Tuesday, January 22, 2019

பொங்கல் குழம்பு - கிச்சன் கார்னர்

பொங்கல் பண்டிகையின்போது அறுவடையாகி வந்த புதுநெல், தானியங்கள், காய்கறிகள்லாம் அதிகம் இருப்பதாலோ என்னமோ பொங்கல் பண்டிகையன்னிக்கு படையலில் காய்கறிகளின் சேர்க்கை அதிகமா இருக்கும். அதுமில்லாம, முள்ளங்கி, அவரைக்காய், மொச்சைக்காய், கத்தரி, பூசணி, சுரைக்காய்ன்னு சொல்லப்படும் நாட்டு காய்களின் விளைச்சல் அதிகமா இருக்கும். முன்னலாம்  குடிசை வீடுகளில்கூட அவரை, சுரைக்காய், பூசணிக்காய் கொடிகளை வீட்டுக்கூரைமேல் ஏத்தி விட்டிருப்பாங்க. அதனால் எல்லார் வீடுகளிலும் காய்கறிகள் அதிகமா விலைஞ்சு அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கொடுப்பாங்க. 

பொங்கல் பண்டிகைக்கு புதுத்துணிக்காக ஆவலோடு காத்திருக்குற மாதிரி இந்த குழம்புக்காக வருசம் முழுக்க காத்திருப்போம்.  இந்த குழம்பை செஞ்ச அன்னிக்கே, அதேவேளையில் சாப்பிட்டா ருசி குறைச்சல்தான் மறுநாள் சாப்பிடத்தான் இந்த குழம்பு நல்லா இருக்கும். சுட வச்சு, சுடவச்சு.. சுடவச்சு சாப்பிட்டாதான் இந்த குழம்பு ருசிக்கும்.

தேவையான  தானியங்கள்...
மொச்சை,
காராமணி,
வெள்ளை மூக்கடலை
சிவப்பு மூக்கடலை,
துவரை,
பச்சைபட்டாணி,
வேர்க்கடலை,
பச்சை பயறு

தேவையான காய்கறிகள்..
வெங்காயம்,
தக்காளி
கத்திரிக்காய்
அவரைக்காய்
முள்ளங்கி
பச்சை மொச்சை உரிச்சது
பீன்ஸ்,
சுரைக்காய்
மஞ்சள் பூசணிக்காய்
வெள்ளை பூசணிக்காய்
சேப்பங்கிழங்கு
பிடி கரணை கிழங்கு
கரணை கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மிளகாய் தூள்
மஞ்சப்பொடி
உப்பு
புளி
எண்ணெய்
கடுகு
பூண்டு
கறிவேப்பிலை கொத்தமல்லி
தானியங்களை முதல்நாள் இரவே சிலர் ஊறவச்சிடுவாங்க. ஆனா, எங்க வீட்டில் வறுத்து, குளிர்ந்த தண்ணீரில் சுடச்சுட கொட்டி கழுவி வேக வைப்பாங்க. பத்து விசில் வச்சா வெந்திடும்.

 குழம்பின் ருசிக்காக கொஞ்சம் துவரம்பருப்பை வேகவிட்டு அதில் மிளகாய்தூள், உப்பு, மஞ்சப்பொடி சேர்த்து கொதிக்கவிட்டு, பூசணிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு தவிர எல்லா காய்கறிகளையும் கழுவி துண்டாக்கி சேர்த்து கொதிக்க விடனும். 
 வேகவச்சிருக்கும் தானியங்களை சேர்த்து கொதிக்கவிடனும்...

மிளகாய் தூள் வாசனை போனதும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய்கள் சேர்த்து கொதிச்சதும் தேவையான அளவு உப்பும், புளிக்கரைசலும் சேர்த்து கொதிக்கவிடனும்.   முதல்லியே சர்க்கரை வள்ளிக்கிழங்கும், பூசணிக்காயும் சேர்த்தால் கரைஞ்சு இருக்க இடமே தெரியாது. 
 குழம்பு கொதிச்சு முடிச்சதும் வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும், பொடியா நறுக்கிய வெங்காயம், பஞ்சாய் நசுக்கிய பூண்டு, காய்ஞ்ச மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிச்சு கொட்டி இறக்கிட்டா பொங்கல் குழம்பு ரெடி. 
இந்த குழம்பைதான் சர்க்கரை சேர்க்காம பொங்கல் பொங்கி, அதோடு பிடிகரணைக்குழம்பு, வெந்தயக்கீரை மசியலோடு படைப்போம்.  இரண்டு நாளுக்கு இதுதான் மூணு வேளைக்கும். பழையது, இட்லி, சப்பாத்தி, சாதம்ன்னு எல்லாத்துக்கும் இதுதான். என் பிள்ளைங்க, ஸ்கூல், காலேஜ், இப்ப ஆபீசுக்கும் இதையே கொண்டு போகுதுங்க. 
பொங்கல் கழிச்ச எட்டாவது நாள் மயிலாறுன்னு ஒரு பண்டிகை கொண்டாடுவோம். பொங்கல் அன்னிக்கு செஞ்ச அதே குழம்பு, காரக்குழம்பு, கீரை மசியல் மீண்டும் செஞ்சு படைப்போம். இந்த இரண்டு நாள் தவிர்த்து மீண்டும் சும்மா நாளில் இந்த குழம்பை வச்சா இந்த ருசி வரமாட்டேங்குது.

