Friday, June 28, 2013

திரு அதிகை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி நாம இன்னைக்குபோக போறது பண்டுருட்டி பஸ் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலிருக்குற திருவதிகை”.  சரியா சொல்லனும்ன்னா  திருஅதிகைஎன்னும் ஊருல இருக்குற திரு வீடானேஸ்வரர் திருகோயில்அட்ட வீரட்டத் தலங்கள்ல இதுவும் ஒண்ணு.

திரிபுரத்தை எரித்த வீரச் செயல் இங்கதான் நடந்ததாம்.திருஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம் இது.


கோவிலின் முகப்பு வாயில்

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது.தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) கோவில் பக்கத்துல ஓடுது.., கோபுரங்கள் தூண்களில் எல்லாம் நல்ல அழகான கலைநயம் மிக்க சிலைகள் இருகின்றன.உள்பக்கம் வாயில் அதன அருகில் தெப்பக்குளம் அமைந்துள்ளது


இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம. இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம. இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.


மிகப்பெரிய கோயில் இது, சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் நிறைய சிலைகளால் செதுக்கபட்டு அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்கள்ல ஒண்ணுல  சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர்ன்னும்,  இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார்ன்னும் சொல்றாங்க...,

சுமார் 2000 வருடங்கள் பழமை வாயந்தத திருத்தலமாம்

கோவிலின் உள்புறம் நுழையும் போதே பெரிய புத்தர் சிலை காணபடுகிறது .

இந்த புத்தர் சிலை கெடில நதி வெள்ளத்துல அடிச்சுட்டு வந்து இந்த கிராமத்து பக்கம் கரை ஒதுங்குனதா சொல்றாங்க..,


இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது
திருஞானசம்பந்தரை யானை காலால் இடற சொல்லி மன்னன் உத்தரவிட, அவ்வாறே நிறைவேற்றும்போது, யானை திரும்பி போனதா சொல்ற வரலாறு நடந்தது இந்த இடத்துலதானாம். அந்த காட்சிகளை இந்த விநாயகர் கோவிலுக்கு பின்புறம் சித்திரங்களாக வரையப்பட்டிருக்கு..
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ன்ற  மூணு அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலும் வெல்லவோ  கொல்லவோகூடாதுன்னு வரம் வாங்குனாங்க. அவங்களால தொல்லையடைந்தவர்கள் ஈசன்கிட்ட போய் முறையிட்டாங்களாம்......
இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது.
துர்க்கை அம்மன சன்னதி 
அதனால  பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தாராம். சுவாமி மேருமலையை வில்லாகவும்,  வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , திருமாலை அம்பாகவும்,  அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார்.

 அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படின்னு நினைச்சு.., கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தாராம்.அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியா தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினராம். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டாராம். இந்த  வரலாறுதான்  ”திரிபுர சம்காரம்”ன்னு சொல்லப்படுது..

எல்லா கோவில்களிலும் காண்பதை போல் கோவில் வாசலில் ஆதரவற்றோர்கள் காணப்படுகிறார்கள் தெய்வம் இவர்களுக்கும் நல்ல காலம் அருளட்டும்   
அடுத்த வெள்ளி வேற கோவில் பத்தி பார்க்கலாம். வர்ட்ட்ட்ட்டா?!

27 comments:

 1. திரு அதிகைக்கு நேரில் செல்லாத குறை நீங்கியது படங்களைப் பார்த்‌தபோது. அருமை!

  ReplyDelete
 2. தல சிறப்பு விளக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
 3. புண்ணியத்தில் எங்களுக்கு பங்கு உண்டா? உண்மையைஸ் சொல்லுங்க அது உண்மையிலே புத்தர் சிலையா அல்லது வூட்டுகாரர் சிலையா சகோ

  ReplyDelete
 4. சிறப்பான படங்களும் பகிர்வுகளும்
  திருத்தலத்தை கண்முன் காட்சியாக்கின..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 5. என் போட்டோவை என் அனுமதி இல்லாமல் எப்படி பகிரலாம் சகோ எந்த படம் என்று கேட்கிறீர்களா அதுதான் கடைசியில போட்ட படம்தான். அதுல நான் அப்பாவியா உட்கார்ந்து இருக்கிறேன்

  ReplyDelete
 6. நல்ல பதிவு புதியதாக ஒரு கோவிலை தெரிந்து கொண்டோம் ..நன்றி

  ReplyDelete
 7. அந்த பக்கம் சென்றால் நிச்சயம் இந்த கோயிலுக்கு போகனும்...

  ReplyDelete
 8. திரு அதிகை தல புராணமும் படங்களும் கண்டு மகிழ்ந்தேன்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 9. இறைவனின் பெயர் வீரட்டானேஸ்வரர் என்று அறிகிறேன்! வீடானேஸ்வரர் என்று எழுதி உள்ளீர்கள் கவனிக்கவும்! நன்றி!

  ReplyDelete
 10. சிவத்தலங்களின் பழமையையும், பெருமையையும் உணர்த்தும் வண்ணமாய் அமைந்தது தங்கள் பகிர்வு....

