Sunday, January 13, 2019

ஏன் கூறாமல் போனானோ?! - பாட்டு புத்தகம்

எந்த உறவும் பிறப்பு முதல்  மரணம்வரை சேர்ந்திருப்பதில்லை. அப்படியே சேர்ந்திருந்தாலும் மரணம் யாரையாவது ஒருத்தரை பிரிச்சு கொண்டுபோயிடும். அதனால், உறவின் வருகையும், உறவின் பிரிவும் சகஜம்.  ஆனா, சில பிரிவுகள் இருக்கே. அது கொடும. எங்க போச்சு?! என்ன ஆச்சுன்னு தெரியாம கிணத்துல போட்ட கல்லாட்டம் இருக்கும். 

இன்ன காரணத்துக்காக பிரிவுன்னா, நியாயமான காரணம்ன்னா ஏத்துக்கிட்டு மனசை தேத்திக்கலாம். இல்ல தப்புன்னு மனசுக்கு தோணினா, அழுது, புரண்டி, திட்டி, சாபம் விட்டு, மண்ணை வாரி தூத்திப்புட்டு, நாலு நாள் கழிச்சு தலைமுழுகிட்டு நம்ப பொழப்ப பார்க்கலாம். ஆனா, மூணாவதா ஒரு ரகம் இருக்கு, என்ன ஏதுன்னு சொல்லாம கொள்ளாம டக்குன்னு போய்டுவாங்க, நாம இங்க தலையை பிச்சுக்கிட்டு பைத்தியமாகனும்.
அந்தமாதிரி என்ன ஆனாங்க, என்ன சேதின்னு தெரியாம படும்பாட்டை சொல்லும் பாட்டே.. 96 படத்துல வரும் பாட்டு... முழு பரிட்சை எழுதிட்டு போன பையன் திரும்ப வரலை. ஆஃபீஸ்ல விசாரிச்சா டிசி வாங்கிட்டு போயிருப்பான். என்னன்னு வீட்டுக்கே போய் பார்க்கலாம்ன்னு போனால், வீடு பூட்டி இருக்கும். ஏன் போனான்?! திரும்ப ஏன் தன்னை வந்து பார்க்கலைன்னு அந்த பொண்ணு நினைப்பு காலத்துக்கும் மாறாம அப்படியே இருக்கும். உடல் ஊனம் மாதிரி மனதின் ஊனமது. எதாலும் சரிப்பண்ண முடியாது.
ஏன்...
ஏதும்
கூறாமல் போனானோ?!
ஏன் , நேற்றை
பூட்டாமல் போனானோ?

சாம்பலாய் வனம்
எங்கே என் மேகம்?!
விடுகதையாய் கணம்.
கண்ணீரில் போகும் பாதம்...
தூரமாய் போனதே...
காதலின் கீர்த்தனை.
வீழ்ந்திடும் நீரெல்லாம்
தேடுதலின் பிரார்த்தனை...

ஊரை தாண்டி
போனான் என்றேன்...
அங்கும் இங்கும்
கண் தேடும்.
வேறை தாண்டி
போனான் என்றால்
உண்மை உள்ளே பந்தாடும்.

தீர்ந்ததே கணம்
எங்கே உன் வானம்.
தடையெனவே வரும்
கண்ணீரின் தீரா பாரம்
வேகுதே நாளை
எங்கே உன் பாதை.
சிறகுகளே பாறை
தரையினில்
சாகும் நாரை.
படம்: 96
இசை: கோவிந்த் வசந்தா
பாடியவர்: கௌரி

நன்றியுடன்,

10 comments:

  1. ஏம்மா இப்படி... பழைய ஞாபகத்த கிளப்பிட்டு...

    ReplyDelete
    Replies
    1. ச்ச்ச்ச்ச்ச்சும்மா..

      Delete
  2. பொங்கல் நேரத்துல மாமாவுக்கும், புள்ளைங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வச்சுக் கொடுக்காமல் இதென்ன இந்த நேரத்துல பாட்டு ?

    ReplyDelete
    Replies
    1. வாட் யூ சே?! நானா?! சமைக்கனுமா?! அப்புறம் பண்டிகைக்காக போட்ட மெகந்தி, மேக்கப்லாம் கலைஞ்சுடுமே! எப்பயும்போல மாமாவே சமைச்சுக்கிடட்டுமே!

      Delete
  3. த்ரிஷாவுக்கு(ம்)ப் பிடிச்ச பாட்டாமே...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு திரிசாவையே பிடிக்காதே!

      Delete
  4. ஹாஹா..... கில்லர்ஜி கேள்வி நல்ல கேள்வி...

    பாடல் அப்படி ஒன்றும் ஈர்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி அண்ணாக்கு சொன்ன பதிலே இங்கும்...

      Delete
  5. எனக்கும் பிடித்த படம், பாடல்களும்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete