Tuesday, January 01, 2019

கனவு நனவாகும்படி பிறக்கட்டும் புத்தாண்டு

இந்த புத்தாண்டுக்கு பிறகு என்ன பண்ணலாம்?! என்னலாம் பண்ணக்கூடாதுன்னு இந்நேரத்துக்கு  எல்லோரும் ஆயிரம் லிஸ்ட் போட்டு வச்சிருப்பீங்க. எப்படியும் அதுலாம் நாலு நாளைக்கு மெனக்கெட்டு கடைப்பிடிச்சு, அப்புறம் காத்துல விட்டுடப்போறீங்க. அதனால, அதிகாலையில் வாக்கிங்க், பகல்ல தூங்கக்கூடாது. உடம்பைக்குறைக்கனும்ன்னு அப்பிடி இப்படின்னு எதுக்கு வீணா புத்தாண்டு சபதம் எடுக்கனும்?! அப்புறமா அதை காப்பாத்த முடியாம தூக்கிப்போடனும்?! அதனால, என் வசதிக்காக இந்த வருசம் எந்த புத்தாண்டு சபதமும் எடுக்க போறதில்லை:-) 

”ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”ன்னு கருப்பு வெள்ளை காலத்துல இருந்து சொல்லியே திருந்தாத நாம, “என்னைத் தவிர வேறென்ன கிழித்தாய்”ன்னு காலண்டர் கேட்குற மாதிரி வாட்ஸ் அப் மெசேஜ் கேட்டா திருந்திட போறோம்?! ம்ஹூம் இப்படிலாம் சொல்லப்படாது எதாவது சபதம் எடுத்தே தீரனும்ன்னு சொல்லுறவங்களுக்காக...,

1. மாமாவை தூக்கிப்போடுற மாதிரி ரிமோட்டை தூக்கி போடக்கூடாது?!(மாசத்துக்கு ரெண்டு ரிமோட்டு வாங்குறது கொஞ்சம் ஓவர்தான்)

2.  பிளாக்குல ரொம்ப நீளளளளளளளமாய் எழுதாம இருக்கனும்(ஸ்ஸ்ஸ் அப்பாடான்னு பெருமூச்சு விடுறது யாரு?!)

3. டிவி பார்க்க பிடிக்காது, டிவி பார்க்க பிடிக்காதுன்னு சொல்லி சொல்லியே பதிவு தேத்த டிவி பார்க்க கூடாது.(அப்படியே பதிவுக்காக காலையில் எல்லா சேனல்லயும் ஆன்மீகம் நிகழ்ச்சி பார்த்து சாவடிக்காதம்மான்னு பிள்ளைங்க சோல்லுறது கேக்கலைதானே?!)

5.  மாமாவை, பசங்களை படுத்தாம ப்ளாக் பக்கம் ஒதுங்கிடனும்.(இப்பயே அங்கதானே இருக்க! சோறுகூட பொங்காம...)

6. அடுத்த புத்தாண்டுக்குள் சபதம் எடுத்துக்குற மாதிரி எதாவது கெட்ட பழக்கத்தை உண்டாக்கிக்கனும். (இப்படிலாம் சொன்னா மட்டும் நம்பளை நல்லவள்ன்னு நம்பிடுமா இந்த ஊரு?!)

7. அப்புறம் 2017க்கு இப்படிலாம் சபதம் போடக்கூடாதுன்னு புத்தாண்டுல சபதம் ஏத்துக்குறேன்(அய்யோடா! அடுத்த வருசம் புதுசா பதிவு போடனும்ல்ல)

போதும்.. போதும்.. மொக்கை போட்டது... ராஜி பிளாக்குக்கு வந்தால் எப்படியும் எதாவது தகவல் சொல்லும்ன்னு நம்பி வரும் நம் மக்களுக்காக சில தகவல்கள்:

இப்போ நாம யூஸ் பண்ணுற காலண்டர் முறை ஏசு பிறப்பதற்கு முன்னாடி இருந்தே இருக்கு. கிரேக்க, ரோம காலண்டர் முறையே நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் முறைன்னு என் ஆராய்ச்சில கண்டுப்பிடிச்சிருக்கேன். ப்ளீஸ் நம்புங்கப்பா! நம்ப மாட்டீங்களே!! சரி, சரி, படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஜனவரி மாதம், “ஜானஸ்”ன்ற ரோமக் கடவுள் பெயரை கொண்டது”.

பிப்ரவரி மாதம் ”ரோமாரியர்களின் திருவிழாவான “பிப்ரேரியஸ்”ன்ற வார்த்தைல இருந்து வந்தது”.

மார்ச் மாதம் , ரோமக்கடவுளான ”மார்ஸ்” பெயரில் அழைக்கப்படுது.

ஏப்ரல் மாதம்,  ”ஏப்ரலிஸ்” என்ற லத்தீன் மொழில இருந்து வந்தது.  “திறப்பது” என்பது இதன் அர்த்தம். முன்னலாம் ஏப்ரல் மாசம்தான் வருட தொடக்கமா இருந்துச்சாம். 15 நூற்றாண்டுல வாழ்ந்த போப்பாண்டவர் ஒருத்தர்தான் ”ஜனவரி”யை  புத்தாண்டு தொடக்கமா மாத்தினதா சொல்றாங்க. இதை ஐரோப்பியர்கள் மட்டுமே ஏத்துக்கிட்டாங்க. அவங்களை பகடி செய்யவே ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினமா கொண்டாட ஆரம்பிச்சு இருக்காங்க.

மே மாதம்,  ”மேயஸ்”ன்ற பெண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூன் மாதம், ரோம கடவுளான ”ஜூனோ”வின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூலை மாதம், மன்னர் ”ஜூலியஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

ஆகஸ்ட் மாதம், மன்னர் “அகஸ்டிஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 என்ற லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.  அதுமட்டுமில்லாம, அப்போலாம்  மாதங்களின் நாட்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களுமாய் மாறி மாறி வந்தன.
அதாவது, ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதை, ”ஜூலியஸ் சீசர்” ஏத்துக்கல. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு, அதாவது ஜூலை மாதத்துக்குச் சேர்த்தார். அதனால்  அதுவரை 30 நாளாக இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறிச்சு.  இதனால, காலண்டர் மொத்தமும் மாற வேண்டியதாகிடுச்சு.
இப்படியே ஆகஸ்ட் 30 நாளுன்னு போய்க்கிட்டிருந்துச்சு.  ”அகஸ்டிஸ் சீசரி”ன் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு,  பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்த்தாங்க.
ஆக இத்தனைக் குழப்படிகளுக்கு பின்னாடிதான் நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் உருவாகிச்சு. இந்த காலண்டருக்கு பேரு, ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் ன்னு படிச்சவங்க சொல்றாங்க!
இனி, கவிதை பிரியர்களுக்காக...,


பனிரெண்டு மணிக்கு பட்டென்று 
வெடிக்கிறது வானவேடிக்கை..,
புத்தாண்டு ஆரம்பமாம்!!!

காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி.,
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப்படுகிறதாம்!!

குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மதுவிலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!

கண்டிப்பாய் இவையெல்லாம்  இல்லாமல் 
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னுமொரு 365
கையில் பீர் பொங்கினால்தான் பொங்குமாம்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.

ஆடைக் குறைப்பினில்தான்
 நிறையுமாம் அங்கயர்க்கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.

வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகுமாம்
 அன்பின் தூதுவர்களுக்கு!!
அடுத்த ஒரு சில 365.

நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது!!
 நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.

இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகளைக்
கண்டு தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்!!


போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிகள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,



இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு

பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.

எப்பொழுதும்போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே 
உனக்குத் தெரிய வேண்டாமா??!!
ஆண்டு ஓடினால்..,
 வயது மூப்புதான் வருமென்று...,

ஒரு நொடி இறந்து..,
 மறுநொடி பிறக்கும்.., 
 ஒரு பிறப்பு..
அந்த பிறப்பிற்கு..,
 பித்து பிடித்து அலையும் நீ..,

அந்த ??!! இறப்பிற்கு துக்கம் 
அனுஷ்டிக்க வேண்டாமா???

ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து 
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
 புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!

உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
 இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??!  இல்லை..,
 புதிய சிந்தனை ஏற்படுமா???

பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து.., 
 துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???

காலண்டரை தவிர, வேற எதும் மாறிடப்போறதில்லை. அதே உருவம், அதே குணநலன், அதே வேலை, அதே அன்பு, அதே அவமானம்....ன்ன்னு எல்லாமே அதேதான் இருக்கப்போகுது. இதுல, காசை கொட்டி கொண்டாட்டம் ஏன்?!  ஆனாலும், எதிர்பார்ப்புங்குறது மனிதர்களின் குணங்களில் ஒன்று. இதுவரைக்கு பட்டதுலாம் போதும். இனியாவது நம்ம நிலைமை மாறிடுமான்னு கஷ்டப்படுறவங்களும், இதுவரை வாழ்ந்தமாதிரியே வரும்  புத்தாண்டிலயும் வாழ்ந்திடனும்ன்னு மகிழ்ச்சியா இருக்கவுங்களும் வேண்டிக்குறாங்க. அதேமாதிரியே எல்லாருடைய கனவுகளும், விருப்பங்களும் நிறைவேறி எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கனும்ன்னு கடவுளிடம் வேண்டிக்குறேன்.
புதிய வருடம்..
புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன்.. 
புதிய முயற்சிகள்
புதிய திருப்பங்களுக்காக,
விருப்பத்துடன்
புதுமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும்,
புத்தம் புதிதாக உதிக்கட்டும்
அனைவரும்
கனவுகளும், நம்பிக்கையும் நிறைவேறட்டும்!!


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளுடனும், அப்படியே எனக்கும் நல்லபடியா புத்தாண்டு அமையுமென்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும்..
உங்க
ராஜி

15 comments:

  1. சாட்டையடி பதிவிற்கு வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. கவிதை மீள்பதிவண்ணே!

      Delete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

    மாமா தூக்கி வீசும் அளவில்தான் இருக்காரா ?

    புதிய கடவுள்களை டெலிவரி செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. கோவம் வந்துட்டா எனக்கு கண்ணுமண்ணு தெரியாது. அதனால் எல்லாத்தையும் எடுத்தெறிஞ்சு பேசிடுவேன்.

      வாழ்த்துகளுக்கு நன்றி!
      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்ண்ணே

      Delete
  3. வருடத்தின் முதல் நாள் முன்பெல்லாம் ஜனவரியில் இல்லையாமே கண்டுபிடிப்பில் வரவில்லையே

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரலில்தான் வருடத்தின் தொடக்கம் இருந்ததாகவும், பின் ஜனவரியில் மாறிட்டது. அதை ஏத்துக்காம சிலர் ஏப்ரல்1ஐ புத்தாண்டு தினமா கொண்டாடி வந்ததை பகடி செய்யவே அன்றையதினத்தை முட்டாள்கள் தினமா அறிவிச்சாங்கன்னு.. பதிவில் சொல்லி இருக்கேனேப்பா

      Delete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ. உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிண்ணே

      Delete
  6. 2019 புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜி க்கா...

    வழக்கம் போல் தகவல்கள் அனைத்தும் சிறப்பு கா..

    அப்புறம் அந்த சபதத்தில் இரண்டாவது பாயிண்ட் சூப்பர் ..

    ReplyDelete
    Replies
    1. அப்ப அந்த சபதத்துக்கு கைத்தட்டி வரவேற்றது நீதானா புள்ள!? சோ சேட்

      Delete
    2. தெரிந்த தகவலை சரியான்னு தேடப்போகும்போது இன்னும் சில தகவல்கள் கிடைக்குது. கிடைச்ச தகவல்களை சொல்லனும்ன்னு நினைக்கும்போது பதிவு நீண்டுடுது. என்ன செய்ய?!

      Delete
    3. அப்ப அந்த சபதத்துக்கு கைத்தட்டி வரவேற்றது நீதானா புள்ள!? சோ சேட்....


      சும்மா ஒரு லோலா கி ..நீங்க எழுதுங்க நான் படிக்குறேன் கா...

      Delete
    4. நானும் லுல்ல்லுலாயிக்குதான் சொன்னேன்ப்பா

      Delete