Saturday, January 19, 2019

பொங்கல் பண்டிகை பட்டபாடு - வீட்டிலும்.... வெளியிலும்....

எங்க வீட்டில் பொங்கிய பொங்கல்...

யூ ட்யூப், கூகுள், ஃப்ளிக்கர், ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பழைய கோல நோட்டு இதுலாம் பார்த்து, எந்த கோலம் போடலாம்ன்னு அலசி ஆராய்ஞ்சு சொந்தமா போட்ட கோலம். என்ன கரும்புதான் ஒன்னு பெருசாவும், இன்னொன்னு சிறுசாவும் போயிட்டுது :-( கலர் கொடுத்ததுலாம் பெரிய பொண்ணு. 

பொதுவாவே எனக்கு வரைய வராது. புள்ளி வச்ச கோலம்  நல்லாவே போட வரும். ஆனா, புள்ளியில்லாம மான், மயில் மாதிரிலாம் கோலம் போடனும்ன்னா சொதப்புவேன். அது என்னமோ தெரில இந்தமுறை மயில் மயில்மாதிரி வந்திட்டுது. கலர் சின்ன பொண்ணு கொடுத்துச்சு. 
மஞ்சக்காப்பு கட்டியாச்சு..
பிள்ளையார் வீடு கட்டியது என் பையன். கரும்பு, மஞ்சள், காய்கறிலாம் வச்சு முதல் படையல்..
முன்னலாம் வாசல்ல பொங்கல் வைப்போம். இப்ப மொட்டைமாடில வைக்குறோம். ஆற்றுமணலை கொட்டி, அதன்மேல் செங்கல் வச்சு களிமண் உருண்டை வச்சு அதுக்கு மேல் பொங்கபானை வைப்போம். அடுப்பு பத்தவச்சு பானை காய்ஞ்சுடுச்சான்னு நெல்மணி போட்டு பார்ப்போம்.   
அது வெடிச்சதும் பால் ஊத்துவோம். அது பொங்கினதும், அரிசி கழுவின தண்ணிய ஊத்தி தவிடு போட்டு தட்டு போட்டு மூடி துவரங்குச்சி கொண்டு எரிய விடுவோம். பொங்கல் மேற்கு பக்கமா வழிஞ்சது. 
பாலும், தண்ணியும் பொங்கி வந்ததும் அரிசியை போடுவோம். அரிசி பொங்கினதும், கடைக்கு போய் உப்பு வாங்கி வந்து பொங்கப்பானையில் சேர்ப்போம். உப்பு வாங்குறதுதான் முதல் செலவா இருக்கும்.

பொங்கல் வெந்ததும் இறக்கி வச்சிடுவோம்..
சாமிக்கு படைக்கும்போது செங்கல் தூளால் பிள்ளையார் வீடு, வாசல், பொங்கல் அடுப்புக்கு கோலம் போட்டு, பூசணி இலையில் பொங்கல், 9 தானியங்கள், 21காய்கறிகள் சேர்த்த குழம்பு,  பிடிகரணைக்குழம்பு, வெந்தயக்கீரை மசியல் செஞ்சு  சூரியனுக்கு படைச்சோம். 


மாடிக்கும், கீழுக்குமா நடந்ததால் எல்லாமே டயர்ட். அதனால் மாட்டு பொங்கலன்னிக்கு சிம்பிளா ஒரு கோலம். 

சாம்பார், பொரியல், வடை, கொழுக்கட்டை, சுய்யம்லாம் வச்சு படையல் போட்டாச்சு. புதுத்துணி வச்சும் படைச்சு உடுத்தி, அம்மா அப்பா, மாமனார், மாமியார், மச்சினர், மூத்தார், நாத்தனார் அவங்க பிள்ளைகளை பார்த்து பைசா கொடுத்து, வாங்கி..  கோவிலுக்கு போய் வந்தோம்.


இப்படியாக எங்க வீட்டு பொங்கல் பண்டிகை கடந்து போனது. 

இனி நெட்ல சுட்டது....
தங்கள் வீட்டு மாட்டை எப்படிலாம் அலங்காரம் செஞ்சிருக்காங்க பாருங்க, கொலுசு, செயின் மட்டுமில்லாம வாலில் அழகா ஜடை பிள்ளைகள், குஞ்சலம்லாம் வச்சி.. செமயா இருக்கு.
மல்லிகை பூ ஜடை வச்சு கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணி இருக்காங்க. 
கவிதை, கட்டுரை, சமையல், கோலம்ன்னு தன் மனசுல இருப்பதை வெளிப்படுத்தும் திறமை இயல்பாவே எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கு.  தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையால்  வரும் பாதிப்பு பத்தி பொங்கல் அன்னிக்கு ஒரு பொண்ணு கோலம் போட்டிருக்கு.
மாட்டு மடி பின்னாடி இருக்கு.
புரிஞ்சுதா?!
ஏசு, அல்லா, முருகன், ஈசன், புத்தர்ன்னு இருந்தாலும் இறைவன் ஒருவனே. அதில் மாற்றுக்கருத்தில்லை. இறைச்சி வச்சு ஈசனை வழிப்பட்டார் கண்ணப்பர். நெல்லிக்கனி ருசியா இருக்கான்னு கடிச்சு பார்த்து ராமருக்கு கொடுத்தாங்க சபரி. அவரவருக்கு தெரிஞ்சபடி கடவுள்மீதான பக்தியை வெளிப்படுத்தலாம். ஆனா, இந்த திணிப்பு ஏன்?! கேக் சாப்பிட்ட ஏசுவுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்?!
கோலத்தை பார்த்துட்டு மாடு தற்கொலை பண்ணிக்கக்கூடாதுன்னுதான் நான் மாடு கோலம் போடல. 