மீண்டும் இந்த குழம்புக்காக அடுத்தவருசம் வரை காத்திருக்கனும்..
நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. இப்படியும் ஒரு குழம்பா...? நல்லது...

    நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே செய்வோம்ண்ணா. மத்த நாளில் செஞ்சா இந்த ருசி வருவதில்லை.

      Delete
  2. பொங்கல் குழம்பு - தில்லி நண்பர் வீட்டில் இம்முறை சாப்பிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருந்ததான்னு சொல்லவே இல்லியே! முள்ளங்கிலாம் சேர்த்திருப்பாங்களே!

      Delete
  3. நாங்கள் 7 தான் கூட்டு என்று செய்வோம். இது வித்தியாசமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊரில் பெரும்பான்மையான வீட்டில் பொங்கல் அன்னிக்கு இந்த குழம்புதான். இதுக்கு கொட்டைக்குழம்புன்னு பேரு.

      Delete
  4. வித்தியாசமான குழம்பு ராஜி க்கா ..

    அம்மா வீட்டில் பொங்கலுக்கு இதே போல் செய்வாங்க.. ஆனா இத்தனை பயறு போட மாட்டங்க அவ்வொலோ தான் வித்தியாசம் ..

    நல்லா இருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் சேர்த்தால்தான் ருசிக்கும். மொச்சை, முள்ளங்கியை அதிகமா சேர்ப்போம்.

      Delete
  5. பதிவுக்காக படங்கள் போட மிகவும்மெனக்கெட்டு இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. இந்த குழம்பை பொங்கல், பொங்கல் கழிஞ்ச எட்டாவது நாளில் வரும் மயிலாறு எனப்படும் நாள், இந்த இரண்டு நாள் தவிர்த்து செய்யமாட்டோம். அதனால் பண்டிகை பிசியிலும் படமெடுத்தாச்சு

      Delete
  6. ஹை ராஜி நான் கேட்டிருந்தேன் அன்னிக்கு போட்டுட்டீங்களே சூப்பர் இதோ போய் பார்க்கறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா கேட்டு இதுவரை நான் எதாவது செய்யாம இருந்திருக்கேனா?!

      Delete
  7. ராஜி நோட்டட். மிளகாய் தூள் நு நீங்க சொன்னீங்கனா அது நாங்க சொல்லும் சாம்பார் பொடிதானே? வெறும் மிளகாய் தூள் இல்லைதானே? அதாவது பருப்பு மி கா, தனியய எல்லாம் வெயில்ல வைச்சு மெஷின்ல அரைக்கர பொடிதானே நீங்க மிளகாய்தூள்னு சொல்லுறீங்க?!!

    அந்தப் பொடிதான் அபப்டினா...இதெல்லாம் போட்டு குழம்பு சாதம் போல ஒரு கெட் டுகெதருக்குச்க் செஞ்சதுண்டு....உங்க குறுப்புகளையும் நோட் பண்ணி வைச்சுக்கிட்டேன் ராஜி...சூப்பர். மிக்க நன்றி..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தனியா, பருப்பு, சுக்கு, வெந்தயம் கலந்து அரைச்ச மிளகாய்ப்பொடிதான். எதும் கலக்காத மிளகாய்த்தூள்ன்னா அதை குறிப்பிட்டு சொல்வேன்.

      Delete
  8. மயிலாறு பத்தியும் வரும்னு சொல்லுங்க. இதுவரை கேள்விப்பட்டதில்லை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மயிலாறு பத்தி எதும் பதிவு வராது . அப்படி ஒரு ஐடியா இல்லாததால் படமெடுக்கலியே! சரி அடுத்தவருசம் பார்த்துக்கலாம் கீதாக்கா,

      Delete