Monday, May 06, 2019

பலிகடாவின் நம்பிக்கை - ஐஞ்சுவை அவியல்

இந்தா மாமா கேரட் அல்வா. சின்னவ பாஸ் U.G பண்ணிட்டா மாமா.  89% மார்க் வாங்கி இருக்கா.  அதான் அல்வா செஞ்சேன்.

கேரட் அல்வாவில் முந்திரிப்பருப்பு கொஞ்சமா இருக்கே! இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாமே!

அம்புட்டுதான் வீட்டில் இருந்துச்சு.


இந்த மாசம் மளிகை சாமான் வாங்கும்போது முந்திரிப்பருப்பு வாங்கி கொடுத்தேனே!  அதையெல்லாம் தின்னுட்டியா?!  சின்ன வயசுல முந்திரிப்பருப்பை தின்னுவேன்னு உனக்கு பயந்தே பீரோவில் எடுத்து பூட்டி வைப்பேன்னு  உன் அம்மா சொல்லி கேட்டிருக்கேன்.  அந்த மாதிரி காலி பண்ணிட்டியா?!

முந்திரிப்பருப்பை நீ தின்ன மாட்டியா?! முந்திரிப்பருப்பின் ருசி பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா என்ன?! 

முந்திரிப்பருப்பை தின்ன தெரிஞ்ச உனக்கு அதைபத்தின் எதாவது தெரியுமா?! முந்திரிக்கொட்டைக்கு இங்கிலீஷ்ல Cashew ன்னு பேரு. இந்த பேரு போர்த்துக்கீசிய பேரான  கஜூ (caju)ல இருந்து வந்துச்சு. முந்திரிப்பருப்பின் பூர்வீகம் தென் அமெரிக்கா. கி.பி.1560வாக்கில் போர்த்துக்கீசியரால் கோவாவுக்கு கொண்டு வரப்பட்டு இந்தியாவுக்கு அறிமுகமாச்சு. இது வெப்பமண்டல பயிராகும். தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, மார்த்தாண்டம், தஞ்சாவூரில் விளையுது. வணிகத்திற்காக வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப் பட்டு கப்பலை விற்று இதை வாங்கி சாப்பிட்டதால் இதுக்கு கப்பல் வித்தான் கொட்டைன்னே பேர். 

எல்லா விதைகளும் கனிக்குள் இருக்கும். ஆனா முந்திரி மட்டும் முந்திரி பழத்துக்கு வெளிய இருக்கும். நாம முந்திரிப்பழம்ன்னு நம்பப்படும் பழம் போலிப்பழம்,. பழத்துக்கு வெளிய இருக்கும்  இதயம் அல்லது சிறுநீரக வடிவில் காணப்படும் உண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுது.  முந்திரிக்கொட்டையிலிருந்து பருப்பை பிரிச்சு எடுக்க  அதை வறுக்கனும்.
வறுத்த கொட்டையிலிருந்து தோல் தனியாகவும், பருப்பு தனியாகவும் பிரிச்சு எடுப்பாங்க. இப்படி பிரிச்சு எடுக்குறது ரொம்ப கஷ்டம். ஏன்னா, முந்திரிக்கொட்டை மேல்தோலிலிருந்து ஒரு திரவம் வெளிவரும். அதான் பிரிக்குறவங்க கையை பதம் பார்க்கும்.  அந்த லிக்விட் கையில் பட்டது, தோல் உரிய ஆரம்பிக்கும். நாளடைவில உள்ளங்கை குழி குழியா அரிச்சிரும். அந்த லிக்விட் எதை உருவாக்க  பயன்படுதுன்னு சொன்னா அதன் வீரியம் புரியும். பெயிண்ட், வார்னிஷ், ரப்பர், காம்பவுண்ட் ரெசின்ஸ், casew cement, இதுல்ஆம் தயாரிக்க பயன்படுது.

