரம்மா...

  ReplyDelete
 10. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 11. நிறைய சிறப்பான கருத்துக்களை சொல்லிப் போகும் பதிவு அருமை .

  ReplyDelete
 12. யதார்த்த கவிதை இது. எப்போதோ படித்து வெறுத்த கவிதையிது.

  நிதர்சனவரிகள் நிரம்பித்தும்பும் உணர்வுகள் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 13. >>
  காதல் என்றால் என்ன?!(படித்ததில் பிடித்தது..,)


  காதல் என்றால் கல்யாணம் என்று வரும்போது பெண்கள் ஆண்களை நைஸாக கழட்டி விட்டுட்டு வீட்ல பார்க்கற பையனை கல்யாணம் பண்ணீட்டு பிறக்கும் குழந்தைக்கு காதலன் பெயரை வைப்பது, நம்மை வெறுப்பேற்றுவது

  படிக்காததில் பிடிக்காதது ஹி ஹி

  ReplyDelete
 14. //////////காதல் என்றால் என்ன?!(படித்ததில் பிடித்தது..,)


  காதல் என்றால் கல்யாணம் என்று வரும்போது பெண்கள் ஆண்களை நைஸாக கழட்டி விட்டுட்டு வீட்ல பார்க்கற பையனை கல்யாணம் பண்ணீட்டு பிறக்கும் குழந்தைக்கு காதலன் பெயரை வைப்பது, நம்மை வெறுப்பேற்றுவது

  படிக்காததில் பிடிக்காதது ஹி ஹி///////


  கமெண்ட்ஸ் போடும்போதும் கூட நகைச்சுவையாகவே சிந்திக்கிறார், யோசிக்கவும் வைக்கிறார் ..!

  ReplyDelete
 15. UNMAITHAAN!
  VAAZHAKAIYIL KAATHAL ORU-
  PAAKAM PALARUKUU PURIYUM-
  SILARAI PIRIKKUM-
  ENNA SEYYA!?

  ReplyDelete
 16. காதல் என்றல் என்ன ....

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...ஒரு நல்லப் புள்ளைய எப்புடிலாம் கேடுக்குறாங்க ...அவ்வவ் ..

  ReplyDelete
 17. அக்கா காதல் தோல்வி பதிவு...நல்ல ஆறுதல் காதலில் தொற்றவர்களுக்கு ... ....

  ஆனாலும் நான் நல்ல ஏமாந்தது போயிட்டேன் ...போங்க அக்கா

  காதல் என்றால் என்ன கேக்கறீங்க ஏதோ சொல்லப் போறீங்கள் ன்னு நான் எவ்ளோ ஆசை ஆசையா வந்தேன் தெரியுமா ...அதுலாம் லைப் ள ஒண்ணுமே இல்லை எண்டு சொல்லி முடிச்சிடீன்கள் ...

  சரி பெரியவங்க சொன்ன சரியாத் தான் இருக்கும் ....

  ReplyDelete
 18. அவ்வ்வ்வவ்!
  இதெல்லாம் புரியும் வயதில்லை என்றாலும் பதிவு நல்லாத்தான் இருக்கு!
  சிபியின் கமென்ட் சூப்பரா இருக்கு! :-)

  ReplyDelete
 19. கட்டுரை நன்றாக இருக்கு.

  //உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்//

  மிக தெளிவான சிந்தனை. அருமையாக இருக்கு..

  ReplyDelete
 20. காதல் என்பது ஒருபோட்டியா என்ன வெற்றி தோல்வி பற்றிப் பேச?இழப்பு இருக்கலாம். ஆனால் அதுவும் ஒரு சுகம்தான்.மிக நல்ல பகிர்வு

  ReplyDelete
 21. என்ன சகோ ஆராய்ச்சிலாம் பலமா இருக்கு?? ம்ம்ம் நல்ல கட்டுரை!!

  ReplyDelete
 22. //காதல் என்ன தேர்வா..? – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. //

  well said

  ReplyDelete
 23. என்ன ராஜி அம்மா கல்லூரி பருவம் நினைவுக்கு வந்து விட்டதா? காதல் கீதல்ன்னு எழுத ஆரம்பித்துவிட்டீங்களே

  ReplyDelete
 24. மெயிலை அனுப்பிய அந்த காதலன் யார்? ஹீ...ஹீ...மாட்டிகிட்டீங்களா

  ReplyDelete
 25. எனது காதல் கல்யாண்த்தில் முடிந்துவிட்டது. தோல்வி அனுபவம் இல்லை. அதனால் எனக்கு இன்னொரு காதலி தேவை தோல்வியில் முடிய.....யாராவது இருந்தா ரெகமெண்ட் பண்ணவும்

  ReplyDelete
 26. டிங்கரிங்க் ஒர்க் நன்றாக உள்ளது
  மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. அடடா... நான் இப்போது தான் காதலிக்கத் துவங்கினேன்.
  இந்தத் தொடரை முதலிலேயே போட்டிதிருந்தால் .... இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன். அவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தேன்.

  என்னை மாதிறி சின்ன பிள்ளைகளுக்கு நல்ல அட்வைஸ் கொடுத்தீங்க . ரொம்ப நன்றிங்க ராஜி அக்கா.

  ReplyDelete
 28. இது மாதிரி விலகி, விலக்கி போகிற காதலர்களுக்கு சரியான செருப்படி

  ReplyDelete
 29. காதிலில் தோல்வியே கிடையாது! உங்களுக்கு உங்கள் காதலியோ அல்லது காதலனோயோ திருமணம் செய்ய முடியாமல் போகலாம். ஆனால், காதலித்தது உண்மையாக இருக்கும் வரை உங்கள் காதல் வெற்றி தான். திருமணம் ஒரு முடிவு மட்டுமே!

  In other words, காதல் is NOT a means to an end, திருமணம்!

  ReplyDelete