கரும்பினால் ஆன மாட்டுவண்டி//
அன்னாசி பழத்தால் ஆன பொங்கப்பானை..


கரும்பினால் ஆன பொங்கல்பானை... இதுலாம் ட்விட்டர், பேஸ்புக்ல சுட்டது..

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. அனைத்தும் அசத்தல் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே

      Delete
  2. உங்கள் வீட்டுப்பொங்கல் வைக்கும்முறையும் சுவாரஸ்யம். நெட்டில் சுட்ட படங்களும் அற்புதம். வாழ்த்துக்கு வீசும் வாள் படம் சேர்த்திருப்பது என்ன பொருத்தமோ!

    ReplyDelete
    Replies
    1. கிரியேட்டிவிட்டியாம்!

      Delete
  3. கடைக்குப் போய் உப்பு வாங்கிப் போட்டதைச் சொன்னீங்க. பொங்கல்ல வெல்லம் போட்டதைச் சொல்லலையே... இல்லை வித்தியாசமாக வெண்பொங்கல் பொங்கினீங்களா? ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. நீங்க கிண்டலுக்காக சொன்னாலும் நிஜம் அதுதான் சகோ. வெறும் பொங்கல்தான் செய்வது வழக்கம். அதுக்கு தொட்டுக்க காய்கறிகள் தானியங்கள் சேர்த்த குழம்பு, பிடிகரணை குழம்பு, வெந்தயக்கீரை மசியல் செஞ்சு படைப்போம். படத்துலயே அதான் இருக்கும். சர்க்கரை பொங்கல் செய்யும் பழக்கமில்லை.

      Delete
    2. இது எனக்கு புதுச் செய்தி. தெரிந்துகொண்டேன். இந்தப் பழக்கம் அந்த அந்தப் பகுதிகளின் பழக்கமா? சிலர் வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் (இதுதான் அதிகம் செய்வார்கள், வெண்பொங்கல் கொஞ்சமாக) செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      Delete
    3. புதுப்பானையில் பச்சரிசியும், உப்பும் சேர்த்து பொங்கச்சோறு பொங்கி அதோடு குழம்பு வச்சு படைப்பதே இங்க வழக்கம். சர்க்கரை பொங்கல் சிலர் வீட்டில்தான் செய்வாங்க. முன்னலாம் மூணு பானை வைப்பாங்க. இப்ப ஒரே ஒரு வெங்கலப்பானை மட்டும்தான். அதும் இந்த வருசம் கழுவி எடுத்து பரண்ல வச்சு வருசாவருசம் அதையே எடுத்து வச்சு பொங்கல் வைக்குறது வழக்கமா போச்சுது :-(

      Delete
    4. நெல்லை அண்ட் ராஜி எங்க வீட்டுலயும் வெண்பொங்கல் ப்ளஸ் சர்க்கரைப் பொங்கல் செய்வோம் ஆனா வெறும் பொங்கல் மட்டும் செய்யறதுல்லை..

      உங்க வழக்கம் இப்பத்தான் நானும் நெல்லை போல எனக்கும் புதுசு.

      உங்க வீட்டு முறை இந்த பொங்கும் விஷயம் பூசை எல்லாம் கிட்டத்தட்ட இதே போலத்தான் பார்த்திருக்கேன் ஆனா இனிப்பு பொங்கல்.

      உங்க வீட்டு ரெசிப்பி சூப்பரா இருக்கே!!! அந்தக் காய்கறிகள் தானியங்கள் சேர்த்த குழம்பு என்னானு ஒரு நாள் ரெசிப்பி போடுங்களேன் என்னானு தெரிஞ்சுக்கலாம்...

      எல்லா படங்களும் சூப்பர். ஆனா உங்க வீட்டுப் படம் ரொம்ப பிடிச்சுது...கோலங்கள் செமையா இருக்கு ராஜி.

      அப்புறம் மாட்டுக்கு வால்ல இப்படிச் செய்யறது என்னவோ மனசு ஏற்கலை...அதுக்குத் தொந்தரவா இருக்காதோனு...

      கீதா

      Delete
  4. உங்கள் வீட்டுப் பொங்கல் வழக்கம் எல்லாம் நான் கிராமத்தில் கண்டது போல இருக்கு. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    ReplyDelete