முந்திரிக்கொட்டையை வறுத்து, தோல் உரிச்சா மட்டும் அதை சாப்பிட முடியாது. பருப்பை சுத்தி இருக்கும் தோலை உறிச்சு எடுக்குறதுதான் அடுத்தக்கட்ட வேலை. அப்படி உறிச்சு எடுத்து வரும் பருப்பை சைஸ்வாரியா பிரிச்சு விக்குறதுக்கு பேக் பண்ணுவாங்க. வறுக்க, தோல் எடுக்க, தோல் உறிக்க, பேக்கிங்க்ன்னு தனித்தனி கொட்டகை இருக்கும். அங்கதான் இந்த வேலைலாம் நடக்கும்.  விளையும் இடத்திற்கேற்ப முந்திரியின் ருசி மாறும். ருசிக்கேற்ப முந்திரியின் விலை கூடும், குறையும். 
இந்தியாவில் விளைவது போக, பெரிய அளவு ஃபேக்டரிகளுக்கு முந்திரி கொட்டை பெருமளவு ஆப்பிக்க நாடுகள்ல இருந்து தான் இறக்குமதி செய்யப்படுது. இறக்குமதியாகிற முந்திரிக்கொட்டையிலிருந்து பருப்புகளை பிரிச்செடுத்து 80 % ஏற்றமதியாகுது. இதுக்காக மத்திய அரசு The Cashew export promotion council of India அமைப்பை 1955 ல ஆரம்பிச்சது .

மேல சொன்னது வறுத்து பருப்பை எடுப்பது பழைய முறை. இப்ப புதுசா முந்திரிக்கொட்டையை வேக வச்சு, உடைச்சி எடுக்கறது புதிய முறையாகும். இந்த முறையில் 100% மெஷின் மூலமா பண்றாங்க. ஆனாலும் பழைய முறையான வறுக்குற முறையில் கிடைக்கும் முந்திரிக்கு கிடைக்கும் விலையை விட குறைவாகதான் கிடைக்குது. இதான் முந்திரி பருப்பு தயாராகும் முறை...

நம ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் முந்திரி பின்னாடி இத்தனை விசயமிருக்கா மாமா! பாவம்ல முந்திரி பருப்பை உடைச்சு எடுக்கும் தொழிலாளர்கள்.

ஆமா, அதைவிட பாவம் கஷ்டபட்டு படிச்சு மார்க் எடுத்து அதை பாராட்டா சொல்லும்போது முகம் வெளிக்காட்ட முடியாத அவலம்.இப்படி முகம் தெரியாம  இருக்க, எதுக்கு பேனர் அடிச்சு விளம்பரப்படுத்தனும்?!
முகம் தெரியா வலியைவிட, நம்பிக்கை அறுபடும் வலி  அதிகம். ஒரு பலிகடாவின் நம்பிக்கை பத்தி ஒரு கவிதை இருக்கு பாரு.  படிக்கும்போதே மனசை என்னமோ செஞ்சது. 

இங்க் பேனாவில் இங்க் ஊத்துறது எல்லாருக்கும் தெரியும். அனுபவமும் இருக்கும். பால் பாயிண்ட் பேனாவில் இங்க் நிரப்புறதை பார்த்திருக்கியா?! இந்த வீடியோவில் இருக்கு பாரு. பார்த்துட்டு போய் வேலையை பாரு. எனக்கு வெளிய வேலை இருக்கு. நான் போய் வரேன்..

நன்றியுடன்,
ராஜி

10 comments:

 1. தகவல் களஞ்சியம் நன்று சகோ

  ReplyDelete
 2. முந்திரிப் பருப்புத் தகவல்கள் சுவாரஸ்யம். தஞ்சையில் இருந்தபோது முந்திரிக்காட்டின் நடுவே, அல்லது அருகே அரசங்கக்குடியிருப்பில் வசித்தவன் நான். எனக்கு அந்த நினைவுகள் நிறைய உண்டு!

  கிடா கவிதை மனதை மிகவும் பாதித்து விட்டது. அருமை.

  ReplyDelete
  Replies
  1. டூருக்கு போகும்போது முந்திரிக்காட்டை பார்த்ததோடு சரி...

   எனக்கும் கிடா கவிதை ரொம்ப பிடிச்சு போயிட்டுது...

   Delete
 3. அனைத்தும் அருமை. முந்திரி தகவல்கள் அறிந்திருந்தாலும் ரசித்தோம். முந்திரிப் பருப்பு நாம் உண்ணும் விதத்தில் வருவது வரை மிகக் கஷ்டமான ப்ராஸஸ்.

