Sunday, January 20, 2019

சட்டென்று முடிந்த காதல் - 96 பாட்டு புத்தகம்

சட்டென்று முடிந்த காதல் ஒரு பேரனுபவம் போல! ஏக்கத்தின் ஊற்றுக்கண் அந்த அனுபவம். ஒவ்வொரு முறையும் நினைச்சு பார்க்கும்போது இதழில் புன்னகையை, உடலில் மலர்ச்சியை உண்டு பண்ண தவறாததைப்போலவே கண்களில் நீர் சுரப்பதையும் தவறாது. 

காதலை அதன் காலக்கட்டத்தை பொறுத்து  மூணு விதமா பிரிக்கலாம். காதலே வராத, அப்படியே வந்தாலும் அத்தை/மாமா பெண் காதல் வந்த நம்ம அப்பா, தாத்தா காலத்தைய கருப்பு வெள்ளை காதல்..
காதல்ன்னா புனிதம், லவ் பண்ணிக்கிட்டா கட்டியே தீரனும், முத்தம் கொடுத்தாலும் கற்பு போயிடுச்சுன்னு தள்ளி நின்னு லவ் லெட்டர் கொடுத்து பார்த்து, ஏங்கி பரிதவிச்ச 30-40 வயசுக்காரங்க கலர் காதல்...
காதல் கழற்றிப்போட்ட செருப்பு, சைஸ் சரியா இருந்தா யார் வேணாலும் மாட்டிக்கலாம்’ன்ற சினிமா டயலாக்கைப்போலவே டேக் இட் ஈசியா போறதுன்னு ஒருபுறம், ஏத்துக்கலியா ஆசிட் அடிக்க, கொலை, கடத்தல்வரை போகும் இன்றைய vfx காதல்.கருப்பு வெள்ளை காதல். அதாவது 40 வருடத்துக்கு முந்தைய காதல். இது இந்த  காதல் படாதபாடுபடுது.  

எதுவுமே கைக்கு கிடைக்கும்வரைதான் அதன்மீதான ஈர்ப்பு இருக்கும். கைக்கு கிடைச்சுட்டா ஈர்ப்பு போயிட்டு அலட்சியம் வந்துடும். அதனால்தான் சட்டுன்னு முடிஞ்ச காதல்கள்மேல் அத்தனை பேருக்குமே ஒரு பிரியம்.  அந்த மாதிரி ஒரு காதல்கதைன்றதாலோ என்னமோ 96 படத்தை எல்லாருக்குமே பிடிச்சு போச்சுது. 

இரவிங்கு தீவாய்.. பாட்டு  சட்டுன்னு முடிஞ்ச காதலை, நம்  கண்முன் கொண்டு வந்துச்சு.திரிசா அத்தனை பொருத்தம் . மனசு போராட்டத்தை, ஏக்கத்தை, துக்கத்தைலாம் அத்தனை அழகா வெளிப்படுத்தி இருக்கும் இந்த பாட்டுல.. ஆண்பெண்  குரலில் இந்த பாட்டு வந்தாலும் வழக்கமான டூயட் பாட்டா இதில்லாம    மாறிமாறி இருவர் காதல் ஆவேசத்தை அமைதியா எடுத்து சொல்லுற மாதிரி இந்த பாட்டு இருக்கும். 

காதலை ஜஸ்ட் லைக் தட்ன்னு கடந்து போறவங்களுக்குகூட தன் மனதிலுள்ள காதலை வெளியிலெடுத்து,  அழகு பார்க்கும் அனுபவத்தை சில பாடல் தரும். என்ன ஒன்னு, அந்த அனுபவத்தை பெற காதல் செஞ்சிருக்கனும். அந்தமாதிரி ஒரு பாட்டுதான் 96 படத்துல வரும் இரவிங்கு தீவாய்... விஜய் சேதுபதி படம்ன்னா பார்க்க ஆசைப்படுவேன்.  ஆனா திரிசாவை இதுவரை சம்திங் சம்திங் படத்துல ரசிச்சதோட சரி. அதுக்கப்புறம் இந்த படத்தில்தான் அந்த புள்ளைய பிடிக்குது. 
காலத்தின் கட்டாயத்தை, பிரிவை ஏற்க மறுக்கும் மனசை, தவிப்பை, அழுகையைன்னு அம்புட்டு அழகா வெளிப்படுத்தி இருக்கும்.  இரவு  நேரத்துல மட்டுமில்ல பகல்ல கேட்டாலும் அழுகை வரும்.  இரவு பயணத்தில் அதிலும் தனியாய் இருந்தால் பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்தமுடியாது என்பதே நிஜம்.
இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!
விடியலும் இருளாய் வருதே!!
நினைவுகள் தீயாய் அலை மோதுதே!!
உடலிங்கு சாவாய் அழுதே!

