-->
சூரியனா?!
சந்திரானா?!
உன் முகத்தை சொல்லுகிறேன்...,
இப்படி பிரகாசித்தும்
குளுமையை உணரமுடிகிறதே!?..
நீ தலைவாரும்
சீப்பில் பற்களுக்கு பதிலாக
பூ இதழ்களால் செய்யப்பட்டுள்ளதாமே!?..
பூக்கள் உன்னை
சூடிகொள்கின்றன.
நீ, எதை சூடிகொள்கிறாய் ?..
உன் அழகு சிந்தும்
வெட்கத்தை எல்லாம்
உதடுகள் பூசிகொள்கின்றனவா!?
இப்படி சிவந்திருக்கின்றதே?!
பிறை நிலாவா?
உன் புருவங்களுக்கு மத்தியில்
பொட்டாக இருப்பது?..
நீ அழகு பார்க்கும்
நிலைகண்ணாடியை பார்க்கவேண்டும்..,
அது, அழகு தேக்கியா என்று!?..
சங்கு கழுத்து
என்று சொல்லுவது
உன் கழுத்தை பார்த்துதானோ!?..
கொடி இடை என்பது
சரிதான். ஆனால், ஒரு
சந்தேகம் உன்னிடை
எந்த வகை கொடி ?..
சந்தன மரங்கள் தானோ
உன் கால்கள்??!!
அப்பா இப்படி ஒரு நிறம்
கடைசியில்
கண்டே பிடித்துவிட்டேன்
உன் பாதங்கள்
ரோஜா இதழ்கள் தானே!!??
சந்திரானா?!
உன் முகத்தை சொல்லுகிறேன்...,
இப்படி பிரகாசித்தும்
குளுமையை உணரமுடிகிறதே!?..
நீ தலைவாரும்
சீப்பில் பற்களுக்கு பதிலாக
பூ இதழ்களால் செய்யப்பட்டுள்ளதாமே!?..
பூக்கள் உன்னை
சூடிகொள்கின்றன.
நீ, எதை சூடிகொள்கிறாய் ?..
உன் அழகு சிந்தும்
வெட்கத்தை எல்லாம்
உதடுகள் பூசிகொள்கின்றனவா!?
இப்படி சிவந்திருக்கின்றதே?!
பிறை நிலாவா?
உன் புருவங்களுக்கு மத்தியில்
பொட்டாக இருப்பது?..
நீ அழகு பார்க்கும்
நிலைகண்ணாடியை பார்க்கவேண்டும்..,
அது, அழகு தேக்கியா என்று!?..
சங்கு கழுத்து
என்று சொல்லுவது
உன் கழுத்தை பார்த்துதானோ!?..
கொடி இடை என்பது
சரிதான். ஆனால், ஒரு
சந்தேகம் உன்னிடை
எந்த வகை கொடி ?..
சந்தன மரங்கள் தானோ
உன் கால்கள்??!!
அப்பா இப்படி ஒரு நிறம்
கடைசியில்
கண்டே பிடித்துவிட்டேன்
உன் பாதங்கள்
ரோஜா இதழ்கள் தானே!!??
அடடே..அடடடே..
ReplyDeleteபிறையைப்போல பெண்கள் பொட்டுவைப்பார்களா? #டவுட்#
வாசிக்க சுகமாகயிருந்தது..அருமை..எப்பூடி
Deleteம்ம் பொண்ணுங்க வட்டமா மட்டுமில்ல பல வடிவத்துல பொட்டு வைப்பாங்க. உங்க வீட்டு அம்மிணியை கொஞ்சம் கவனிச்சு பாருங்க. பொட்டு மேட்டர் புரியும். அப்புறம் இந்த கவிதை என் கணவர் என்னை நினைச்சு எழுதுனது. அதான் அருமையா இருக்கு சகோ.
Deleteசொல்லவேயில்ல அண்ணா கவிதை எழுதுவாங்களா ?
Deleteஉங்க வீட்டுகாரர் எழுதிய கவிதையா மிக அருமை . ஆனா அவர் வேற யாரையோ நினைச்சு கவிதை எழுதினமாதிரி இருக்கு இந்த வரிகளை படிக்கும் போது
Delete///கொடி இடை என்பது
சரிதான். ஆனால், ஒரு
சந்தேகம் உன்னிடை
எந்த வகை கொடி ?..//
அதனால அவரை கவனிக்க வேண்டிய வழியில் கவனிச்சு உண்மையை வரவலைங்க...
அல்லது உங்களுக்கு கல்யாணம் ஆன புதிதில் இதை எழுதி இருந்த சந்தேகம் வர சான்ஸ் இல்லை
ஓ! அப்பிடியும் இருக்குமோ? எதுக்கும் விசாரிச்சு பார்க்குறேன் சகோ!!
Deleteகொடியிடையைத் தாண்டி இன்னொரு இடை இருக்கோ.... !
ReplyDeleteசங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே...
ReplyDeleteரொம்ப நாளைக்கப்புறம் சங்கு கழுத்து என்ற வார்த்தையைப் பார்க்கிறேன் படிக்கிறேன்
அழகு ரசித்தேன்
ஆக்ஹா... ரசித்தேன்...
ReplyDeletetm6
அழகிய வர்ணனை.
ReplyDeleteஎப்படி இருக்கிங்க சகோ. குடும்பத்தில் அனைவரின் நலன் அறிய ஆவல்.
ரசனையான கவிதை.
ReplyDeleteஎல்லாமே ஒரு சந்தேகத்தில் கேட்கும்
ReplyDeleteகேள்விகள்..
உருவகங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது
சகோதரி...
பெண்ணின் அழகிற்கே உரித்தான
உருவகங்கள்...
அருமை அருமை...
நல்ல படம். நல்ல கவிதை.
ReplyDeleteகொடியிடை அல்லது மடியிடையாக இருக்குமோ?
ReplyDelete