  நாங்கள் படித்த கல்லூரிகள் முந்திரித் தோட்டத்துக்குள்தான். நாங்கள் பழத்தைக் கொல்லாம்பழம் என்போம். நிறைய சாப்பிட்டிருக்கிறோம். சிலது கொஞ்சம் தொண்டையை கொஞ்சம் பதம் பார்க்கும். நன்றாகப் பழுத்திருந்தால் நன்றாக இருக்கும் நல்ல நீர்ச்சத்துடன்..

  துளசிதரன், கீதா

  கீதா: கிடா கவிதை மனதை அறுத்தது. காணொளி பார்த்தாச்சு. உங்கள் மகளுக்கு வாழ்த்துகள் ராஜி! மேற்கொண்டு என்ன படிக்க இருக்கிறார் அல்லது வேலைக்கா?

  ReplyDelete
  Replies
  1. எனக்கு முந்திரி பழம் பிடிக்கவே பிடிக்காது துளசி சார்.

   காப்பாத்த வருவாங்கன்ற நம்பிக்கை பலிகடாவுக்கு கடைசி வரை இருந்துச்சு. உயிர் போற வலியைவிட நம்பிக்கை போன வலிதான் அதிகமா இருந்திருக்கும்...

   மேற்கொண்டு படிக்க வைக்கப்போறோம் கீதாக்கா. அவளுக்கு P.hd பண்ணனும்ன்னு ஆசை

   Delete
 4. //அதைவிட பாவம் கஷ்டபட்டு படிச்சு மார்க் எடுத்து அதை பாராட்டா சொல்லும்போது முகம் வெளிக்காட்ட முடியாத அவலம்.//
  பார்க்கும் நமக்குத்தான் இதெல்லாம் பாவமாக அவலமாக இருக்கிறது. இவர்களில் 99% பேர் விரும்பியே இதை ஏற்றுக்கொள்கிறார்கள். அண்மையில் நடந்த அசம்பாவிதங்களுக்கு பின், முஸ்லிமல்லாத பொதுமக்களின் கடும் அழுத்தம் காரணமாக, பொதுமக்கள் யாரும் தங்கள் அடையாளம் மறையும் அளவு ஆடை அணிந்து பொதுஇடங்களில் நடமாட இலங்கை அரசாங்கம் தடைவிதித்தது. இஸ்லாமியரின் உலமா சபை கூட முகத்தை முழுவதும் மூடி ஆடை அணிவது மதத்தில் கட்டாயமில்லை என்று அறிவித்தது. இதற்கு கடும் எதிர்வினை ஆண்களை விட முஸ்லீம் பெண்களிடம் இருந்து தான் வந்தது. இன்னும் சிலர் விடுவேனா பார் என்று இன்னும் மல்லுக்கு நிற்கிறார்கள்.
  இந்த பெண்கள் மதவாதிகளால் பலமாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  இவர்களுக்கு மதம் ஒரு போதை, இதை விட்டு வெளியே வர இவர்களே விரும்புவதில்லை.

  தன் படங்களில் கதாநாயகிக்கு நாகரிக ஆடை உடுத்துவிடும் இயக்குனர் அமீர் ஆகட்டும், அரைகுறை ஆடையுடன் ஆடும் குத்துப்பாட்டுக்கு இசையமைக்கும் ரகுமான் ஆகட்டும் தன் பெண்களை உடல் முழுவதும் மூடியே வைத்திருக்கிறார்கள். கேட்டால் இது வேறு அது வேறு என்பார்கள். இந்த மக்களுக்கு இரண்டு முகம்.

  ReplyDelete
  Replies
  1. அறிவியல் வளர்ச்சியோடு மூடநம்பிக்கை எங்கும் நிறைந்துள்ளது. இதை சொன்னா நீ பாவாத்மான்னு சிம்பிளா முடிச்சுடுவாங்க

   Delete
 5. காசு கொடுத்து சாப்பிடறவங்களுக்கு, அந்த உணவு எப்படிக் கிடைக்குது, எத்தனை மக்களின் உழைப்பும் கஷ்டமும் அதில் இருக்கிறது என்பதெல்லாம் தெரியாதில்லையா? முந்திரி பற்றிய விஷயம் அருமை. ஆனால் நல்ல காணொளி தேடியிருக்கலாம்.

  ReplyDelete