பிரிவே உறவாய் கரைந்து போகிறேன்!
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்!

மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்!!
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்!!
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்...

இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!
விடியலும் இருளாய் வருதே!!

இந்த தாமரைக்குளம் நீர் தனி ஆகுதே!
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே!!
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே!!
அட, காலங்கள் தடைமீறி, தடை போடுதே!

நீ இன்றி நானே
தினம் வாழ்வதொரு வாழ்வா?!
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே!
வரவா?!… வர வா?!…
தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே!
உயிர்வரை நிறைந்து துணை
மனம் கொண்டாடி வாழுமே!

மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே!

மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை செருமமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே!!
நீ போய் வா!!
வா!! வா!!
வா!!

காதல் பண்ணினவங்கலாம் தங்கள் காதலை கையிலெடுத்து அழகு பார்க்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க!

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. ரசனையான பாடல்... படமும்...

    ReplyDelete
    Replies
    1. அதான் போனவாரமே சொல்லிட்டியேண்ணே! ஏன்ம்மா பழசையெல்லாம் கிளறிக்கிட்டுன்னு!!

      Delete
  2. அன்பு ராஜி, நான் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையே என்று ஏக்கம் வருகிறது,
    எத்தனை அருமையான உணர்வுகளை இந்தப் பாடல் வடித்துக் கொடுக்கிறது.
    மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. படம் பாருங்கம்மா பிடிக்கும். அத்தனை நுண்ணிய கதையமைப்பு, நடிப்பு. திரிசா செமயா நடிச்சிருக்கும்.

      Delete
  3. பாடலை நான் பாஸ்ட் பண்ணிதான் படம் பார்த்தேன். உங்கள் வர்ணனை நன்றாய் இருக்கிறது. அப்புறம் ஒருமுறை கேட்டுப்பார்க்கவேண்டும்.

    vfx காதல். என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளை, படத்துக்கு பின் ஈஸ்ட்மென் வந்துச்சு..
      அதுக்கப்புறம் கலர் படம் வந்துச்சு..
      அதுக்கப்புறம் HD வந்துச்சு. இப்ப சினிமாவில் லேட்டஸ்ட் டெக்னாலஜின்னு பார்த்தா vfxதான். பாகுபலி படம் முழுக்க இந்த டெக்னாலஜிதான் யூஸ் பண்ணி எடுத்தாங்க. ஆட்கள் மட்டும் இருந்தால் போதும். பின்னாடி இருக்கும் வீடு, காடு, மலை, அருவிலாம் இந்த எஃபெக்ட்ல கொண்டு வந்துடலாம்.

      Delete
  4. ஓ... இன்னும் படம் பார்க்கலை. பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. படம் பார்க்கவில்லை ஆனால் பார்க்க நினைத்த படம். எங்கள் ஊர்ல வராதே. பாட்டு அப்புறம்தான் கேட்க முடியும்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. இணையம் இருக்க பயமேன் துளசி சார்?!

      Delete
  6. ராஜி படம் பார்க்கலை. ஆனா பாட்டு நல்லாருக்கு...எங்க வீட்டுல யாராவது இந்தப் படம் ஃபைல் கொடுத்தா பார்க்கனும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஊரு உலகமெல்லாம் தனிப்பெருங்காதல் பாட்டை ரிங்க் டோனா வச்சிருக்கு. ஆனா, எனக்கு அந்த பாட்டு அந்தளவுக்கு பிடிக்கல, இதேமாதிரி லைஃப் ஆஃப் ராம் பாட்டும் நல்லா இருக்கும். படத்துல எல்லா பாட்டுமே நல்லா இருக்கும் கீதாக்கா.

      Delete