Saturday, May 19, 2012

ப்ளீஸ் ஹெல்ப் மீகார் வாங்கலாம்ன்னு இருக்கேன். உங்க வீட்டுலதான் கார் இருக்கே. எப்படி பராமரிக்கனும், கார் வாங்கும்போது என்னென்ன ஃபிக்ஸ் பண்ணனும்ன்னு சொல்லுடின்னு  ஃப்ரெண்டை கேட்டேன்.  அந்த நாயி சாரி அவ கார் பின் கண்ணாடில வரைய டிசைன் செலக்ட் பண்ணுன்னு மெயில் அனுப்பி இருக்கா.

முதல்ல கோவம் வந்துச்சு, இருந்தாலும் எப்படியும் கண்ணாடில எதாவது வரையத்தானே போறோம்ன்னு செலக்ட் பண்ணிட்டேன். அந்த படத்தை பார்க்கனுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கார் வாங்குனா எப்படியும் நான் கார் ஓட்டுவேன். அப்போ இந்த படத்தை போட்டாத்தானே சரியா இருக்கும். மாற்று கருத்து இருந்தா சொல்லுங்க. நல்ல படத்தை செலக்ட் பண்ணி குடுங்க ப்ளீஸ்....
டிஸ்கி: என் மக தூயா யாருக்காகவோ காத்திருக்கிறாளாம். உருகி, உருகி கவிதை எழுதியிருக்கா. அது என்னன்னு இங்க போய் பாருங்களேன். 
  

29 comments:

 1. போயும் போயும் உங்க கிட்ட அட்வைஸ் கேட்டாங்களே அவுங்கள எப்படி பாராற்றதுண்ணே தெரில சகோ

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை உங்ககிட்ட அட்வைஸ் கேக்க சொல்றேன்.

   Delete
 2. நீங்க கார் வாங்கினா உடனடியா எனக்கு ஒரு அறிவிப்பு மின்னஞ்சல் அனுப்பிட வேண்டுமென்று தாழ்மையுடன் தங்களை கேட்டுக்கொள்கிறேன், ஏன்னா குறைந்த பட்சம் உங்க ஏரியாவில வசிக்கிற என்னோட நண்பர்களுக்காவது 'ரோட்டுல பார்த்து போங்கடா மக்காஸ்'-னு ஒரு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிருவேன் பாருங்க ..! ஹி ஹி ஹி

  மறந்துராதீங்க ...,

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பிபிசி ல சொல்றேன் சகோ

   Delete
 3. காரோட பின் கண்ணாடிக்குத்தானே... என்னோட படத்தை அனுப்பறேன் வெச்சிடும்மா... அப்பத்தான் ரோட்டுல எல்லாரும் மிரண்டு பக்கத்துலயே வர மாட்டாங்க. நீயும் ஜாலியா கார் ஓட்டலாம். ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஐ ஜாலி. தேங்க்ஸ்ண்ணா

   Delete
 4. கார் வாங்குனா எப்படியும் நான் கார் ஓட்டுவேன். அப்போ இந்த படத்தை போட்டாத்தானே சரியா இருக்கும்...!!! O K O K !!

  ReplyDelete
 5. அது என்னன்னு இங்க போய் பாருங்களேன்.

  Not Found

  Error 404

  ReplyDelete
 6. காரின் படங்கள் அருமை..ஆனா நீங்க சொல்ற டேஞ்சர் ...ரொம்பத்தான் டேஞ்சர் ..

  ReplyDelete
 7. காரின் படங்கள் அருமை..ஆனா நீங்க சொல்ற டேஞ்சர் ...ரொம்பத்தான் டேஞ்சர் ..ஆனா நல்ல வேளை உங்க படத்தை நீங்க போடல தப்பி தவறி போட்டு இருந்தா அது மிக மிக மிக டேஞ்ச்ராக இருத்திருக்கும் அப்படி போடாம மக்களை காப்பாற்றியதற்கு மிக நன்றி சகோ

  ReplyDelete
 8. இது உங்கள் குழந்தையின் பதிவிற்கான பின்னுட்டம். அந்த கவிதையை பேஸ் புக்கிலும் சேர் பண்ணியிருக்கிறேன்


  எனக்காக காத்திருக்கும் உனக்கு உன் கவிதை போலவே மிக நல்ல செய்தியோடு வருவேன்..அதுவரை பொறுத்திரு...

  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சொல்வது போல இந்த கவிதையும் நன்றாக இருக்கிற்து

  ReplyDelete
 9. http://www.blogger.com/%20http://kannaninthozhi.blogspot.in/2012/05/blog-post.html ----- இந்த லிங்க் முகவரியை கீழே உள்ளது போல் மாற்றவும் !
  http://kannaninthozhi.blogspot.in/2012/05/blog-post.html

  உங்கள் மகளின் கவிதையும், உங்களின் படங்களும் அருமை !

  ReplyDelete
 10. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

  தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 11. அதுக்கு பதில் உங்க புகைப்படத்த வச்சு பாருங்க சகோ .. ஒருத்தனும் ரோட்ல வரமாட்டான்

  ReplyDelete
 12. தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி உள்ள மாணவர்களே பெற்றோர்களே உங்களுக்காக

  மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

  ReplyDelete
 13. அவை கார்கள்தானா?

  ReplyDelete
 14. travel pannuran appurama vaaran

  ReplyDelete
 15. முதல்படம்தான் பொருத்தமாயிருக்கும். பின்ன! நீங்க கார் ஓட்டும்பொது உள்ளயிருந்து யாரோ ப்ளீஸ் ஹெல்ப் மீ’னு கத்துற மாதிரி அதுதான் மிகப்பொருத்தம்.

  ReplyDelete
 16. பேசாம நீங்க 'L ' போர்டு மாட்டிகீங்க...அந்த கடைசி படம் அருமையா இருக்கு

  ReplyDelete
 17. உன்னால் கண் விழித்த இரவுகள் எத்தனை??
  கனவிலும் நீ....,
  கனவு கலைந்த பின்னும் நீ...., மிகவும் அருமையான கவிதை .


  உங்கள் கார் வாங்கும் கதை அதைவிட அருமை அக்கா...

  ReplyDelete
 18. குட்டிக் கவிதாயினியின் கவிதை மிக மிக அருமை
  குட்டி பதினாறு அடி பாய்வது கண்டு மிக மகிழ்ந்தேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. ஒரு பாப்பா வண்டி ஓட்டுகிறதுன்னு எழுதி ஒட்டிவிடுங்கோ:)

  ReplyDelete
 20. அய்யய்யோ நான் இனி உங்க வீட்டு பக்கம் கூட வரமாட்டேன், காரிலேயே இந்த அநியாயம் நடந்தா வீட்டுக்குள்ளே டேக்கரேஷன் எம்புட்டு டெரரா இருக்கும்...?

  ReplyDelete
 21. நீங்க கார் ஓட்டுங்க, நாங்க உங்களை ஓட்டறோம்..

  ReplyDelete
 22. என்னைக்காவது உங்க ஊர்ப்பக்கம் வரலாம்னு நெனச்சிட்டிருந்தேன்,இனிமே மாட்டவே மாட்டேன்!

  ReplyDelete
 23. ஆகா......டிசைன்ல்லாம் நல்லாருக்கே ராஜி ஒண்ணு எடுத்துக்கவா !

  ReplyDelete