  ”திரிபுர சம்ஹாரம்” என்ற வார்த்தைக்குத் தொடர்பான கதையின் விளக்கமும் அறிய நேர்ந்தது, நன்றி....

  திரு அதிகை வீரட்டானேஸ்வரை சந்திக்கும் ஆர்வமும் அதிகம் ஆயிற்று.....

  ReplyDelete
 11. அழகிய படங்களுடன் அருமையான ஸ்தலபுராணம்.
  அருமை.
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 12. விளக்கமும் படங்களும் அருமை..

  ReplyDelete
 13. எங்களின் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கோயில் இது. தமிழ்நாட்டுக்குப் போகும்போதெல்லாம் நாங்கள் இங்கு போகாமல் திரும்பியதில்லை. இங்குள்ள அம்மனுக்குப் பெயர் பெரியநாயகியம்மன், வள்ளலார் இந்த அம்மன் முன்னால் தியானத்திலிருந்து தான் அருள் பெற்றதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள். தமிழ்ப் பெளத்தத்துக்கு இந்தக் கோயில் நல்ல உதாரணமாகும்.

  மிகவும் பழமையான இந்தக் கோயில் புத்த கோயிலாக இருந்து, சைவத்தின் எழுச்சியின் பின்னர் சிவாலயமாக மாற்றப்பட்டு, திருநாவுக்கரசராலும், திலகவதியாராலும் பிரபலமடைந்தது. புத்தர் சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது அதற்கும் கோயிலைக் கட்டினால் நல்லது. பெரிய கோயிலாக இருந்தாலும் பக்தர்களின் வருகை குறைவாலும், கோயிலின் பெருமை ஊரவர்களுக்கே தெரியதாதலும் கலையிழந்து கிடக்கிறது. சில வேளைகளில் கோயிலில் விளக்ககெரிப்ப்தற்கு கூட நல்லெண்ணை இருப்பதில்லை என அர்ச்சகர் எங்களிடம் கூறினார். கோயில் தேர் அழிந்து போய்க்கிடந்தது. போனவருடம் போயிருந்த போது அதையும் காணவில்லை. பழமை வாய்ந்த, அழகான சிற்பக்கலையுடன் கூடிய கோயில், பக்தர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க எத்தனையோ புதுக்கோயில்கள் பண்ணுருட்டியில் (இது தான் சரியான பெயராம் பண்ருட்டியல்ல) கட்டப்படுகின்றன, கருவறைக்கு மேலேயுள்ள தூபி பெரிதாக கோபுரம் போல் கட்டப்பட்டிருப்பது இதன் பழமைக்கு ஆதாரமாகும். அந்த தூபி முழுவதும் சிற்பங்களால் நிரம்பி வழிகிறது.

  எங்களின் அனுபவத்தில் அங்குள்ள அம்மன் மிகவும்சக்தி வாய்ந்தவர். சிவனுக்குப் பெயர் வீரட்டானேஸ்வரர். ஒரேயொரு குறை என்னவென்றால் திருநாவுக்கரசர் குருபூசை நாளில் கூட தமிழில் யாரும் தேவாரம் போடவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் நானே பாடியிருப்பேன். அனேகமாக இலங்கையில் ஆரம்பக் கல்வி கற்ற எல்லோருக்கும் ஒரு திருநாவுக்கரசர் திருவதிகையின் மீது பாடிய ஒரு தேவாரமாவது தெரியும். :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ என்னுடைய பதிவுக்கு வருகை தந்தமைக்கு
   உங்களிடம் தகவல் கொடுத்த அர்ச்சகர் போல் புத்தர் சிலை பத்தி அங்குள்ள அர்ச்சகர் என்னிடம் அர்ச்சகர் கூறிய தகவலைத்தான் என்னுடைய பதிவில் கூறியுள்ளேன்.

   அம்மனின் பெயர் பெரிய நாயகி என்பதுதான் ..ஆனாலும் அம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி

   ஆதாரம் என்னுடைய பதிவில் கோவில் ஸ்தல வராலாறு குறிப்பு படம் (இணைப்பு 19) பார்க்கவும் அதில் அம்மனுடைய பெயர் திரிபுரசுந்தரி குறிக்கப்பட்டுள்ளது

   Delete
  2. பண்டுருட்டி எனபது சரியான பெயர் இல்லை பண்ணுருட்டி தான் சரியான பெயர் சில கடைகளில் பண்ணுருட்டிஎன்று தான் குறிப்பிட்டுள்ளனர் .ஆனால் வழக்கத்தில் உள்ள பெயர் பண்டுருட்டி என்பதே

   Delete
 14. Oops... திருத்தம்:

  களையிழந்து* - களையிழந்து
  போடவில்லை* - பாடவில்லை

  :)

  ReplyDelete
 15. திருஅதிகை கோவிலின் படங்களைப் பார்த்ததுமே நேரில் செல்லவேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகிறது.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 16. திரு அதிகை நேரில் தரிசித்த உணர்வு. நன்றி

  ReplyDelete
 17. திருவதிகை என்ற தலத்தின் பெயரை திரு அதிகை என்று பிரிப்பது தவறு என்று தான் எனக்குப் படுகிறது. திருவண்ணாமலையை யாரும் திரு அண்ணாமலை என்று எழுதுவதில்லை. தேவாரத்தில் திருநாவுக்கரசர் திரு என்ற பதத்தை இணைக்காமல் வெறுமனே அதிகை என்று குறிப்படுகிறாரே தவிர திரு அதிகை என்றல்ல.


  "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
  தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
  நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
  உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
  உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
  உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
  அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
  வீரட்டா னத்துறை அம்மானே."


  "செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
  செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
  வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதல்
  மணவாள னேவலங்கை மழுவா ளனே
  நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
  நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
  அம்பனே அண்டகோ சரத்து ளானே
  அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே."

  ReplyDelete
 18. //தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) கோவில் பக்கத்துல ஓடுது//
  மன்னிக்கவும், கெடிலநதி எப்பொழுதோ வற்றிப்போய் விட்டதாம், அப்படி ஒரு நதி இருந்ததற்கு அடையாளம் கூட தேவாரத்தில் மட்டும் தான் காணப்படுகிறதாம். கெடில நதி எங்கிருக்கிறது என்ற கேள்வியை நானும் கேட்டேன். அங்குள்ள அர்ச்சகருக்கு மட்டுமல்ல, பண்ருட்டியில் நான் கேட்ட எவருக்குமே கெடில நதியைப் பற்றித் தெரியாது. இப்பொழுது வெறும் கிணறு மட்டும் தான் தான் தீர்த்தம்.

  ReplyDelete
  Replies
  1. கெடிலம் நதி அங்கே இருந்து 50 மீட்டர் தொலைவில் இன்னும் ஓடிகொண்டு இருக்கிறது சித்தர்கள் சமாதியில் இருந்து பார்த்தல் அந்த ஆறு தெரியும் ..தண்ணி ஓடையாக இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ..

   அது திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் கோவிலின் பக்கமாக ஓடி திருவந்திபுரம் (தேவநாத சுவாமி கோவில் ) வழியாக கடலில் கலக்கிறது

   கூடுதல் தகவல் அது திருவந்திபுரத்தில் இருந்து ஓடையாக பிரிந்து கடலில் கலகிறது அதன் பாதையில்,அப்பர் சுவாமிகளை கல்லில் கட்டி கடலில் இட்டபோது கல் மிதந்து கரை ஒதுங்கிய இடம் "கரைஏறிவிட்டகுப்பம்" என்ற பெயரில் இன்னும் இருக்கிறது அங்கே ஒரு பெரிய முருகன் சன்னதியும் உள்ளது

   தென்பெண்ணை நதியில் இருந்து இந்த நதி உற்பத்தியாகி கெடிலம் என்னும் ஊரில் பிரிவதால் கெடிலம் நதி என்று பெயர் பெற்று கடலூர் மாவட்டம் வழியே கடலில் கலக்கிறது ..
   தகவல் போதுமா சகோ

   Delete
  2. நன்றி. நிச்சயமாக இந்த வருடமே போய்ப்பார்க்கிறோம், இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஒன்று அர்ச்சகருக்கு கோயிலைப் பற்றியோ அல்லது அவருக்கு அந்த தலத்தின் மீது பாடப்பட்ட தேவாரத்தைப்ப பற்றியோ தெரியாது. பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பதிலுள்ள கோளாறு இதுதான். எவ்வளவோ படித்தவர்கள் இருக்க, சாதியிலும், பரம்பரை அடிப்படையிலும் அர்ச்சகர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வளவுக்கும் ஊரில் பலரிடம் கூட கேட்டுப் பார்த்தோம், அவர்களுக்கும் தெரியவில்லை. நாங்கள் திருவந்திபுரம் கோயிலுக்கும் போனோம். ஆனால் அங்கு யாரிடமும் கெடில நதி பற்றிக் கேட்காதது என்னுடைய தவறு தான்.

   Delete
  3. நன்றி சகோ உங்கள் கேள்விகள் மூலம் பல விஷயங்கள் ..பதியவும் ...பகிரவும் செய்யப்பட்டு திருகொவிலின் பெருமை மேலும் மெருகேற்றபட்டு விட்டது

   Delete
 19. //திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன//

  இலங்கையில் நாங்கள் தமிழ்நாட்டுத் கோயில்களைப் பற்றி மூன்றாம் வகுப்பிலேயே கற்கத் தொடங்குவதால், மறந்து விட்டேன். ஆனால் திருவதிகையில் திருநாவுக்கரசருக்கு அசரீரியால் தான் அருளப்பட்டது. திருமணக்காட்சி தந்த தலம், காஞ்சிபுரம் அல்லது திருமறைக்காடாகத் தானிருக்க வேண்டும்.

  ReplyDelete
 20. திருவதிகை கோவில் சிறுவயதில் சென்ற நினைவிருக்கிறது..... மீண்டும் இந்தப் பக்கமெல்லாம் செல்ல வேண்டும் - பார்க்கலாம்!

  படங்களும் விவரங்களும் நன்று.

  ReplyDelete
 21. படங்கள் அருமை!நான் பலமுறை அங்கு போயிருக்கிறேன்!

  ReplyDelete